ஆடுக்கு ஏன் தாடி அவசியம்?
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம்.
கொடைக்கானலில் மீண்டும் தொடங்கிய உறை பனி.
அனைத்துமாநிலங்களின்அதிகாரத்தையும் குவித்து ஏழைகளின் நலத்திட்டங்களை பலவீனப்படுத்த மோடி முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் தமிழக அரசின் வழக்கு வரும் 27ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
நேற்று ஒரே நாளில் பெரும் பாதிப்பு பங்குச் சந்தைகள் சரிவால் ரூ.10 லட்சம் கோடி இழப்பு.முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி
கிரீன்லாந்து விவகாரத்தில் வரி அச்சுறுத்தல் அதிபர் டிரம்பை எப்படி நம்ப முடியும்? உலக பொருளாதார மாநாட்டில் ஐரோப்பிய தலைவர்கள் கேள்வி.
ஆடுக்கு
ஏன் தாடி அவசியம்?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரின் தொடக்க நாளில், ஆளுநர் உரையை படிக்க மறுத்து ஆர்.என். ரவி வெளிநடப்புச் செய்தார்.
'ஆளுநர் உரை தேவையில்லை' என அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கோரப் போவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2026ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று (20.01.2026) துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்புச் செய்தார்.
அதுவும் அவர் பெரிதும் மதிப்பதாகக் கூறிக் கொள்ளும் தேசீயகீதம் இசைக்கப்படும் முன்னரே ஓடினார்.
2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற ஆர்.என். ரவி, 2022ஆம் ஆண்டின் ஆளுநர் உரையைத் தவிர, மற்ற ஆண்டுகளில் அதாவது தொடர்ந்து 4-வது ஆண்டாக ஆளுநர் உரை எதனையும் முழுமையாகப் படிக்கவில்லை.
2023ஆம் ஆண்டில் உரையை வாசித்த ஆளுநர் ஆர்.என். ரவி "பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் கொள்கைகளைப் பின்பற்றி திராவிட மாடல் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது," என்ற வரியை வாசிக்காமல் புறக்கணித்தார்.
இதையடுத்து ஒரு தீர்மானத்தின் மூலம் ஏற்கனவே அச்சிடப்பட்ட ஆளுநர் உரையே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
அந்த உரையை வாசித்து முடித்த பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, "சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும் கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்ததல்ல தமிழ்நாட்டு சட்டமன்றம்" என்று கூறினார்.
சபாநாயகர் இதனைச் சொல்லி முடித்ததும், ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினார்.
இதையடுத்து ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினார்.
இதற்குப் பிறகு பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்குவதற்கான முயற்சிகளை மற்ற கட்சிகளுடன் சேர்ந்து முன்னெடுக்கப் போவதாகக் குறிப்பிட்டார்.
"ஆண்டின் துவக்கத்தில் அரசின் கொள்கை அறிக்கையை ஆளுநரின் உரையாக வாசிப்பது நடைமுறை. அந்த நடைமுறையை ஒருவர் தொடர்ந்து மீறும்போது அதுபோன்ற விதிகளை எதற்காக வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வி சாதாரணமாகவே அனைவர் மனதிலும் எழும்.
எனவே ஆண்டின் துவக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்குவதற்கான அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான நடைமுறையை இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகளின் துணையோடு இந்திய நாடாளுமன்றத்தில் தி.மு.க. முன்னெடுக்கும்" என்றார் முதலமைச்சர்.
கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தும் அதிகாரத்தை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்குகிறது. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 176 இதனைப் பற்றிக் கூறுகிறது.
"சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்குப் பிந்தைய முதல் கூட்டத் தொடரின் துவக்கத்திலும், ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்திலும், ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றுவார்.
மேலவை (Legislative Council) உள்ள மாநிலமாக இருந்தால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி, அந்தச் சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டியதற்கான காரணங்களை அவர் தெரிவிப்பார்" என்கிறது அந்தப் பிரிவு.
இந்தப் பிரிவின் அடிப்படையிலேயே ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் துவங்குகிறது. ஆனால், ஆளுநர் வாசிக்கும் உரையில் என்ன விஷயங்கள் இடம்பெறும் என்பது குறித்து ஆளுநர் முடிவுசெய்ய முடியம் என அரசமைப்புச் சட்டம் கூறவில்லை.
"ஆளுநரின் உரை என்பது அரசின் உரைதான். அந்த உரை முன்பே ஆளுநருக்கு அனுப்பப்படும். அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமென ஆளுநர் பரிந்துரைக்கலாம்.
ஆனால், அரசுதான் அது குறித்து முடிவெடுக்க முடியும்.
இதற்கு சட்டம் ஏதும் கிடையாது. மரபுதான். ஆளுநர் ஒரு உரையைப் படிக்க மாட்டேன் என தற்போது செய்ததைப்போல செய்யலாம்.
ஆனால், இதையெல்லாம் சேர்க்க வேண்டுமென சொல்லவே முடியாது
தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் இருந்தபோது அவருக்கும் முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன.
இந்த நிலையில், கடந்த 2022 - 2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் கூட்டத்தொடர் துவங்கியபோது, "தெலங்கானா அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 7ஆம் தேதி நடைபெறும். நிதியமைச்சர் ஹரிஷ் ராவ் மாநில அரசின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அன்றைய தினம் ஆளுநர் உரையில்லாமல் நேரடியாக பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்தார். இதற்கு அம்மாநில பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது. இதற்குப் பதிலளித்த மாநில அரசு, "ஆண்டின் துவக்கத்தில் முதன் முறையாகக் கூட்டப்படும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போதுதான் ஆளுநர் உரை கட்டாயம் தேவை என சட்ட விதி இருக்கிறது, இந்த கூட்டத் தொடர் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் தொடங்கிய கூட்டத்தொடரின் தொடர்ச்சிதான்.
எனவே, ஆளுநர் உரை அவசியமில்லை" என விளக்கமளித்தது.
அதேபோல, மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் அம்மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்த நிலையில், 2024ஆம் ஆண்டின் நிதி நிலை அறிக்கைக்கான கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் ஆளுநர் உரையில்லாமல் துவங்கியது.
இது குறித்து அம்மாநில பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தபோது, கடந்த ஆண்டு நடந்த கூட்டத் தொடர் முடித்துவைக்கப்படாமையால், அதன் தொடர்ச்சியாகவே இந்தக் கூட்டத் தொடர் நடப்பதாகவும், ஆகவே ஆளுநர் உரை தேவையில்லை என்றும் சபாநாயகர் பிமான் பானர்ஜி பதிலளித்தார்.
தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக 90களில் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் உச்சத்தில் இருந்தது. அப்போது ஜெ. ஜெயலலிதா முதலமைச்சராகவும் எம். சென்னாரெட்டி ஆளுநராகவும் இருந்தனர்.
"இருவருக்கும் இடையில் அந்தத் தருணத்தில் கடும் மோதல் இருந்தாலும் ஆளுநர் உரையைப் படிக்க சென்னா ரெட்டி மறுத்ததில்லை
1987 - 92 காலகட்டத்தில் இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன், குடியரசுத் தலைவர் உரை, ஆளுநர் உரை போன்ற விஷயங்களை நீக்க வேண்டுமெனத் தெரிவித்து, அதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டதாக குறிப்பிடுகிறார்.
தான் குடியரசுத் தலைவராக இருந்த காலகட்டத்தின் அனுபவங்களை குடியரசுத் தலைவராக நானிருந்த ஆண்டுகள் (My Presidential Years) என்ற பெயரில் நூலாக எழுதியிருக்கிறார் அவர். அந்த நூலில்தான் இதனைக் குறிப்பிடுகிறார் ஆர். வெங்கட்ராமன்.
ஆளுநரின் உரை என்பது அரசின் கொள்கைதான்.
ஆளுநர்களுக்கு இது தொடர்பாக எந்த அதிகாரமும் கிடையாது.
2014க்கு முன்பு இதுபோல ஆளுநர்கள், முரண்டு பிடித்தது கிடையாது. சென்னா ரெட்டி காலகட்டத்தில்கூட உரையை வாசிக்க மாட்டேன் என மறுக்கவில்லை.
இறுதி முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினுடையதுதான்.
ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல.மாநில அரசு செலவில் உல்லாசமாக வாழும் ஒரு நியமனப் பதவி மட்டும்தான்.
அவர்களுக்கு தங்கள் கருத்தை திணிக்கும் எந்த அதிகாரம்,ஆளுமையோ கிடையாது.
மேலும் அவையைத் துவக்கிவைக்கும் போது மாநில அரசு உரையை படிப்பதுதான் ஒரே வேலை.அதுதான் மரபு.
அதற்குதான் மாநில அரசு ஊதியம்,பாதுகாவலர்,ஊழியர்கள் கார்,வசதியான வீடு என எல்லாச் செலவையும் ஆளுநருக்கு செலவிடுகிறது.
அந்த உரையைக் கூட படிக்க மறுத்து மொக்கைகாரணம் சொல்லி ஓடிஒளிந்தார் எனில் அவர் எதற்கு தேவை.
ஆண்டுக்கு தாடி அவசியமில்லாதது போல்.
ஏன் அரசுக்கு வெட்டிச்செலவு?













