மீண்டும் ஸ்டெர்லைட்?
வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகளுக்கு ரஷ்யாவில் தடை!
தமிழ்நாடு தேர்தலை அரசியல்வாதிகள் மட்டும் ஆவலுடன் எதிர்பார்க்கவில்லை.சில நாசகார கார்பரேட் முதலைகளும் தங்களுக்கு ஆதரவான அரசியல் வாதிகள் பதவியைக் கைப்பற்றி விட்டால் தமிழ்நாட்டையே வேட்டைக் காடாக்கி சூறையாடி நாசம் செய்ய காத்திருக்கிறார்கள்.
இதில் வழக்கமான அம்பானி,அதனை முன்னிலையில் இருந்தாலும் தூத்துக்குடி மக்கள் 14 பேரைக் கொன்று குவித்து விரட்டி அடிக்கப்பட்ட நச்சு ஆலை உரிமையாளர் அனில் அகர்வாலும் ரத்தப் பசியுடன் காத்திருக்கிறான்.மகனை இழந்தவுன் வேதாந்தம் பேசி முதலைக் கண்ணீர் வடித்து சொத்தில் 80℅ஏழைகளுக்கு நன்கொடை என்ற அனில் அகர்வால் தற்போதும் நீதிமன்றத்தில் உள்ள சங்கிகள் உதவியுடன் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் திறக்க முயற்சிக்கிறான்.
இந்த முறை செமி கன்டக்டர் தொழிற்சாலை என்ற வேடத்தில் உருமாறி வரக் காத்திருக்கிறான்.
செமிகன்டக்டர் இயங்க ஆரம்பித்து இயங்க ஆரம்பித்ததும் பசுமை தாமிர. ஆலை என்ற பெயரில் நச்சு ஆலயம இயங்குமாம்.
இதற்காக தற்போதே பா.ஜ.க,ஆதரவுடன் 5000,ம் கோடிபணக் கட்டுகளைகள் ஒரு அரசியல் கட்சி முதல்வர் வேட்பாளர் எனக்கூறிக் கொள்ளும் ஒரு முன்னாளிடம் நன்கொடையாக கொடுத்துள்ளான் அனில்.அவர் நச்சு ஆலை படுகொலைகளை தான் பொறுப்பில் இருக்கும் போது தொலைகாட்சி மூலம் பார்த்துதான தெரிந்து கொண்ட நல்லவர்.
நம்மை அந்த பழனியாண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.
வேறென்ன சொல்ல?
-தாமோதரன் பிரகாஷ்
பிரமிடுகளில் தமிழ்!
எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், சுமார் 30 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இதில் 20 கல்வெட்டுகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் உள்ளன. 'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டறிவு. ஒரு கல்வெட்டில் 'சிகை கொற்றன் - வர கண்ட (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) என பொறிக்கப்பட்டுள்ளது.
ரோமானிய காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து சென்று அங்கிருந்து உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளனர் என்பதற்கு இதுவே முதல் நேரடி ஆதாரமாகும்.
பன்னாட்டுத் தமிழகல்வெட்டியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் இக்கல்வெட்டுகளைப் பொறித்தவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்றும், தென்னகத்தவரே பெரும்பான்மையினர் என்றும் அறிஞார்கள் தெரிவித்தனர். பார்வையாளர்கள் தங்கள் இருப்பைப் பதிவு செய்ய சுவர்களில் பெயர்களைப் பொறிக்கும் வழக்கத்தைப் பின்பற்றினர்