தேவை ஒரு சேனை!

 மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் - ஸ்டாலின் மலர் தூவி மரியாதை.தமிழ்நாடு தேர்தல் அரசியல்  மோடியைத் தொடர்ந்து அமித் ஷா தமிழகம் வருகை

தனியார் பள்ளிக் கட்டணம் கட்டுப்பாடு. தமிழக சட்ட சபையில் இறுதி நாளில் 9 மசோதாக்கள்.

மாமல்லபுரம், நாகையில் அதிக மழைப் பதிவு. 

தமிழ் மொழிகாக்க இன்னுயிர் நீத்த தியாகிகளின் நினைவு நாளை ஒட்டி, சென்னை மூளகொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து - நடராஜன் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
பத்திர மோசடி புகார்கள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் இல்லை - சென்னை உயர்நாதாபன்றம். 
பிஸியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வை கட்டாயமாக்குவதற்கு கண்டனம். மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னையில் 17 நாட்களாக நீடித்த பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ். சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என முதல்வர் உறுதி அளித்ததற்கு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு.
மகாராஷ்டிர அமைச்சர் சகன் புஜ்பால், மகனுடன் ஊழல் வழக்கில் இருந்து விடுவிப்பு. பாஜக சலவை இயந்திரத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக விமர்சனம்.
அமெரிக்காவின் மினியாபொலிஸில் மேலும் ஒருவரை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர். குடியேற்ற துறை அதிகாரிகளை கண்டித்து பெருந்திரள் போராட்டம் வலுக்கிறது.






தேவை ஒரு சேனை!

இந்தி எதிர்ப்புப் போர் என்பது மொழிப்போர் மட்டுமல்ல, இது இன உரிமைப் போர்” என்றார் கலைஞர்!

தமிழ் காக்க, தமிழினம் காக்க நடைபெற்று வருவதுதான் மொழிப்போராட்டம் ஆகும்.

முதலாவது மொழிப்போர் என்று 1938 ஆம் ஆண்டு சொல்லப்பட்டாலும் அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே, இந்தி ஆதிக்கத்தை, மொழித் திணிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள்.


தமிழ்நாட்டில் இந்தியப் பிரச்சார சபா தொடங்கப்பட்ட காலத்தில் அதற்கான நிதி திரட்டப்பட்டபோது, ​​தமிழர்கள் யாரும் நிதித் தரக்கூடாது என்று சொன்னவர் பெரியார். பல்வேறு மாநாடுகளில் தீர்மானம் போட்டார் பெரியார்.


தனது ‘குடிஅரசு’ இதழில் தொடர்ந்து எழுதினார் பெரியார். இவை எல்லாம் 1938 போராட்டத்துக்கு முந்தைய பத்தாண்டுகள் ஆகும்.


1938 ஆம் ஆண்டு அரசின் சார்பில் பள்ளிகளில் இந்த கட்டாயம் ஆக்கப்பட்ட போதுதான் அது மிகப்பெரிய போராட்டம் ஆனது. இதில் அரசியல் இயக்கங்களைவிட தமிழ் இயக்கங்கள், தமிழறிஞர்கள் அதிகம் பங்கேற்க வேண்டும் என்று தூண்டினார் பெரியார்.


அதனால் விழிப்புணர்வு பெற்று தமிழறிஞர்கள் அப்போராட்டத்தில் பங்கெடுத்தார்கள்.


பல்லாயிரக்கணக்கானவர்கள் குடும்பம் குடும்பமாகச் சிறை சென்றார்கள். பெரியார் கைது செய்யப்பட்டு ஒன்பது மாதங்கள் சிறை வைக்கப்பட்டார். பேரறிஞர் அண்ணா கைது செய்யப்பட்டார்.


1938 – இந்தி எதிர்ப்புப் போர் தமிழகத்தில் தொடங்கிய நேரத்தில் கலைஞருக்கு வயது 14.நாள்தோறும் மாணவர்களைக் கூட்டிக் கையில் தமிழ்க் கொடியுடன் இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி, கட்டாய இந்தியை எதிர்த்து மாணவர் பேரணியை நடத்தினார். இத்தகைய போராட்டத்தால் இந்தித் திணிப்பு அப்போது கைவிடப்பட்டது.

மீண்டும் 1948 ஆம் ஆண்டு இந்தி திணிக்கப்பட்டது. பெரியாரும், அண்ணாவும் தலைமைவகித்து மொழிப் போராட்டம் நடத்தினர். பின்வாங்கியது இந்தி. இருந்தாலும் ஆண்டுதோறும் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தை நடத்தியது திராவிட இயக்கம்.


1950 ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இந்த எழுத்துகளை அழிக்கத் தொடங்கியது. அதன் பிறகு தான் புகைவண்டி நிலையங்களிலும், அஞ்சல் நிலையங்களிலும் தமிழில் எழுதியது ஒன்றிய அரசு.


1963 – இந்தித் திணிப்பைக் கண்டித்து போராட்டக் களம் அமைக்கப்பட்டது. கலைஞர் தலைமையில் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. ‘நான் பெற்றுக் கொண்டிருக்கிற இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவேன். பணியாற்றுவேன். பலியாகவும் தயாராக இருக்கிறேன்’ என்றார் கலைஞர்.


மதுரையில் சட்டத்தை எரித்து கலைஞர் கைதானார். கலைஞருக்கு தேனியில் அண்ணா அவர்கள் வீரவாள் பரிசளித்துப் பாராட்டினார். அந்த மூன்றாண்டு காலமும் மொழிப்போரால் கனன்றது தமிழ்நாடு. அதுவரை போராட்டமாக இருந்தது, 1965 ஆம் ஆண்டு போராக மாறியது. கழகத்தோடு இணைந்து மாணவர்கள் நடத்திய போர் அது.


அடுத்து அமைந்த கழக அரசு இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கும் சூழலை அரசியல் வெற்றி ஏற்படுத்திக் கொடுத்தது.

அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்தும் புகைப்படத்தில்... தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், கலைஞர் மு.கருணாநிதி, ஆசிரியர் கி.வீரமணி, தளபதி மு.க.ஸ்டாலின்.

1970 திருச்சி மாநாட்டில் ஐம்பெரும் முழக்கத்தை தலைவர் கலைஞர், ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என்று அறிவித்தார் ஒரு முழக்கமாக இணைத்தார்.


அடுத்த ஆண்டு கோவையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றிய அன்றைய மாணவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘தமிழுக்காக உயிர் தரத் தயார், அந்தப் பட்டியலில் என்னை இணைத்துக் கொள்ளுங்கள்’ என்று முழங்கினார்.


‘‘இந்தி எதிர்ப்பு என்பது செத்த குதிரை’’ என்று 1978 ஆம் ஆண்டு பிரதமர் மொரார்ஜி சொன்னபோது, ​​‘‘அது செத்த குதிரையல்ல, தூங்கும் குதிரை’’ என்றார் கலைஞர். தூங்கும் குதிரையைத் தட்டி எழுப்பினார் கலைஞர்.


1986 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தை இந்தி வாரமாகக் கொண்டாட அன்றைய அரசு அறிவிப்பு செய்த போது, ​​‘தேவநகரி வரி வடிவத்தில் உள்ள இந்த இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்க வேண்டும்’ என்று எழுதி அதனைக் கொளுத்தினார் கலைஞர்.


1993 ஆம் ஆண்டு தொலைக்காட்சிகளில் இந்தி நிகழ்ச்சிகள் அதிகரிக்கப்பட்டபோது, ​​அதனை எதிர்த்து சென்னை தொலைக்காட்சி நிலையம் முன்பு இளைஞரணிச் செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொலைக்காட்சிப் பெட்டிகள் உடைக்கப்பட்டன.


2012 ஆம் ஆண்டு என்.சி.ஐ.ஆர்.டி. வெளியிட்ட பாடப்புத்தகத்தில் 1965 மொழிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கருத்துப்படம் இடம்பெற்றிருந்தது. அதனை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.


அதன்பிறகு அந்த கருத்துப்படம் நீக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு இந்திக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்துக் கூறியபோது, ‘மீண்டும் 1965 கிளம்பும்’ என்று தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். ‘அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை’ என்று உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார்.

இப்போதும் மும்மொழித் திட்டத்தை புதிய தேசியக் கல்விக் கொள்கை மூலமாகப் புகுத்துகிறார்கள். அதனை ஏற்க மறுத்துவிட்டார் முதலமைச்சர் அவர்கள். இதனால் நிதி ஒதுக்கீடு இல்லாமல் போனாலும் மொழித் திணிப்பை ஏற்காமல் போராடி வருகிறார் முதலமைச்சர் அவர்கள்.

எதிர்க்கட்சியாக இருந்த போது மட்டுமல்ல, ஆளும் கட்சியாக இருந்தாலும் போராடிக் கொண்டு தான் இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.


ஜனவரி 25 அன்று தமிழ்நாடு முழுவதும் கழக முன்னணியினர் முழங்கினர்.

‘‘இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களில் ஒன்றானது – திராவிடக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்டதுமான தமிழ்த் தேசியத்தை வளர்த்துக் காத்திடவும் – தமிழ் மொழிக்குப் பிறமொழியால் ஆபத்து அணுவளவும் நேராமல் தடுக்கவும் பொறுப்பேற்றுப் பணியாற்றக்கூடியவர்களாக நாமாகத் தான் இருக்கிறோம் – (22.4.1977) என்று கலைஞர் சொன்னார்.

அத்தகைய பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்

‘‘மொழியும் இனமும் கழகத்தின் இரு கண்கள்’’ என்ற தலைவரின் முழக்கம் கோடிக்கணக்கான தமிழர்களின் உணர்வு ஆகட்டும்.


முடியவில்லை மொழிப்போர்! செந்தமிழைக் காக்க சேனை ஒன்று தேவை.

22ஆண்டு பகை.!

21பழிக்குப் பழி படுகொலைகள்!!

போஸ்டர் ஒட்டியதில் எழுந்த மோதல் 21 பழிக்குப் பழி கொலைகளை வாங்கி 22 ஆண்டுகளுக்கும் மேலாக தீராப்பகையாக எரிந்து கொண்டிருக்கிறது. 

 கூலிப்படையினர் வைக்காமல் உறவுகளுக்குள்ளேயே இந்த பழிக்குப்பழி கொலைகள் நடந்து வருகிறது.

பண்ணையார் தரப்புக்கும் பசுபதி பாண்டியனுக்கும் இடையே எழுந்த சாதாரண  வாய்க்கால்  தகராறு இரு சமூகத்திற்கு இடையேயான பகையாக மாறி அது 32 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து இரு தரப்பிலும் 50க்கும் மேற்பட்ட பழிக்குப் பழி கொலைகள் வாங்கியது.

  இதே போன்று போஸ்டர் ஒட்டியதில் எழுந்த மோதலில் மதுரையிலும் 22 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து 21 பழிக்குப் பழி கொலைகளை  வாங்கி வருகிறது  உறவினர்களுக்குள் எழுந்த அரசியல் பகை. 

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வீ.கே.குருசாமி – ராஜபாண்டி. உறவினர்களான இவர்கள் சிறு வயதிலேயே குடும்பத்தினருடன் மதுரைக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். 

 வளர்ந்து ஆளாகியதும் அரசியலில் அடியெடுத்து வைத்தனர். திமுக மண்டல தலைவர் ஆனார் குருசாமி. 

அதிமுக மண்டல தலைவர் ஆனார் ராஜபாண்டி. அங்கேதான் இருவருக்கும் இடையே மோதல் உருவானது.

2003ல் உள்ளாட்சித்தேர்தலின் போது போஸ்டர் ஒட்டுவதில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது.  ராஜபாண்டிக்கு உதவியாக இருந்த அவரின் அண்ணன் மகன் சின்ன முனீசை குருசாமி தரப்பு வெட்டி கொலை செய்தது.

   அரசியல் ரீதியாக மிரட்டுவதற்காக அடித்து உதைத்து போட்டுவிட்டு கிளம்பியபோது, என்னை உயிருடன் விட்டால் உங்க ஒருத்தனையும் உயிரோட விடமாட்டேன் என்று சின்ன முனூசின் பேசவும் ஆத்திரப்பட்டு கொலை செய்துவிட்டனர். 

 இதில் உறவினர்கள் இரு தரப்புக்கும் இடையே ஜென்ம பகை ஆனது.

2008ல் சின்ன முனீஸ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வழுக்கை முனீசை ராஜபாண்டி தரப்பு கொலை செய்தது.  அடுத்து குருசாமியின் உறவினர்கள் மாரிமுத்து, ராமமூர்த்தியை இரட்டைக்கொலை செய்தார் சின்ன முனீசின் தம்பி வெள்ளைக்காளி.

