"கானாமல் போன கடல்"

 






சனாதன நீதியாளர்கள்!

மிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்த வெறுப்பு பேச்சு, 80 சதவீதம் இந்துக்களுக்கு எதிரானது என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. பாஜக ஐடி விங் தேசிய செயலாளர் அமித் மாளவியா மீது திருச்சி சிசிபி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவின் மீது நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாட்டின் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது “சனாதனத்தை மலேரியா, டெங்கு, கொரோனா போன்று ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று, வெறுமனே எதிர்க்க மட்டும் கூடாது” என்று பேசியிருந்தார்.

உதயநிதியின் பேச்சை பாஜக மற்றும் இந்து மதவெறி அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. உதயநிதி இந்த பேச்சுக்கு மன்னிப்பு கூறவேண்டும் என போராட்டங்கள் நடத்தினர்.பாஜக, இந்திய அளவில் இதனை பேசுபொருள் ஆக்கினாலும், தமிழ்நாட்டு மக்களிடையே இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தோன்றவில்லை.

 இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அனைத்து மதங்களையும் மதிப்போம் என தனது மிதவாத இந்துத்துவா போக்கை வெளிப்படுத்தியது.

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு அமைப்புகள் மற்றும் விசிக போன்று சனாதனத்தை எதிர்த்து களமாடக் கூடியவர்கள் உதயநிதியின் கருத்தை ஆமோதித்து பேசியதோடு ஆதரவும் தெரிவித்தனர்.

இதற்கு எதிர்வினை ஆற்றிய பாஜகவின் தேசிய ஐடி விங் செயலாளர் அமித் மாலவியா உதயநிதியின் கருத்தை இனப்படுகொலைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றம் சாட்டினார். 

அதை தொடர்ந்து புகாரின் பேரில் திருச்சி நகர காவல் துறை அமித் மாலவியா மீது வெறுப்பு பேச்சு என்று கூறி காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரையில் வழக்கு தொடுத்திருந்தார் அமித் மாலவியா. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி உதயநிதியின் கருத்தை தவறாக சித்தரித்த அமித் மாலவியாவை குறைந்தபட்சம் ஒருகேள்வி கூட எழுப்பாமல் அவரின் வழக்கறிஞர் போல் அல்லது அவரைப் போலவே சனாதன ஆதரவு கருத்தை தெரிவித்ததோடு அமித் மாலவியா மீது போடப்பட்ட வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளார்.

நீதிபதி ஸ்ரீமதி குறிப்பிட்ட வழக்கில் பேசிய விவரங்கள் அனைவரும் தெரிந்து கொண்டால் தான் அவரின் காவி சார்பை பற்றி  மக்கள் புரிந்து கொள்ள முடியும்.சனாதன தர்மம் ஒழிப்பு எனில் சனாதன தர்மம் இருக்கக் கூடாது; சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களும் இருக்கக் கூடாது என்பது அர்த்தம்.

  • சனாதனத்தை பின்பற்றும் மக்கள் இருக்கக் கூடாது எனில் அது இனப்படுகொலையைக் (genocide) குறிக்கிறது.
  • சனாதனம் ஒரு மதம் எனில் மதப் படுகொலையை (Religicide) தூண்டுவதாகும்.
  • சனாதன ஒழிப்பு என்பது இனப்படுகொலை- கலாசார படுகொலையைத்தான் குறிக்கிறது
  • இதனால் உதயநிதியின் பேச்சை மனுதாரர் அமித் மாளவியா கேள்விக்குள்ளாக்கி சமூக வலைதளத்தில் பதிவிட்டது அவதூறு இல்லை.
  • உதயநிதி ஸ்டாலினின் வெறுப்பு பேச்சுக்கான எதிர்வினைதான் அமித் மாளவியாவின் சமூக வலைதளப் பதிவாகும்.
  • தமிழகத்தில் இந்து மதத்தினர் மற்றும் ஜாதி இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன.
  • குடுமியை வெட்டுவது, பூணூலை அறுப்பது, பன்றிகளுக்குப் பூணூல் அணிவிப்பது ஆகியவை இந்து மதத்துக்கும், ஜாதி இந்துக்களுக்கும் எதிரான தாக்குதல் சம்பவங்கள். இவை தமிழ்நாட்டில் நடந்துள்ளன.
  • ராமர், விநாயகருக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்தார்; விநாயகர் சிலைகளை உடைத்தார்; இந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
  • 100 ஆண்டுகளாக, திராவிடர் கழகம், உதயநிதி ஸ்டாலினின் திமுகவினர் இந்து மதத்தின் மீது ஒரு தெளிவான தாக்குதல் நடத்துகின்றனர்.
  • உதயநிதி ஸ்டாலினின் பேச்சு 80% இந்துக்களுக்கு எதிரானது; வெறுப்புப் பேச்சு.
  • சனாதனியான மனுதாரர், வெறுப்புப் பேச்சால் பாதிக்கப்பட்டவர்; சனாதன தர்மத்தை பாதுகாத்தவர். உதயநிதியின் பேச்சுக்கு பதிலளித்த மனுதாரர் மீது சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது.
  • மனுதாரர் அமித்மாளவியா மீதான வழக்கு பிரிவுகள் அனைத்துமே உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்குதான் பொருந்தும்.
  • வெறுப்புப் பேச்சை பேசுபவர்கள் தண்டனை இல்லாமல் விடுவிக்கப்படுகின்றனர்; இதற்கு எதிராக செயல்பட்டால் சட்டத்தின் கோபத்துக்குள்ளாகும் நிலை வேதனை தருகிறது.
  • வெறுப்பு பேச்சுக்காக உதயநிதி ஸ்டாலின் மீது எந்த வழக்கும் இங்கே பதிவு செய்யவில்லை; பிற மாநிலங்களில்தான் வழக்குகள் பதிவாகி உள்ளன.
  • அரசு தரப்பு தெரிவிப்பது போல மகாத்மா காந்தி, சனாதன தர்மத்துக்கு எதிராக பேசியவர் இல்லை. அவர் ஒரு சனாதன இந்து என அறிவித்தவர்.
  • காமராஜரும் சனாதனத்துக்கு எதிரானவர் இல்லை; அவர் தீவிர இந்து பக்தர்; முருகன் பக்திப் பாடல்களைப் பாடுகிறவர்.
  • புத்தர் இந்து குடும்பத்தில் பிறந்தவர்; வேதகால நடைமுறைகளை மட்டுமே எதிர்த்தார்; அவர் ஆன்மிகப் பாதையின் மிக உயர்ந்த வடிவத்தை போதித்தார்; மதம் சார்ந்த தியான முறையை முன்வைத்தவர்; புத்தரும் சனாதன தர்மத்துக்கு எதிரானவர் அல்ல.
  • ராமானுஜர், விசிஷ்டாத்வைத தத்துவத்தின் ஆதரவாளர். ஓம் நமோ நாராயணாய என்ற இந்து மந்திரத்தை உச்சரித்து சனாதன தர்மத்தின் தூணாக இருந்தவர்.
  • சைவ சமயத்தைச் சேர்ந்த வள்ளலார், விலங்கு வதையை எதிர்த்தார்; கருணைக்கு முதன்மை கொடுத்தார்; அவர் சனாதன எதிர்ப்பாளர் இல்லை; முக்தி அடைய சனாதன தர்மத்தைப் பின்பற்ற சொன்னவர் வள்ளலார்.
  • பெரியார் மட்டுமே சனாதன தர்மத்தை எதிர்த்தவர்.
  • பாஜக சனாதனம் பற்றி பேசுவதால் உதயநிதியும் பேசினார் என காவல்துறை மனுத் தாக்கல் செய்திருப்பது அரசியல் சார்பாகும்; விசாரணை அதிகாரி இப்படிப்பட்ட மனுவை தாக்கல் செய்திருக்கக் கூடாது.
  • இதனால் அமித் மாளவியா மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

இந்தியாவில் பெரியாரும் திராவிட கழகம் மட்டுமே சனாதனத்தை எதிர்த்ததாக நீதிபதி ஸ்ரீமதி குறிப்பிட்டது தவறு. தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே சனாதன எதிர்ப்பு கருத்துக் கொண்ட சித்தாந்தங்கள் தோன்றின. அதன் நீட்சியாகவே வள்ளலார், ஐயா வைகுண்டர் இந்திய அளவில் மகாத்மா ஜோதிராவ் புலே,  நாராயண குரு என பலர் சனாதனத்திற்கு எதிராக  களமாடியுள்ளார்கள்.இது அல்லாமல் நீதிபதி ஸ்ரீமதியால் திட்டமிட்டு தவிர்க்கப்பட்ட இந்தியாவின் சட்டமேதை இந்திய அரசியலமைப்பின்  தந்தையுமான அம்பேத்கர், சனாதன தர்மத்தையும்  இந்து மதத்தையும் அதில் உள்ள அயோக்கியதனங்களையும் அம்பலப்படுத்தியுள்ளார்.  நான் இந்துவாக சாகமாட்டேன் என லட்சக்கணக்கான மக்களுடன் பௌத்த மதத்தை தழுவியவர். சனாதனத்தையும் இந்து மத கொடுங்கோன்மையும் எதிர்க்கும் பலரும் அம்பேத்காரையை எடுத்துக்காட்டாக சொல்கிறார்கள். ஆனால் சனாதனிகள் அம்பேத்கரின் சனாதன எதிர்ப்பு கருத்துக்களை திட்டமிட்டு மறைக்கப் பார்க்கிறார்கள்.

சனாதனத்தை தீவிரமாக எதிர்த்த அம்பேத்கரும் தற்போது உதயநிதி ஸ்டாலின் வரை சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கான காரணம் என்ன? ஏன் அது ஒழிக்கப்பட வேண்டும்?

பார்ப்பனிய இந்து மதத்தின் அடிப்படையாக உள்ள சனாதன வர்ணாசிரம கட்டமைப்பு மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தியதோடு சாதிய படிநிலையின் கீழ் உள்ள சூத்திர பஞ்சமர்களை தீண்டத்தகாதகவர்களாகவும் இழிவானவர்களாகவும் நடத்துகிறது. இடைநிலையில் உள்ள சாதிகளையும் அவ்வாறு நடத்த பயிற்றுவித்துள்ளது. அதன் விளைவுகளால் தான் இந்தியாவில் இன்றும் சாதிய தீண்டாமை, சாதி ஆணவப் படுகொலைகள், சாதிய வன்கொடுமைகள் அன்றாடம் நிகழ்ந்து வருகிறது. இதனை நியாயப்படுத்தும் விதமாக கதாகாலட்சேபங்களை பார்ப்பனர்கள் இன்னும் ஓதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சமீபத்தில் திருத்தணியில் சேரிக்குள் சாமி ஊர்வலம் நடத்த மாட்டோம் என பார்ப்பன அர்ச்சகர்கள் சொன்னதைப் பற்றி நீதிபதி ஸ்ரீமதி கருத்து சொல்வாரா? இதற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூறுவாரா?

இதற்கு எதிராக போராடி தானே பெரியாரும் அம்பேத்கரும் உரிமைகளை பெற்றுத் தந்தார்கள். இவர்களை போன்ற சமூக சீர்த்திருத்தவாதிகள் இல்லை என்றால் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான சாதி இந்துக்கள் படித்திருக்க முடியுமா? அதிகார மட்டத்தின் மேல் பதவிகளுக்கு சென்றிருக்க முடியுமா? ஏன் ஸ்ரீமதி போன்ற பெண்கள் நீதிபதிகளாய் அமர்ந்திருக்கதான் முடியுமா?

இதுதான், பார்ப்பன சனாதன கும்பலின் கண்ணை உறுத்துகிறது. தமிழ்நாட்டில் மிச்சம் மீதி இருக்கின்ற பார்ப்பனிய எதிர்ப்பு உணர்வே, இன்று வரை சனாதனத்திற்கு எதிரான கருத்துக்களை பேசுகிறது.

 இன்றும் வட மாநிலங்களில் சாதிய தீண்டாமை தலை விரித்து ஆடுகிறது. சூத்திரர்களும் பஞ்சமர்களும் அடிமைகளை போல நடத்தப்படுகிறார்கள். இதைத்தான் சனாதானாவாதிகள் விரும்புகிறார்கள். இதற்கு எதிராக நாம் பேசக்கூடாது எழுதக்கூடாது கருத்து சொல்லக்கூடாது.

2000 ஆண்டுகளாய் இந்தியாவில் புரையோடி போயுள்ள சனாதனம் என்ற மக்களை இழிவுப்படுத்தும் சித்தாந்தத்தை ஒழிக்காமல் ஆராதிக்க வேண்டும் என்கிறார் நீதிபதி ஸ்ரீமதி. இது அவரின் கருத்து அல்ல. சனாதன கும்பலின் கருத்து. அதுபோல் உதயநிதி பேசியது அவரது கருத்தல்ல பன்னெடுங்காலமாய் பார்ப்பனிய எதிர்ப்பு மரபுக் கொண்ட தமிழ்நாட்டு மக்களின் கருத்து.

உழைக்கின்ற மக்களை சாதி ரீதியாக  பிளவுபடுத்தி அவர்களை இழிவுபடுத்தும் சனாதனத்தை வர்ணாசிரம கட்டமைப்பை அதனை உயர்த்தி படிக்கும் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலை ஒழிக்க வேண்டும் என்பதில் தமிழ்நாட்டு மக்கள் உறுதியாய் உள்ளார்கள். மக்கள் அதிகாரம் அதற்கு துணை நிற்கும்.

  • நந்தன்
தூத்துக்குடியில் காணாமல் போன கடல்... 

தருவைக்குளம் அருகிலுள்ள பணையூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட கடல் சிப்பிகள், இந்த பகுதி ஒருகாலத்தில் கடல்சார் நிலமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.


தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் அருகே உள்ள பணையூர் கிராமத்தில் மண்ணின் அடியிலிருந்து கடல் சிப்பிகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் புதைப்படிவங்கள் (marine fossils) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த கண்டுபிடிப்பு அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் புதிய விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.


விவசாய பணிகளுக்காக நிலத்தை சீரமைக்கும் போது கிடைத்த இந்த கடல் சிப்பிகள் குறித்து தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.


கடலிலிருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பணையூர் கிராமத்தில் இவ்வாறு கடல் சிப்பிகள் கிடைத்திருப்பது, பண்டைய காலத்தில் இந்த பகுதி கடலுடன் தொடர்புடையதாக இருந்திருக்கலாம் என்ற யூகத்திற்கு வலுவூட்டுகிறது.

இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி கூறுகையில், "தருவைக்குளம் அருகிலுள்ள பணையூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட கடல் சிப்பிகள், இந்த பகுதி ஒருகாலத்தில் கடல்சார் நிலமாக இருந்திருக்கலாம் என்பதற்கான சான்றாக கருதப்படலாம்.

பண்டைய காலத்தில் பாண்டியர்களால் முத்து வணிகத்திற்க்கு பெயர்பெற்ற கொற்கை நகரம் இந்த பகுதிக்கு அருகாமையில் அமைந்திருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அந்த கொற்கை நகரத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது அதனுடன் தொடர்புடைய கடல்சார் செயல்பாடுகள் நடந்த பகுதியாகவோ பணையூர் இருந்திருக்கலாம்.


மேலும், ஒருகாலத்தில் இந்த இடம் முத்து எடுப்பு அல்லது அதனைச் சார்ந்த செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அந்த காலத்தில் தற்போது போல நவீன வசதி இல்லை என்றாலும் செயற்கை முத்து சிப்பி வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம்.

இதனை உறுதி செய்ய விரிவான அறிவியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த கண்டெடுப்பு தூத்துக்குடி மாவட்டத்தின் பண்டைய வரலாற்றையும், கடல் எல்லைகள் காலப்போக்கில் எவ்வாறு மாற்றம் பெற்றன என்பதையும் அறிந்து கொள்ள உதவும் முக்கியமான சான்றாக பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை