தொடரும் பொங்கல் பரிசு!

 தமிழக அரசு அறிவித்த ரூ.3,000 ரொக்கப்பணம் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் மாநிலம் முழுவதும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் உள்ள 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களில், 2.15 கோடி பேருக்கு (97 சதவீதம்) பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.6,687.51 கோடியில், இதுவரை ரூ.6,453.54 கோடி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.


மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையைத் தங்குதடையின்றி வழங்கிய பொது விநியோகத் திட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது" எனத் தெரிவித்துள்ளார்.


மாநில அளவில் விநியோகம் சிறப்பாக இருந்தாலும், சில மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் இன்னும் பரிசுத் தொகுப்பைப் பெறவில்லை. 


சென்னை தெற்கில் உள்ள 10.59 லட்சம் அட்டைதாரர்களில் 94% பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 59,000 பேர் (6%) இன்னும் பெறவில்லை; இதுவே மாநிலத்தின் அதிகபட்ச விடுபட்ட எண்ணிக்கையாகும்.


தேனியில் 22,000, மதுரையில் 44,000 மற்றும் திருநெல்வேலியில் 32,000 அட்டைதாரர்கள் இன்னும் பரிசுத் தொகுப்பைப் பெற வேண்டியுள்ளது. தர்மபுரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் 98% விநியோகத்தை எட்டி முதலிடத்தில் உள்ளன.


சுமார் ரூ.6,500 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணத்தைக் கையாள்வது சவாலான காரியம் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மத்திய கூட்டுறவு வங்கிகளில் இருந்து அந்தந்த சங்கங்களுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பணம் கொண்டு செல்லப்பட்டது. 


ஒவ்வொரு ரேஷன் கடையும் நாளொன்றுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பணத்தை மக்களுக்கு விநியோகம் செய்துள்ளன.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கிய இந்த விநியோகத் திட்டத்தில், இதுவரை விடுபட்ட சுமார் 7.6 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள், நாளை (ஜனவரி 19, 2026) அந்தந்த ரேஷன் கடைகளில் தங்களது ரூ.3,000 ரொக்கம்,

ஒரு கிலோ பச்சரிசி,

ஒரு கிலோ சர்க்கரை

மற்றும் கரும்பு

ஆகியவற்றைத் தடையின்றிப் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


தமிழக அரசின் இந்த அறிவிப்பு, பண்டிகை காலத்தில் வெளியூர் சென்றிருந்த பொதுமக்களுக்கும், வேலை நிமித்தமாக வாங்க முடியாதவர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.


தேசிய அளவில் சிறந்த நூல்களுக்கு செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும் - ஸ்டாலின்

தேசிய அளவில் சிறந்த நூல்களுக்கு தமிழக அரசு சார்பில் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும். விருது பெறுபவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கலை, இலக்கிய விருதில் அரசியல் குறுக்கீடு ஆபத்தானது. பல்வேறு மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு தேசிய அளவில் விருது வழங்கப்படும் என சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பன்னாட்டு புத்தக விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

உருது மொழியை சமஸ்கிருதத்தின் தங்கை என கூறலாம். சமஸ்கிருதம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மொழி. உருது மொழி தோன்றி ஆயிரம் ஆண்டுகள் கூட இருக்காது.

எல்லாவற்றையும் விட மிகவும் பழமையான மூத்த மொழி தமிழ் மொழி தான் என

சமஸ்கிருதம், உருது, தமிழ் ஆகிய மொழிகளில் எது மூத்த மொழி என்ற கேள்விக்கு பாலிவுட்டின் புகழ்பெற்ற கவிஞர் ஜாவேத் அக்தர் பதில் அளித்துள்ளார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை