மூன்றாம் அணி வரலாறு!

 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இன்று கடைசி நாள். எஸ்.ஐ.ஆர் பணிகளின்போது 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில் இதுவரை 12.80 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். உயிரிழந்த வாக்காளர்கள் போக 53.65 லட்சம் பேர் இன்னும் விண்ணப்பிக்கவில்லைஜனாதிபதி மாளிகையில் 21 முதல் 29-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து குடியரசு தினத்தை முன்னிட்டு கர்தவ்யா பாதையில் ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. தொடர்ந்து 29-ந்தேதி, குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் நிறைவாக ஜனாதிபதி மாளிகை அருகே உள்ள விஜய் சவுக் பகுதியில் இந்திய ராணுவத்தின் பின்வாங்கு முரசறை நிகழ்ச்சி நடைபெறும். இதனையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் 21-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஜனாதிபதி மாளிகையில் பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

இந்தூரில் விஷமாக மாறிய குடிநீர்; உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பு - ராகுல் காந்திஇந்தூரில் குடிநீர் விஷமாக மாறியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பு என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இன்று பாகீரத்புராவிற்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.

பாகிஸ்தானில் கால்வாய்க்குள் லாரி கவிழ்ந்து 14 பேர் பலி; இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம்.

கோடி பேருக்கு ரூ.6,453.54 கோடி பொங்கல் ரொக்க பணம் வழங்கி சாதனை: அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்மொத்த கூட்டுறவு துறையின் அர்ப்பணிப்பு, இந்தியாவில் இதுவரை யாரும் செய்யாத வரலாற்றுச் சாதனை என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து வேண்டும்; எதிர்க்கும் நாடுகளுக்கு வரி விதிப்போம்: டிரம்ப் மிரட்டல் அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் உருவாவதற்கான பணிகளை செய்வேன் என உறுதியேற்று செயலாற்றி வரும் ஜனாதிபதி டிரம்ப். அதற்காக பிற நாடுகளின் மீது கடுமையான வரிகளை விதித்து உத்தரவிட்டார்..
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை. ரூ.2 கோடி செலவில் அலங்காநல்லூரில் மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவிப்பு.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 19 காளைகளைத் தழுவிய வீரர் வெற்றி. முதலிடம் பிடித்த கருப்பாயூரணி கார்த்திக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கும் இலவச பேருந்துப் பயணம். பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உரிமைத் தொகை வழங்கப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
ஓசூர் விமான நிலையத் திட்டத்தை மீண்டும் நிராகரித்த ஒன்றிய அரசு. ஹெச்.ஏ.எல். நிறுவனம் வான்வெளியை பயன்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்.
கிரீன்லாந்தை கைப்பற்ற எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப். பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, ஸ்வீடன், பின்லாந்து, நெதர்லாந்து,  ஆகிய 8 நாடுகளுக்கு10% வரி விதித்து அதிரடி.
திமுக உடனான கூட்டணிக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைமை ஆதரவு.

மேலும் ஆட்சியில் பங்கு கேட்பதில்லை எனவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்

திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதையும், சமூக வலைதளங்களில் பதிவுகள் போடுவதையும் தவிர்க்குமாறு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்.

-டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி பேசி வரும் எம்.பி. மாணிக் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில காங்கிரஸ் தலைமை பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்.



தமிழ்நாடு தேர்தல்  3-வது அணி  ?

வரலாறு சொல்லும் பாடம்

 தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


அதே சமயம், வழக்கம்போது தி.மு.க. – அ.தி.மு.க கூட்டணிகள் இடையே தான் போட்டி நிலவி வரும் நிலையில், 3-வது அணியாக இந்த முறை யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


1977-ம் ஆண்டு முதல் தமிழக அரசியல் களம் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திலேயே இருந்து வருகிறது. இருப்பினும், இந்த இருமுனைப் போட்டியை உடைத்து

மூன்றாவது அணி'யாக உருவெடுக்க தமிழக அரசியல் வரலாற்றில் பல முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் இன்றுவரை அந்த முயற்சிகள் கைகூடாத நிலையில், முயற்சி எடுத்த கட்சிகள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க என ஏதாவது ஒரு கட்சியில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. 


அதே சமயம், தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை இந்த தேர்தலில் 3-வது அணி உருவாகுமா என்ற புதிய விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. தமிழகத்தில் மூன்றாவது அணிகள் அவ்வப்போது உருவானாலும், அவை பெரும்பாலும் திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியைப் பிரிக்கும் 'வாக்கு பிரிப்பான்களாகவே இருந்துள்ளன.


இந்திய சுதந்திரம் அடைந்து தமிழகத்தில் 1952-ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்றது. இதில், 375 தொகுதிகளில் நடைபெற்ற இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி 162, கம்யூனிஸ்ட் 62, சுயேச்சை 62 இடங்களில் வெற்றி பெற்றது.


அதன்பிறகு 1957-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்த நிலையில் சுயேச்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்தனர் கம்யூனிஸ்ட் கட்சி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 

தொடர்ந்து 1962-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி 3-வது முறையாக ஆட்சியை பிடித்தது. இந்த முறை, புதிய கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் 2-வது இடத்தையும், சவதான்ரா பார்ட்டி 3-வது இடத்தை பிடித்தது.


1967-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபையில் 4வது தேர்தலில், திராவிட முன்னேற்ற கழகம் 234-க்கு 137 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலில், காங்கிரஸ் 2-வது இடத்தையும், சவதான்ரா பார்ட்டி 3-வது இடத்தையும் பிடித்தது.


1971- தேர்தலிலும் இதே நிலை தான் நீடித்தது. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை கைப்பற்றியது. 

1977-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபையின் 6-வது தேர்தலில் புதிய கட்சியான எம்.ஜி.ஆரின் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியது.


இந்த தேர்தலில் தி.மு.க 2-வது இடத்தையும், காங்கிரஸ் 3-வது இடத்தையும் பிடித்தது.


அதன்பிறகு 1980 மற்றும் 1984 தேர்தல்களில் தொடர்ந்து 3 முறை அ.தி.மு.க ஆட்சியை கைப்பற்றியது. இதில் 1984-ம் ஆண்டு காங்கிரஸ் 2-வது இடத்தையும், தி.மு.க. 3-வது இடத்தையும் பிடித்தது. 


1989-ம் ஆண்டு முதல் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியான 2021- தேர்தல் வரை தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றனர். இந்த அனைத்து தேர்தல்களிலும் இந்த கட்சிகளிகளுடன் கூட்டணி வைத்த கட்சிகள் தான் 3-வது இடத்தை பிடித்துள்ளது. 


1996- தேர்தலில் தி.மு.க. ஆட்சியை கைப்பற்றிய நிலையில், 2-வது இடத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் 3-வது இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. 2001- தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் 3-வது இடத்தை பிடித்தது.

ஆனால் 2006-ம் ஆண்டு ஒரு வலுவான 3-வது அணி உருவானது. தமிழக அரசியலில் மூன்றாவது அணியின் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் நடிகர் விஜயகாந்தின் தேமுதிக. 2006-ல் தனித்துப் போட்டியிட்ட அவர் சுமார் 8.38% வாக்குகளைப் பெற்று, பல தொகுதிகளில் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறினார்.


அதன்பிறகு 2011 தேர்தலில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்கட்சியாக சட்டசபை சென்றது. அதன்பிறகு 2016 தேர்தலில், வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலை சந்தித்தது.


இந்த அணியில் இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் இணைந்தன. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் கண்ட இந்த அணி, பெரிய அளவில் வாக்குகளைப் பெற முடியாமல் தோல்வியை தழுவியதால், தமிழக அரசியல் மீண்டும் இருமுனை போட்டிக்கு வந்தது.


2011-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்ட நாம் தமிழகர் கட்சி, 2016-ம் ஆண்டு தேர்தலை சந்தித்து. இந்த தேர்தலில் 1.1 சதவீதம் வாங்குகள் பெற்ற இந்த கட்சி, 2021 தேர்தலில் 6.5% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று கவனத்தை ஈர்த்தது.

அதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 2.62 சதவீதம் வாக்குகள் பெற்று நகர்புறங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.


தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், அதன் தலைவர் கமல்ஹாசன், ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார்.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK) என்ற கட்சியைத் தொடங்கி 2026 தேர்தலே தனது இலக்கு என அறிவித்துள்ளார். மேலும் அவரே முதல்வர் வேட்பாளராகவும், கூட்டணிக்கு வரும் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.


அவரது வருகை தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும், சமீபத்திய ஆய்வுகளின்படி, விஜய்யின் கட்சி சுமார் 15% முதல் 20% வரை வாக்கு சதவீதத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படுகிறது. இளைஞர்கள் அவரது பக்கம் இருக்கிறார்கள் என்று பலரும் கூறி வருகின்றனர். 

அதேசமயம் அவருடன் இருப்பவர்கள் ரசிகர்கள். ரசிகர்கள் கூட்டம் எப்போதும் ஓட்டாக மாறாது. விஜய் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

ஆனால், விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய பலம் அவரது ரசிகர் பட்டாளம் ஆதரவு தான். தமிழகத்தில் சுமார் 1.5 கோடிக்கும் அதிகமான இளம் வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்கள் மத்தியில் விஜய் ஒரு மாற்றாகப் பார்க்கப்படுகிறார்.


இதனால் வரும் தேர்தலில், தி.மு.க மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க ஆகிய இருதரப்பின் வாக்கு வங்கிகளிலும் சரிவை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.


தற்போதுவரை தமழக வெற்றிக்கழகம் கட்சியுடன் எந்த அரசியல் கட்சியும் கூடடணிக்கு வராத நிலையில், தேர்தல் நெருங்கும்போது இந்த கேள்விக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள கமல்ஹாசன் முதன் முதலில் கட்சி தொடங்கியபோது ஒரு நடிகர் கட்சி தொடங்கியுள்ளார் என்று சாதாரணமான கடந்துபோன மற்ற அரசியல் கட்சிகள் தற்போது விஜய் கட்சி தொடங்கியதை பார்த்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


குறிப்பாக ஆளும் கட்சியான தி.மு.க.வை விஜய் விமர்சிப்பதும், தி.மு.க. அவரை விமர்சிப்பதும் பரபரப்பின் உச்சமாக இருக்கிறது. 


தமிழகத்தில் இதுவரை எந்தவொரு மூன்றாவது அணியும் ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும் வெற்றியைப் பெற்றதில்லை. 

தமிழ்நாட்டில், சட்டமன்ற தேர்தலுக்கு

இன்றும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணிகளை இறுதி செய்யும் பணிகளை பிரதான கட்சிகள் தீவிரமாக செய்து வருகின்றன.


இந்த நிலையில், மகளிருக்கு 2000 ரூபாய், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட சில முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை இன்று அறிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அவை என்ன என்று இப்போது பார்க்கலாம்.



எம்ஜிஆர் பிறந்த நாளில் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்புகள்

இன்று, அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை ஒட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து, அதிமுக தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முக்கியமான சில தேர்தல் வாக்குறுதிகளை மட்டும் முதற்கட்டமாக அறிவித்துள்ளார். அதன்படி,



1. மகளிர் நலன்: (குல விளக்குத் திட்டம்)

சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000/- வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.


2. ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்:

நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.





3. அனைவருக்கும் வீடு(அம்மா இல்லம் திட்டம்)

'அம்மா இல்லம் திட்டம்' மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி 'அம்மா இல்லம் திட்டம்' மூலம் விலையில்லாமல் வழங்கப்படும்.

அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.


4. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்:

100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம். 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.


5. அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்:

மகளிருக்கு ரூ. 25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை