மறக்கப்படும் வரலாறு!

பெண்கள் தங்களின் மார்பகங்களை மறைக்க தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள் பட்டியல்...

அன்றைய திருவாங்கூர் சமாஸ்தானத்தின் மன்னர் ஆட்சியில் தோள் சேலை அணிய தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள்.இதை எதிர்த்துதான் தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.( முதலில கலந்து கொண்ட காந்தி பாதியிலே ஓடிவிட்டார்)

1) 1)குயவர் (மண்பாண்டம் தொழில் சாதியினர்)

2) நாடார் (மரம் ஏறும் தொழில் சாதியினர்)

3) கருமறவர் மற்றும் செங்கோட்டை மறவர் சாதியினர் (தேவர்)

4) துலுக்கப்பட்டர் (மாப்பிள்ளை) சாதியினர்.

5) இடையர் (கோனார்).

6) நாவிதர் (முடி திருத்தம்) சாதியினர்.

7) வண்ணார் ( சலவை தொழில்) சாதியினர்.

8)சக்கிலியர் (துப்புரவு தொழில்) சாதியினர்.

9) பறையர் (பறையடிக்கும் தொழில்) சாதியினர்.

10) நசுரானியர் (சிரியன் கிறிஸ்தவர்) சாதியினர்.

11) குறவர் (கூடை முடைதல்) சாதியினர்.

12) வாணியர் (வாணிய செட்டியார்) சாதியினர்.

13) ஈழவர், தீயர் (இல்லத்து பிள்ளைமார்) மற்றும் அந்த சாதியோடு தொடர்புடைய மற்றும் போர் தொழில் செய்த தீயர் சாதியினர்.

14) பாணர் (ஆடல், பாடலுடன் கூடிய கலைத் தொழில்) சாதியினர். 

15) புலையர் (பறையருள் ஓர் உட்சாதி- வேட்டைத் தொழில்) சாதியினர்.

16) கம்மாளர் (ஆசாரி - இன்றைய காலத்தில் 'விஷ்வகர்மா' என்ற பெயரால் ஏமாற்றப்படும்) கைவினை தொழில் சாதியினர்.

17) கைக்கோளர் (முதலியார்) சாதியினர்.

18) பரவர் (முத்தரையர்) சாதியினர்.

மேலே குறிப்பிட்டுள்ள சாதியினர்கள் சனாதனம் தலைவிரித்தாடும் போது,

எந்த சனாதனிகள் இவர்களுக்குக் குலத் தொழிலைச் செய்ய நிர்பந்தித்தார்களோ?

 அதே சனாதனிகள்தான், அன்றைக்கு நிர்ப்பந்தித்த தொழிலைதான், இன்றைக்கு சனாதன ஒன்றிய பா.ஜ.க அரசு மூலம் 

இப்போது 'விஸ்வகர்மா யோஜனா' என்ற பெயரில் சனாதனத் திட்டத்தை அறிவித்து, 'அவர்களுக்கான குலத் தொழிலை ஊக்குவிப்போம்' என அறிவித்திருக்கிறது.

மீண்டும் அனைவருக்குமான கல்வியை மறுத்து, 

முன்னேற விடாமல் தடுப்பதற்கு , இந்த மாதிரியான சனாதன திட்டத்தை அறிவித்திருக்கிறது சனாதன ஒன்றிய பா.ஜ.க அரசு.

அதனால்தான், 

"சனாதனத்தை ஒழிப்போம்!" என்று ஓங்காரமாக குரல் ஒலிக்கிறது.

சனாதனிகள் ஆதரவாக ஓலமிடுகிறார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக அக்கொடுமையை அனுபவித்த 18 சாதி பேரன்களும் குரல்எழுப்பி கதறுகிறார்கள்.இந்து மதம் என்ற ஒரே முட்டாள்தனத்தினால்.

தன் முன்னோரின் கேவலமானபழைய வாழ்க்கை முறை சிறுமையை அறியாமல்.தன்னை மனிதனாக்கிய திராவிட இயக்கத்தை உணராமல்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை