பட்ஜெட்டில் திருக்குறள மட்டுமா?
சிவகங்கையில் சட்டக்கல்லூரி, மினி டைடல் பூங்காவை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 15,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
தமிழ் கலாசாரம் அழிய வழி வகுத்த சோழ மன்னர்கள்: திருமாவளவன்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 47 லட்சம் வாக்காளர்கள் விண்ணப்பிக்கவில்லை அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி. விஜய் தேர்தலில் நின்று வாக்கு பலத்தை நிரூபிக்க வேண்டும் எனவும் விமர்சனம்.
சிறுவாச்சூர் அருகே கார் மோதியதில் சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக சென்ற 4 பெண்கள் உயிரிழப்பு: ஒருவர் காயம்.மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி. தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் பிரேமலதா பேச்சு.
100 நாள் வேலைத்திட்டத்தை தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும் கொலை செய்யும் முறை வந்துவிட்டதா? கார்கே கேள்வி.யுஜிசி புதிய விதிகளுக்கு தடை தீர்வல்ல!
உயர்கல்வி நிறுவனங்களில் புரையோடிப் போயிருக்கும் சாதியப் பாகுபாடுகளை வேர றுக்க, மாணவர் சமூகத்தின் நீண்ட காலப் போ ராட்டங்களுக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட ‘யுஜிசி 2026 சமத்துவ ஊக்குவிப்பு’ விதிமுறை களை உச்ச நீதிமன்றம் தற்போது நிறுத்தி வைத்தி ருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
ரோஹித் வெமுலா மற்றும் பாயல் தத்வி ஆகியோரின் ‘நிறு வனப் படுகொலைகளுக்கு’ பின் எழுந்த நீதிக் கான குரலால் உருவான இந்த விதிகள், இடது சாரி மாணவர் அமைப்புகளின் தொடர் அழுத்தத் தினால் விளைந்தவை.
இதனை வெறும் தொழில் நுட்பக் காரணங்களைச் சொல்லி முடக்குவது, பல்கலைக்கழக வளாகங்களில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளுக்குத் தரப்படும் மறைமுக அங்கீகாரமாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இந்த விதிமுறைகள் பொதுப்பிரிவினருக்கு எதிரானது என்றும், இதில் பாகுபாடு குறித்த வரையறை தெளிவாக இல்லை என்றும், பொய் யான புகார்கள் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக வும் கூறி நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித் துள்ளது.உண்மையில், பாகுபாடு என்பது ஒடுக் கப்பட்ட சமூக மாணவர்கள் மீது ஏவப்படும் ஒரு தலைப்பட்சமான வன்முறை என்பதை மறைத்து, ‘பொய்ப் புகார்கள் வரும்’ என்கிற மேல்தட்டு வர்க் கத்தின் கற்பிதமான அச்சத்திற்கு நீதிமன்றம் முன்னுரிமை அளிப்பது துரதிர்ஷ்டவசமானது.
இந்தத் தடை என்பது முன்னேற்றத்திற்கான நகர்வு அல்ல; மாறாக 2012-ஆம் ஆண்டின் பழைய மற்றும் போதிய வலுவற்ற விதிகளுக்கே மீண்டும் திரும்புவதாகும்.
இவ்விவகாரத்தில் இந்திய மாணவர் சங்கம் இந்த புதிய விதிமுறைகளை ஒரு முதற்கட்ட வெற்றியாக வரவேற்கும் அதே வேளையில், இதில் உள்ள பலவீனங்களைச் சுட்டிக்காட்டி அதனை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என் கிறது.
குறிப்பாக, பல்கலைக்கழகத் துணை வேந்தர்களே இக்குழுக்களுக்குத் தலைமை தாங்குவது என்பது நடுநிலையான விசாரணை யைச் சாத்தியமற்றதாக்கும்.
எனவே, நிர்வா கத்தின் தலையீடு இல்லாத தன்னாட்சி அதிகா ரம் கொண்ட குழுக்களும், அதில் ஜனநாயக ரீதி யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பிரதிநிதிக ளும் இடம்பெறுவது கட்டாயமாகும்.
அரசும் நீதிமன்றமும் செய்ய வேண்டியது இதில் விடுபட்டுள்ள குற்றவியல் நடவடிக்கை களைச் சேர்த்து, இதனை ஒரு முழுமையான ‘ரோஹித் சட்டமாக’ மாற்றி அறிவிப்பதே ஆகும்.
கல்வி நிலையங்கள் சமூக நீதி காக் கப்படும் ஜனநாயகக் களங்களாக மாற வேண்டும். சமூக நீதிக்கான முன்னெடுப்புகளை முடக்க நினைக்கும் சங்-பரிவார மற்றும் அதிகார வர்க்கத்தின் போக்கினை முறியடிக்க வேண்டி யது காலத்தின் கட்டாயம்.
இந்த விதிமுறைக ளை நீர்த்துப்போகச் செய்யாமல், ஐஐடி (IIT) உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்க ளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு வலிமையான சட்டமாக மாற்றும் வரை கருத்துப் போரும் களப் போரும் தொடர வேண்டும்.
பட்ஜெட்டில் திருக்குறள் மட்டுமா?நாளைக் காலை 11 மணிக்கு 2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்கள்.
பொதுவாக, விடுமுறை நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை என்றாலும், இம்முறை பிப்ரவரி 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்றாலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பாஜக அரசு எதைத்தான் முறை,மரபு என்பதை பார்க்கிறது.அனைத்தும முறைகேடுகள்தான்..இதன் காரணமாக அன்று பங்குச் சந்தைகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி இல்லை என அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு நிலையான கழிவு தொகையை 75 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்த நடுத்தர வர்க்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கப்பிள் டேக்ஸ் எனப்படும் தம்பதிகள் இணைந்து வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் மீதான இறக்குமதி வரியைக் குறைப்பதன் மூலம் விலையைக் கட்டுப்படுத்த அரசு முயற்சி செய்யலாம் என்ற பரவலான கருத்து நிலவுகிறது.
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 6,000 ரூபாய் நிதியுதவி 9,000 ரூபாயாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பூமித்தாய் திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயத்திற்கு கூடுதல் மானியங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, மத்திய துறைத் திட்டமாக அங்கீகரித்துள்ள சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும், சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே, கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது.வேறு வழியின்றிதான் ஒநுக்கப்படுகிறது.
ஓசூரில் அமையவுள்ள ஐபோன் தயாரிப்பு மற்றும் பிற மின்னணுப் பொருட்களுக்கான உற்பத்தியை ஊக்குவிக்க உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி தமிழ்நாட்டிற்கு வரலாம் என கூறப்படுகிறது.சென்னை கடற்கரை - எழும்பூர் இடையேயான 4-வது ரயில் பாதை போன்ற பணிகளை விரைவுபடுத்த நிதி ஒதுக்கீடு எதிர்பார்க்கப்படுகிறது.
குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள இஸ்ரோவின் இரண்டாவது விண்வெளி ஏவுதளப் பணிகளுக்காக இந்த பட்ஜெட்டில் கணிசமான நிதி ஒதுக்கப்படலாம்.
இது தென் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மாற்றும் காரணியாக அமையும். சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த பட்ஜெட்டில் பிகாருக்கு அறிவிக்கப்பட்டது போல, இம்முறை மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பிரம்மாண்டமான நிதித் தொகுப்பு அறிவிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறது.
கடந்த பட்ஜெட்டின் போது, தமிழ்நாடு என்ற பெயரையே நிர்மலா சீதாராமன் உச்சரிக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்த நிலையில்,
இந்த ஆண்டு என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.திருக்குறளைத் தவிர வேறு எதிலும் தமிழ்நாடு வராமல் போய்விடுமா?
















