ஐயாயிரம் ரூபாய்?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தமிழ்நாட்டில் 17.60 லட்சம் பேர் எழுதுகின்றனர் 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதிய நடைமுறைகள்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
மாநில சுயாட்சியை வலுவிழக்க செய்யும் ஒன்றிய அரசு: கூட்டாட்சி முறையை மறுசீரமைப்பது அவசியம்; முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்.
கூட்டணியை சிதைக்கும் வகையில் பேசும் காங். எம்பிக்கள் மீது தேசிய தலைமையிடம் செல்வப்பெருந்தகை புகார்: கட்சி கட்டுப்பாட்டை மீறினால் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை 
பிப்ரவரி 13 அதிகாலையில் செல்போன் பார்த்த தமிழ்நாட்டுப் பெண்களில் 1 கோடியே 32 இலட்சம் பேருக்கு இன்ப அதிர்ச்சி.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொருவர் அக்கவுண்ட்டிலும் 5000 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தில், ஒரே நாளில் 5000 ரூபாய் ஏன்?
மகளிர் உரிமைத் தொகை என்பதை தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க அறிவித்தபோது, மாதம் 1000 ரூபாய் கொடுப்பது தமிழ்நாட்டின் நிதி நிலையில் சாத்தியமற்றது என்று அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் தெரிவித்தன.
எனினும், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மாதம் 2000 ரூபாய் வழங்குவோம் எனத் தெரிவிக்கப்பட்டது. மக்கள், தி.மு.க.வையே வெற்றி பெற வைத்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே மகளிர் உரிமைத் தொகை எங்கே என எதிர்க்கட்சிகள் கேட்க ஆரம்பித்தன.
2023 செப்டம்பர் 15 அன்று மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்ற பெயரில் பெயல்படுத்தத் தொடங்கினார் மு.க.ஸ்டாலின்.
இதில் பயன் பெறுவோருக்கு சில தகுதிகள் வரையறுக்கப்பட்டன. 1 கோடியே 16 இலட்சம் மகளிர் இதில் பயனாளிகளாயினர்.
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் என்று சொல்லிவிட்டு, தகுதி நிர்ணயிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. 1000 ரூபாய் கொடுத்தால் போதுமா என்ற குரலும் வந்தது.
மாதம் 1000 ரூபாய் அத்தியாவசியமாக இருக்கிறவர்களுக்கு இந்தத் திட்டம் பயனளிக்கும் என்றும், அதற்கான தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இது வழங்கப்படுகிறது என்றும், ஒரு குடும்பத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், முதியோர் உதவித் தொகை என ஏதோ ஒரு வகையில் மாதம் 1000 ரூபாய் அரசு வழங்குகிறது என்பதை ஆளுந்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் பெண்களுக்கான கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத்தின் மூலம் மாதம் ஏறத்தாழ 1000 ரூபாய் மிச்சமாகிறது என்றும் சொல்லப்பட்டது.
எதிர்க்கட்சிகளோ, 2021 மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து கணக்கிட்டு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அதாவது 2021 மே முதல் 2023 ஆகஸ்ட் வரையிலான 28 மாதங்களுக்கான தொகையாக 28 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றெல்லாம் கணக்குப் போட்டு கேள்வி கேட்டனர்.
இந்தக் கேள்விகள் விமர்சனங்கள் இவற்றைக் கடந்து, மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாட்டு பெண்களிடம் மகத்தான வரவேற்பைப் பெற்றதுடன், இந்தியாவின் முன்னோடித் திட்டங்களால் ஒன்றாக பெயர் பெற்றது.
தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற இந்தத் திட்டத்தினை மற்ற மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களின்போது பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தன. குறிப்பாக பா.ஜ.க. இந்த வாக்குறுதியை முன்வைத்து 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வென்று ஆட்சியமைத்துள்ளது.
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்களை, இலவசங்கள் என விமர்சிப்பதும், கஜானாவை காலி செய்கிறார்கள் எனக் குற்றம் சாட்டுவதும் பா.ஜ.க .உள்ளிட்ட கட்சிகளின் வழக்கமாக உள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தமிழ்நாடும் உள்ளது. மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட நேரடிப் பணப் பலன் திட்டங்களைத் தடுக்க வேண்டும் என பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வின் உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
தலைமை நீதிபதி அமர்வில் இது விசாரிக்கப்பட இருப்பதுடன், ஏற்கனவே உச்சநீதிமன்றம் பீகார் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பா.ஜ.க. கூட்டணி அரசு ஒவ்வொரு பெண்கள் வங்கிக் கணக்கில் போட்ட 10ஆயிரம் ரூபாய் உள்பட பல திட்டங்கள் குறித்து தனது முடிவுகளை வெளியிட இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள வழக்கு, தேர்தல் அறிவிப்பு வெளியானதும் நடைமுறைக்கு வரும் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் பிப்ரவரி 13 அன்று மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகை 3000 ரூபாயுடன், கோடைக்கால சிறப்புத் தொகை என 2000 ரூபாய் சேர்த்து 5000 ரூபாயை 1 கோடியே 32இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்கில் செலுத்தச் செய்திருக்கிறார்.
நிலுவைத் தொகை ஏன் தரவில்லை, எல்லாருக்கும் ஏன் மகளிர் உரிமைத் தொகை தரவில்லை என்று கேட்ட எதிர்க்கட்சிகள்தான் கோடைக்கால சிறப்புத் தொகையுடன் கூடிய 5000 ரூபாய் பற்றியும் கேள்வி கேட்கின்றன.
அப்படியென்றால், மகளிர் உரிமைத் தொகையை ஓட்டுக்கானதாகப் பார்ப்பதும் அதை வைத்து அரசியல் செய்வதும் யார்?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்










