. 1,721 கோடி ஜி.எஸ்.டி வருவாய் இழப்பு -

தமிழகத்தில் ரூ. 1,721 கோடி

ஜி.எஸ்.டி வருவாய் இழப்பு -

சி.ஏ.ஜி அறிக்கை


தமிழகத்தில் ரூ.1,721 கோடி ஜிஎஸ்டி வருவாய் இழப்பு மற்றும் ரூ.44,000 கோடிக்கும் அதிகமான வரி நிலுவையை சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழகத்தில் 2022-23 ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.1,721 கோடி மதிப்பிலான வருவாய் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2022-23 ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.1,721 கோடி மதிப்பிலான வருவாய் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இவ்வளவு பெரிய தொகையில் அடுத்த ஓராண்டில் வெறும் ரூ.11.5 கோடியை மட்டுமே அரசால் மீட்க முடிந்துள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, மத்திய ஜி.எஸ்.டி தணிக்கையின் மூலம் மட்டும் 337 வழக்குகளில் ரூ.1,538 கோடி மதிப்பிலான முறைகேடுகள் கண்டறியப்பட்டன. 

இந்த அனைத்து வழக்குகளிலும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, துறை ரீதியாகத் தவறுகள் ஒப்புக்கொள்ளப்பட்ட போதிலும், வெறும் ரூ.8.64 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.


வரி செலுத்துவோர் தரப்பிலிருந்து பதில்கள் அளிக்கப்பட்ட பின்னரும், பல வழக்குகளில் மதிப்பீட்டுப் பணிகள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகத் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


ஜி.எஸ்.டி பதிவுகள் ரத்து செய்யப்படும் நடைமுறையிலும் பெரும் ஓட்டைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 2.98 லட்சம் ரத்து செய்யப்பட்ட பதிவுகளில், 2.64 லட்சம் வணிகங்கள் கட்டாயமாகத் தாக்கல் செய்ய வேண்டிய இறுதித் தணிக்கை அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை.


இதன் விளைவாக, 2.81 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளில் நிலுவைத் தொகையைத் துறையால் துல்லியமாகக் கணக்கிட முடியாமல் போனது.


இத்தகைய குளறுபடிகள் ஒருபுறம் இருக்க, பழைய பதிவுகளுக்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்யாத 16,500 விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் புதிய ஜி.எஸ்.டி பதிவுகள் வழங்கப்பட்டுள்ளது .


வருவாய் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள பலவீனத்தைக் காட்டுகிறது.

வரி அமைப்பிற்குள் நுழையும் தொடக்க நிலையிலேயே பல விதிமீறல்கள் நடந்துள்ளன.


ஆதார் அங்கீகாரம் செய்யப்படாத அல்லது அதிகாரிகளால் சரிபார்ப்புக்கு உத்தரவிடப்பட்ட வழக்குகளில் கூட, நேரடி கள ஆய்வு செய்யப்படாமலேயே ஜி.எஸ்.டி பதிவுகள் வழங்கப்பட்டுள்ளன.


இது முறையற்ற பதிவுகள் மற்றும் எதிர்கால வரி ஏய்ப்பிற்கு வழிவகுக்கும் என சி.ஏ.ஜி எச்சரித்துள்ளது.


மேலும், சிறு வணிகர்களுக்கான குறைந்த வரிச் சலுகை கொண்ட 'காம்போசிஷன்' திட்டத்தில், தகுதியற்ற 952 வரி செலுத்துவோர் தவறாக அனுமதிக்கப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


துறை ரீதியான நிலுவைத் தொகைகள் வசூலிப்பதிலும் சுணக்கம் காணப்படுகிறது. 2023 மார்ச் 31 நிலவரப்படி, பல்வேறு துறைகளில் வர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.44,289.54 கோடியாக உள்ளது.


இதில் ரூ.22,595 கோடிக்கும் அதிகமான தொகை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பது, சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் உள்ள தாமதத்தைப் பிரதிபலிக்கிறது.


ஜிஎஸ்டி தவிர்த்து, சொத்துப் பத்திரப் பதிவு மற்றும் முத்திரைத் தீர்வை துறையிலும் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டுதல் மற்றும் நிறுவன மறுசீரமைப்பின் போது பதிவற்ற மாற்றங்கள் செய்ததன் மூலம் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தணிக்கை அறிக்கை கூறுகிறது.






ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் இந்தி


வடமாநிலங்களில் அழிந்து வரும் தாய்மொழிகள்..


மகாராஷ்டிராவில் மராத்தி, குஜராத்தில் குஜராத்தி, ஒடிசாவில் ஒடியா, பீகாரில் போஜ்பூரி, மேற்குவங்கத்தில் வங்காளம். பஞ்சாபில் பஞ்சாபி இப்படி ஒவ்வொரு மாநிலமும் தனக்கு என மொழி வைத்து உள்ளது.


ஆனால் இந்த அத்தனை மொழிகளிலும் இன்று சரளமாக பேசப்படும் மொழி இந்தி. இந்த மாநிலங்களில் உள்ள மக்கள் மெல்ல மெல்ல தங்கள் தாய்மொழியில் பேசுவதை மறந்ததால் அந்த மொழிகள் அழிந்து வருகின்றன.


தமிழ்நாட்டை போல் பிற மாநிலங்களில் ஆங்கிலம் தெரியும் நம்பி சென்றுவிட முடியாது. குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு சென்றால் நிச்சயம் இந்தி தெரியாவிட்டால் ரொம்பவே வேதனைப்படுவீர்கள்.


தமிழ்நாட்டில் தமிழ் தெரியாவிட்டாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால், யார் வேண்டுமானாலும் இங்கு எளிதாக வாழ முடியும் ஏனெனில் குக்கிராமங்களில் கூட ஆங்கிலத்தை சரளமாக பேச தெரிந்தவரகள் மற்றும் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் ஏராளம்.

ஆனால் ஆங்கிலம் தான் நமக்கு சிறப்பாக தெரியுமே என்று எண்ணி வட மாநிலங்களுக்கு நீங்கள் சென்றால் நிச்சயம் மிகவும் கஷ்டப்படுவீர்கள்.

ஏனெனில் நம்மை போல் ஆங்கிலத்தின் மீது தீராத காதல் கொண்டவர்கள் அல்ல அவர்கள். ஆனால் இந்தியின் மீது அதிக பற்று உடையவர்கள்.

வட மாநிலங்களில் இந்தி தெரிந்தால் தான் உங்களால் மற்றவர்களிடம் பேச முடியும். ஏனெனில் மும்மொழிகளை ஏற்றுக்கொண்ட போதிலும், அவர்களுக்கு இந்தியில் ஆர்வம் அதிகம்.

ஏனெனில் அவர்கள் சுற்றியுள்ள அத்தனை மாநிலங்களிலும், ஏன் அத்தனை பேருக்கும் இந்தி தெரியும் என்பதால் ஆங்கிலத்தை பெரிதாக கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

வட மாநிலங்களில் இந்தி தெரிந்தால் தான் உங்களால் மற்றவர்களிடம் பேச முடியும். ஏனெனில் மும்மொழிகளை ஏற்றுக்கொண்ட போதிலும், அவர்களுக்கு இந்தியில் ஆர்வம் அதிகம்.

ஏனெனில் அவர்கள் சுற்றியுள்ள அத்தனை மாநிலங்களிலும், ஏன் அத்தனை பேருக்கும் இந்தி தெரியும் என்பதால் ஆங்கிலத்தை பெரிதாக கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

இதனால் ஆங்கிலத்தை பெயருக்குத்தான் படித்தார்கள். இதன் விளைவாக ஆங்கிலத்தைவிட இந்தியில் பேசுவதையே எங்கும் அவர்கள் விரும்புகிறார்கள்இதனால் அந்த மாநில மக்களுக்கு கிடைத்த நன்மை என்னவென்றால், இந்தியாவின் தமிழகத்தை தவிர ஏனைய எந்த மாநில மக்களுடன் இப்போது சரளமாக பேச முடிகிறது. ஆனால் அதற்காக அவர்கள் தங்கள் தாய்மொழியை விலையாக கொடுத்துவிட்டார்கள்.

இதன் காரணமாக பீகார், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, பஞ்சாப், ஒடிசா, அஸ்ஸாம், வங்காளம் என அனைத்து மாநில மக்களுமே தங்கள் தாய்மொழியைவிட சரளமாக இந்தியில் பேசியும் எழுதியும் வருகிறார்கள்

இதன் காரணமாக பீகார், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, பஞ்சாப், ஒடிசா, அஸ்ஸாம், வங்காளம் என அனைத்து மாநில மக்களுமே தங்கள் தாய்மொழியைவிட சரளமாக இந்தியில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். அவர்களது தாய்மொழிக்குள் பிரிக்க முடியாத அளவுக்கு இந்தி கலந்துவிட்டது. இந்த கலப்பை தெரிந்தே ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

இதன் காரணமாக பீகாரில் இருந்த போஜ்பூரி மொழி, மகாஹி மற்றும் மைதிலி மொழிகள் குறுகிய வட்டத்தினர் பேசிக்கொள்ளும் மொழியாக அழிந்துவிட்டது.

பீகார் மட்டுமல்ல வடக்கே உள்ள 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்தி தான் பேசும் மொழியாக மாறிக்கிடக்கிறது.

அனைத்து மாநிலங்களுமே இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக பயன்படுத்துகின்றன.

அவர்களின் மொழியை இந்தி கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிவிட்டது.

இதன் காரணமாக பீகாரில் இருந்த போஜ்பூரி மொழி, மகாஹி மற்றும் மைதிலி மொழிகள் குறுகிய வட்டத்தினர் பேசிக்கொள்ளும் மொழியாக அழிந்துவிட்டது. பீகார் மட்டுமல்ல வடக்கே உள்ள 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்தி தான் பேசும் மொழியாக மாறிக்கிடக்கிறது. அனைத்து மாநிலங்களுமே இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக பயன்படுத்துகின்றன.அவர்களின் மொழியை இந்தி கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிவிட்டது. தமிழைப் போல் அப்படியே இன்னும் எந்த மொழியும் இயல்பு மாறாமல் அப்படியே இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

எம். ஷோலகோவ் (Mikhail Sholokhov) 

*சோவியத் ரஷ்யாவின் சிறந்த இலக்கியவாதியும், 'அமைதியான டான்' (And Quiet Flows the Don) என்ற காவியப் படைப்பின் மூலம் உலகப் புகழ்பெற்றவருமான எம். ஷோலகோவ் (Mikhail Sholokhov) அவர்களின் நினைவு தினம் இன்று.

ரஷ்ய மக்களின் வாழ்க்கை, போர், காதல் மற்றும் போராட்டங்களை உலகிற்குத் தன் எழுத்தின் மூலம் கடத்தியவர் மிக்கைல் ஷோலகோவ். 1984-ம் ஆண்டு இதே பிப்ரவரி 21 அன்று அவர் காலமானார்.

அவர் எழுதிய "கன்னி நிலம்" (Virgin Soil Upturned) நாவல், 1930-களில் சோவியத் ரஷ்யாவில் பெரும் விவாதத்தையும் புரட்சியையும் ஏற்படுத்திய ஒரு மிகமுக்கியமான படைப்பு. 

 பொதுவுடைமையாக்கப்பட்ட (Collectivization) அந்த நெருக்கடியான காலகட்டத்தை, எவ்வித ஒளிவுமறைவுமின்றி இந்தப் புதினம் அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியது.

பழைய விவசாய முறையிலிருந்து கூட்டுப் பண்ணை முறைக்கு மாறும்போது விவசாயிகளிடையே ஏற்பட்ட மனப்போராட்டங்கள், குலாக்குகளின் (பணக்கார விவசாயிகள்) எதிர்ப்பு மற்றும் சோவியத் அதிகாரிகளின் செயல்பாடுகளை ஷோலகோவ் இதில் மிகத் துல்லியமாக விவரித்திருப்பார். 

இந்தப் படைப்பு வெளியானபோது, அது வெறும் நாவலாக மட்டுமில்லாமல், சோவியத் ரஷ்யாவின் சமூக வரலாற்று ஆவணமாகவே பார்க்கப்பட்டது.

 இதற்காகவே அவருக்கு 1960-ல் உயரிய 'லெனின் பரிசு' வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது எழுத்தாற்றலைப் பாராட்டி 1965-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

 குறிப்பாக 'அமைதியான டான்' நாவல், ரஷ்யாவின் உள்நாட்டுப் போர்க்காலத்தைப் படம் பிடித்துக் காட்டிய ஒரு உன்னத ஆவணமாக இன்றும் கருதப்படுகிறது.

வெறும் எழுத்தாளராக மட்டுமல்லாமல், மக்களுடன் மக்களாக வாழ்ந்து அவர்களின் துயரங்களை நேரில் கண்டவர். அதனால்தான் இவரது படைப்புகள் காலங்களைக் கடந்தும் இன்றும் வாசிக்கப்படுகின்றன.

ஸ்டாலின் பரிசு, லெனின் பரிசு எனப் பல உயரிய விருதுகளை வென்ற பெருமை இவருக்கு உண்டு.

மால்கம் எக்ஸ்:  உரிமைக்குரல் ஓய்ந்த நாள்!*

அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான போராட்டக் குரல்களில் ஒன்று மால்கம் எக்ஸ். 

1965-ம் ஆண்டு இதே பிப்ரவரி 21 அன்று, நியூயார்க்கில் உள்ள ஒரு அரங்கில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆரம்பத்தில் தீவிரமான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த மால்கம், பின்னர் மெக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட பிறகு மனிதாபிமானம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் குறித்த புதிய பார்வையை அடைந்தார்.

 "எந்தவொரு வழியிலாவது நீதியைப் பெறுவோம்" (By any means necessary) என்பது இவரது புகழ்பெற்ற முழக்கம்.

அவரது பேச்சு கேட்போரை வசீகரித்து அவரின் பக்கம் ஈர்த்தது. தனது வேர்களைக்கண்டறிந்து கருப்பர்களை ஆஃப்ரிக்க தேசத்திலிருந்து கடத்தி வந்த வெள்ளை இனத்துக்கு எதிரான அவரது குரல் கேட்டு எண்ணற்ற கருப்பின மக்கள் அவர் பின்னால் நின்றார்கள்.

படிப்படியான அவரது வளர்ச்சி அமெரிக்க அரசாங்கத்திற்கு பெரும் கவலையாக மாறியது. ஆதலால் அமெரிக்கா ஆயிரக்கணக்கான பக்கங்களில் அவரைப் பற்றிய செய்தியைச் சேகரித்தது.

 பலமுறை கொலை செய்வதற்கு முயற்சிகள் நடந்தன. இறுதியாக 1965 ஆம் ஆண்டு மன்ஹாட்டனில் ஒரு அரங்கில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில் துப்பாக்கியின் குண்டுகள் பதினாறு முறை பாய்ந்து மால்கம் எக்ஸ்  உயிரைக் குடித்தது

அப்போது அவருக்கு வயது வெறும் 39 மட்டுமே.

அவர் மறைந்தாலும், இன்றும் உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு அவரது சொற்கள் பெரும் ஊக்கத்தைத் தந்து கொண்டிருக்கின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை