நூறாண்டு கண்ட..

 சென்னை நந்தனத்தில் நடைபெற்று வந்த 49வது புத்தகக் காட்சி நிறைவு. 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புத்தகக்காட்சியை பார்வையிட்டதாக தகவல்.

தினகரனை தொடர்ந்து அன்புமணி, பாரிவேந்தர் ஆகிய கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்த பியூஷ் கோயல். எடப்பாடி பழனிசாமியை இன்று சந்திக்கிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அமமுக மறுப்பு.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் ஆதரவாளர்கள். வரும் 26-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக முன்னாள் எம்.எல்.ஏ. குன்னம் ராமச்சந்திரன் அறிவிப்பு.

எஸ்.ஐ.ஆர். பணிகளில் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடந்துகொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.
கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசின் உரையை படிக்க ஆளுநர் தவார்சந்த் கெலாட் மறுப்பு. சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் ஆளுநரின் செயலால் பரபரப்பு.
சபரிமலை தங்கம் முறைகேடு வழக்கில் விசாரணை தீவிரம். சென்னையில் 100 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய இடதுசாரி கட்சிகளுக்கு ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அழைப்பு. பினராயி விஜயன் கூட்டணியில் இணைந்தால் கேரளாவுக்கு கூடுதல் நிதி கிடைக்கும் என்றும் பேச்சு.
தெலுங்கானாவில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற கணவன். வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து தலைமறைவான நபரை தேடும் போலீசார்.
அரியானாவில் புகழ்பெற்ற ஜிண்டல் கோபுரத்தின் மீது அந்தரத்தில் தொங்கிய இளைஞர். ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் அதிரடியாக கைது
கிரீன்லாந்தைக் கைப்பற்ற ராணுவ பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என ட்ரம்ப் திட்டவட்டம். கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்காவை நேட்டோ அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.
 ரஷ்யாவில் அதிகளவில் பனிக்கட்டிகள் விழுந்த்தால் இடிந்து விழுந்த கட்டடங்கள். இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு. 2 பெண்கள் காயங்களுடன் மீட்பு.

நூறாண்டு கண்ட பொதுவுடமை இயக்கம்!

நூற்றாண்டைக் கொண்டாடியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதல் சட்டசபையில் 62 உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த நிலையில், இன்றைக்கு 2 சட்டமன்ற உறுப்பினர்களுடன் இருக்கிறது.


சி.பி.ஐ கட்சி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் எப்படி செயல்பட்டுள்ளன, இந்த தேர்தல் எப்படி இருக்கும் என்பதை இங்கே பார்ப்போம்.

 நூற்றாண்டைக் கொண்டாடியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திரத்திற்குப்பின் நடந்த 1952-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, மதறாஸ் மாகாண சட்டசபையில் 62 உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் எப்படி செயல்பட்டுள்ளன என்பதை இங்கே பார்ப்போம்.


ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் 1920-ல்  ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி’ உருவானது. 1925-ம் ஆண்டு கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது.


தமிழகத்தைச் சேர்ந்த சிங்கார வேலர் இந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். இதன் மூலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டைக் கொண்டாடியுள்ளது. இப்போதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜாதான் தலைமை வகிக்கிறார்.


மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாத மதறாஸ் மாகாண சட்டசபையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. அதாவது, சுதந்திரத்துக்குப் பிறகு 1952-ம் ஆண்டு, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய மதறாஸ் மாகாணத்தில் முதன்முறையாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.


முதல் சட்டமன்றத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 131 இடங்களில் போட்டியிட்டது, அதில் 62 இடங்களில் வெற்றிபெற்று பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது.


மொழிவாரி மாநிலங்களாக ஆந்திரா, கேரளா, கர்நாடகா  பிரிக்கப்பட்ட பிறகு, 1957-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 68 இடங்களில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது.


இதற்கு அடுத்து வந்த, 1962-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 


1967-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகிய சில தலைவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்று ஒரு கட்சியைத் தொடங்கினர்.

இதனால், 1967 சட்டமன்றத் தேர்தலில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனித் தனியே தேர்தலைச் சந்தித்தன. இந்திய கம்யுனிஸ்ட் கட்சியானது சி.பி.ஐ என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சி.பி.எம் என்றும் அழைக்கப்பட்டன.


1967-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று 2 இடங்களில் வெற்றி பெற்றது. 


1971-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க - இந்திரா காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது. 


அதற்கு பிறகு, 1977-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது.


இதற்கு அடுத்து,  1980-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றது.


அடுத்து,  1984-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.


எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின், அ.தி.மு.க பிளவுபட்ட நிலையில், 1989-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் சி.பி.ஐ 3 இடங்களில் வெற்றி பெற்றது.


அடுத்து,  1991-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.


1996-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது.


அடுத்து, 2001-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக முன்னணி என்ற பெயரில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5  இடங்கள்ல் வெற்றி பெற்றது.


2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றது.


2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணியில் இணைந்த் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றது.

இதற்கு அடுத்து, 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் எதிர்த்து, தே.மு.தி.க, ம.தி.மு.க மற்றும் வி.சி.க-வுடன் இணைந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் நலக் கூட்டணியை அமைத்தது.

இந்த தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தி கூட வெற்றி பெறவில்லை.


தமிழ்நாடு சட்டமன்றத்தி 1952 முதல் 2011 வரை அனைத்து சட்டமன்றத்திலும் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2016 சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத்தால் சட்டமன்றத்தில் இடம்பெறவில்லை.


ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரும் பெரும் தலைவர்கள் மறைந்த பிறகு நடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது.

மக்கள் பிரச்னைகளில் மக்களுக்காக இன்றைக்கும் முன்னணியில் நிற்பது கம்யூனிஸ்ட் கட்சிகள்தான்.


ஆனால், இன்றைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது. 1967 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தி்ராவிட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்துள்ளது.


2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முதல் தொடர்ந்து தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணியிலேயே தேர்தலை சந்திக்கிறது.


அண்மையில், நூற்றாண்டைக் கொண்டாடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த சில சட்டமன்றத் தேர்தல்களில் மிகவும் குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இந்த சூழலில்தான், தமிழ்நாட்டில் இருந்து 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் 2 மக்களவை உறுப்பினர்களையும் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கோள்கிறது.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ள தி.மு.க கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. கூட்டணியில் உள்ள மற்ற எல்லா கட்சிகளும் இந்த தேர்தலில் கூடுதல் இடங்களைக் கேட்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.


தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு எதிரான அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, அ.ம.மு.க, பா.ம.க, த.மா.கா என பலமடைந்து வரும் நிலையில், மறுபுறம், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்தே தேர்தலை சந்திக்கிறது. இன்னொரு புறம், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலை சந்திக்கிறது.


இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்பதால், தி.மு.க தனது கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்களைத் தாராளமாக அள்ளிக் கொடுக்குமா? அல்லது 2021 தேர்தலைப் போல கிள்ளிக் கொடுக்குமா என்பது கணிக்க முடியாததாகவே உள்ளன.


தி.மு.க, இந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எத்தனை இடங்கள் கொடுத்தாலும் அந்த இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ளது.


கார்ப்ரேட் நிறுவனங்களின் "தொண்டு"ஊழல்

 வருவாயை பெருக்குவதற்காக தொண்டு நன்கொடை என்கிற பெயரில் பொதுமக்களிடையே, கார்ப்ரேட் நிறுவனங்கள் பணத்தை வசூலித்து வருகின்றன.


கார்ப்ரேட் நிறுவனங்கள் என்பது ஒரு காலத்தில் பெருநகரங்களுக்கானதகவே இருந்தது. ஆனால், இன்று இரண்டாம் நிலை நகரங்கள் வரை கார்ப்ரேட் நிறுவனங்களின் கிளைகளையும், சேவைகளையும் அணுக முடிகிறது.


ஆன்லைனில் உணவு டெலிவெரி செய்வது தொடங்கி, இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகள்.,மின்சார சாதனங்கள் என கூறி உள்நாட்டில் கடை போட்டு விற்பனை செய்வது வரையிலான பல பிரிவுகளிலும் கார்ப்ரேட் நிறுவனங்கள் வலுவாக காலூன்றி உள்ளன.

அத்தகைய கடைகள் அல்லது சேவைகளை அணுகியபிறகு கட்டணத்தை செலுத்தும்போதெல்லாம், “சார், தொண்டு நிறுவனத்திற்காக ஒன்று/இரண்டு ரூபாயை எடுத்துக்கொள்ளலாமா?” என கேட்கும் அனுபவத்தை நீங்கள் கட்டாயம் எதிர்கொண்டு இருப்பீர்கள்.


ஆனால், அதன் மூலம் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெறுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?


ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும்போது அல்லது கடைகளுக்கு சென்று எடுத்த ஆடைகளுக்கான கட்டணத்தை செலுத்தும்போது, தொண்டு நன்கொடை என கேட்டதுமே எந்தவித ஆலோசனையும் இன்றி தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்பதே பெரும்பாலானோரின் பதிலாக உள்ளது.


காரணம் மக்களிடையே இயல்பாகவே நிலவும் மனிதாபிமானம் மற்றும் ஏழை குழந்தைகளுக்கு என கூறியும் பணம் தராவிட்டால் சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற அச்சமுமே ஆகும். மனிதனின் இந்த பலவீனங்களை பயன்படுத்தியே பெரு நிறுவனங்கள் வெட்ட வெளிச்சத்திலேயே பெரும் ஊழலை நடத்தி வருகின்றன.


நாளொன்றிற்கு சுமார் 1 கோடி பேர் ஆன்லைன் மூலமாக உணவு டெலிவெரி, சினிமா டிக்கெட் முன்பதிவு மற்றும் ஆடைகளை வாங்குவதாகக் கருதினால், அவர்கள் சுமார் 75 லட்சம் பேர் தலா 2 ருபாயை நன்கொடையாக கொடுத்தாலே 1.5 கோடி ரூபாய் நன்கொடையாக வசூலாகும்.


இதுவே மாதத்திற்கு 45 கோடி ரூபாய். அந்த பணத்தை பெருநிறுவனங்கள் எப்படி செலவு செய்கின்றன?


எந்த அடிப்படையில் செலவு செய்கின்றன?


என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?


இந்தியாவில் உள்ள பெருநிறுவனங்கள் தங்களது முந்தைய மூன்று ஆண்டுகளின் நிகர லாபத்திலிருந்து 2 சதவிகிதத்தை ஒதுக்கி, சமூக நலப்பணிகளுக்காக ஒதுக்க வேண்டும் என்பது சட்டமாக உள்ளது. இது Corporate Social Responsibility (CSR) அதவாது பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு என குறிப்பிடப்படுகிறது.


ஆனால், அந்த இரண்டு சதவிகித பங்களிப்பை கூட விட்டுக்கொடுக்க மனமில்லாத பெருநிறுவனங்கள், தொண்டு நன்கொடை என வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் பறிக்கிறது. அந்த தொகையை நிறுவனத்தின் அறக்கட்டளைகளுக்கு மாற்றி, தங்களது சார்பிலேயே சமூக சேவைகள் செய்யப்படுவதாக மோசடி செய்து வருகின்றன.


மேலும், நிறுவனத்தின் சொந்த செலவுகளுக்கும் சட்டப்படி பயன்படுத்திக் கொள்கிறது.


தொண்டு நன்கொடை என்ற பெயரில் பெருநிறுவனங்கள் இப்படி வசூலிப்பது, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றமாகும். டிக்கெட் அல்லது உணவை ஆன்லைனில் புக் செய்யும்போது உங்களது பில்லை சற்றே கூர்ந்து கவனியுங்கள்.


அதில் டொனேஷன் பாக்ஸ் என கூறி ஏதேனும் ஒரு தொகை கட்டணத்தில் சேர்க்கப்பட்டு இருந்தால், தேசிய நுகர்வோர் ஹெல்ப்-லைனிற்கு செயலி மூலமாகவோ அல்லது 8800001915 என்ற எண் மூலமாகவோ புகார் அளிக்கலாம்.


காரணம் பெருநிறுவனங்கள் ஏழை, எளியோரை சுரண்டி கோடிக்கணக்கான ரூபாயை வருவாயை ஈட்டுகிறது. அதிலிருந்து ஒரு சிறு தொகையை ஆவது சமூக மேம்படுத்தலுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே, CSR சட்டம் கொண்டுவரப்பட்டது.


ஆனால், அதற்கான பணத்தையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாடிகையாளர்களாகிய பொதுமக்களிடமிருந்தே பெருநிறுவனங்கள் சுரண்டுவது மிகப்பெரிய குற்றமாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை