உலகை உலுக்கும் அதானி மோசடி!


 தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட உள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா திருச்சியில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைத்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 17% வாக்குகளை பெற்றுத்தந்த காரைக்குடி தொகுதியில் சட்டமன்ற தேர்தலிலும் சீமான் களம்காண்கிறார். பாஜக, ஆர்எஸ்எஸ் சக்திகளை தமிழ்நாட்டில் வர விட மாட்டோம் என்று மதுரையில் கமல் பண்பாட்டு மையம் நடத்திய ‘மறவோம் காந்தியை' நிகழ்ச்சியில் வைகொ பேச்சு.காந்தியின் மதச்சார்பின்மை கொள்கையால் வெறுத்துப் போன பாஜக, ஆர்எஸ்எஸ் என்று மதுரையில் கமல் பண்பாட்டு மையம் நடத்திய  ‘மறவோம் காந்தியை' நிகழ்ச்சியில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேசியுள்ளார். தவெகவைப்பற்றி யாரும் கண்டுகொள்வது கிடையாது, களத்தில் அதிமுகதான்; எங்களுக்கு எதிரி திமுக, இதுதான் கள நிலவரம். அதிமுகவிற்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சி திமுகதான். எடப்பாடி பழனிசாமியிலான தலைமையிலான கூட்டணியும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியும் களத்தில் நிற்கும்; தவெக என்பது பரிதாபத்திற்குரிய கட்சியாக இந்த தேர்தலோடு முடிந்து விடும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 44 மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி: திண்டாடிய பயணிகள்; கூடுதலாக 60 மாநகரப் பேருந்துகள் இயக்கம்

மாநிலங்களவைத் தேர்தல்களிலும், சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் போட்டியிடப் போவதில்லை - டி.டி.வி தினகரன்.

முதுகில் குத்தப்பட்டேன்'... த.வெ.க-வில் இணைந்த மாஜி சபாநாயகர் தனபாலின் மகன் பேட்டி

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் காரணமாக கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் ஏப்.5 வரை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக 60 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மாநிலங்களவைத் தேர்தல்களிலும், சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் போட்டியிடப் போவதில்லை என்று  அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
சி.பி.ஐ. E.D. மூலம் தி.மு.க.வை பணிய வைக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி. "ஆட்சி, பதவி அல்ல உயிரே போனாலும் கவலைப்பட மாட்டோம் என திட்டவட்டம். 
அதிமுக ஆட்சி காலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புயல் வேகத்தில் நிவாரணம் வழங்கினோம். தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி பேச்சு
உ.பி. பிரயாக்ராஜில் உள்ள ஆசிரமத்தில், சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பிரபல சாமியார் மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு போக்சோ நீதிமன்றம் உத்தரவு.
இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் டிரம்ப் 15% வரிவிதிப்பு. 10% வரியை அறிவித்த சில மணி நேரத்திலேயே மீண்டும் வரிவிதிப்பை உயர்த்தினார்.

ட்ரம்ப்பின் புதிய 10% இறக்குமதி வரி

இதுவரை ட்ரம்ப் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு வரி விகிதத்தை வைத்திருந்தார்.


ஆனால், இப்போது கொண்டு வரப்பட்டுள்ள 10% வரி என்பது 'ஒரே நாடு, ஒரே வரி' என்பது போல அனைத்து நாடுகளுக்கும் சமமாகப் பொருந்தும்.

அமெரிக்காவின் 10% 'குளோபல் டேரிஃப்': இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் இனி என்னவாகும்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எப்போதுமே கணிக்க முடியாத ஒரு மனிதர். குறிப்பாக, உலக நாடுகளுடனான வர்த்தக விஷயத்தில் அவர் காட்டும் வேகம், நண்பர்களையும் எதிரிகளையும் ஒருசேரத் திகைக்க வைக்கும்.

சமீபத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் ட்ரம்பின் ஒரு முக்கிய பொருளாதாரக் கொள்கையை முடக்கிய சில மணி நேரங்களிலேயே,


அவர் கையில் எடுத்திருக்கும் 'அஸ்திரம்' தான் இப்போது உலகளாவிய விவாதமாக மாறியிருக்கிறது.


சில நாட்களுக்கு முன்பு வரை, 'சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின்' (IEEPA) கீழ் பல நாடுகளுக்குத் தனித்தனியாக வரி விதித்திருந்தார் ட்ரம்ப்.


ஆனால், அமெரிக்க உச்ச நீதிமன்றம் இந்த முறையை அதிரடியாக ரத்து செய்தது. "வர்த்தகக் கொள்கையில் நாடாளுமன்றத்திற்கே (Congress) முதன்மை அதிகாரம் உண்டு, அதிபர் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது" என்று நீதிமன்றம் ஒரு பேரிடியைக் கொடுத்தது.


இதற்கு முன் எந்தவொரு அதிபரும் வரிகளை விதிக்க இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தியதில்லை.

ட்ரம்பின் 'வரிச் சுவர்' சரிந்துவிட்டது என்று நினைத்த வேளையில், அவர் தனது பழைய கோப்புகளில் இருந்து ஒரு அரிதான சட்டத்தைக் கண்டுபிடித்தார்.

அதுதான் 1974-ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122 (Section 122 of the Trade Act of 1974).


இந்தச் சட்டம் கிட்டத்தட்ட ஒரு 'ஆயுதக் கிடங்கில்' துருப்பிடித்துக் கிடந்த பழைய துப்பாக்கியைப் போன்றது. அமெரிக்காவின் சர்வதேச கொடுப்பனவு (International Payments Problems) கடும் சிக்கல் ஏற்படும் போது, அதிபர் தற்காலிகமாக 15% வரை வரி விதிக்க இது அதிகாரம் அளிக்கிறது.


உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே, ட்ரம்ப் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார்:


"அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் கிட்டத்தட்ட அனைத்துப் பொருட்கள் மீதும் 10% உலகளாவிய வரி விதிக்கப்படும்."


இதுவரை ட்ரம்ப் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு வரி விகிதத்தை வைத்திருந்தார். ஆனால், இப்போது கொண்டு வரப்பட்டுள்ள 10% வரி என்பது 'ஒரே நாடு, ஒரே வரி' என்பது போல அனைத்து நாடுகளுக்கும் சமமாகப் பொருந்தும்.


இதனால் இதுவரை இந்தியா போன்ற நாடுகள் எதிர்கொண்ட கூடுதல் வரிகள் (Reciprocal Tariffs) இப்போது நீக்கப்பட்டு, அனைவருக்கும் பொதுவான 10% வரி அமலாகிறது. இது ஒரு வகையில் இந்தியாவுக்குச் சாதகமாகத் தெரிந்தாலும், அமெரிக்காவுடன் நாம் பேசி வந்த பல வர்த்தக ஒப்பந்தங்களை இது கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்த வரி விதிப்பு 150 நாட்களுக்கு மட்டுமே செல்லும். அதற்குப் பிறகு ட்ரம்ப் மீண்டும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.


எனவே, இந்த 150 நாட்கள் ஒரு 'போர் நிறுத்தக் காலம்' போன்றது தான்.

இந்தியாவின் ஸ்மார்ட்போன்கள், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்றவை இந்த வரியிலிருந்து விலக்கு பெற்றுள்ளன.


தான் இருப்பினும், எஃகு (Steel) மற்றும் அலுமினியம் மீதான பழைய 50% வரிகள் இன்னும் தொடர்கின்றன என்பதை நாம் மறக்கக் கூடாது.

ட்ரம்பைப் பொறுத்தவரை 'வரிகள்' என்பது ஒரு வருவாய் ஆதாரம் மட்டுமல்ல, அது ஒரு பேரம் பேசும் கருவி. மற்ற நாடுகளைத் தனது நிபந்தனைகளுக்குப் பணிய வைக்க அவர் இதைப் பயன்படுத்துகிறார்.

உச்ச நீதிமன்றம் அவரது அதிகாரத்தைக் குறைத்தாலும், புதிய சட்டத்தின் மூலம் அவர் தனது வரி வசூலை ஈடுகட்டப் பார்க்கிறார்.

2026-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வரி வருவாய் குறையாமல் இருக்க இது உதவும் என்று அமெரிக்க நிதி அமைச்சகம் நம்புகிறது.


உலக வர்த்தக நிலப்பரப்பு இப்போது முழுமையாக மாறிவிட்டது." அமெரிக்கா இதுவரை காட்டி வந்த மிரட்டல் (Leverage) இப்போது சட்ட ரீதியாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இனி வர்த்தகம் என்பது அதிபரின் ஒரு கையெழுத்தில் மட்டும் இல்லை, அது சட்டப் போராட்டங்களுக்கும், நாடாளுமன்ற விவாதங்களுக்கும் உட்பட்டது.

இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவுடனான தங்கள் வர்த்தக உறவை இப்போது மீண்டும் ஒருமுறை பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 'துப்பாக்கி முனையில்' நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்து, ஒரு புதிய சட்ட ரீதியான வர்த்தகப் போர் தொடங்கியுள்ளது.


ரூ. 25,000 கோடி மறைக்கப்பட்ட முதலீடுகள்! உலகையே உலுக்கும் அதானி குழும நிதி மோசடி

உலகின் மூன்றாவது பெரிய பணக் காரரான - மோடியின் கூட்டுக் கள வாணி நண்பரான கௌதம் அதானி நடத்தும் வணிக சாம்ராஜ்யம் இன்று கடும் சட்ட நெருக்கடி யில் சிக்கியுள்ளது. 

இத்தாலியின் மிகப்பெரிய வங்கியின் உள்விசாரணையில் ₹25,000 கோடிக்கும் அதிகமான அதானி பங்குகள் ரகசிய மாக இரு மர்ம நபர்களிடம் இருப்பது அம்பலமாகி யுள்ளது. 

இது வெறும் பங்குச் சந்தை விவகாரம் அல்ல - இந்திய பொருளாதாரத்தையே உலுக்கிய ஊழல் இது.  அதானி குழுமம் என்றால் என்ன?  

கௌதம் அதானி 1962-இல் குஜராத்தில் பிறந்தவர். ஒரு சிறிய வர்த்தகராக தொடங்கி,  இன்று அவரது வணிகப் பேரரசு துறைமுகங் கள், விமான நிலையங்கள், மின் நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள், சிமெண்ட் ஆலைகள், ஊடகங்கள் என பல துறைகளில் பரவியுள்ளது.

2022-ல் அவரது சொத்து மதிப்பு ₹10 லட்சம் கோடியை தாண்டி, சிலகாலம் உலகின் இரண்டா வது பணக்காரரான ஜெஃப் பெசோஸைக் கூட முந்தினார். மோடி அரசாங்கத்துடன் மிக மிக  நெருக்கமான உறவு கொண்ட தொழில் அதிபர்.

 அரசின் முடிவுகள் அனைத்தும் இவருக்கானதே. ஊழல் எப்படி தொடங்கியது?

 2023 ஜனவரி 24-இல் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் (Hindenburg Research) நிறுவனம் 106 பக்க அறிக்கையை வெளியிட்டது. இரண்டு வருட ஆழமான ஆராய்ச்சியின் விளைவான இந்த அறிக்கையின் தலைப்பே அதிர்ச்சியானது: 

“உலகின் மூன்றாவது பணக்காரர் நவீன வணிக வரலாற்றின் மிகப்பெரிய மோசடியை எப்படி நடத்துகிறார்?” இந்த அறிக்கையின் முக்கிய குற்றச்சாட்டு கள்: கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி கட்டுப்படுத்திய 38 மொரீஷியஸ் தீவு  நிறுவனங்கள் - அதாவது லெட்டர் பேடு கம்பெனி கள்,  அடையாளம் காணப்பட்டன.

இந்த நிறு வனங்களில் உண்மையான பணியாளர்கள் இல்லை, தனி அலுவலகங்கள் இல்லை, அர்த்தமுள்ள வணிகம் இல்லை. ஆனால் இவை அதானி நிறுவனங்களின் பங்குகளில் 30% முதல் 47% வரை வைத்திருந்தன.  

நோக்கம் என்ன? பங்கு விலையை செயற் கையாக உயர்த்துவது.

சாதாரண முதலீட்டா ளர்கள் “பல வெளி நபர்கள் பங்குகளை வாங்கு கிறார்கள், இது நல்ல நிறுவனம்” என நினைக்க வேண்டும். உண்மையில் அதானி குடும்பமே தங்கள் சொந்த பங்குகளை வெவ்வேறு பெயர்களில் வாங்கிக் கொண்டிருந்ததா என்ற கேள்வி எழுந்தது.

 ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான உடன் அதானி குழும பங்குகள் பெரும் சரிவைக் கண்டன. மொத்தம் ₹12,50,000 கோடி மதிப்பு ஒரே வாரத்தில் காணாமல் போனது - இது இந்திய பங்குச் சந்தை வரலாற்றிலேயே மிகப் பெரிய ஒரே நபர் இழப்பு.

 கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ₹10 லட்சம் கோடியிலிருந்து ₹4 லட்சம் கோடியாக சரிந்தது. உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து 25-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 

இப்போது என்ன நடந்தது? 

2026 பிப்ரவரி 17-இல் மற்றொரு பெரும் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஓசிசி ஆர்பி (OCCRP) என்ற சர்வதேச புலனாய்வு பத்திரிகை நிறுவனமும், பிரிட்டனின் Financial Times செய்தித்தாளும் இணைந்து ஒரு விசேஷ அறிக்கை வெளியிட்டன.

இத்தாலியின் மிகப்பெரிய வங்கியான இண்டேசா சான்பாலோ (Intesa Sanpaolo) தனது உள்விசாரணையில் கண்டுபிடித்த ரகசிய ஆவணங்கள் இவை. யார் இந்த இரு  மர்ம மனிதர்கள்? முதல் நபர் : சாங் சங்-லிங் (Chang Chung-Ling) - 70 வயதுக்கு மேற்பட்ட தைவான் நாட்டு வணிகர். இவர் கடந்த 20 ஆண்டுகளாக அதானி குடும்பத்துடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டவர். 

2005-இல் சிங்கப்பூரில் வினோத் அதானியுடன் ஒரே வீட்டு முகவரியைப் பகிர்ந்து கொண்டிருந்தார் என்பது அரசு பதிவுகளில் இருக்கிறது. 

இவர் பல அதானி-தொடர்புடைய நிறுவனங்களில் இயக்குநராக இருந்துள்ளார்.  சாங்கின் வணிகம் சந்தேகத்திற்குரியது: இவர் சுமார் ₹16,800 கோடி மதிப்புக்கு நிலக்கரி யை அதானிக்கு விற்றதாக Financial Times தெரிவிக்கிறது - சந்தை விலையை விட மிக அதிக விலையில். 

இவரது நிறுவனமான லிங்கோ இன்வெஸ்ட்மென்ட் (Lingo Investment Ltd) மூலம் ₹8,500 கோடி மதிப்புள்ள அதானி பங்குகளை வைத்திருந்தது. 

இரண்டாவது நபர்: நாசர் அலி ஷபான் அஹ்லி (Nasser Ali Shaban Ahli) - ஐக்கிய அரபு அமீரகம் (துபாய்) வணிகர். Quartz செய்தி நிறுவனம் இவரை “அதானியின் துபாய் மனி தர்” என்று குறிப்பிடுகிறது. 2009-இல் இவர் ஒரு மின்சார நிறுவனத்தை தொடங்கி, அடுத்த வருடமே அதன் உரிமையை வினோத் அதானிக்கு மாற்றினார் -

 இது பினாமி (proxy) உறவின் தெளிவான அடையாளம். அஹ்லி தனது கல்ஃப் ஏசியா டிரேட் (Gulf Asia Trade & Investment Ltd) நிறுவனம் மூலம்  ₹16,800 கோடி மதிப்புள்ள அதானி பங்குகளை  வைத்திருந்தார்.

இரு நபர்களும் இந்திய வரு மான வரித் துறை மற்றும் சுங்க விசாரணை களில் முன்பே அதானியுடன் தொடர்புடைய வராக குறிப்பிடப்பட்டுள்ளனர். பணம் எப்படிப் பயணித்தது? 

இந்த உலகளாவிய அதானி மோசடியின் சிக்கலான கட்டமைப்பை புரிந்துகொள்ள வேண்டும்:

 படி 1: பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் (British Virgin Islands) - வரி இல்லாத இடம் - அங்கு பெயரளவு நிறுவனங்கள் - அதாவது லெட்டர் பேடு கம்பெனிகள் உருவாக்கப்பட்டன. 

படி 2: இந்த நிறுவனங்களின் பணம் துபாய் வங்கியான ரேய்ல் எம்இஏ (Reyl MEA) என்ற சுவிஸ் தனியார் வங்கிக்கு அனுப்பப்பட்டது. 

படி 3: அந்த பணம் பெர்முடா தீவில் (Bermuda) பதிவு செய்யப்பட்ட ஐந்து ஹெட்ஜ்  ஃபண்ட்களுக்கு - (அதாவது, நிறுவனங்களுக்கு நிதிப் பிரச்சனை ஏற்பட்டால் உதவுவதற்காக தனி யார் முதலாளிகள் நடத்தும் நிதியம்) சென்றது. 

இவற்றை லண்டனை தலைமையிடமாகக் கொண்ட எலாரா கேபிடல் (Elara Capital) நிர்வகித்தது.

 படி 4:இந்த நிதிகள் மொரீஷியஸ் தீவில் பதிவு செய்யப்பட்ட அந்நிய நிறுவன முதலீட்டாளர் (FPI - Foreign Portfolio Investor) நிதிகளாக மாற்றப்பட்டன. படி 5:  அதைக் கொண்டு, இறுதியாக இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமப் பங்குகள் வாங்கப்பட்டன. 

ஏன் இவ்வளவு சிக்கலான வழி? உண்மை யான உரிமையாளர்கள் யார் என்பதை மறை க்கத்தான். வெளியில் இருந்து பார்த்தால் “சுதந்தி ரமான வெளி நாட்டு முதலீட்டாளர்கள்” போல் தெரி யும். உண்மையில் அதானி குடும்பமே இவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்பதுதான் சூட்சுமம்.

குறிப்பிடத்தக்கது என்னவெனில், எலாரா நிதிகளில் 97% முதல் 99% வரையிலான பணம் அதானி பங்குகளில் இருந்தது. எனவே இது இயல்பான முதலீடு அல்ல. ஒரு சாதாரண முதலீட்டு நிதி ஆபத்தைக் குறைக்க பல நிறுவனங்களில் ப ணத்தை பரப்பும், ஆனால் இங்கே 99% அதானி குழுமத்தில் மட்டும் என்பதுதான் ஊழலின் அடிப்படை!

 சுவிஸ் விசாரணை -  மிக முக்கியமான சான்று சுவிஸ் நீதித்துறை அதிகாரிகள் 2021 டிசம்பரி லேயே அதாவது ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு வருவ தற்கு ஒரு வருடம் முன்பே - சாங் சங்-லிங் மீது பண மோசடி மற்றும் ஆவண மோசடி சந்தேகத்தின் அடிப்படையில் குற்றவியல் விசாரணையைத் தொடங்கினர். 

இது மிக முக்கியம்: ஹிண்டன் பர்க்கிற்கு முன்பே ஐரோப்பிய சட்ட அமைப்புகள் சந்தேகம் கொண்டிருந்தன. சுவிஸ் அதிகாரிகள் சாங்கின் ஐந்து வங்கி  கணக்குகளில் ₹2,600 கோடியை முடக்கி யுள்ளனர். 2024 ஆகஸ்ட் 9-இல் சுவிஸ் கூட்டாட்சி  குற்றவியல் நீதிமன்றம் ஒரு வரலாற்று தீர்ப்பு  வழங்கியது. 

“அதானி குழுமம் பணமோசடி மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக் கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.சாங் ஒரு ‘முக மூடிமனிதர்’ (frontman) ஆவார் - உண்மை யான உரிமையாளர்களை மறைக்க பயன் படுத்தப்படுகிறார்.

” அமெரிக்க குற்றப்பத்திரிகை 2024 நவம்பர் 20-இல் அமெரிக்க நீதித்துறை (US Department of Justice) கௌதம் அதானி, அவரது அண்ணன் மகன் சாகர் அதானி உள்ளிட்ட எட்டு நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 

2020-2024 காலகட்டத்தில் இந்தியாவில் சூரிய மின்சார ஒப்பந்தங்களைப் பெற மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு ₹2,100 கோடிக்கும் அதிகமான லஞ்சம் அளித்தது/உறுதியளித்தது. இந்த ஒப்பந்தங்கள் அடுத்த 20 ஆண்டுகளில் ₹16,000 கோடிக்கும் அதிக மாக லாபம் தரும் என அமெரிக்க நீதித்துறை கணக்கிட்டுள்ளது - என்ற விபரம், மேற்கண்ட குற்றப் பத்திரிகையில் உள்ளது

. மேற்கண்ட சதிகாரர்கள் தங்களுக்குள் கௌதம் அதானியை “நம்பர் ஒன்” (Numero Uno) மற்றும் “பெரிய மனிதர்” (The Big Man) என குறிப்பிட்டதாக குற்றப்பத்திரிகையில் உள்ளது. மொபைல் சாட்கள், மின்னஞ்சல்கள் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்திய விசாரணை  என்ன சொல்கிறது?

 சர்வதேச விசாரணையில் உண்மை நிலை இப்படி இருக்க, இந்திய பங்குச் சந்தை கட்டுப் பாட்டு அமைப்பான செபி 2025 செப்டம்பர் 18-இல்  அதானியை, “ரொம்ப நல்லவர்” என்று  சான்று அளித்தது. 

ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு கள் நிரூபிக்கப்படவில்லை என இரண்டு இறுதி உத்தரவுகளை வெளியிட்டது. 

ஆனால் இது சர்ச்சையை முடிக்கவில்லை. உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு கூட, சந்தேகிக்கப்படும் 13 வெளிநாட்டு முதலீட்டு நிதிகளின் “உண்மையான பயனாளர்கள்” யார்  என செபியால் கண்டறிய முடியவில்லை.

849  தானியங்கி வர்த்தக எச்சரிக்கைகள் உருவாக்கப் பட்டன. ஆனால் முழுமையான விசாரணை நடக்கவில்லை என்று ஒப்புக் கொண்டது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல்படி 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவை யில் உள்ளன. 

செபி எலாரா நிதிகளிடம் விரிவான தகவல்களை இரண்டு வருடங்களாக கோரி வருகிறது, ஆனால் இன்னும் பெறவில்லை. ஆனால், உலக அளவில் அதானி ஒரு பெரும் மோசடிப் பேர் வழி என்று, ஆதாரப் பூர்வ மாக வருகிறது.

 அம்பலமாகி; பல நீதிமன்றங் களில், பல நாடுகளில் வழக்குகள் நடக்கின்றன.

ஆனால் ₹25,000 கோடி மதிப்புள்ள ரகசிய முதலீடுகள், 99% செறிவு கொண்ட நிதிகள், சுவிஸ் நீதிமன்றம் “முகமூடி மனிதர்” என குறிப்பிடுதல், அமெரிக்க குற்றப்பத்திரிகை - இவை அனைத்தும் மோடியின் கூட்டுக் களவாணி நண்பரை முற்றுகையிட்டுள்ளன. 

இதை  முழுவதும் நீதி அமைப்புகள் கூர்ந்து கவனிக்கின்றன. 

இது ஒரு சாதாரண வணிக மோசடில்ல - பல ஆண்டுகள், பல கண்டங்கள், பல விசாரணை அமைப்புகளை உள்ளடக்கிய மிகச் சிக்கலான மெகா மோசடி. அந்த மோசடியின் மன்னன் அதானி; மந்திரி மோடி.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை