தோற்போம் என்ன பந்தயம்?

 பெண்கள் இலவசமாக பேருந்துகளில் செல்வதால் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.மெட்ரொ பாதிக்கப்படுகிறது. பெண்களுக்கு இலவசப் பேருந்து கொடுக்கக்கூடாது என்கிறார் - மோடி.அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும்: இந்திய வானிலை ஆய்வு மையம்  










காங்கிரசின் கூட்டணி கலாட்டா?

சுமார் ஏழு ஆண்டுகளாக, இந்திய அரசியலில் மிகவும் நிலையான கூட்டணியாகப் பார்க்கப்படும் திமுக - காங்கிரஸ் உறவு, இப்போது ஒரு பெரிய சோதனைக்கு உள்ளாகியுள்ளது. சித்தாந்த ரீதியாகவோ அல்லது தேர்தல் கணக்குகளாலோ அல்ல... காங்கிரஸின் உட்கட்சி பூசலால் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது.

மதுரையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் வீசிய வார்த்தைகள் திமுக தலைமையைக் கடுமையாகச் சீண்டியுள்ளன.

"பூத் கமிட்டிக்கு கூட ஆள் இருக்கிறதா என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் ஏளனமாகப் பேசுகிறார்கள். கடந்த காலங்களில் உங்கள் தவறுகளுக்கு நாங்கள் பழி சுமந்து பதில் சொன்னோம். ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினை 'அண்ணன்' என்று அழைக்கிறார். அதே மரியாதையை சாதாரண காங்கிரஸ் தொண்டர்களுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்...” என்றார் அவர்.


இதன் உச்சகட்டமாக, 'ஆட்சியில் பங்கு வேண்டும்' என அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சில நாட்களுக்கு முன்புதான் முதல்வர் ஸ்டாலின் "கூட்டணி ஆட்சி என்பது தமிழகத்திற்குச் செட் ஆகாது " எனத் திட்டவட்டமாக அறிவித்திருந்த நிலையில், இந்தத் தீர்மானம் திமுகவை அதிருப்தியடையச் செய்துள்ளது.


தமிழக காங்கிரஸின் இந்தத் திடீர் ஆவேசத்திற்குப் பின்னால் டெல்லி மேலிடத்தின் இரு துருவப் போட்டிகள் இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.


செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் நம்பிக்கைக்குரியவர்.

மாணிக்கம் தாகூர், ராகுல் காந்தியின் வலதுகரமான கே.சி. வேணுகோபாலுக்கு நெருக்கமானவர்.ராகுலை பீகார்,மகாராஷ்டிராவில் தவறாக வழிநடத்தி தோல்விக்கு தள்ளியவர்கள் இந்த கும்பல்தான்.

சோனியாவும் தி.மு.க கூட்டணி நீடிக்க விரும்புகிறார்.காங்' இத்தனை எம்.பி.க்கள் கிடைக்க இக்கூட்டணிதான் காரணம் என சோனியா உறுதியாக நம்புகிறார்.

ஆனால் இக்கும்பல் ராகுலை குழப்பி தவறாக முடிவெடுத்து தோல்விபெற முனைகிறார்கள். என்கிறார்கள்


இந்த உட்கட்சி அதிகாரப் போட்டியே கூட்டணியில் தேவையற்ற சலசலப்புகளை உண்டாக்குவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


திமுக எம்பி கனிமொழி ராகுல் காந்தியைச் சந்தித்தபோதே, இடங்களின் எண்ணிக்கை பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது என்றாலும், ஒட்டுமொத்த கூட்டணி முடிவு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் கூறினார்.


திமுக தரப்போ பழைய வரலாற்றை ஒரு முறை திருப்பிப் பார்க்கச் சொல்கிறது. கடைசியாக 2014-ல் ஒரு முக்கிய நாடாளுமன்றப் போரில் காங்கிரஸ் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டபோது, அதன் வாக்கு சதவீதம் வெறும் 4.3 சதவீதமாக மட்டுமே இருந்தது. 

"மம்தா, நிதிஷ் குமார் போன்றவர்கள் விலகியபோது கூட, நாங்கள் ராகுல் காந்தியை கைவிடவில்லை. 2019-ல் முதன்முதலாக ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியவர் எங்கள் தலைவர் ஸ்டாலின். 2024-இல் திமுகவின் பலமான தேர்தல் எந்திரத்தால், காங்கிரஸின் புதுமுகங்கள் கூட அமோக வெற்றி பெற்றனர். காங்கிரஸ் தேசிய அளவில் அதிக வெற்றி சதவீதத்தைப் பெற்றது திமுக கூட்டணியில்தான்" என்கிறார் ஒரு திமுக மூத்த அமைச்சர்..


தற்போது திமுக கறாரான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. "மாணிக்கம் தாகூரின் பேச்சிற்கு ராகுல் காந்தியின் ஆசி இருக்கிறதா இல்லையா என்பதை முதலில் டெல்லி தெளிவுபடுத்தட்டும். அதன் பிறகுதான் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை," என்று செக் வைத்துள்ளது அறிவாலயம்.

தாகூரைத் தொடர்பு கொண்டபோது, சில திமுக அமைச்சர்களின் பகிரங்க அறிக்கைகளுக்குத்தான் தான் பதிலளிப்பதாகவும், 'இந்தியா' கூட்டணி பிழைத்திருக்க வேண்டும் என்றே காங்கிரஸ் விரும்புவதாகவும் அவர் கூறினார். மேலும், தனது கருத்துக்களுக்கு ராகுலின் ஒப்புதல் உள்ளது என்ற கருத்தையும் அவர் நிராகரித்தார்.

தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், "அண்ணன் - தம்பி" பாசம் நீடிக்குமா? அல்லது "அதிகாரப் பசி" கூட்டணியைப் பிரிக்குமா?


ட்சித் தலைவர்கள் சிலர் -காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அத்தகைய கருத்துகள் கட்சியின் நலனைப் பாதிப்பதாகவும் சென்னையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதே நேரத்தில், தேர்தல் தொகுதிப் பங்கீடு குழு அமைப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். தொகுதிப் பங்கீட்டுக் குழு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பழைய ஓய்வூதியத்திற்கு ரூ 1100 கோடிகள்!

TAPS திட்டத்திற்கு ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக போராடி வந்த நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், TAPS என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று (பிப்ரவரி 17) பேசிய தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “ அரசு அலுவலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டத்தில், கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட மாத ஓய்வூதியம், அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு, குடும்ப ஓய்வூதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை மொத்தமாகப் பெறும் வசதி மற்றும் இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பணிக்கொடை ஆகிய பலன்கள் அடங்கியுள்ளன.

இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான அரசின் கூடுதல் பங்களிப்பிற்கென ஒட்டுமொத்தத் தொகையாக 11,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை