ஐஐடி தற்கொலைகள்!
கவர்னருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை: சென்னை பல்கலைக்கழக விழாவை புறக்கணித்த உயர்கல்வித்துறை அமைச்சர்தமிழகத்தில் கவர்னருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் கவர்னர் செயல்படும் விதம் குறித்து அமைச்சர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்துகோவையில் காதல் விவகாரத்தில் தனியார் கல்லூரி வளாகத்திற்குள் 17 வயது மாணவியை சக வகுப்பு மாணவன் கத்தியால் குத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. கத்திக்குத்தில் காயமடைந்த மாணவி அதே தனியார் கல்லூரி குழுமத்தின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனி சின்னத்தில் போட்டி - ஜி.கே.வாசன்சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து கோவையில் காதல் விவகாரத்தில் தனியார் கல்லூரி வளாகத்திற்குள் 17 வயது மாணவியை சக வகுப்பு மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கத்திக்குத்தில் காயமடைந்த மாணவி அதே தனியார் கல்லூரி குழுமத்தின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
100நாள் வேலை திட்டம் தொடர்பாக நாளை சட்டசபையில் தீர்மானம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக நாளை (ஜன.23ம் தேதி) தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் 100 நாள் வேலைத் திட்டத்திற்காக இப்போதாவது குரல் கொடுங்கள் என்று எதிர்க்கட்சியினரை நோக்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சட்டவிரோத குடியேற்றம் குறித்து தெளிவாகக் குறிப்பிடாதது ஏன்?. எஸ்.ஐ.ஆர். வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் சரமாரிக் கேள்வி.4 ஆண்டுகளில்
65 மாணவர்கள் தற்கொலை
கான்பூர் ஐஐடிகளில் அதிகரித்து வரும் மனநல நெருக்கடியால் கடந்த 4 ஆண்டுகளில் 65 மாணவர்கள் தற்கொலை செய்துள்ள னர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி யுள்ளது.
“குளோபல் ஐஐடி முன்னாள் மாணவர் ஆதரவுக் குழுவின் (Global IIT Alumni Support Group)” தரவுகளின்படி, ஜனவரி 2021 முதல் டிசம்பர் 2025 வரை, நாட்டின் பல்வேறு ஐஐடிகளில் (இந்திய தொழில்நுட்பக் கழகம் - IIT) குறைந்தது 65 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இதில் 30 தற்கொலை கள் கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே நிகழ்ந்துள்ளன. பாகுபாடு இந்த தற்கொலைச் சம்பவங்களுக்கு ‘தனிப்பட்ட’ அல்லது ‘கல்வி’ போன்ற அழுத்தங்களே காரணம் என்று அதிகாரப் பூர்வ அறிக்கைகள் கூறினாலும், இந்த விளக்கம் ஒரு சிக்கலான யதார்த்தத்தை மிக எளிமைப் படுத்துவதாக மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஐஐடி களில் நிலவும் கடுமையான மதிப்பீட்டு முறை கள், தீவிரப் போட்டி, சமூகத் தனிமை மற்றும் சாதி அல்லது மொழி அடிப்படையிலான பாகு பாடுகள் போன்றவை மாணவர்களின் மனநலப் பாதிப்புகள் கவனிக்கப்படாமல் போகும் சூழலை உருவாக்குகின்றன.
குறிப்பாக எச்ச ரிக்கை அறிகுறிகள் பெரும்பாலும் தவறவிடப் படுகின்றன. நிலைமை மோசமடைந்த பின்னரே தலையீடுகள் செய்யப்படுவதாக ஐஐடி பேராசிரி யர்களும் தனிப்பட்ட முறையில் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஐஐடி கான்பூர், கோரக்பூர் மாணவர்கள் தற்கொலை சம்பவத்தில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஐஐடி கான்பூர் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அங்கு 9 தற்கொலைகள் பதிவாகியுள்ளன
. இது அனைத்து ஐஐடிகளிலும் (23) நிகழ்ந்த மொத்த தற்கொலைகளில் 30% ஆகும். இதனுடன் ஒப்பிடுகையில், ஐஐடி கோரக்பூரில் (உத்தரப்பிர தேசம்) ஏழு மரணங்களும் பதிவாகியுள்ளன. இதுதொடர்பாக ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவரும், குளோபல் ஐஐடி முன்னாள் மாணவர் ஆதரவுக் குழுவின் நிறுவனருமான தீரஜ் சிங் ஒன்றிய கல்வி அமைச்சகத்திற்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில், “மாண வர்களின் தற்கொலைச் சம்பவங்களுக்கு ஐஐடி நிறுவன இயக்குநரை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். தலைமை மாற்றத்தைப் பரிசீலிக்க வேண்டும்” என்று கூறி, மாண வர்களின் மனநலம் என்பது இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தின் பிரிவு 21இன் (வாழ்வு ரிமை) கீழ் கல்வி நிறுவனங்களின் பொறுப்பு என்பதை உறுதிப்படுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை அவர் கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.
13,000 பேர் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவு களின்படி, 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் 13,000-க்கும் (அனைத்து கல்வி நிறுவனங்களில் சேர்த்து) அதிகமான மாணவர் தற்கொலை கள் பதிவாகியுள்ளன.
இது சராசரியாக ஒரு நாளைக்கு 36 மரணங்கள் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு, மனநலப் பிரச்சனைகளைக் கையாளவும், மேலும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் ஒரு பிரத்யேக பணிக்குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
ஆனால் அந்த குழு பணி நிலைமை தொடர்பாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







