அரசியல் பயண மூச்சு!

 விண்வெளிக்கு சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 3 ராணுவ அதிகாரிகளுக்கு கீர்த்தி சக்ரா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மம்முட்டி உட்பட 13 பேருக்கு பத்ம பூஷண் விருது* மலையாள நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

* ஜார்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி சிபு சோரனுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. * மராட்டியத்தை சேர்ந்த அல்கா யாக்னிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. * தமிழ்நாட்டை சேர்ந்த மயிலானந்தத்திற்கு சமூக சேவைக்கான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. * தமிழ்நாட்டை சேர்ந்த கள்ளிப்பட்டி ராமசாமிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. * உத்தரகாண்டை சேர்ந்த ஸ்ரீ பகவத் சிங் கோஷியாரிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. *அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் நோரி தத்தாத்ரேயுடுவிற்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. *மராட்டியத்தை சேர்ந்த ஸ்ரீ பியூஷ் பாண்டேவிற்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. *கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீ சதாவதானி ஆர் கணேஷ்க்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. *மராட்டியத்தை சேர்ந்த ஸ்ரீ உதய் கொடக்கிற்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. *டெல்லியை சேர்ந்தா ஸ்ரீ வி.கே மல்ஹோத்ரா (மறைவுக்குப் பின்) விற்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. * கேரளாவை சேர்ந்த ஸ்ரீ வெள்ளப்பள்ளி நடேசன் அவர்களுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. *அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீ விஜய் அமிர்தராஜ்க்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 5 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்புமறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா, கேரளாவை சேர்ந்த கே.டி.தாமஸ், பி.நாராயணன், வி.எஸ்.அச்சுதானந்தன், கலை பிரிவில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த என்.ராஜத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.கோராபுட் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று இறைச்சி, அசைவ உணவுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.ஒடிசா கோராபுட் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று முட்டை, இறைச்சி, மீன் மற்றும் அசைவ உணவுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற்றது மாவட்ட நிர்வாகம். தடை உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.தெலுங்கானாவில் தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்புதெலுங்கானா நாம்பள்ளியில் பர்னிச்சர் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். பிரணீத் (11), அகில் (7), பீபி (55), முகமது இம்தியாஸ் (27), சையத் ஹபீப் (40) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுஎன் அரசியல் பயணத்திற்கான உந்துசக்தி காஞ்சி நகரம்தான் - மு.க.ஸ்டாலின் பேச்சுகாஞ்சிபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- மொழிப்போர் வீரர்களே உங்களது மூச்சுக்காற்றுதான் எங்களை இயக்கி கொண்டிருக்கிறது. தமிழ் மொழியை காக்க வந்த சேனை. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாகட்டும். மிக மிக உணர்ச்சிமயமான மனநிலையில் நான் நின்று கொண்டிருக்கிறேன்.என் அரசியல் பயணத்திற்கான உந்துசக்தி இந்த காஞ்சி நகரம்தான். சில நேரங்களில் அண்ணாவை பார்த்தால் எனக்கே பொறாமையாக இருக்கும். தாய்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் வைத்தவர் அண்ணா. பெரியார் போன்ற குரு, கலைஞரை போன்ற சிஷ்யனை பெற்ற ஒரே தலைவர் அண்ணாதான்.மொழிப்போர் தியாகிகளை நினைத்தால், பெயரை சொன்னால் உணர்ச்சி பொங்குகிறது. உடல் நடுங்கிறது. 1971 -ல் அண்ணா நினைவிடத்தில் இருந்து அண்னா ஜோதியை கொண்டு வந்து கலைஞரிடம் ஒப்படைத்தேன். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தனித்தே ஆட்சி பொன்னையன்தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தனித்தே ஆட்சி அமைப்போம் என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியுள்ளார். காவல் நிலையம் முன்பு திருநங்கை தீக்குளிப்புஸ்ரீவில்லிபுத்தூரில் திருநங்கைகள் பணம் பெறுவதாக போலீசாரிடம் மக்கள் குற்றச்சாட்டு வைத்த நிலையில் மக்களிடம் யாசகம் பெறக்கூடாது என திருநங்கைகளை எச்சரித்த போலீசார்.போலீசார் எச்சரித்ததை கண்டித்து காவல் நிலையம் முன்பு தீக்குளித்த முத்தரசி என்ற திருநங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை