ரத்த ஞாயிறு!
அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்
தூத்துக்குடி முள்ளக்காட்டில் ரூ.2,292 கோடி மதிப்பில், 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டினார் .
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் உள்ளிட்ட தலைவர்களுக்கு இன்று காலை விருந்து அளித்தார் இபிஎஸ். தொடர்ந்து பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை
சற்றே குறைந்த தங்கம் விலை
நேற்று இரு முறை கூடிய ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.
அதன்படி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 720 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் 14 ஆயிரத்து 200 ரூபாய்கு விற்பனை.
ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா ஒப்பந்தம்
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஜன.27ல் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
அன்றைய தினம் வரலாற்றுச் சிறப்புமிக்க தடையில்லா வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என்றும் ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு.
அரசு பேருந்துகளை இயக்க பெண் ஓட்டுநர்கள்
அரசு பேருந்துகளை இயக்க பெண் ஓட்டுநர்களை நியமிக்க ஒடிசா அரசு முடிவு. முதல்கட்டமாக 20 பெண்களை புனேவுக்கு அனுப்பி, மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு பயிற்சி அளிக்கத் திட்டம்
ஆஸ்கர் நாமினேஷன் பட்டியல் இன்று வெளியீடு
98வது ஆஸ்கர் விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ள படங்களின் விவரங்கள் இந்திய நேரப்படி இன்று இரவு 7மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து புது சட்டம் இயற்றும் பிரிட்டன்
16 வயதுக்குட்பட்டோர் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் இயற்றுவது குறித்து பிரிட்டன் அரசு ஆலோசனை. குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தை பருவத்தை அளிக்கும் நோக்கில் இது செயல்படுத்தப்பட உள்ளது. தொழில்நுட்பம் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்தப்பட வேண்டும். அழிப்பதற்காக அல்ல என தொழில்நுட்பத்துறை செயலாளர் லிஸ் கெண்டல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வளர்ச்சியையும்,கல்விதரத்தையும் தொடர்ந்து காப்புணர்ச்சியுடன் தாழ்வாக பேசிவரும் ஆளுநர் ஆர்.யின்..ரவிக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
படைத் தலைவன்.
சுன் சூ கிமு 544ஆம் ஆண்டு சீனாவில் வாழ்ந்த ஒரு மிகப்பெரும் போர்த்தந்திர நிபுணர். இவரைப் பலரும் இந்திய வரலாற்றின் சாணக்கியருக்கு ஒப்பானவராகக் கருதுகின்றனர். அவர் எழுதி 2700 ஆண்டுகள் கடந்த பின்பும், இன்றுவரை 'The Art of War' எனும் நூல் அமெரிக்கத் தொழில் மேலாண்மைப் பள்ளிகளில் ஒரு முக்கியப் பாடநூலாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய உலகப்புகழ் பெற்ற நூலை எழுதி முடித்த சுன் சூ, அதை சீன மன்னர் ஹேலுவிடம் வழங்கினார். மன்னரோ அந்த நூலை மிகுந்த அசுவாரசியமாகப் படித்துவிட்டு, "எல்லாம் நன்றாகத்தான் எழுதியிருக்கிறாய். ஆனால் வெறும் புத்தகத்தைப் படித்துவிட்டுப் போர் புரிய முடியுமா? வார்த்தைகள் இலவசம், ஆனால் அவற்றைச் செயலில் கொண்டு வருவதுதான் கடினம்" என்றார். அதற்கு சுன் சூ, "மன்னா, நடக்கச் சாத்தியமில்லாத எதையும் நான் எழுதவில்லை" என்று உறுதியாகப் பதிலளித்தார்.
உடனே மன்னர், "அப்படியானால் ஒன்று செய். நாளை அரங்கத்திற்கு வா, உனக்கு ஒரு சோதனை வைக்கிறேன். அதில் நீ வென்றால் உன்னை என் படைகளுக்கு ஆலோசகராக அறிவிக்கிறேன்" என்று சவால் விடுத்தார்.
மறுநாள் விளையாட்டு அரங்கில் மக்கள் அனைவரும் கூடினர். மன்னர் தனது சோதனையை விளக்கினார். "இதுநாள் வரை போர்ப்பயிற்சியே பெறாத ஒரு குழுவினருக்கு, இன்று மாலைக்குள் நீ போர்ப்பயிற்சி அளிக்க வேண்டும். திடீரெனப் போர் மூளும்போது சாமானிய மக்களைத் திரட்டி அவர்களுக்குப் பயிற்சி அளிக்க உனது நூல் உதவுகிறதா என்று பார்க்கலாம்" என்றார்.
"நிச்சயமாக. எங்கே படைகள்?"
மன்னர் கைதட்ட அவரது அந்தபுரத்து அழகிகள் ஓடி வந்து அரங்கில் நின்றார்கள்
"இவர்கள் தான் படைகள். இவர்களுக்கு நீ .பயிற்சி கொடு பார்க்கலாம்" என்று மன்னர் சொன்னதும் அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது. சுன் சூவை அவமதிப்பதே மன்னரின் நோக்கமாக இருந்தது.
அனைவரும் சிரித்து முடிக்கும் வரை பொறுமையாக இருந்த சுன் சூ, பயிற்சியைத் தொடங்கினார். மொத்தம் 180 பெண்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்த அவர், மன்னருக்கு மிகவும் பிடித்த இரண்டு நாயகிகளை அந்தப் பிரிவுகளின் தலைவிகளாக நியமித்தார். அவர்களுக்கு இடப்பக்கம், வலப்பக்கம் திரும்புதல் போன்ற அடிப்படை ராணுவக் கட்டளைகளைத் தெளிவாக விளக்கினார்.
பயிற்சி தொடங்கியதும் அந்தப் பெண்கள் அதை ஒரு விளையாட்டாகக் கருதிச் சிரிக்கத் தொடங்கினர். அவர்கள் ஒழுங்காக அணிவகுக்காமல் வேடிக்கையாகச் செயல்பட்டனர். சுன் சூ அமைதியாக, "கட்டளைகள் தெளிவாக இல்லாவிட்டால் அது தளபதியின் தவறு. ஆனால், கட்டளைகள் தெளிவாக இருந்தும் வீரர்கள் கீழ்ப்படியவில்லை என்றால் அது படைத்தலைவர்களின் தவறு. நீங்கள் இருவரும் உங்கள் பிரிவினருக்குச் சரியான வழிகாட்டியாக இருக்க வேண்டும். நீங்களே சிரித்தால் அவர்கள் எப்படி ஒழுங்காகப் பயிற்சி பெறுவார்கள்?" என்றார்.
ஆனால் அந்தப் பெண்கள் அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் கேலியாகச் சிரித்து மார்ச் பாஸ்ட் செய்தனர். அப்போது சுன் சூ தனது வாளை உருவி, கண் இமைக்கும் நேரத்தில் அந்த இரண்டு அழகிகளின் தலைகளையும் துண்டித்தார்.
ஒட்டுமொத்த அரங்கமும் உறைந்து போனது. மன்னர் பதறிப்போய் கீழே ஓடிவந்தார். சுன் சூ நிதானமாக, "மன்னா, மாலை வரை எனக்கு நேரம் இருக்கிறது. உங்கள் படையின் செயல்பாட்டை மாலையில் பாருங்கள்" என்று கூறிவிட்டு, அடுத்த இரண்டு பெண்களைத் தலைவிகளாக நியமித்தார்.
இப்போது அங்கு சிரிப்பொலி இல்லை, மரண அமைதி நிலவியது. அந்தப் பெண்கள் ஒரு தேர்ந்த ராணுவப் படையைப் போலக் கச்சிதமாக அணிவகுப்புச் செய்தனர். மாலைக்குள் அவர்கள் மிகச்சிறந்த பயிற்சி பெற்ற வீரர்களாக மாறினர். இதைக் கண்ட மன்னர், "என் அந்தப்புரப் பெண்களுக்கே இவ்வளவு நேர்த்தியான பயிற்சி அளித்த உன்னால், என் படைகளைச் சிறந்த முறையில் வழிநடத்த முடியும்" என்று கூறி அவரைத் தளபதியாக நியமித்தார்.
இதன் பிறகு கிமு 506இல் நடைபெற்ற புகழ்பெற்ற போஜு போரில் சுன் சூவின் தலைமையிலான படை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இன்றும் அமெரிக்காவின் வெஸ்ட் பாயிண்ட் ராணுவக் கல்லூரி முதல் உலகெங்கிலும் உள்ள பல ராணுவப் பாடத்திட்டங்களில் சுன் சூவின் போர்த்தந்திரங்கள் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளன.
அப்டோபர் புரட்சி
ரத்த ஞாயிறு!
அக்டோபர் புரட்சியின் முன்னோட்டம் என்று லெனினால் வருணிக்கப்பட்ட 1905 புரட்சியின் தொடக்க நிகழ்வான,
இரத்த ஞாயிறு என்று அழைக்கப்படும் படுகொலைகள் நிகழ்ந்த நாள்
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கின் குளிர்கால அரண்மனையில் தங்கியிருந்த ஜார் இரண்டாம் நிக்கோலஸ் மன்னரிடம், ஒன்றரை லட்சம்பேர் கையெழுத்திட்ட மனுவை, அமைதியான முறையில் அளிப்பதற்காக, ஜியோர்ஜி கேப்போன் பாதிரியார் தலைமையில் ஊர்வமாகச் சென்ற, ஆயுதமற்ற பொதுமக்களின்மீது, ராணுவம் தாக்குதல் நடத்தியது.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொண்ட கூட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானாலும், 91 பேர் மட்டுமே பலியானதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
1904இல் தொடங்கி நடந்துகொண்டிருந்த ஜப்பானுடனான போரில், ரஷ்யா தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துக்கொண்டிருந்தது. போரை முடித்துக்கொள்ள ஜப்பான் தயாராக இருந்தாலும் ரஷ்யா தயாராக இல்லை.
பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கிக்கொண்டிருந்த போரைக் கைவிடுவது, அனைவருக்கும் வாக்குரிமை முதலான கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்தன.
1800களின் பிற்பகுதியில்தான் புதிதாக உருவாகியிருந்த தொழில்துறைகளில் பணியாற்றுவதற்காக விவசாயத் துறையிலிருந்து வந்திருந்த தொழிலாளர்கள் மிக மோசமான பணி நிலை, மிகக்குறைந்த ஊதியம், ஒரு நாளுக்கு 15 மணிநேர வேலை முதலானவற்றால் பாதிக்கப்பட்டிருந்ததால், தொழிற்சங்கங்கள் உருவாகி, ஏராளமான வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன.
தொழிலாளர்கள், அடித்தட்டு மக்கள் ஆகியோரின்மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்த கேப்போன் பாதிரியார் அவர்களைத் திரட்டும் பணியைச் செய்தார். வேலை நிறுத்தம் என்பதைக் குறிக்கும் ரஷ்ய மொழிச்சொல்லான ஸ்டாச்கா என்பது, குற்றத்திற்குத் திட்டமிடும் சதியைக் குறிக்கிற ஸ்டாகாட்ஷியா என்ற சொல்லிலிருந்து உருவானது ,
டிசம்பர் 1904இல், தொழிற்சங்கத்தில் சேர்ந்ததற்காகவே, புட்டிலோவ் இரும்பு ஆலை ஊழியர்கள் நால்வர் பணிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட போராட்டம், 382 தொழிற்சாலைகளின் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற வேலைநிறுத்தமாக வளர்ந்து, மனு அளிக்கச் சென்றவர்கள் கொல்லப்பட்டதையடுத்து வெடித்த புரட்சி, 1907 ஜூன்வரை தொடர்ந்தது.
.



