எகிப்தை விட பழமை சிந்து!

 மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கியது மக்களுக்கு சர்ப்ரைஸ்,  விரோதிகளுக்கு ஷாக். ஆயிரம் ஆண்டுகள் பேசும் சாதனையை ஐந்தாண்டுகளில் செய்து முடித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. பாஜக-வின் கிளை கழகமாகவே அதிமுக மாறிவிட்டதாகவும் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம். தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கோயில்களில் கொண்டாட்டங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்.திமுகவை விஜய் தொடர்ந்து விமர்சிப்பது குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில். அண்ணாவே தன்னைப் பார்த்து தான் திமுகவை தொடங்கினார் என செல்லுவார் என கிண்டல்பட்டாசு தொழிலை பாதுகாக்க ஒன்றிய அரசின் தொழில் துறைச் செயலாளரை சந்தித்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வலியுறுத்தல். 18 சதவீத ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரிக்கை.திருவண்ணாமலை, தஞ்சை, கரூர், வேலூர் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் மாசி மாத சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாடுசென்னை கீழ்ப்பாக்கத்தில் இன்று வள்ளலார் மாநாடு. மாநாட்டில் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடவுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தகவல்.

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் திமுகவில் இணைந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைத்துக்கொண்டார்.
பீகாரில் மொபைல் சிம்கார்டுகளை அதிகளவில்  வாங்கும் 17 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள். 5 ஆண்டுகளில் சிம் கார்டு வாங்கும் சிறுவர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்தாக அதிர்ச்சி தகவல்.
அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட  ஈரானுக்கு ட்ரம்ப் தொடர் அழுத்தம். மேலும் ஒரு போர் கப்பல் ஈரான் நோக்கி வரும் என எச்சரிக்கை.
தொடர் மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் பிரான்ஸ். மோன்ஹூர்ட் நகரில் தனித் தீவுகளாக மாறிய வீடுகளில் மக்கள் சிக்கித்தவிப்பு.
இந்தியா உடனான உறவை வலுப்படுத்த வங்கதேசம் விருப்பம். புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைக்க வாய்ப்பு.
குளிர்கால ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் முதல்முறையாக பிரேசிலுக்கு பதக்கம். விறுவிறுப்பாக நடைபெற்ற ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் தவறி விழுந்த கஜகஸ்தான் வீராங்கனை.
ஓட்டுக்கு வாங்கிய பணத்தை திரும்பக் கொடு் அல்லது கடவுள் மீது சத்தியம் செய்  !தெலுங்கானா நகராட்சித் தேர்தலில் தோல்வியடைந்த பாஜக வேட்பாளரின் மனைவி விடு வீடாக சென்று,ஓட்டுக்கு வாங்கிய பணம் ரூ.3000த்தைக் திருப்பிக் கொடு அல்லது கடவுள் மீது சத்தியம் செய் என வாக்காளர்களிடம் வசூல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பான் கார்டு பது விதிகள்!

புதிய விதிகள் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரலாம் என்றும் தெரிகிறது. 


நாட்டில் நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு மிகவும் அவசியம். இந்த பான் கார்டு விதிகளில் விரைவில் மாற்றங்கள் வரவுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதனை, ஒன்றிய அரசு வருமான வரி விதிகள், 2026 வரை வெளியிட்டு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டுள்ளது. தற்போதைய வரி விதிகளை எளிமைப்படுத்தவும், வருமான வரி சட்டம் 2025 உடன் இணங்கவும் இந்த புதிய விதிகள் கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், பிப்ரவரி 22ஆம் தேதி வரை பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் பெறப்படும். அதன் பிறகு, இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது. மேலும் புதிய விதிகள் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போதைய விதிகளின்படி, வங்கி அல்லது தபால் நிலையத்தில் ஒரு நாளில் ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்தால், நீங்கள் பான் விவரங்களை வழங்க வேண்டும்.

ஆனால், தற்போது முன்மொழியப்பட்ட விதிகளின்படி, இந்த தினசரி வரம்பு வருடாந்திர வரம்பால் மாற்றப்படும்.


அதாவது, நீங்கள் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால், பான் தேவைப்படும்.

உங்களிடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தாலும் அதே வரம்பு பொருந்தும். அந்த வரம்பிற்குப் பிறகு நடக்கும் பரிவர்த்தனைகள் வருமான வரியின் மேற்பார்வையின் கீழ் வரும்.


மோட்டார் வாகனம் வாங்குதல், விற்பனை செய்தல்: தற்போது, ​​எந்தவொரு மோட்டார் வாகனத்தையும் (இரு சக்கர வாகனங்கள் உட்பட) வாங்க அல்லது விற்பனை செய்ய, அதன் மதிப்பு எதுவாக இருந்தாலும், பான் கார்டு தேவைப்படுகிறது.


புதிய திட்டத்தின்படி, மோட்டார் வாகனத்தின் மதிப்பு (மோட்டார் சைக்கிள்கள் உட்பட) ரூ.5 லட்சத்தைத் தாண்டினால் மட்டுமே பான் கார்டு தேவைப்படும். அந்தத் தொகைக்குக் கீழே உள்ள சிறிய வாகனங்களை வாங்குவதற்கு இனி பான் கார்டு தேவையில்லை.


ஹோட்டல், உணவகக் கொடுப்பனவுகள்: தற்போது, ​​ஹோட்டல்கள் அல்லது உணவகங்களுக்கு ரூ.50,000க்கும் அதிகமான தொகைக்கு பான் கார்டு தேவைப்படுகிறது.


புதிய திட்டங்களின்படி, இந்த வரம்பு ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரம்பை மீறினால் மட்டுமே பான் கார்டு வழங்கப்பட வேண்டும்.


அசையா சொத்து (ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள்): தற்போது, ​​ரூ.10 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை வாங்க அல்லது விற்க PAN கார்டு தேவைப்படுகிறது.


முன்மொழியப்பட்ட விதிகளின்படி, இந்த வரம்பு இரட்டிப்பாக ரூ.20 லட்சம் ஆகலாம்.

காப்பீட்டுக் கொள்கைகள்: தற்போது, ​​காப்பீட்டு பிரீமியம் ரூ.50,000ஐ தாண்டினால் பான் தேவைப்படுகிறது.


புதிய விதிகளின்படி, அதிக மதிப்புள்ள பிரீமியம் செலுத்துதல்களுக்கு மட்டுமல்ல, காப்பீட்டு நிறுவனத்துடனான எந்தவொரு கணக்கு தொடர்பான உறவுக்கும் பான் தேவைப்படலாம்.


தனிநபர்களும் நிறுவனங்களும் தங்கள் வருமானத்தை சரியாகப் புகாரளித்து வரி செலுத்துவதை உறுதிசெய்ய வருமான வரித்துறை அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும். பான் கட்டாயமாக்குவதன் மூலம், நிதி நடவடிக்கைகளை மிகவும் திறம்பட கண்காணிக்க முடியும் மற்றும் வரி ஏய்ப்பைக் குறைக்க முடியும்.

சிந்து சமவெளி நாகரிகம் 

பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. பிர்ரானாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வுகள்,  எகிப்து நாகரிகத்திற்கும் முந்தையது சிந்து என்பதை உணர்த்துகின்றன.


சிந்து சமவெளி நாகரிகம் இதுவரை நம்பப்பட்ட காலத்தை விட பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என புதிய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

ட இந்தியாவின் பிர்ரானாவில் (Bhirrana) கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்கள் மற்றும் விலங்குகளின் எஞ்சிய பகுதிகளை ஆய்வு செய்த நிபுணர்கள், இந்த பழங்கால சமூகத்தின் வேர்கள் 8,000 ஆண்டுகள் பழமையானவை என்கின்றனர்.


இது உறுதிப்படுத்தப்பட்டால், எகிப்தின் முதல் பார்வோன்களின் (Pharaohs) காலத்திற்கு முன்பே சிந்து சமவெளி நாகரிகம் தோன்றிவிட்டது என்பது உறுதியாகும்.


பல்லாண்டு காலமாக, பள்ளிப் பாடப்புத்தகங்கள் பண்டைய உலகின் நாகரிகங்களை மெசபடோமியா, அதனைத் தொடர்ந்து பிரமிடுகளின் தேசமான எகிப்து, மற்றும் சிந்து சமவெளி நாகரிகம் என்ற வரிசையிலேயே கற்பித்து வந்துள்ளன.


ஆனால், தற்போது நடத்தப்பட்ட காலவரிசை ஆய்வு இந்த வரலாற்றை மாற்றியமைக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


சிந்து சமவெளி நாகரிகம் அல்லது திராவிட நாகரிகம், தோராயமாக கி.மு. 2600 முதல் கி.மு. 1900 வரை செழித்தோங்கியதாக நீண்டகாலமாக நம்பப்பட்டு வந்தது.


இது உலகின் ஆரம்பகால நகர கலாச்சாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


இருப்பினும், பிர்ரானாவில் நடத்தப்பட்ட புதிய கார்பன் டேட்டிங் (Carbon dating) சோதனை, இந்த காலவரிசையை மேலும் பின்னோக்கித் தள்ளி உள்ளது.


இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மற்றும் கூட்டு நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள், தொன்மையான குடியிருப்பு அடுக்குகளில் இருந்து மட்பாண்டத் துண்டுகள் மற்றும் விலங்குகளின் எலும்புகளை பகுப்பாய்வு செய்தனர்.


இதன் ரேடியோகார்பன் முடிவுகள், சுமார் 9,000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மக்கள் குடியிருப்புகள் இருந்ததை உணர்த்துகின்றன. 'சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்' இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்புகள், இப்பகுதியில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சமூகங்கள் முன்பே நம்பப்பட்டதை விட முன்னதாகவே உருவாகியிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.


மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா போன்ற தளங்கள், கிரிட் அமைப்பில் கவனமாக திட்டமிடப்பட்ட தெருக்களை வெளிப்படுத்துகின்றன.

பல வீடுகள் கிணறு, முற்றங்கள் மற்றும் குளியல் பகுதிகளுக்கான வசதிகளை கொண்டிருந்தன. தெருக்களுக்கடியில் மூடிய வடிகால் அமைப்புகள் இருந்தன,


இவை உலகின் ஆரம்பகால நகர சுகாதார அமைப்புகளில் ஒன்றாக நிபுணர்களால் விவரிக்கப்படுகின்றன.

சில வீடுகள் 2 தளங்களைக் கொண்டிருந்ததாகத் தோன்றுகிறது.


பெரிய தானியக் களஞ்சியங்கள், சந்தைகள் மற்றும் கப்பல் கட்டும் தளங்கள் (Dockyards) சிக்கலான பொருளாதார அமைப்பை உணர்த்துகின்றன. சுவாரஸ்யமாக, எகிப்தில் காணப்படுவது போன்ற பெரிய கோவில்களோ, அரச மாளிகைகளோ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்படவில்லை.


இந்த பற்றாக்குறை, குறைந்த அளவிலான அதிகார மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறையைக் குறிக்கலாம், இருப்பினும் பல கேள்விகளுக்கு இன்னும் பதில்கள் கிடைக்கவில்லை.


அதன் உச்சக்கட்டத்தில், சிந்து நாகரிகம் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்டிருந்திருக்கலாம், இது அக்கால உலக மக்கள் தொகையில் கணிசமான பகுதியாகும்.


இதன் ஆதிக்கப் பகுதி அரபிக்கடலில் இருந்து கங்கை வடிநிலம் வரை நீண்டு, பண்டைய உலகின் மிகப்பெரிய கலாச்சார மண்டலங்களில் ஒன்றாக அமைந்தது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நுணுக்கமாக துளையிடப்பட்ட ரத்தின மணிகள், தரப்படுத்தப்பட்ட கல் எடைகள், தாமிரம் மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட உலோகக் கருவிகள், சிந்து சமவெளி ஸ்கிரிப்ட் (Script) பொறிக்கப்பட்ட முத்திரைகளை கண்டெடுத்துள்ளனர்.


பல தசாப்தங்களாக ஆய்வு செய்த போதிலும், சிந்து சமவெளியின் எழுத்து முறை ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

பல ஆண்டுகளாக, சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு காலநிலை மாற்றமே முக்கிய காரணியாக அறிஞர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.


பருவமழை அமைப்புகள் பலவீனமடைந்தது மற்றும் நதி அமைப்புகள் வறண்டது விவசாயம் மற்றும் வர்த்தகத்தை பாதித்திருக்கலாம். இருப்பினும், பிர்ரானாவின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் திடீர் சரிவுக்குப் பதிலாக, படிப்படியான மாற்றத்தை உணர்த்துகின்றன.


சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப, அதிக நீர் தேவைப்படும் கோதுமை மற்றும் பார்லிக்கு பதிலாக, தினை மற்றும் அரிசி போன்ற வறட்சியைத் தாங்கும் பயிர்களுக்கு மக்கள் மாறியதற்கான சான்றுகள் உள்ளன.


திடீர் வீழ்ச்சிக்கு பதிலாக, இந்நாகரிகம் காலப்போக்கில் படிப்படியாக சிறிய குடியிருப்புகளாக சிதறிப் போயிருக்கலாம்.


இடம்பெயர்வு, வெள்ளம், நோய் அல்லது சமூக மாற்றம் உள்ளிட்ட பிற கோட்பாடுகள் இன்னும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

பூமிக்கு அடியில் புதிய உலகம்.


வியட்நாமின் குவாங் பின்க் மாகாணத்தின் லாவோஸ் அருகில்  son doong என்ற குகை அமைந்துள்ளது.


கடந்த 1991-ஆம் ஆண்டு விவசாயி ஒருவர்  காட்டிற்குள் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது  இரு மலைகளுக்கு நடுவிலே ஒரு குகை இருந்ததை பார்த்துள்ளார்.

அத்தகைய குகையில் இருந்து குளிர் காற்று வீசிய நிலையில் உள்ளிருந்து ஆறு ஓடும் சத்தமெல்லாம் கேட்டிருக்கிறது.

குகைக்குள் எதோ வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த விவசாயிக்கு குகைக்குள் செல்ல பயமாக இருந்துள்ளது. 


இதைபற்றி  ஊரில் உள்ள அனைவரிடமும் விவசாயி சொல்கிறார். அந்த ஊரில் இந்த விஷயம் பேசும்பொருளாக மாறுகிறது. இருப்பினும் அதனுள் சென்று பார்க்க யாருக்குமே தைரியமில்லை.


கடைசியாக 2009- ல் பிரிட்டிஷ் explorers அதனுள் சென்று பார்க்கிறார்கள். அந்த இடமே மிகவும் வித்தியாசமாக தனி உலகம் போல இருந்திருக்கிறது.


கிட்டத்தட்ட 9 கிலோ மீட்டர் நீளமும், 200 மீட்டர் உயரத்தில் இருந்திருக்கிறது. 


அந்த குகைக்குள்ளேயே தனியாக ஒரு காடு, ஆறு, மேகங்கள் கூட இருந்திருக்கிறது. அங்கிருக்கும் தட்பவெப்பநிலை கூட வித்தியாசமாகவும் செடிகள் கூட புதிதாகவும் இருந்திருக்கிறது.

உலகத்தில் வேறு எங்கேயும் இல்லாத செடிகளும், உயிரினங்களும் அதனுள் காணப்பட்டுள்ளன. தற்போது அந்த குகை ஒரு சுற்றுலா தலமாக இருக்கிறது.


ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுத்து 1000 நபர்களை மட்டும் அதனுள் அனுப்புகிறார்கள். 

இந்த அதிசயக் குகையைச் சுற்றிப் பார்க்க Oxalis Adventure Tours என்ற நிறுவனம் மட்டுமே அனுமதி பெற்றுள்ளது.


இதுவரை உலகில் கண்டுப்பிடிக்கப்பட்ட மிகபெரிய குகை இதுதான்.


சுமார் 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மலைக்கு அடியில் ஓடிய ஆறால் சுண்ணாம்புப் பாறைகள் அரித்துச் செல்லப்பட்டு இந்தக் குகை உருவானது என்று சொல்லப்படுகிறது. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை