10 ஆண்டுகளில் நீதிபதிகள் மீது

 9000  புகார்களா?

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது 8 ஆயிரத்து 630 புகார்கள் 

மக்களவை கூட்டத்தொடரில் திமுக எம்பி மாதேஸ்வரன் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பதவி வகித்த நீதிபதிகள் மீது எத்தனை புகார் பெறப்பட்டுள்ளது?

அந்த புகார்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். 

திமுக எம்பி-யின் கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேவால் பதிலளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதில் பொதுமக்களை அதிர்ச்சிக்கு ஆழ்த்தியுள்ளது. 


கடந்த 2016ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையில் ஒவ்வொரு ஆண்டும் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபகள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கிடைக்கப்பெற்ற புகார்களின் எண்ணிக்கையை ஆண்டுவாரியாக கீழே காணலாம்.


2016ம் ஆண்டு -  729

2017ம் ஆண்டு - 682

2018ம் ஆண்டு - 717

2019ம் ஆண்டு - 1037

2020ம் ஆண்டு - 518

2021ம் ஆண்டு - 686

2022ம் ஆண்டு - 1012

2023ம் ஆண்டு - 977

2024ம் ஆண்டு - 1170

2025ம் ஆண்டு - 1102

கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக கடந்த 2024ம் ஆண்டில் 1170 புகார்கள் நீதிபதிகள் மீது எழுந்துள்ளது.


மொத்தமாக, கடந்த 10 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 630 புகார்கள் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


திமுக எம்பி மாதேஸ்வரன் இந்த எம்பிக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.


ஆனால், அவரது அந்த கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேவால் பதிலளிக்கவில்லை. 


இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் இடமாக உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் உள்ளது.

ஆனால், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீதே ஆயிரக்கணக்கில் ஆண்டுதோறும் புகார்கள் எழுந்திருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த அதி்ரச்சியை உண்டாக்கியுள்ளது. 


பட்டியலில் இருப்பது உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதான புகார்கள் மட்டுமே ஆகும்.

இவர்கள் தவிர மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மீதான புகார்களையும் சேர்த்தால் அது பல மடங்கு அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது. 


பா.ஜ..க ஆட்சிக்கு வந்த பின்னர்பல நீதிபதிகள் மத,சனாதனபடி பல கருத்திகளைத் தேவையின்றி பேசுவது,அரசியலமைப்பு சட்ட விதிகளை விட்டு சனாதனம்,மனுதர்மம் என தீர்ப்புகளை மக்களுக்கெதிராக ஓரு சார்பாக வழங்குவதும் அதிகரித்து விட்டது எனத்தெரிகீறது.


புகார்களுக்கு ஆளாகியுள்ள நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டை முறையாக விசாரித்து சில புகார்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.


நிலுவையில் உள்ள புகார்கள் மீதும் தக்க  விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 


ஆனால் அதிலும் கர்ணன் போன்ற நீதிபதிகள் மீது உடனேயும் லஞ்சப்பணம் தீப்பற்றி எரிந்த வர்மாக்கள் மீது மென்மையாக இருப்பதாகவும் தெரிகிறது.




பிப். 15 முதல் சுங்கக் கட்டணம் மாற்றம் .

ஒன்றிய அரசு அறிவிப்பு; 

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பிப்ரவரி 15 முதல் சுங்கக் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும் என ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.


இந்த புதிய விதிமுறை, திருத்தம் அமலுக்கு வரும் தேதியிலிருந்து ஒரு வருடம் வரை அல்லது விரைவுச் சாலை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் வரை, எது முன்னதாகவோ அதுவரை அமலில் இருக்கும்.


ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், 2008-ம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (கட்டண நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகளில் மேற்கொண்டுள்ள திருத்தங்களைத் தொடர்ந்து, பிப்ரவரி 15 முதல் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் (NH) சுங்கக் கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது.

திருத்தப்பட்ட விதிகளின்படி, ஒரு தேசிய விரைவுச் சாலை ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாகச் செயல்பாட்டில் இல்லாதபோது, முடிக்கப்பட்ட தூரத்திற்கு மட்டும் சாதாரண தேசிய நெடுஞ்சாலைகளுக்குப் பொருந்தக்கூடிய குறைந்த விகிதத்தில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்.


"தேசிய விரைவுச் சாலைகளின் ஒரு பகுதி மட்டும் பயன்பாட்டில் இருக்கும் போது, அதைப் பயன்படுத்தும் பயணிகளுக்காக 2008-ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (கட்டண நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகளில் இந்திய அரசு ஒரு திருத்தத்தை அறிவித்துள்ளது," என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


தற்போதைய நிலையில், தேசிய விரைவுச் சாலைகள் கட்டுப்படுத்தப்பட்ட பாதைகளாகவும், வேகமான மற்றும் வசதியான பயணத்தை வழங்குவதாலும், அவற்றின் முடிக்கப்பட்ட தூரத்திற்குச் சாதாரண தேசிய நெடுஞ்சாலைகளை விட 25 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


விரைவுச் சாலை முழுமையாகத் திறக்கப்படாவிட்டாலும், செயல்பாட்டில் இருக்கும் பகுதிக்கு இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.


இருப்பினும், புதிய விதியின் கீழ், ஒரு தேசிய விரைவுச் சாலை முழுமையாகத் திறக்கப்படாத நிலையில், முடிக்கப்பட்ட தூரத்திற்கான சுங்கக் கட்டணம், 2008-ம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளின் கீழ் சாதாரண தேசிய நெடுஞ்சாலைப் பிரிவிற்குப் பொருந்தக்கூடிய குறைந்த கட்டணத்திலேயே வசூலிக்கப்படும்.


அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இந்தத் திருத்தமானது, விரைவுச் சாலைகளுக்கு இணையாகச் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலை வழிகளில் நிலவும் நெரிசலைக் குறைக்கவும், விரைவுச் சாலைகளின் திறக்கப்பட்ட பகுதிகள் வழியாகப் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை ஊக்குவிக்கவும், வாகன நெரிசலால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.


இந்த புதிய விதிமுறை, திருத்தம் அமலுக்கு வரும் தேதியிலிருந்து ஒரு வருடம் வரை அல்லது விரைவுச் சாலை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் வரை, எது முன்னதாகவோ அதுவரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை