அடுத்த டிரம்பின் ஆக்கிரமிப்ப?
தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கம் கொடுக்கும் திட்டம் தொடக்கம்.
திமுகவில் இணையும் ஓபிஸ் அணி மாஜி எம்.எல்.ஏ.க்கள் சுப்புரத்தினம், பாலகங்காதரன்.
மதவெறியை தூண்டுவோருக்கு சாதகமான தீர்ப்பு” - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வைகோ.
பக்தர்களிடமிருந்து 312 சவரன் வாங்கிய நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலையில் துளிகூட தங்கம் இல்லை: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலம்.*போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள்: ஜன.6க்கு பிறகு விடுப்பு எடுத்தவர்களின் சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.
ஸ்கொயர் பேட்டன் போக்ஸ்
இந்தியாவின் மிகப்பெரிய பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தனது அரசியல் செல்வாக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உருவாக்கிக் கொடுக்க ஸ்கொயர் பேட்டன் போக்ஸ் என்ற பெரிய லாபி நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் கொடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளது என்ற செய்தி சமீபத்தில் வெளியாகி தேச விரோத ஆர்.எஸ்.எஸ் கும்பலின் முகத்திரையைக் கிழித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ப்ரிஸம் (Prism) என்ற செய்தி நிறுவனம் நடத்திய புலனாய்வு விசாரணையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்த திருட்டுத்தனம் வெளிவந்துள்ளது.
இந்த செய்தி வெளியான மறுநாள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர், “ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங், இந்தியாவில் மட்டுமே செயல்படுகிறது, எங்களுக்கும் அமெரிக்க லாபியிங் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை” என்ற அண்டப் புளுகைத் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளரின் மறுப்புச் செய்தி பொய் என்பது ப்ரிஸம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கை படிக்கும் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். எனினும் முழு பூசணிக்காயை ஒரு தட்டு சோற்றில் மறைக்க முயற்சித்துள்ளார் ’உத்தம புத்திரான’ ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் என்பது அம்பலமாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் நேரடியாக லாபியின் நிறுவனத்தை அணுகவில்லை என்றாலும் வேறு ஒரு துணை நிறுவனத்தின் மூலம் லாபி நிறுவனத்தில் பதிவு செய்துள்ளது.
அதாவது, அமெரிக்க லாபி வெளியீடு சட்டத்தின் (Lobbying Disclosure Act – LDA) கீழ் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் ஸ்கொயர் பேட்டன் போக்ஸ் லாபி நிறுவனத்தின் வாடிக்கையாளராக ஆர்.எஸ்.எஸ் பட்டியலிடப்படவில்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் ஸ்டேட் ஸ்ட்ரீட் ஸ்ட்ராடஜீஸ் (State Street Strategies -மாநில தெரு உத்திகள்) நிறுவனம் தான் வாடிக்கையாளராக உள்ளது.
ஆர்.எஸ்.எஸ் சார்பில் ஸ்டேட் ஸ்ட்ரீட் ஸ்ட்ராடஜீஸ் செயல்படுவதை Prism செய்தி நிறுவனம் தனது விசாரணையில் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் ஏன் கிரீன்லாந்தை கைப்பற்ற நினைக்கிறார்?
கிரீன்லாந்தில் அமெரிக்கா பெரிய விமானப்படை தளம் வைத்துள்ளது. கிரீன்லாந்திலிருந்து, அமெரிக்கா ரஷ்யா, சீனா அல்லது வடகொரியாவிலிருந்து வரும் ஏவுகணைகளை கண்காணித்து தடுக்க முடியும். அதேபோல், ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கான ஏவுகணைகள் மற்றும் கப்பல்களை விரைவாக ஏவும் வாய்ப்பும் உள்ளது.
இதை வைத்து, டிரம்ப் கிரீன்லாந்தின் புவியியல் நன்மையை பயன்படுத்தி அமெரிக்காவின் ராணுவ மற்றும் பாதுகாப்பு களத்தில் முன்னிலை பெற விரும்புகிறார்.
கிரீன்லாந்து 836,000 சதுர மைல் பரப்பளவுள்ள வளமிக்க தீவு ஆகும். இதில் உள்ள அரிய நிலத் தனிமங்கள் முக்கியமாக மொபைல் போன்கள், மின் வாகனங்கள், பிற நுகர்வு மின்சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது சீனா இந்த அரிய நில தனிமங்களை அதிக அளவு சப்ளை செய்து வருகிறது. சீனா இந்த துறையில் கொண்டுள்ள ஆதிக்கத்தால் அமெரிக்காவிற்கு அழுத்தம் ஏற்படுகிறது. இதுவே அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற நினைக்கும் மற்றொரு காரணமாகும்.
ஙெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்த டிரம்ப் கிரீன்லாந்தை பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார். ரஷ்யா மற்றும் சீன கப்பல்களால் கிரீன்லாந்து சூழப்பட்டிருப்பதாக தெரிவித்த டிரம்ப் தொடர்ந்து கிரீன்லாதை கைப்பற்றும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவ நடவடிக்கையை பயன்படுத்தினால் அது நேட்டோ கூட்டணியை உடைக்கும் அபாயம் உள்ளது. அமெரிக்கா கிரீன்லாந்தின் மீது ராணுவ தாக்குதல் நடத்தினால் இரண்டாம் உலகப்போரின் முடிவுக்குப் பிறகு வழங்கப்பட்ட பாதுகாப்பும் முடிவுக்கு வரும் என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சன் தெரிவித்தார்.












