ஆண்களுக்கு இலவசப் பயணம்?
மதுராந்தகத்தில் மோடி,அமித்சா பங்கேற்கும் மாநாட்டுக்கு கூட்டம் சேர்க்க, உலக வரலாற்றிலேயே பாஜவில் தனியாக்க ஒரு குழு அமைத்திருப்பது தமிழக அரசியல் களத்தில் வேடிக்கையாக எண்ணப்படுகிறது.
கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுவதை எதிர்ப்பவர்கள் வரியை எதிர்கொள்ள நேரிடும் என, அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி, கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் ட்ரம்ப் தீவிரமாக உள்ளார். அதற்காக பலமுறை எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார். இதற்கு கிரீன்லாந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், டென்மார்க்கும் அதனுடன் கைகோர்த்து, ட்ரம்ப்பை எதிர்த்து வருகின்றன.
இன்னும் சில நாடுகளும் ஆதரவு தெரிவிக்கும் நிலையில், கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவை எதிர்ப்பவர்கள், வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
கிரீன்லாந்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற மிகப் பெரிய தீவு நாடாக இருந்தாலும், ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இந்நிலையில், கிரீன்லாந்தை கைப்பற்ற ட்ரம்ப் துடித்து வருகிறார்.அதற்கு ட்ரம்ப் கூறும் காரணம், ஆர்ட்டிக் பகுதியில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்கு, கிரீன்லாந்து அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம் என்பது தான்.
இதனிடையே, கிரீன்லாந்தை அமெரிக்கா உடன் இணைப்பதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிபர் ட்ரம்ப் வரி விதிப்பு மிரட்டல்
ட்ரம்ப்பின் ஆசைக்கு, கிரீன்லாந்து, டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில், சுகாதார பாதுகாப்பு தொடர்புடைய நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அதிபர் ட்ரம்ப், அங்கு பேசும்போது, தேசிய பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து தேவை என்று கூறியுள்ளார்.
அதற்கு உடன்படாத நாடுகள் மீது தான் வரி விதிக்கக் கூடும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் முதல் முறையாக அவர் இப்படி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“ஆர்டிக் தீவை கைப்பற்றுவதில் ட்ரம்ப் தீவிரமாக உள்ளார்“
இந்த சூழலில், கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்க மேற்கொள்ள வேண்டும் என்று, கிரீன்லாந்திற்கான ட்ரம்ப்பின் சிறப்புத் தூதல் ஜெஃப் லாண்ட்ரி கூறியுள்ளார்.
மேலும், மார்ச் மாதத்தில் அவர் கிரீன்லாந்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், ஆர்ட்டிக் தீவை கையகப்படுத்துவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிரமாக உள்ளதாகவும் ஜெஃப் லாண்ட்ரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, ஆயுதத் தாக்குதலுக்கு குறி வைத்திருந்த ட்ரம்ப், இப்போது வரியை ஆயுதமாக கையில் எடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வாக்குறுதிகள்!
தமிழ்நாட்டில், சட்டமன்ற தேர்தலுக்கு இன்றும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணிகளை இறுதி செய்யும் பணிகளை பிரதான கட்சிகள் தீவிரமாக செய்து வருகின்றன.
இந்த நிலையில், மகளிருக்கு 2000 ரூபாய், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட சில முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை இன்று அறிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இன்று, அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை ஒட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து, அதிமுக தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முக்கியமான சில தேர்தல் வாக்குறுதிகளை மட்டும் முதற்கட்டமாக அறிவித்துள்ளார். அதன்படி,
1. மகளிர் நலன்: (குல விளக்குத் திட்டம்)
சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000/- வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
2. ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்:
நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
3. அனைவருக்கும் வீடு(அம்மா இல்லம் திட்டம்)
'அம்மா இல்லம் திட்டம்' மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி 'அம்மா இல்லம் திட்டம்' மூலம் விலையில்லாமல் வழங்கப்படும்.
அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.4. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்:
100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம். 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.
5. அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்:
மகளிருக்கு ரூ. 25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.













