பழனிசாமியின் மறதி'கள்!

திருவள்ளுவர் தினம். தமிழ்நாடுஅரசு சார்பில் 13 பேருக்கு விருது: தல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ரூபாய் நோட்டு சிக்கிய விவகாரம் சபாநாயகர் அமைத்த விசாரணைக் குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 

கேரளாவில் இந்திய விளையாட்டு ஆணைய விடுதியில் 2 வீராங்கனைகள் தூக்கு போட்டு தற்கொலை: பயிற்சியின்போது கொடுமைகள் அனுபவித்ததாக எழுதிய கடிதங்கள் சிக்கின 
 யாருடன் கூட்டணி? 30 நாள் பொறுங்க...- ஓபிஎஸ் 
திரைப்பட நிறுவன மேல்முறையீட்டு மனு தள்ளுபடி .ஜனநாயகன் படம் வழக்கை விசாரிக்க விருப்பமில்லை-உச்சநீதிமன்றம்.
தீர்ப்புகளில் அம்பேத்கரை விட மனுஸ்மிருதியை குறிப்பிடுவது அதிகம்! சங்கித்தனம்!அத்துமீறல்!!- வழக்கறிஞர் அருள்மொழி.

பழனியின்  மறதி!

இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

இதனை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்களை ஏமாற்றுகிறார் முதலமைச்சர். அவர்கள் ஏமாற்றப்பட்டதை பின்னர் தெரிந்து கொள்வார்கள்” என்று புலம்பல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் பழனிசாமி.


அரசு ஊழியர்களின் 22 ஆண்டு கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.


மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும், ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்என்றும் அறிவித்துள்ளார்


முதலமைச்சர் அவர்கள்.

அரசு ஓய்வூதியம் என்பது அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுக்குப் பிறகும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய சமூக பாதுகாப்பு என்பதை உறுதி செய்துள்ளார்

முதலமைச்சர்.


தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஏற்பதன் மூலம் ஓய்வூதியப் பங்களிப்புக்குச் செலுத்த வேண்டிய கூடுதல் பங்களிப்பு தொகையாக ரூ.13 ஆயிரம் கோடியும், பணியாளர்கள், ஆசிரியர்கள் நலனுக்காக அரசுப் பங்களிப்பாக ரூ.11 ஆயிரம் கோடியும் ஆக ரூ.24 ஆயிரம் கோடி நிதிச்சுமையை தமிழ்நாடு அரசு ஏற்றுள்ளது.

“எங்கள் ஓய்வு கால வாழ்க்கை அர்த்தமுள்ளதாக முதலமைச்சர் மாற்றி உள்ளார். இன்றைய அறிவிப்பின் மூலம் 6.5 லட்சம் பேர் வாழ்க்கையில் முதலமைச்சர் ஒளியேற்றி வைத்திருக்கிறார்” என்று அரசு ஊழியர் சங்கத்தினர் சொல்லி இருக்கிறார்கள். செய்ய முடியாது என்று சொல்லப்பட்டதை செய்து காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.


எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இதனைப் பாராட்டி இருக்க வேண்டும். வரவேற்று இருக்க வேண்டும். மாறாக வயிற்றெரிச்சல் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த அறிவிப்பு வந்தபோதும் அறிக்கைவெளியிட்டார். அரசாணை வரும் போதும் அறிக்கை வெளியிடுகிறார்.


இன்றையதினம் அரசு ஊழியர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் பழனிசாமி, தனது ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்களை எவ்வளவு கேவலப்படுத்தினார் என்பதை அரசு ஊழியர்கள் மறந்திருக்க மாட்டார்கள். பழசை பழனிசாமி மறந்திருக்கலாம்.


அரசு ஊழியர்கள் மறக்க மாட்டார்கள்.

தொடக்கப் பள்ளிஆசிரியர் வாங்கும் சம்பளத்தைக் குறிப்பிட்டு "இவ்வளவு சம்பளமா?" என இழிவுபடுத்தியவர்தான் அன்றைய முதலமைச்சர் பழனிசாமி.


அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பார்த்து, "அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா?" என்று கேட்டவர்தான் பழைய பழனிசாமி.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ 2019 ஜனவரியில் போராட்டத்தை நடத்தியது. அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார்.

அரசு ஊழியர்களை மிரட்டினார்.


"கோரிக்கையை ஏற்க முடியாது. பணிக்குத் திரும்பாவிட்டால் நடவடிக்கை பாயும். அரசுஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தர, மக்களிடம் கூடுதல் வரி விதிக்க வேண்டி வரும்" என்று சொன்னார் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார்.


அரசு ஊழியர் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது 2019 ஜனவரி 27-ஆம் நாள் அனைத்து நாளிதழ்களிலும் முக்கால் பக்கத்துக்கு அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரில் விளம்பரம் வெளியிட்ட அரசுதான் இந்த பழனிசாமி அரசு.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியலை வெளியிட்டு, இது தமிழக அரசின் வரி வருவாய் தொகையில் 70 சதவீதம் என்று தெரிவித்திருந்தார் ஜெயக்குமார்.


பிற தனியார் நிறுவனத்தைக் காட்டிலும் அதிகச் சம்பளத்தை அரசு ஊழியர்கள் பெறுகின்றனர். தனியாரைவிட அரசு ஊழியர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் அவர்களுக்கு எதற்குப் போராட்டம்?' எனக் கொச்சைப்படுத்தியவர்தான் இந்த பழனிசாமி.


போராட்டம் நடத்திய 85 ஆயிரம் அரசு ஊழியருக்கு விளக்க விசாரணைக் கடிதம் அனுப்பியவர்தான் இந்த பழனிசாமி. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள்மீது குற்றக் குறிப்பாணை கள் (178), இடமாற்றம், பணியிடைநீக்கம், வழக்கு போன்ற ஒடுக்கு முறைகளை ஏவியவர்தான் இந்தப் பழனிசாமி.


பழனிசாமியின் 'அம்மா' ஜெயலலிதா அரசு ஊழியர்களை என்ன பாடுபடுத்தினார் என்பது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத காயங்கள் ஆகும்.


24.-7-2001 அன்று திருவல்லிக்கேணியில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் சங்கக் கட்டிடத் திறப்பு விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசும்போது, “அரசுக்குக் கிடைக்கின்ற மொத்த வரி வருவாயில் 94 சதவிகிதம் அரசு ஊழியர்களுக்கே செலவாகிறது” என்று சொன்னார்.


2002ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அன்று,"மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதமே உள்ள அரசு ஊழியர்களுக்கு 94 சதவிகிதம் செலவு என்றால், மீதி உள்ள 6 சதவிகித வருவாயில் வளர்ச்சிப் பணிகளுக்கு என்ன இருக்கிறது” என்று சொன்னவரும் அதே ஜெயலலிதா தான்.


அரசு அலுவலர்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக புதிய சட்டம்கொண்டு வரப்பட்டதும் ஜெயலலிதா ஆட்சியிலேதான். இந்தச் சட்டத்தை மீறி வேலை நிறுத்தம் செய்பவர்கள் மற்றும் அதைத் தூண்டுபவர்கள் ஆகியோருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை அல்லது ரூபாய் 5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டதும் அ.தி.மு.க. ஆட்சியிலே தான்.


அனைத்தையும் மறந்துவிட்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி.

தமிழ்நாடு அரசுடமையான

மதுரை பாண்டியன் ஓட்டல்!

1968ல் தமிழக அரசு, மதுரை நகரின் முக்கிய பகுதியில் உள்ள சுமார் 5.9 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை, பாண்டியன் ஓட்டல் நிறுவனம் ஓட்டல் நடத்துவதற்காக 25 ஆண்டுகளுக்கு குத்தகையாக வழங்கியது.


அரசு அனுமதியுடன் அந்த நிலத்தில் ஓட்டல் கட்டப்பட்டு, பல ஆண்டுகள் செயல்பட்டு வந்தது. இந்த குத்தகை ஒப்பந்தத்தின் காலம் 2008 ம் ஆண்டுடன் முடிவடைந்தது.

ஆனால் அதற்கு பிறகும் பாண்டியன் ஓட்டல் நிர்வாகம், அரசு நிலத்தில் தொடர்ந்து ஓட்டல் நடத்தி வந்தது.


இதையடுத்து, அரசு தரப்பில், ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் நிலத்தை பயன்படுத்த விரும்பினால், அதனை நிரந்தரமாக ஒதுக்கீடு செய்ய உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.


அதன்படி, 2015ல் அரசு, அந்த 5.9 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய ரூ.36.58 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் இந்த தொகையை முழுமையாக செலுத்த முடியவில்லை என சொன்ன பாண்டியன் ஓட்டல் நிர்வாகம், அந்த உத்தரவை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.


இந்த வழக்கு பல வருட காலம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. விசாரணையின்போது, நீதிமன்றம், குத்தகை காலம் முடிந்த பிறகும் அரசு நிலத்தை கட்டணமின்றி பயன்படுத்தி வந்தது தவறு என்று குறிப்பிட்டது.


மேலும், அந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.300 கோடிக்கு மேல் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இது அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.


இதையடுத்து, 2023ல் ஹைகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது... அதில், பாண்டியன் ஓட்டல் அரசு நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும், நிலத்தை அரசு மீட்டெடுத்து, நிலுவையில் உள்ள வருவாய் மற்றும் கட்டணங்களை சட்டப்படி வசூலிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.


மேலும், தமிழக அரசு இதுபோன்ற அனைத்து அரசு நில குத்தகை ஒப்பந்தங்களையும் மீண்டும் பரிசீலித்து, பொதுநலத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.


இந்த உத்தரவின் தொடர்ச்சியாக, கடந்த 2025 மே மாதத்தில் நீதிமன்றத்தின் அடிப்படையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார். அதன்படி, பாண்டியன் ஓட்டல் வசம் இருந்த 5.9 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் அதிகாரப்பூர்வமாக மீட்க ஆணை பிறப்பித்திருந்தார்.


இந்நிலையில், மதுரை பாண்டியன் ஹோட்டல் வசம் இருந்த 5.9 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தற்போது மீட்டுள்ளது தமிழ்நாடு அரசு. ஹோட்டல் இருந்த இடத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்போது மீட்டுள்ளது..


நிலத்தை மீட்ட அடுத்த நாளே, 'ஓட்டல் தமிழ்நாடு' அலுவலகத்தை அங்கே நிறுவி புக்கிங் செயல்முறைகளையும் துவங்கி விட்டது..


பல ஆண்டுகளாக நீடித்து வந்த பாண்டியன் ஓட்டல் அரசு நில வழக்கு முடிவுக்கு வந்து, அரசு சொத்து மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.


ஏற்கனவே இக்கழகத்தின் கீழ் பெரியார் பஸ் ஸ்டாண்டில் ஓட்டல் தமிழ்நாடு யூனிட் 1, அழகர்கோவில் ரோட்டில் யூனிட் 2 ஓட்டல்கள் செயல்பட்டு வரும் நிலையில், மமூன்றாவது யூனிட்டாக ஓட்டல் பார்சூன் பாண்டியன் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை