பத்து தூண் சந்து!
மதுரை விளக்குத்தூண் பகுதி சென்றிருக்கீர்களா?
அக் கூட்ட நெரிசலுக்குள் மறைந்திருக்கும் ஒரு சிறு தெருவின் பெயர்தான் பத்து தூண் சந்து.
பெயருக்கு பெருமை சேர்க்கும்வதமாக பிரமாண்டமான பத்து தூண்கள் வரிசையாக பழங்கதை கூறி நிற்கும்.
எதற்கு தொடர்பில்லாமல் இங்கு பத்து தூண்கள்.இதன் வரலாறு என்ன என ஆராய்ந்தால் திருச்சி மலைக் கோட்டைவரை வரலாறு நீள்கிறது.
நாயக்கர் கால அரண்மனையின் மிச்சங்களாக இன்றும் நிற்கும் கருங்கல் தூண்களால் வரலாற்றை நினைவூட்டுகிறது.
திருச்சி மலைக்கோட்டையுடன் தொடர்புடைய இந்த இடம், காலங்களை இணைக்கும் சாட்சியாக திகழ்கிறது.
மதுரை மாநகரம் என்றாலே பழமையும் பாரம்பரியமும் கலைநயமும் ஒருங்கே நினைவுக்கு வரும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்த வரலாற்றை தன் மண்ணில் சுமந்து நிற்கும் இந்த நகரத்தில், பலரும் தினமும் கடந்து செல்லும் சில இடங்கள், பெரும் வரலாற்றுக் கதைகளை தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கின்றன.
அவற்றில் ஒன்றுதான் விளக்குத்தூண் அருகே அமைந்துள்ள பத்து தூண் சந்து.
துணிக்கடைகள், மக்கள் கூட்டத்தின் நெரிசல் என எப்போதும் பரபரப்புடன் இருக்கும் விளக்குத்தூண் பகுதியில், அந்தச் சின்ன சந்துக்குள் நுழைந்தாலே ஒரு விதமான அமைதி சூழ்ந்து கொள்கிறது.
நெருக்கமாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நடுவே, கருங்கற்களால் செய்யப்பட்ட பிரம்மாண்டமான பத்து தூண்கள் நிசப்தமாகதொடர்பின்றிநின்றுகொண்டிருக்கின்றன. அரண்மனைகளிலோ அல்லது பெரிய மண்டபங்களிலோ தான் இத்தகைய தூண்களை பார்த்திருக்கிறோம்.
ஆனால் இங்கு, தனியாக ஏன் தூண்கள்,உள்ளன எனப் பார்ப்பவர்களின் மனதில் பல கேள்விகளை.
“இந்தப் பகுதிக்கு பத்து தூண் சந்து என்ற பெயர் வந்ததற்குக் காரணமே இங்கு காணப்படும் இந்த பத்து தூண்கள்தான் என்றும், இந்த தூண்கள் தனியாக கட்டப்பட்டவை அல்ல.
நாயக்கர்மன்னர்கள் மதுரையை ஆண்ட காலம்.
சுமார் 500 முதல் 600 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பகுதியில் திருமலை நாயக்கர் மன்னரின் மஹால் ஒன்று இருந்ததாகவும், தற்போது இருக்கும் பேலஸ் ரோட்டில் இருந்து விளக்குத்தூண் வரை அந்த அரண்மனை பரந்து விரிந்திருந்தது.
திருமலை நாயக்கர் மன்னருக்கு முத்தையாளு நாயக்கர் என்ற தம்பி இருந்தார். அந்தத் தம்பி பயன்படுத்திய அரண்மனை, சில காலத்திற்கு பிறகு பயன்பாடின்றி போனது.
அக்காலத்தில் நாயக்கர்களுக்கு இரண்டு தலைநகரங்கள் இருந்தன. ஒன்று திருச்சி, மற்றொன்று மதுரை. காலப்போக்கில் திருச்சி நகரமும் செழுமையாக வளர்ந்ததால், அங்கு ஒரு பிரம்மாண்டமான கோட்டையை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
இதன் காரணமாக, மதுரையில் பயன்பாடின்றி இருந்த அந்த அரண்மனை இடிக்கப்பட்டு, அதன் கருங்கற்கள் அனைத்தும் திருச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அந்தக் கற்களைக் கொண்டு தான் இன்றும் கம்பீரமாக நிற்கும் திருச்சி மலைக்கோட்டை உருவானதாக வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன.
அரண்மனை இடிக்கப்பட்ட பிறகு, அந்தப் பகுதி ஒரு காலகட்டத்தில் குப்பை மேடாக,பாம்புகள் குடியிருப்பாக,சுகாதாரமற்ற இடமாக மாறியது.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில், இந்த நிலம் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டு, “நீங்களே சுத்தம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதன் பின்னர் மெதுவாக மக்கள் இங்கு குடியேறத் தொடங்கினர்.
காலப்போக்கில் அரண்மனையின் சுவர்கள் காணாமல் போனது.
ஆனால், அதன் அடையாளமாக இந்த பத்து தூண்கள் மட்டும் மாபெரும் அமைதியுடன் நிற்கத் தொடங்கின.காரணம் கருல்கன்கள் வலிமை.
மேலும், இந்தப் பகுதியின் தரைத்தளத்தில் இன்னும் அரண்மனையின் அடித்தளங்கள் உள்ளதாகவும், இங்கு தோண்டினால் அந்தப் பழைய தளங்கள் தென்படுபின்றன.
அதனால் தான் இப்பகுதியில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அடித்தளம் மிகவும் வலுவாக இருப்பதாகவும், புதிய கட்டிடங்கள் கட்டுவதில் பெரும் சிரமம் இல்லை.
இன்றைக்கு பத்து தூண் சந்து, மதுரையின் பரபரப்பான வர்த்தகப் பகுதிகளுக்கு நடுவே, காலத்தின் சாட்சியாக அமைதியாக நிற்கிறது.
தினமும் ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்லும் இந்தச் சின்ன சந்து, வெறும் ஒரு குறுகிய பாதை அல்ல. அது நாயக்கர் காலத்தின் அரண்மனை, திருச்சி மலைக்கோட்டை, ஆங்கிலேயர் கால மாற்றங்கள் என பல நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றைக் தன் மண்ணில் சுமந்து நிற்கும் ஒரு வரலாற்று சாட்சி.
அந்த பத்து தூண்கள் இன்னும் கூட மதுரையின் பழைய பெருமைகளை மெதுவாக சொல்லிக்கொண்டே நிற்கின்றன.ஆனால் இன்றைய பரபரப்பில் பலர் இந்த வரலாறைக் கவனத்தில் கொள்ளாமல் தவறவிட்டுவிடுகின்றனர்.
கீழடி என்றாலே ஏன் சிலருக்கு பயம் வருகிறது என தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் அவர், "இந்தியா என்ற பன்முகத்தன்மைக்கு எதிராக பயம் கொண்டுள்ளார்கள்; அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை?. கீழடி உலகம் முழுவதும் பேசப்படுகிறது; விரிவான அகழாய்வு நடைபெற்றதே அதற்கு காரணம்.
ஹெமோசேப்பியன்ஸ் மரபு குறித்தும் ஆதாரங்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளது,"இவ்வாறு தெரிவித்தார்.
வாக்குறுதிகளை மறந்த பழனிசாமி!
திராவிட முன்னேற்றக் கழகம் வாக்குறுதி தந்தால் நிறைவேற்றும் என்பதை மெய்ப்பித்துள்ளது. இது மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துள்ளது. எனவே, தி.மு.க. சொல்வதற்கு முன்னால் வாய்க்கு வந்ததைச் சொல்லி வைப்போம் என்று பொய் மூட்டைகளை வாக்குறுதிகளாக அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
அ.தி.மு.க. தனது ஆட்சி காலத்தில் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத கட்சி என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.
2011 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவை பழனிசாமிக்கு நினைவில் இருக்கிறதா?
• சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலைத் திட்டம்.
• தென் தமிழகத்தில் 'ஏரோ பார்க்’.
• ஆன்லைன் வர்த்தகம் தடுக்கப்படும்.
• 10 ஆடை அலங்காரப் பூங்காக்கள்.
• திருப்பூர் சாயக் கழிவுகளைச் சுத்திகரிக்க விஞ்ஞானக் கழிவு அகற்றும் நிலையம்.
• 58 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ்.
• மின்னணு ஆளுமையின் கீழ் அனைத்துக் காவல் நிலையங்கள்.
• விவசாயிகளைப் பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.
• பள்ளிகளில் தாய்மொழியோடு பிறமொழிகள் பயில சிறப்புப் பயிற்சிகள்.
• நீதிமன்றங்களில் தமிழ்மொழி.
• தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.
• வனவிலங்குகள் குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க நடவடிக்கை.
• தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை இரண்டு மடங்காக்குவோம்.
• மொபைல் மின்னணு ஆளுமைத் திட்டம்.
- இவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை பழனிசாமியின் 'அம்மா' ஜெயலலிதா ஆட்சியில்!

• அமெரிக்க சுதந்திர தேவி சிலை போல ரூ.100 கோடியில் மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை அமைக்கப்படும் சட்டமன்ற விதி 110-ன் கீழ் அறிவிப்பை 2013 மே 14-ம் தேதி வெளியிட்டார் முதல்வர் ஜெயலலிதா. தமிழ்த்தாயையே ஏமாற்றினார்கள்.
2016 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதாவது பழனிசாமிக்கு நினைவில் இருக்கிறதா?
• அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் செல்போன் விலையின்றி வழங்கப்படும். •பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், இலவச ‘வைபை' இணையதள வசதி வழங்கப்படும்.
• அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அம்மா இரு சக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி மையம் உருவாக்கப்படும்.
• வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும்.
• ஆதி திராவிடர் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு நீராவி கொதிகலன்களும் நீராவி இட்லி குக்கர்களும் வழங்கப்படும்.
• நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
• அம்பேத்கர் கொள்கையை பரப்ப ரூ.5 கோடியில் அம்பேத்கர் பவுண்டேஷன் நிறுவப்படும்.
• அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 6 தலைமை அரசு மருத்துவமனைகளிலும் கட்டணமில்லா கருத்தரிப்பு மையங்கள் ரூ.10 கோடியில் உருவாக்கப்படும்.
- இப்படிச் சொன்னது எதையும் செய்யவில்லை.

தனது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்துக்கு பழனிசாமி கொடுத்த வாக்குறுதிகளையாவது செய்தாரா? இல்லை.
சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட தகவல் தொழில் நுட்பப் பூங்கா பணிகளை முடக்கி வைத்திருந்தார். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முடக்கினார். பாதாளச் சாக்கடை திட்டத்தை முறையாகச் செயல்படுத்தவில்லை.
ஏற்காடு தாவரவியல் பூங்காவை முறையாக அமைக்கவில்லை. சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மேம்படுத்தவில்லை. சேலம் மாநகர எல்லைப் பகுதிகளை இணைக்கும் ரிங் ரோடு அமைக்கப்படும் என்றார் பழனிசாமி. அமைக்கவில்லை. தலைவாசல் சந்தை விரிவாக்கம் செய்யப்படவில்லை. ஓமலூரில் திரவிய தொழிற்சாலை அமையவில்லை.
எடப்பாடி,வீரபாண்டி தொகுதியில் ஜவுளிப் பூங்கா அமையவில்லை. சேலத்தில் ராணுவத் தளவாடத் தொழிற்சாலை அமையப் போகிறது என்றார்கள். அமையவில்லை. சேலம் செவ்வாய்ப்பேட்டை லாரி மார்க்கெட் மேம்படுத்தப்படவில்லை. இவை அனைத்தும் பழனிசாமி கொடுத்த வாக்குறுதிகள் தான். தனது சொந்த மாவட்டத்துக்குக் கூட சொன்னதைச் செய்யாதவர்தான் பழனிசாமி.
தனது சொந்தத் தொகுதிக்கு கொடுத்த வாக்குறுதியையாவது நிறைவேற்றினாரா பழனிசாமி என்றால் அதுவும் இல்லை.
1. எடப்பாடி தொகுதியில் ஜவுளிபூங்கா
2. நெருஞ்சிப்பேட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம்
3. கொங்கணாபுரத்தில் தொழில்பேட்டை
4. மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் பயன்பாடு
5. எடப்பாடி அரசு மருத்துவமனை மேம்பாடு
6. கொங்கணாபுரம் கூட்டுறவு வங்கி விவகாரம்
7. மின் மயானங்கள்
8. தேங்காய், மா.பருத்தி, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றுக்கு ஆதார விலை
9. பொதுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம்
10. நிலக்கடலை விவசாயிகளுக்கு தனிகூட்டுறவு சங்கம்
- இப்படி தனது தொகுதியையும் தனது மாவட்டத்தையும், தமிழ்நாட்டையும் மொத்தமாக ஏமாற்றிய பழனிசாமியை அவரது தொகுதி மக்களும், மாவட்டத்து மக்களும் தமிழ்நாடும் ஏற்காது.







