ஊதியக் குழு!
பெண்கள் சுதந்திரமாக, மரியாதையுடன் அச்சமின்றி வாழ்வதற்கு உரிய கட்டமைப்பு. திராவிட மாடல் அரசு உருவாக்கும் என உலக மகளிர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.
உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பிப்ரவரி 8-ம் தேதி பாராட்டு விழா. 2 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.
கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து பொதுவெளியில் விவாதிப்பதை திமுக நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும். கூட்டணிக்கட்சியினர் தொடர்பான கருத்துகளை தவிர்க்கவும் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தல்.
கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்துவதே பாஜகவின் வாடிக்கை என திருமாவளவன் விமர்சனம். அதிமுக தலைமையில் கூட்டணி என்பதை பாஜகவினர் கூற மறுப்பதாகவும் குற்றச்சாட்டு.தமிழ்நாட்டில் கூட்டணியில் பெரிய கட்சியான திமுகவின் அழைப்புக்காக காத்திருக்கும் காங்கிரஸ். விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என கிரீஷ் சோடங்கர் நம்பிக்கை.
தொண்டர்கள் விரும்பும் கட்சியோடு தேமுதிக கூட்டணி அமைக்கும் என பிரேமலதா திட்டவட்டம். அடுத்த மாதம் முதல் வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் உறுதி.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நாளை மறுநாளோடு நிறைவு. 97 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில், இதுவரை 16 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பம்.
தலைமை தேர்தல் ஆணையர், பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழ்நாடு வருகை. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை.
குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர். வரும் ஒன்றாம் தேதி 9-வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் கூட்டத் தொடரில் நூறு நாள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம். ஆண்டின் முதல் பேரவை கூட்டத்தில், தேவையற்ற ஆளுநர் உரை அவசியமில்லை என திருத்தம் கொண்டுவர வலியுறுத்த திமுக முடிவு.
இந்தியா-ஐரோப்பியா வர்த்தக ஒப்பந்தத்தால் சொகுசு கார்கள் விலை குறைய வாய்ப்பு. வேளாண் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையும் கணிசமாக குறையும் என எதிர்பார்ப்பு.
இந்தியா-ஐரோப்பா ஒப்பந்தத்தால் திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு. 15 சதவீதம் வரை வளர்ச்சி ஏற்படும் என்றும் தொழில்துறையினர் நம்பிக்கை.
காஷ்மீரில் நீடிக்கும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு. தோடா மாவட்டத்தில் பனிப்பொழிவில் சிக்கிய 40 ராணுவ வீரர்கள் உட்பட 60 பேர் பத்திரமாக மீட்பு.
இமாச்சல் மாநிலத்தில் பனிப்பொழிவு அதிகரிப்பால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு அறிவுறுத்தல். ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அவதி.
இந்தியாவில் இப்போது 8வது சம்பளக் கமிஷன் (8th pay commission) பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஊழியர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்து இறுதி அறிக்கை தயாரிக்க, தேசிய கூட்டு ஆலோசனை அமைப்பின் (NC JCM) தேசிய கவுன்சில் பிப்ரவரி 25 அன்று டெல்லியில் ஒரு முக்கிய கூட்டத்தை நடத்துகிறது.
இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்திற்குப் பிறகு சுமார் ஒரு வாரம் டெல்லியில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நாட்களில், சம்பள அமைப்பு, பதவி உயர்வு கொள்கை, படிகள் மற்றும் ஓய்வூதியம் போன்ற முக்கிய விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்படும்.
சம்பளத்தை உயர்த்தும் காரணி: சம்பளக் கமிஷன் விவாதங்களில் மிகவும் முக்கியமான ஒரு சொல் “ஃபிட்மென்ட் ஃபாக்டர்” (fitment factor) ஆகும்.
உங்கள் தற்போதைய அடிப்படை சம்பளத்தை இந்த எண்ணால் பெருக்கி புதிய சம்பளம் கணக்கிடப்படும்.
தற்போது, 7வது சம்பளக் கீழ் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்த முறை ஃபிட்மென்ட் ஃபாக்டரை கணிசமாக உயர்த்த வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
உதாரணமாக, ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.0 ஆக நிர்ணயிக்கப்பட்டால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் நேரடியாக ரூ.54,000 ஆக உயரும்.