 இந்த கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்ததும் 2013ல் குருசாமியின் தங்கை கணவர் பாம்பு பாண்டியை கொலை செய்தார்.  இந்த கொலையில் உடனிருந்த வெள்ளை காளியின் உறவினர் சகுனி கார்த்தியின் தாய்மாமன் மயில் முருகனை குருசாமி தரப்பு வெட்டிச்சாய்த்தது.

  அதன் பின்னர் 2015ல் முனியசாமியை படுகொலை செய்தார் வெள்ளைக்காளி.  2016ல் குருசாமியின் மகள் கணவரின் தம்பி காட்டுராஜாவை  கொலை செய்தார் வெள்ளைக்காளி. 

இந்த பழிக்குப்பழி கொலையில் 2017ல் குருசாமியின் மகன் மணி, ராஜபாண்டியனின் மகன் தொப்புலி முனுசாமியை பைக்கில் கடத்திச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுவிட்டார்.

 அதே ஆண்டில் குருசாமியின் ஆதரவாலர் சடையாண்டியை வெட்டிக் கொன்றுவிட்டார் வெள்ளை காளி.  இவரின் கூட்டாளிகளான சகுனி கார்த்தி, முத்து இருளாண்டி இருவரும் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். 

latest tamil news

இந்த என்கவுண்டருக்கு குருசாமிதான் காரணம் என்று ஆத்திரம் கொண்டு அவரின் உறவினர் எம்.எஸ்.பாண்டியனை கொல்ல துடித்தார் வெள்ளை காளி.

  பாண்டியன் நினைத்து அவரின் உறவினர் முனியசாமியை கொன்றுவிட்டது காளி தரப்பு.  அப்போது விட்டாலும் 2019ல் பாண்டியை  கொன்றது காளி தரப்பு.

பழிக்குப் பழி கொலையில் 2020ல் வெள்ளைக்காளி தரப்பு முத்து பாண்டியை கொன்றது குருசாமி தரப்பு.  அதே ஆண்டில் குருசாமி தரப்பைச் சேர்ந்த மணியின் நண்பர் முருகானந்தத்தை நடுரோட்டில் வெட்டி கொன்றது காளி தரப்பு.  

இதற்கிடையில் அதிமுகவில் மண்டல தலைவராக இருந்த ராஜபாண்டி 2011ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.  அதன் பின்னர் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 

 மதுரை மாநகராட்சி திமுக மண்டல தலைவராக இருந்த குருசாமி இந்த பழிக்குப் பழி கொலையில் இருந்து தப்பிக்க நினைத்து  கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வந்த போது 2023ல் பெங்களூரு பனசாவடி பகுதியில் உள்ள ஓட்டலில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த போது வெள்ளைக்காளி தரப்பு வெட்டிச்சாய்தது.

  70 முறை வெட்டுப்பட்டும்  உயிர் பிழைத்தார். 

2025ல் குருசாமியின் சகோதரி மகன் கிளாமர் காளி படுகொலை வழக்கில் வெள்ளைக்காளியின் கூட்டாளி சுபாஷ் சந்திரபோஸ் என்கவுண்டர் செய்யப்பட்டார். 

காவல்துறை இரு தரப்புக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட வெள்ளைக்கொடியை பறக்கவிடவில்லை இரு தரப்பும். 

கடந்த ஆண்டு ரவுடிகள் தொடர்ந்து என்கவுன்டர் செய்யப்பட்டு வந்ததால் சிறையில் உள்ள தன் கணவர் வெள்ளைகாளியை என்கவுண்டர் செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் திவ்யா.  

vellaikaali attack

இந்நிலையின் இன்று புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வெள்ளை காளியை ஆஜர்படுத்திவிட்டு சென்னை சிறைக்கு அழைத்துச் சென்றபோது  பெரம்பலூர் அருகே போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்கப்பட்டது.

 வெள்ளை காளியை தப்பிக்க வைக்க அவரது கூட்டாளிகள் நடத்திய தாக்குதலா இது? 

இல்லை, வெள்ளை காளியை கொலை செய்ய குருசாமி தரப்பு செய்த சம்பவமா இது?

 என்ற விசாரணையில் வெள்ளை காளியை குறிவைத்துதான் இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பது தெரியவந்திருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை