புஸ்வானக் குரு?

 திங்கட்கிழமை அன்று இந்தியாவும் அமெரிக்காவும் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தன.

இருப்பினும் இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் காலக்கெடு குறித்த தகவல்கள் ஏதும் பொதுவெளியில் பகிரப்படவில்லை.

இறுதி கட்டப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்கள் முடிவு செய்யப்பட்டு வருவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தார்.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளங்களில் இந்த ஒப்பந்தம் குறித்து பதிவிட்ட பல கருத்துக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோதியோ அல்லது இந்திய அரசாங்கத்தின் தரப்பில் இருந்தோ தெளிவான பதில் எதுவும் இல்லை.

இது, இந்த ஒப்பந்தம் தொடர்பான பல கேள்விகளை எழுப்பியுள்ளது.


இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்


ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்க எண்ணெயை அதிக அளவில் வாங்கவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.


மேலும், இந்தியா வெனிசுவேலாவிலிருந்தும் எண்ணெய் வாங்கலாம் என்று அவர் கூறினார்.

இந்திய தரப்பு டிரம்பின் கருத்துக்களை உறுதிப்படுத்தவில்லை.


அமெரிக்கா இந்த ஒப்பந்தம் குறித்து நிறைய பேசியுள்ள நிலையில், இந்திய அரசு மௌனம் காத்து வருகிறது.

 

"நமது எரிசக்தி பாதுகாப்பை நாமே தீர்மானிப்போம் என்பதுதான் இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக இருந்தது. 


மேலும், ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் எண்ணெய் பெற முடிந்தால், அங்கிருந்து வாங்குவோம் என்பதை இந்தியா உணர்த்தியது.


தற்போது ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று டிரம்ப் கூறியிருப்பது உண்மையாக இருந்தால், அது இந்திய அரசாங்கத்தின் முந்தைய நிலைப்பாட்டிற்கு முரணானது. 

இதன் பொருள், அமெரிக்கா இப்போது நமக்கு கட்டளையிடுகிறது,மிரட்டுகிறது என்பதே கசப்பான உண்மை.


"டிரம்பின் கருத்துக்கு இந்தியத் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ மறுப்பு எதுவும் வரவில்லை. டிரம்ப் கூறியது சரியல்ல என்றும், இந்தியாவின் கோணம் வேறு என்றும் இந்திய அரசு கூறும் வரை டிரம்பின் கருத்து உண்மையானதாக எண்ணப்படும். 

ஏனெனில் இந்தியா ஏற்கனவே ரஷ்ய எண்ணெய் கொள்முதலை கணிசமாகப் படிப்படியாக குறைத்துவிட்டது.



அமெரிக்காவிலிருந்து இந்தியா 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயப் பொருட்களை வாங்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.


 இந்தியா ஓராண்டிற்கான மொத்த அமெரிக்க இறக்குமதி தற்போது 50 பில்லியன் டாலருக்கும் குறைவாகவே உள்ளது. 

 இந்த இலக்கை எட்டுவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். 


விவசாயப் பொருட்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் என்று டிரம்ப் கூறியிருப்பது மிகவும் முக்கியமானது .


"இது நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பைப் பற்றியதுமாகும். 1960களில், நாம் அமெரிக்க இறக்குமதியைச் சார்ந்திருந்ததால் அவர்கள் நமக்கு அழுத்தத்தை கொடுத்தார்கள்


அதன் பிறகு, இன்று நாம் சுயசார்பு கொண்டவர்கள் என்று பெருமையுடன் அறிவிக்கும் அளவுக்கு நிலைமைகள் மாறின. இப்போது, ​​அந்த சுயசார்பு அச்சுறுத்தலுக்கு 


செவ்வாய்க்கிழமை மாலை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் "இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தத்தில் விவசாயம் மற்றும் பால் பொருட்கள் போன்ற முக்கியமான துறைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது," என்றார். 


ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது

ஏற்கனவே இந்தியாவில் கோதுமை,மக்காசோளம் உற்பத்தி தேவையை விட அதிகமாக. உள்ள நிலையில் அவற்றையே அமெரிக்காவின் கட்டாயத்தில் இறக்குமதி செய்வது முட்டாள்தனத்தின் உச்சம்.நம் இந்திய விவசாயிகள் வாழ்வாதாரத்தையே நாசமாக்கி கேள்விக்குரியதாக்கிவிடும்.


டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்'சமூக வலைதளப் பதிவில், அமெரிக்கப் பொருட்கள் மீதான அனைத்து வரி மற்றும் வரி அல்லாத தடைகளை இந்தியா பூஜ்ஜியமாகக் குறைக்கும் என்று கூறினார்.

ஆனால் (இந்தியா) மோடி இதுவரை வாய்திறந்து எதுவும் பேசவே இல்லை.

வேளாண்மை, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் தொடர்பாக, வெளிநாட்டு இறக்குமதிகளில் இந்தியா பாரம்பரியமாகவே எச்சரிக்கையுடன் உள்ளது.


இந்த துறைகளில் சந்தைகளைத் திறப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு


டிரம்ப் வருவதற்கு முன்பு இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி சராசரியாக 2.5 சதவீதத்தில் இருந்து, இப்போது 18 சதவீதமாக உள்ளது.


அதே சமயம் அமெரிக்கப் பொருட்கள் மீது இந்தியா விதிக்கும் வரி பூஜ்ஜியமானால், அது மிகப்பெரிய தலைகீழ் மாற்றமாகும். அதனால் இந்தியாவிற்கு மிகப்பெரிய இழப்பு ்


இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் விரிவான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.ஒப்பந்தம் பற்றி மக்களவையில் மோடி ஏதும் பேச மறுக்கிறார்.


ட்ரம்ப்  இடைவிடாமல் இதுகுறித்து பேசும் போது இந்திய எதிர்கட்சிகள் பல கேள்விகளைக் கேட்டபோதும் பிரதமர் என்ற பொறுப்பில் உள்ள மோடி வழமைபோல் சம்பந்தமற்றவற்றை மட்டும் பேசுகிறார்.

கேள்வி கேட்கும் எதிர் கட்சிகளை தற்காலிக நீக்கம் செய்கிறார்.



அவர் பேசமறுப்பதைப் பார்த்தால் அமெரிக்கவின் மிரட்லுக்குப் பணிந்து பயந்து போனதுபோல்தான் தெரிகிறது.


ஒரு "விஸ்வகுரு"  புஸ்வானக்குருவாகத்தான் தெரிகிறார்.







கேள்விக்கேன்  அச்சம்?

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவரும் எனது சகோதரருமான ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?அவையின் உறுப்பினர்களுக்குப் பதிலளிக்க மத்திய அரசு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான கேள்விகளை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

எட்டு எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து பேச அவர்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுக்கும் வகையில் மீதான இடைநீக்க நடவடிக்கை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.கடாபி' மகன் கொலை!

லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் சைஃப் அல் இஸ்லாம் கடாஃபி, வடமேற்கு லிபியாவின் ஜின்டான் நகரில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டதாக அவரின் அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட சைஃப் அல் இஸ்லாம் கடாஃபிக்கு வயது 56.

எண்ணெய் வளமிக்க வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகார ஆட்சி நடத்தியவர் மும்மெர் கடாஃபி. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இவரது மறைவுக்குப் பிறகு, கடாபியின் அரசியல் வாரிசாக மகன் சைஃப் அல் இஸ்லாம் பார்க்கப்பட்டார். அப்போது கைது செய்யப்பட்ட சைஃப் பின்னர் 2017 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சைஃப் அல் இஸ்லாமை வடமேற்கு லிபியாவில் உள்ள ஜின்டான் நகரில் உள்ள அவரது வீட்டுக்குள் புகுந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, தப்பியோடியுள்ளது.

இந்தச் சம்பவம் லிபியாவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில் இந்தக் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து எந்த அதிகாரபூர்வத் தகவலும் வெளியாகவில்லை.

சர்வாதிகாரியான கடாபியின் மகனான சைஃப், லிபியாவில் நடைபெறும் பேரழிவு ஆயுதத் திட்டங்களைக் கைவிடுவது குறித்த பேச்சுவார்த்தை நடத்தியதில் பெரும் பங்காற்றினார்.

2011 ஆம் ஆண்டு லிபியாவில் நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு நீண்ட கால சிறைவாசத்திலிருந்து மீண்ட அவர், அதிபர் தேர்தலில் போட்டியிடவிருந்ததாகவும், அதனால், அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை