அய்யன் வள்ளுவர்
கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் உருவாக்கப்பட்திருவள்ளுவர் சிலை,தமிழக முன்னாள் முதல்வர்கலைஞர் மு.கருணாநிதிதிறந்து வைத்த தினம் இன்று.
01 ஜனவரி 2000பீடத்தின் 38 அடி உயரம் திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலை திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.
உட்புற மண்டபச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆண்டு முடிவிற்கு மேலும் 364 நாட்கள் (நெட்டாண்டுகளில் 365 நாட்கள்) உள்ளன. இந்நாள் புத்தாண்டு நாள் எனவும் அழைக்கப்படுகிறது.
ஐரோப்பாவில் கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கு நிறைந்த நடுக்காலப் பகுதியில், மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ஆண்டின் ஆரம்ப நாளாக திசம்பர் 25 (இயேசுவின் பிறப்பு), மார்ச்சு 1, மார்ச்சு 25 (இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு), அல்லது உயிர்ப்பு ஞாயிறு போன்ற முக்கிய கிறித்தவத் திருவிழா நாட்களைத் தேர்ந்தெடுத்தன.
மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் செப்டம்பர் முதல் நாளை ஆண்டின் தொடக்க நாளாகத் தேர்ந்தெடுத்தன.
12ஆம் நூற்றாண்டு முதல் 1752 வரை இங்கிலாந்தில் மார்ச்சு 25இல் ஆண்டுத் தொடக்கமாக இருந்தது. பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகள் கிரெகொரியின் நாட்காட்டியைப் பின்பற்றுவதற்கு முன்னரேயே சனவரி 1 ஐ ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடின.
எடுத்துக்காட்டாக, இசுக்கொட்லாந்து 1600 இல் சனவரி 1 ஐ புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்தது. இங்கிலாந்து, அயர்லாந்து, மற்றும் பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் நாட்காட்டிச் சட்டம், 1750 இன் படி, 1752இல் புத்தாண்டை சனவரி 1 இற்கு மாற்றின. அதே ஆண்டின் செப்டம்பரில், பிரித்தானியா, மற்றும் அதன் குடியேற்ற நாடுகளில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகமானது.
*சனவரி 1 அதிகாரபூர்வமான ஆண்டுத் தொடக்கமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு வருமாறு.
1362 – லிதுவேனியா
1522 – வெனிசுக் குடியரசு
1544 – புனித உரோமைப் பேரரசு (செருமனி)
1556 – எசுப்பானியா, போர்த்துகல்
1559 – புரூசியா, சுவீடன்
1564 – பிரான்சு
1576 – தெற்கு நெதர்லாந்து
1579 – லொரெயின்
1583 – வடக்கு நெதர்லாந்து
1600 – இசுக்கொட்லாந்து
1700 – உருசியா
1752 – பெரிய பிரித்தானியா, அதன் குடியேற்ற நாடுகள்.(இந்தியா உட்பட.)
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுரகசிய உலகம்.
கடலுக்கு அடியில் 34,000 மீ. ஆழத்தில்... சீன விஞ்ஞானிகள் கண்ட ரகசிய உலகம்!
சுமார் 34,587 அடி ஆழம் கொண்ட உலகின் ஆழமான பகுதிகளில் ஒன்றான குரில்-கம்சட்கா அகழியில் சீன ஆராய்ச்சியாளர்கள் குழு 2024-ல் ஒரு நீர்மூழ்கி ஆய்வு மேற்கொண்டது.
அப்போது அவர்கள் கண்ட காட்சி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடலுக்கு அடியில் 34,000 மீ. ஆழத்தில்... சீன விஞ்ஞானிகள் கண்ட ரகசிய உலகம்!
சூரிய ஒளி ஒருபோதும் எட்டிப்பார்க்காத இடம்.. நீர்மூழ்கிக் கப்பலையே சோடா கேன் போல நசுக்கிவிடக்கூடிய அதீத நீர் அழுத்தம்..
இவ்வளவு மோசமான சூழலில் வெறும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் மட்டுமே வாழ முடியும் என்றுதான் உலகம் இதுவரை நினைத்தது.
ஆனால், சீன ஆராய்ச்சியாளர்கள் அந்த நம்பிக்கையைத் தகர்த்து, கடலின் இருண்ட ஆழத்தில் ஒரு ரகசிய சாம்ராஜ்யத்தைக் கண்டறிந்துள்ளனர்.
கடல் மட்டத்திலிருந்து 20,000 அடிக்கும் கீழே உள்ள பகுதி ‘ஹாடல் மண்டலம்’ எனப்படுகிறது.
இது பூமியின் மிக ஆபத்தான மற்றும் மர்மமான பகுதி.
இங்கு சுமார் 34,587 அடி ஆழம் கொண்ட குரில்-கம்சட்கா (Kuril–Kamchatka) என்ற ஆழ்கடல் அகழியில் சீன விஞ்ஞானிகள் தங்களின் நவீன நீர்மூழ்கி ஆய்வுக்கலத்தைச் செலுத்தினார்கள்.
பாக்டீரியாக்களை மட்டுமே பார்க்கலாம் என்று சென்ற விஞ்ஞானிகளுக்கு அங்கு காத்திருந்தது ஒரு பெரிய ஆச்சரியம்.
10 கிலோமீட்டர் ஆழத்தில், அதாவது சுமார் 33,000 அடிக்குக் கீழே ஒரு அடி நீளம் கொண்ட குழாய் புழுக்கள் (Tube worms), விதவிதமான மெல்லுடலிகள் மற்றும் ஓடுடைய உயிரினங்கள், அலைபாயும் கடல் வெள்ளரிகள் (Sea cucumbers) என ஒரு முழுமையான உயிரினக் கூட்டமே அங்கு செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறது! இவ்வளவு பெரிய உயிரினங்கள் அத்தனை
அழுத்தத்தில் எப்படி நசுங்கிப் போகாமல் வாழ்கின்றன என்பது அறிவியலுக்கே சவாலாக உள்ளது.
சூரிய ஒளி இல்லை.. பின் எப்படி உயிர்வாழ்கின்றன? பூமியில் உள்ள பெரும்பாலான உயிரினங்களுக்குச் சூரிய ஒளிதான் ஆதாரம்.
ஆனால், இந்த ஆழ்கடல் உயிரினங்கள் ‘வேதியச்சேர்க்கை’ என்ற விசித்திரமான முறையைப் பின்பற்றுகின்றன. கடல் தரையில் உள்ள பிளவுகளில் இருந்து கசியும் மீத்தேன் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு போன்ற வேதிப்பொருட்களை உண்டு, அதிலிருந்து தங்களுக்குத் தேவையான ஆற்றலை இவை
பெறுகின்றன. அதாவது, இவை சூரியனை நம்பி இல்லை, பூமியின் வெப்பத்தையும் வேதிப்பொருட்களையும் நம்பி வாழ்கின்றன.
இந்தக் கண்டுபிடிப்பு நமக்கு ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் அரிய வகை தாதுக்களுக்காக ஆழ்கடல் சுரங்கத் தொழிலில் ஈடுபடத் துடிக்கின்றன.
நாம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளாத இந்த மென்மையான உலகத்தை, நாம் அறிந்துகொள்வதற்கு முன்பே மனித நடவடிக்கைகள் அழித்துவிடுமோ என்ற அச்சம் விஞ்ஞானிகளிடையே எழுந்துள்ளது.
விண்வெளியில் மட்டும் விசித்திரங்கள் இல்லை; நமது ஆழ்கடல் அலைகளுக்கு அடியில் அமைதியாக மாற்று உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.









