மவுனம் கலைப்பாரா?

 நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பான் கட்டாயம்: வருமான வரி வரைவு விதிகள் வெளியீடு“ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டுக்கு நிதி நெருக்கடியை உருவாக்கி வருகிறது.”ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.தூய்மை பணியாளர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட உணவுத் திட்டம்.தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் மாற்றம்.வெங்கடப்பிரியா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்.இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு.வரும் 12-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் என விவசாயிகள் அறிவிப்பு.அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் கூண்டோடு பணிநீக்கம்! விளக்கம் சொல்ல விரும்பாத பதிவாளர்.ஆந்திராவில் மக்கள் தொகையை அதிகரிக்க செயல் திட்டம்: முதல்வர் சந்திரபாபு தகவல்.டிஜிட்டல் கைது மோசடிகள் சந்தேக பரிவர்த்தனைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை: வங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுஉதகை அருகே மொரக்குட்டி வனப்பகுதியில் 8 வயது கொண்ட பெண் புலி உயிரிழப்பு.தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் இன்றுடன் நிறைவு.

மீண்டும் எரிகிறது!

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் வீடுகளும் அரசு குடியிருப்புகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறை காரணமாக பலர் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஓராண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பிறகு முதல்வர் யும்னம் கெம்சந்த் சிங் தலைமையில் புதிய அரசு கடந்த 4-ம் தேதி பதவியேற்றது.எனினும் மாநிலத்தில் மறுநாளே வன்முறை வெடித்தது. குகி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்நிலையில் மனிப்பூரின் உக்ருல் மாவட்டம் லிட்டன் பஜார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வன்முறை வெடித்தது. இதில் பல வீடுகளுக்கு வன்முறை கும்பல் தீ வைத்தது. 

இதையடுத்து அருகருகே உள்ள லிட்டன், மாங்கோட் கிராமங்களில் டாங்குல் நாகா மற்றும் குகி சமூகத்தினர் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 25 வீடுகளும் 4 அரசு குடியிருப்புகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறை மோதல்களை தொடர்ந்து பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

குகி சமூகத்தை சேர்ந்த சைக்கூல் எம்எல்ஏ கிம்னியோ ஹாவ்கிப், டாங்குல் நாகா சமூகத்தைச் சேர்ந்த உக்ருல் எம்எல்ஏ ராம் முய்வா ஆகிய இருவரும் நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்

மவுனம் கலைப்பாரா?

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக தாம் மகிழ்ச்சியாக இல்லை என்றும், தம்மை மகிழ்ச்சிப்படுத்துவது மோடியின் பொறுப்பு என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உத்தரவு போட்டிருந்தார். 

இதைத் தொ டர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு வருகிறது.

ஈரானிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்கக் கூடாது என்று டிரம்ப் மிரட்டினார். இதற் கும் ஒன்றிய அரசு இணங்கி இருப்பதாகவே தெரிகிறது. 

அடுத்து வெனிசுலா ஜனாதிபதி மதுரோவை அமெரிக்க வல்லரசு அராஜகமாக கடத்திக் கைது செய்து, அந்த நாட்டின் எண்ணெய் கிணறுகளையும் கைப்பற்றியுள்ள நிலையில், இனி வெனிசுலாவிடமிருந்து இந்தியா எண் ணெய் வாங்கும் என்றார் டிரம்ப். இதுவும் கூட நடப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது. மேலும்  பிரதமர் மோடியின் கார்ப்பரேட் கூட்டாளியான அம்பானியின் நிறுவனம் வெனிசுலாவில் எண்ணெய் கிணறுகளை கைப்பற்ற இருப்பதா கவும் தகவல்கள் வெளியாகின.

இந்தப் பின்னணியில்தான் மாநிலங்களவை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் உறுப்பி னர் ஜான் பிரிட்டாஸ் இந்தியாவின் எரிபொருள் துறை அமைச்சராக டொனால்டு டிரம்ப் செயல் படுகிறாரா என்று கேள்வி எழுப்பினார். 

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையி லான மோதலை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் பல முறை சொன்னபோதும், பிரதமர் மோடி மறுப்பு தெரிவிக்கவில்லை.

 மோடி அமெ ரிக்காவில் இருந்தபோதே இந்தியர்களுக்கு கைவிலங்கு பூட்டி நாடு கடத்தியது டிரம்ப் நிர்வாகம். இதற்கு ஒன்றிய அரசு கண்டனம் தெரி விக்கவில்லை.

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் வரி மேல் வரி போட்டாலும் எதிர்ப்ப தற்கு பதிலாக தாஜா செய்வதிலேயே நரேந்திர மோடி அரசு கவனம் செலுத்தியது. இந்தியா வுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக உடன்பாடு இந்தியப் பொருளாதா ரத்தின் மீது பேரிடியாக இறங்கியுள்ளது. 

ஆனால் இதையே சாதனையாக மோடி அரசு பீற்றிக் கொள்கிறது. 

இந்த நிலையில், ‘மோடி என்னை நேசித்துத் தான் ஆக வேண்டும். இல்லையெனில் நான் அவரின் அரசியல் வாழ்க்கையையே அழித்து விட முடியும்’ என்று டிரம்ப் மிரட்டியுள்ளார். 

எப்ஸ்டீன் கோப்புகள் வெளியாகியுள்ள நிலை யில், டிரம்ப்பின் இந்த மிரட்டல் பல்வேறு கேள்வி களை எழுப்புகிறது. இவ்வாறு டிரம்ப் மிரட்டி யுள்ளது குறித்து பிரதமர் மோடி வாய் திறந்து விளக்கம் அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 இது இரு தனிநபர்களுக்கு இடையிலான விவகாரம் அல்ல, இந்தியாவின் இறை யாண்மை தொடர்புடையது. 

 மோடி இப் போதாவது மவுனம் கலைப்பாரா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை