நுண்ணறிவில் இந்தியாவுக்கு அவமானம்!
என் உயிரை காப்பாற்றியவர் துணை முதலமைச்சர் உதயநிதி! - ‘தமிழ்நாடு சாம்பியன்’ விழாவில் போல் வால்ட் வீராங்கனை பவித்ரா நெகிழ்ச்சி.
ஜப்பான் பிரதமராக டகாய்ச்சி மீண்டும் முறைப்படி தேர்வு.
ஜெனீவாவில் 2வது நாளாக ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை.
சீனாவில் பட்டாசு கடையில் தீவிபத்து: 12 பேர் பலி.
ரூ.25 கோடி கடன் வாங்கி தருவதாக தொழிலதிபரிடம் ரூ.67 லட்சம் மோசடி ஹரி (நாடார்) உட்பட 3 பேர் கைது: 2 நாள் போலீஸ் காவலில் விசாரணை
ஆன்லைன் மோசடி வழக்கு நடிகர் ஜெயசூர்யாவின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை.
கேரளாவில் பார்களில் நள்ளிரவு 12 மணி வரை மது விற்க அனுமதி.
புதுச்சேரியில் அதிமுகவின் கதையை முடிக்கும் பாஜ; 2 மாச கட்சிக்கும்( நடிகர் விஜய்கட்சி ) 53 வருஷ கட்சிக்கும்(அதிமுக( 2 சீட்.மிரட்டி தொகுதி பங்கீடு டீலை முடித்த டெல்லி பாஜக மேலிடம்.
மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் பிரதிநிதிகள் குழுவினர் முதல்வருக்கு நன்றி
தமிழ்நாடு ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் இலங்கையால் சிறைபிடிப்பு.
மே.வங்கத்தின் நறுமண அரிசி வகைகளை ஐநா அங்கீகரித்துள்ளது.மே.வங்க அரசு தகவல்.
இந்தியாவுக்கு அவமானத்தை தந்த
செயற்கை
நுண்ணறிவு மாநாடு .
தலைநகர் தில்லியில் செயற்கை நுண்ண றிவு தாக்க மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டின் முதல் நாளிலேயே முறையற்ற திட்டமிடல், பாதுகாப்புக் குறைபாடு காரணமாக திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று இந்தியா விற்கு சர்வதேச பிரதிநிதிகள் மத்தியில் அவமா னத்தை உருவாக்கி கொடுத்துள்ளது பாஜக அரசு.
தெற்குலக நாடுகளில் முதல் முறையாக இந்தியாவில் நடத்தப்படும் செயற்கை நுண்ண றிவு மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கரு தப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வும் பார்வையிடவும் நாடு முழுவதும் இருந்தும், 100-க்கும் மேற்பட்ட வெளி நாடுக ளைச் சேர்ந்தவர்களும் வந்துள்ளனர்.
அவர்களில் பலர் பாதுகாப்புச் சோதனை என்ற பெயரிலும் நுழைவாயிலில் இருந்த பிற தடைகளாலும் நீண்ட வரிசையில் காக்க வைக் கப்பட்டனர். அதே நேரத்தில் விஐபி-க்கள் நீண்ட வரிசைகளைக் கடந்து மிக அலட்டலாகவும் விரைவாகவும் உள்ளே சென்றனர்.
இத்தகைய மோசமான கூட்ட மேலாண்மை யால் அசவுகரியமும் அதிருப்தியும் அடைந்த பார்வையாளர்கள் பலர் சர்வதேச அளவிலான ஒரு நிகழ்விற்கு, முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லையென சமூக ஊட கங்களில் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ள னர்.
நுழைவாயில்கள் மூடப்பட்டிருப்பதால், ஏஐ உச்சிமாநாட்டில் எனது சொந்த அரங் குக்கே (booth) என்னால் செல்ல முடிய வில்லை.
நீங்களும் வெளியே சிக்கியிருந்தால், ‘Bolna’ குழுவைச் சந்திக்க விரும்பினால் எனக்கு மெசேஜ் செய்யுங்கள் என்று ஏஐ குரல் ஸ்டார்ட்-அப் நிறுவனமான போல்னா வின் (Bolna) இணை நிறுவனர் மைத்ரேயா வாக் அவருடைய எக்ஸ் (X) கணக்கில் பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக ஒவ்வொரு நபருக்கும் அத்தியா வசியமாக இருக்கும் குடிநீர், கைப் பை, கார் சாவிகள் போன்ற எதையும் அரங்கிற்குள் கொண்டு வரக்கூடாது என உத்தரவு இருப்பதால் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட தாக ஒரு பார்வையாளர் தெரிவித்துள்ளார்.
இதுதான் டிஜிட்டல் இந்தியாவா? மேலும் போதுமான இருக்கை வசதிகள் இல்லாதது, வைஃபை (WiFi) வசதி இல்லா தது, அதன் விளைவாக டிஜிட்டல் பணப்பரி வர்த்தனைகள் செய்ய முடியாமல் போனது. ரொக்கப் பணத்தை மட்டுமே வாங்குவோம் என சில விற்பனை நிலையங்கள் சொல்லி விட்டதனால் பலருக்கு உணவு மற்றும் தண்ணீர் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.
நிகழ்வின் போது பதிவு செய்யும் முறை (registration system) பலமுறை செயலிழந்ததாகவும் பலர் புகார் கூறியுள்ளனர்.
இதனை குறிப்பிட்டு செயற்கை நுண்ண றிவு மாநாட்டிலேயே டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய முடியவில்லை என்றால் இதுதான் டிஜிட்டல் இந்தியாவா? என கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
பிரதமர் இருக்கும் போதே திருட்டு பிரதமர் மோடியும் அவரது பாதுகாப்புப் படையும் இருந்த போதே ‘நியோசேபியன்ஸ்’ (NeoSapiens) ஏஐ நிறுவனத்தின் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
இதனை அந்நிறுவனத்தின் நிறுவனர் தனது எக்ஸ் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். ஒரு சர்வதேச நிகழ்வில் நாட்டின் தலைவர் இருந்த நேரத்தில் நடந்துள்ள இந்த திருட்டுச் சம்பவம் மாநாட்டின் பாதுகாப்பு பற்றி பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மன்னிப்புக் கோரிய அஸ்வினி வைஷ்ணவ் சர்வதேச பார்வையாளர்கள் பங்கேற் பாளர்களுடன் நடைபெறும் மாநாட்டில் மிகப்பெரிய குளறுபடிகள் எழுந்து வரும் நிலையில் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சாவர்க்கர் பாணியில் மன்னிப்புக் கோரியுள்ளார்.
எனினும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கக் கூடிய ஒரு சர்வதேச அளவி லான மாநாடு பாஜகவின் நிர்வாகத் தோல்வி யால் நாட்டிற்கு அவப்பெயரை உருவாக்கு கிறது என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
'சீன 'ரோபோவை தங்களுடையது என பொய் சொன்ன பல்கலை.
இம்மாநாட்டில் சீன ரோபோ நாயை தங்களது சொந்தத் தயாரிப்பு என சொல்லி நொய்டாவைச் சேர்ந்த கல்ஃகோட்டியாஸ் என்ற தனியார் பல்கலைக்கழகம் காட்சிப்படுத்தியுள்ளது.
சீனாவிலிருந்து 2 முதல் 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கக்கூடிய nitree Go2 என்ற ரோபோ நாயை வாங்கிவிட்டு “ஓரியன்” என்ற பெயரில் அதைத் தங்களது சொந்தப் படைப்பு என சர்வதேச மாநாட்டில் அப்பல்கலைக்கழகம் காட்டியது நாட்டுக்கே அவமானம்.
இவர்களை போன்ற குறுகிய எண்ணம் கொண்டவர்களால் தான் இந்தியா மீதான நம்பு மதிப்பும் சர்வதேச அளவில் குறைந்து கொண்டே வருகிறது என சமூக ஊடகத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.கல்ஃகோட்டியாஸ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு என்ற பெயரில் பல கோடிகளை பெற்று வருகிறது. குறிப்பாக காப்புரிமை தாக்கல் செய்ய இந்திய அரசு 5 லட்சம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
ஐஐடி (IIT) போன்ற முன்னணி நிறுவனங்கள் இணைந்து வெறும் 803 காப்புரிமைகளைத் தாக்கல் செய்யும் நிலையில், கல்ஃகோ ட்டியாஸ் மற்றும் லவ்லி புரொபஷனல் போன்ற பல்கலைக்கழகங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காப்புரிமைகளைத் தாக்கல் செய்து பல கோடிகளை பெற்றது எப்படி என்ற கேள்வி உள்ளது.
இந்நிலையில் தற்போதைய முறைகேடு அவர்களின் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
காரைக்காலில் உரையாற்றிய உள்துறை அமைச்சர்அமித்ஷா,சும்மாஅள்ளிவிட்டுள்ளார்.
‘புதுச்சேரியில் இரட்டை எஞ்சின் ஆட்சியால் வளர்ச்சி அதிகமாகி உள்ளது' என்று அமித்ஷா சொன்னது முக்கியமான அல்வா ஆகும்.
இதைக் கேட்டதும் புதுச்சேரி மக்களை விட அம்மாநிலத்தின் முதலமைச்சர் ரங்கசாமி தான் அதிகம் சிரிக்கிறார். ‘அப்படியா? அந்த எஞ்சின் எந்த ஷெட்டில் நிற்கிறது? எந்தப் பாதையில் ஓடுகிறது?' என்று அவர் கேட்டிருப்பார்.
பிரதமர் நரேந்திரமோடி, புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி ஆகிய இரட்டை எஞ்சின் செயல்பாடுகள் பற்றிச் சொல்லவே நான் வந்திருக்கிறேன்" என்ற பீடிகை போட்டு பொய் மூட்டைகளை அவிழ்த்திருக்கிறார்
அமித்ஷா,
ஒன்றிய அரசு புதுச்சேரிக்கான கடனை தள்ளுபடி செய்யாததால் மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் முதலமைச்சராக ரங்கசாமி இருந்தாலும், அவரை நிம்மதியாக ஆள விட்டதா பா.ஜ.க.? துணை நிலை ஆளுநர்கள் மூலமாக அவருக்குக் குடைச்சல் கொடுத்துக் கொண்டு தான் இருந்தார்கள்.
இருக்கிறார்கள்.
ஏற்கனவே மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ரங்கசாமி. அப்போதெல்லாம் நிம்மதியாக ஆண்ட அவர், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த பிறகு அவரது நிம்மதி போனது. ஒன்றிய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு முன்பே, “ நம்மால் முடிந்ததை நாம் செய்ய வேண்டும். விரைவாகச் செய்ய வேண்டும்.
ஆனால் நாம் எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் கேட்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சரிடம் கேட்க வேண்டும். நாம் நினைத்தபடி புதுச்சேரி சுற்றுலாவை மேம்படுத்த முடியவில்லை.
தொழில் செய்ய அனுமதி விரைவாகக் கிடைக்கவில்லை என்பதால் புதுச்சேரி வருவதற்கே அச்சப்படுகின்றனர். புதுச்சேரியை சிங்கப்பூர் ஆக்க நினைத்தேன். இதுவரை அதற்காக எதுவும் செய்ய முடிந்ததா? இல்லை.
நிர்வாகச் சிக்கலே இதற்குக் காரணம்” என்று வருத்தப்பட்டார் ரங்கசாமி. இப்படித்தான் வைத்திருந்தார்கள் ரங்கசாமியை.
புதுச்சேரி மக்களின் முக்கியமான கோரிக்கையே மாநிலத் தகுதி பெறுவதுதான்.
அதற்கு துளிகூட முயற்சி எடுத்ததா ஒன்றிய மோடி அரசு? இல்லை. தன்னை வந்து சந்தித்தவர்களிடம், “எனக்கு நாள்தோறும் மன உளைச்சல் தான் ஏற்- படுகிறது. புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை” என்று ரங்கசாமி புலம்பியதாகச் செய்திகள் வந்ததே!
அதனை அறிவாரா அமைச்சர் அமித்ஷா?
ஆளுநர், அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை என்பதை பலமுறை புலம்பினாரே ரங்கசாமி. சுகாதாரத் துறை இயக்குநர் நியமனத்தில் தான் நினைத்ததை செய்ய முடியவில்லை என்பதால் மூன்று நாட்கள் சட்டசபைக்கே செல்லாமல் இருந்தார் ரங்கசாமி. புதுவை மக்களைப் போலவே தொல்லைக்கு மேல் தொல்லை அனுபவித்தவர் அந்த மாநில முதலமைச்சர் ரங்கசாமி.
இதைத்தான் சூப்பரான ஆட்சி என்கிறார் அமித்ஷா.
மூடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஆலைகள் பிரச்சினை தீர்க்கப்பட்டதா?பாப்ஸ்கோ (PAPSCO) மற்றும் பாசிக் (PASIC) ஆகிய நிறுவனங்களை மீண்டும் சீரமைத்து, ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், இன்னும் பல ஊழியர்களுக்குச் சம்பளப் பாக்கி தீர்க்கப்படாமல் உள்ளது.
ஏ.எப்.டி (AFT) பஞ்சாலைகளைத் திறந்து வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
புதுச்சேரி மக்களின் நீண்ட கால கோரிக்கையான இலவச அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நியாய விலைக்கடைகளை (Ration Shops) மீண்டும் திறப்பதாக அறிவிக்கப்பட்டது.
பலமுறை இதற்கான முயற்சிகள் எடுக்- கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், இன்னும் முழுமையாக அனைத்துக் கடைகளும் செயல்படத் தொடங்கவில்லை.
அரசுத் துறைகளில் உள்ள சுமார் 10, 909-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.
சில துறைகளில் தேர்வுகள் நடந்தாலும், பெரும்பாலான இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளை மீண்டும் இயக்குவதில் தேக்கம் நிலவு கிறது.
நீண்ட காலமாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் இதுவரை நடத்தவில்லை. மின்துறை தனியார் மயமாக்கப்படுவதைத் தடுப்போம் என்று கூறிவிட்டு, தற்போது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது ஊழியர்கள் மற்றும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் சமீபத்தில் மருந்து கொள்முதல் மற்றும் விநியோகத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விநியோகிக்- கப்பட்ட சில மருந்துகள், அவற்றின் காலாவதி தேதி (Expiry Date) முடிந்த பிறகும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) நடத்திய சோதனை யில், புதுச்சேரி அரசு கொள்முதல் செய்த சில மருந்துகள் "தரமற்றவை” (Not of Standard Quality) என வகைப்படுத்தப்பட்டன. அரசு மருத்துவமனை களில் உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அடிப்படை மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக நோயாளிகள் தரப்பில் தொடர் புகார்கள் வந்தன.
மருந்துகள் இருந்தும் அவை முறையாக விநியோகிக்கப் படவில்லை
அல்லது கணக்கில் காட்டப்படவில்லை என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்விகள் கேட்டபோதும் முறையான பதில் இல்லை.
பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக ஊழியர்களை காவல் துறையை ஏவி அடித்துக் கொலை வெறித்தாக்குதல் நடத்தி, அவர்கள் மீதே வழக்குப் போட்டது தான் என்.ஆர். பா.ஜ.க. இரட்டை எஞ்சின் செயல்பாடு ஆகும்.
9 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு சில நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட அவலத்தையும் மக்கள் மறக்கவில்லை. இரட்டை எஞ்சின் என்பது புதுச்சேரியிலும் டப்பா எஞ்சின் தான்.



