தாராளம் ஏராளம் பழனிசாமி!
⭐மாணவர்களின் கல்வி மற்றும் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக உயர்கல்வி பயிலும் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது.
⭐2026-27 ஆண்டுக்குள் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளில் சோலார் பேனல்களைப் பொருத்தும் இலக்கை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது.சோலார் அமைப்புகள் பொருத்தப்பட்ட வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் கிடைக்கும்.தமிழ்நாட்டில் மதசார்பற்ற தன்மையில் ஒரு இணக்கமான வாழ்க்கையை மேற்கொள்ளும் – மத நல்லிணக்கத்தோடு வாழும் மக்களை பிளவு படுத்தி, வடநாடு போல் இங்கும் ஆட்சியைப் பிடிக்கலாம்… அதன் மூலம் மசூதிகளை இடித்துத் தள்ளலாம்; தேவாலயங்களை இடித்துத் தள்ளலாம், சிறுபான்மையினர், பட்டியலின மக்களை அச்சுறுத்தல் வாழ்க்கையிலேயே காலம் தள்ள வழிவகை செய்யலாம்…என வரிந்து கட்டிக்கொண்டு பல்லாண்டுகளாக பாஜக -ஆர் எஸ் எஸ் – சங்பரிவார் – பாசிச காவிக் கூட்டம் தொடர்ந்து பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இன்று வரை அவர்களது கனவு நிறைவேறவில்லை.
எனவே, காவிக் கூட்டத்தின் வடநாட்டு பல மூலவர்கள் காட்டும் வழிமுறைகள் படி, தமிழகத்தை எப்படிக் கலவரப் பூமியாக்கலாம்; அரசியல் அறுவடை செய்யலாம் எனத் திட்டமிடப் பட்டு அனைத்து வகை சங்பரிவார் காவிக் கூட்டத்தினராலும் காய்கள் நகர்த்தப்படுகின்றன.
பிரச்சனை தான் என்ன?
இது பற்றி ஏற்கனவே நாம் பல கட்டுரைகளை படைத்திருக்கிறோம். எனினும் சாராம்சம் இதுதான்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில், உச்சிப் பிள்ளையார் கோயில், சமணக் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா, விஸ்வநாதர் கோயில்… போன்றவை இருக்கின்றன.
பிரிட்டிஷ்காரன் காலத்திலேயே அந்நாளைய (காவி) பார்ப்பனக் கூட்டம் தர்கா இருக்கும் இடத்திற்கு உரிமை கொண்டாடி மதுரை கீழமை நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தனர்.
வட்டாட்சியர் ராமசாமி ஐயங்கார், அன்றைய நீதிபதி ராமய்யர் போன்றோர் பல்வேறு தரப்பட்டோரையும் உடன் அழைத்துச் சென்று புலத் தணிக்கை செய்து எந்தெந்த இடங்கள் எவ்வளவு விஸ்தீரணத்தில் எவரெவருக்குச் சொந்தம் என்பதாக தீர்ப்பளிக்கப்பட்டது. அடையாளக் கற்கள் ஊண்டப்பட்டன.இந்த வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ராமய்யர் தீர்ப்பே உறுதியானது.
ஆனாலும் எதிரிகள் அன்றைய உச்ச நீதிமன்றம் என கூறப்பட்ட லண்டன் பிரிவி கவுன்சிலில் 1921-ல் மேல்முறையீடு செய்யப்பட்டு 1923, 1931 போன்ற ஆண்டுகளில் எல்லாம் விசாரணை செய்யப்பட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா, மசூதி, நெல்லி தோப்பு, அதை ஒட்டிய இடங்கள், அவற்றுக்குச் செல்லும் படிக்கட்டுப் பாதைகள் அனைத்தும் தர்கா அது சார்ந்த (வக்ப்) இஸ்லாமியர்களுக்கு சொந்தமென தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது. அதன்பின்பும் சுதந்திரம் அடைந்ததாக கூறப்படும் காலகட்டத்திற்கு பின்னரும் எண்ணற்ற முறையில் பல்வேறு நீதிமன்றங்களில் சங்கிக் கூட்டம் வழக்குத் தொடர்ந்து பார்த்தும் காரியம் கைகூட வில்லை.

அதன்பின்பும் இவர்கள் ஆர்எஸ்எஸ் ரூபத்தில் வெளிவந்து நாடு முழுமைக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டதன் விளைவாக, எப்படி அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் ராமன் பிறந்தான் என்பதற்கு ஆதாரமாக ஒரு துண்டு சீட்டைக் கூட நீதிமன்றங்களுக்கு முன்னால் ஆதாரமாக சமர்ப்பிக்க வக்கற்று, அராஜகமாக பாபர் மசூதியை இடித்து தகர்த்தெறிந்து, பின்னர் ராமர் கோயிலைக் கட்டிக் கொள்ள முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் எந்த லட்சணத்தில் தீர்ப்புரை எழுதினேன் என்று வாக்குமூலம் கொடுத்தாரோ,
அந்த நடைமுறையை தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றத்தில் நிறைவேற்றிக் காண்பிக்க ஆர் எஸ் எஸ் சங் பரிவார் கூட்டத்திற்கு, சட்டத்திற்கு புறம்பாக பக்க பலமாக நின்று ரவுடித்தனத்தில் ஈடுபட்டு தீர்ப்புரையையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார் நீதிபதி என்ற பெயரில் உள்ள ஜி.ஆர்.சுவாமிநாதன்.
இதே போன்ற வழக்குகள் பற்பலக் காலக்கட்டத்தில் சங்கிகளால் தொடரப்பட்டு ஏமாற்றத்திற்கு உள்ளான நிலையில் கடைசியாக 2017 ஆம் ஆண்டு இதே கோரிக்கைக்காக நீதிபதி கல்யாண சுந்தரம் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு வழக்கம்போல் எப்படி அறநிலைத்துறை ஏற்பாட்டால் திருப்பரங்குன்றம் உச்சி பிள்ளையார் கோவில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறதோ, அந்த நடைமுறையையே பின்பற்றப்படல் வேண்டும்; தர்கா இடத்தை நோக்கி தீபம் ஏற்ற முற்படக்கூடாது என அருதியிட்டு இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்து விட்டனர்.
தற்போது கார்த்திகை நெருங்கும் நேரத்தில் ஏற்கனவே முருகன் மாநாட்டில் இந்த பாசிச காவிக் கும்பல் அறிவித்தபடியே தனக்கு ஏதுவான ‘நீதிபதி'(!?) ஜி ஆர் சுவாமிநாதன் ஒற்றை நீதிபதி அமர்வில் ஏழுமலை கிராமத்தைச் சேர்ந்த இந்துமத அமைப்பினன் ராம.ரவிக்குமார்தர்காவிற்கு அருகில் உள்ள தீபத்தூணில் (உண்மையில் அது தீபத் தூண் அல்ல; மாறாக எல்லைத்தூண்) கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி கோரி கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்கிறான்.
ஏற்கனவே இது தொடர்பாக இரு நீதிபதிகள் அமர்வு இதே நீதிமன்றத்தில் முடிவான தீர்ப்புரை வழங்கிய பின்பு ஒற்றை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதே தவறு. ரவிக்குமார் மனு தாக்கல் செய்த தருணத்திலேயே அதனை தள்ளுபடி செய்து உத்தரவை பிறப்பித்திருக்க வேண்டும் என்பதுதான் சட்ட நியதி. ஆனால் சட்ட நியதிக்கு தன் வாழ்நாளில் என்றுமே கட்டுப்படாத – சங்கித்தனமான ஆர்எஸ்எஸ் நீதிபதி சுவாமிநாதன், மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.

விசாரணையில் மனுதாரர் ரவிக்குமார் என்ற ஒரே நபருக்காக அவர் சார்ந்த வழக்கறிஞரும், எதிர்த்தரப்பில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி காவல் ஆணையர், கோவில் நிர்வாகம், தமிழ்நாடு அரசு, அர்ச்சகர் மாணவர் சங்கம்உள்ளிட்டோரின் வழக்கறிஞர்கள் எதிர்மனுதாரர்களாக வாதிடுகின்றனர். தர்கா தரப்பிலோ, வக்ப் தரப்பிலோ முதலில் சம்மன் கூட அனுப்பப்படவில்லை. இந்த விவாத முறைகளில் எல்லாம் தமக்கு நம்பிக்கை தென்படவில்லை என்று கூறிவிட்டு நான் புலத்தணிக்கை செய்து ஒரு முடிவுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு வாதி தரப்பு – எதிர்த்தரப்பு, அது சார்ந்த வழக்கறிஞர்கள் எவரையும் அழைத்துச் செல்லாமல் தான் ஒருவர் மட்டும் ‘ஒரு சுபயோக சுப தினத்தில்’ திருப்பரங்குன்றத்தில் ‘ஆய்வினை'(!?) மேற்கொண்டார்.
அதன் பிறகு தர்கா தரப்பு, வக்ப் வாரிய தரப்பு முதலானோருக்கு சம்மன் அனுப்பியபோது, அவர்கள் தரப்பில் எங்களுக்கு கடைசி நேரத்தில் தகவல் கொடுக்கின்றீர்கள்; புலத்தணிக்கு செல்கின்ற பொழுது கூட எங்களை அழைக்கவில்லை; எனவே எங்களுக்கு பதில் அளிக்கக் கால அவகாசம் தேவை என்று கூறுகின்றனர்.
இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை ஒற்றை நீதிபதி விசாரிப்பது சட்டத்திற்கு புறம்பானது என்பது உள்ளிட்ட பல்வேறு சட்ட ரீதியான விவாதங்களை அர்ச்சக மாணவர் தரப்பு வழக்கறிஞராக ஆஜரான வாஞ்சிநாதன் விவாதத்தை முன் வைத்தார்.
அரசு அறநிலையத்துறை சார்பிலும், அரசு வழக்கறிஞரும் போதுமான சான்றாவணங்களை முன்வைத்து தர்காவிற்கு சொந்தமான இடத்தில் மனுதாரர் கார்த்திகை தீபம் ஏற்றிட அனுமதிக்கக் கூடாது; வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத்தூணில் தான் கார்த்திகை தீபம் அறநிலைத்துறையால் ஏற்றப்படல் வேண்டும் என்று வாதிட்டனர். இக்கருத்தில் எதிர் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் வாதிட்டனர் என்பது மிக முக்கியமானதாகும். ஆனால் ஆர்எஸ்எஸ் வெறி உணர்வு பெற்ற ஜி.ஆர். சுவாமிநாதன் அனைத்து விவாதங்களையும் கடாசி எறிந்து விட்டார்.
மனுதாரர் ராம ரவிக்குமார் குறிப்பிடும் தீபத்தூண் ஆறாம் நூற்றாண்டு காலத்திலேயே தீபம் ஏற்றப்பட்டதாக கூறப்படுவதற்கு சான்றாவணமாக ஒரு துண்டுச் சீட்டை கூட(ராமர் கோவில் விவகாரம் போல) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வக்கற்ற நிலையில், GRS தன் மூப்பிற்கு, ‘தர்கா அருகில் உள்ள தீபத்தூணில் (அது தீபத் தூணே அல்ல; எல்லைக்கல்) மனுதாரர் ரவிக்குமார் டிசம்பர் 3-ல் கார்த்திகை தீபம் ஏற்றிக் கொள்ளலாம்; அந்தத் தீபத் தூணை சென்றடைய, (இஸ்லாமியருக்குச் சொந்தமான அதாவது) தர்காவிற்குச் சொந்தமான படிக்கட்டுப் பாதைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்; மாநகர காவல் துறை இவை அனைத்திற்கும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க வேண்டும்…’
இதுதான் ‘சட்ட மேதை’ சங்கி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்புரையின் சாரம். சிந்தித்துப் பாருங்கள். இவருக்கு எவ்வளவு பார்ப்பனக் கொழுப்பு இருக்க வேண்டும்.
ஒரு இந்து கோவிலுக்கு அருகில் தர்காவோ, தேவாலயமோ இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அந்த தர்காவிற்கு தேவாலயத்திற்குச் செல்ல பாதையே கிடையாது. கோவில் வழியே போனால் தான் அந்த இரண்டு வழிபாட்டு தலங்களையும் அடைய முடியும்.
தாராளம் ஏராளம் பழனிசாமி!
தமிழ்நாட்டு மக்கள் அனைவர் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கும் வகையில் பொங்கல் பரிசு அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகை என்ற முதலமைச்சரின் அறிவிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தையே மகிழ்ச்சிக்குரியதாக மாற்றி இருக்கிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட இப்பரிசுத் தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார்கள்.
அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக இத்தொகை கிடைக்கும்.
தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினரும் இவர்களோடு சேர்த்து பயன் பெறுவார்கள்.
ஏற்கனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி, சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சேர்த்து 3 ஆயிரம் ரூபாயும் தரப்பட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு ஆகியவை அனைத்தும் மொத்தமாக ரூ.6,937 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட இருக்கிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கல் தொடங்கிவிட்டது.
பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசு, பொங்கல் பரிசுத் தொகுப்பு, வேட்டி சேலைகளை அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் போது, மகிழ்ச்சி பொங்கி வருகிறது. அதற்கான பரிசுகளை ஆண்டு தோறும் வழங்கி வருகிறார் முதலமைச்சர் அவர்கள்.
2021 ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.
2022 ஆம் ஆண்டு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொருட்கள் தரப்பட்டது. 1,297 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2.15 கோடி மக்கள் பயன்பெற்றார்கள்.
2023 ஆம் ஆண்டு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு தரப்பட்டது. அத்துடன் ஆயிரம் ரூபாய் பணம் தரப்பட்டது.
2024 ஆம் ஆண்டு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு தரப்பட்டது. அத்துடன் ஆயிரம் ரூபாய் பணம் தரப்பட்டது.
2025 ஆம் ஆண்டு 1.94 கோடி அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு தரப்பட்டது.
ஒவ்வொரு பொங்கல் திருநாளும் கருணைப் பொங்கலாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த ஆண்டும் 3 ஆயிரம் ரூபாய் பணத்துடன் பொருட்களும் வழங்கப்பட உள்ளன.
பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் தரப்போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, '5 ஆயிரம் கொடுங்கள்' என்று சொல்லி தனது முந்திரிக்கொட்டைத் தனத்தைக் காட்டிக் கொண்டார்.
தான் ஆட்சியில் இருந்த காலத்தில் ஒழுங்காக எதையும் தர வக்கற்ற பழனிசாமி, இப்போது வாய் நீளம் காட்டினார்.

* 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதற்கு முன் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை 2012 ஆம் ஆண்டு நிறுத்தி விட்டார்கள்
* 2013 ஆம் ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 ரூபாயில் ஒரு கிலோ பச்சரிசியும், 4 ரூபாயில் ஒரு கிலோ சர்க்கரையும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக கொடுக்கப்பட்டது இத்துடன் ரூ.100 ரொக்கத் தொகையும் கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் சேர்த்து மொத்தம் ரூ.160 மதிப்பு.
* 2014 ஆம் ஆண்டும் இதே தொகுப்புதான் தரப்பட்டது.
* 2015 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
* 2016 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 100 வழங்கப்பட்டது.
* 2017 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்கப்படவில்லை.
* 2018 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்கப்படவில்லை.
* 2019 ஆம் ஆண்டு அதுவரை 100ரூபாய் பணம் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டுவந்த நிலையில் வரவிருந்த நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து 1000 ரூபாய் கொடுக்கப்பட்டது.
* 2020 ஆம் ஆண்டும் அதே 1000ரூபாயுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
* 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக 2500 ரூபாய் பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
இதுதான் பழனிசாமியின் ஆட்சி காலம் ஆகும். ஆண்டு தோறும் முறையாக பொங்கல் பரிசுகள் வழங்காதவர் பழனிசாமி. மக்கள் இதனை மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிசாமி.
'ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்” என்று இதனைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் அவர்கள் செய்தி வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். “உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாட்டமாக நிறைய பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்டு உள்ளது” என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
வளர்ச்சி மிகு நாட்டை மகிழ்ச்சி மிகு நாடாக ஆக்கிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.



