மோ(ச)டி அரசு?
எஸ்.ஐ.ஆர். பணிகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல். தங்கள் பெயர் இருக்குமா? என அறிந்துகொள்ள வாக்காளர்கள் ஆர்வம்
IUML உடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தயை தொடங்கியது திமுக. மதிமுக, மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சிகளுடன் இன்று பேச்சுவார்த்தை
முதலமைச்சரை நேரில் சந்தித்த கே.சி.வேணுகோபால், தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசித்ததாக தகவல். வரும் 26ம் தேதி மார்க்சிஸ்ட், 27ம் தேதி CPI மற்றும் கொ.ம.தே.க. உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது திமுக
அதிமுக யாரையும் கண்டு அஞ்சியதில்லை என எடப்பாடி பழனிசாமி பேச்சு. மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதி 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என வாக்குறுதி
கூட்டணிக் கட்சிகளின் சக்திக்கு ஏற்ப திமுக தொகுதிகளை ஒதுக்கும் என தொல்.திருமாவளவன் நம்பிக்கை. வலதுசாரிகளை வீழ்த்த கூட்டணி நலன் முக்கியமானது என்றும் திட்டவட்டம்
டிரம்பின் வரிவிதிப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்ததன் எதிரொலி. செலுத்திய வரியைத் திருப்பித் தரக் கேட்டு நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் வழக்கு
மோ(ச)டி அரசு?
தாயார் வந்த வினை!
பா.ஜ.க அரசு அமைந்ததிலிருந்து பொய்யையும் புனைவையும் வரலாறாகவும் அறிவியலாகவும் முன்வைக்கும் முயற்சிகள் இந்திய அளவில் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.
அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது, உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி என்பது விநாயகருக்கு யானைத் தலையை வைத்ததுதான் என்றார்.
அவர் கோடு போட, பலரும் ரோடு போட்டார்கள். ஆனால், அதில் கருங்கல் ஜல்லியோ, தார்-சிமெண்ட்டோ இல்லை. மண்புழுதிதான் பரவியது.
முதல் டெஸ்ட் ட்யூப் பேபி மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரம் என்றார் ஒருவர்.
ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிக்கவில்லை என்றும் இராமாயணத்தில் வரும் புஷ்பக விமானம்தான் முதல் விமானம் என்றும், விண்வெளிக்கு சென்றவர்கள் அமெரிக்கர்களோ, ரஷ்யர்களோ அல்ல புராணத்தில் வரும் அனுமார்தான் என்றார் இன்னொருவர்.
பிரதமர் மோடியின் மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க.வின் முதலமைச்சர்கள் பலரும் இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
பா.ஜ.க.வின் அரசியல் பலமே மதவாதமும் அதனுடன் ஒட்டிய பொய்யும் புரட்டும்தான். அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்படுத்தபடவில்லை.
நம்பிக்கை அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில்தான் அங்கே ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் மலை மீது உள்ள தூணில் விளக்கு ஏற்றியதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. வழக்கமாக ஏற்றப்படும் இடத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட நிலையிலும், தீபம் ஏற்ற தி.மு.க. அரசு அனுமதிக்கவில்லை என்று தேசிய அளவிலான ஊடகங்கள் வாயிலாகப் பொய்யைப் பரப்பினார்கள் பா.ஜ.க.வினர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு கிறிஸ்தவ பள்ளியில் படித்த மாணவி இறந்த நிலையில், மதமாற்ற நெருக்கடி காரணமாகத்தான் அந்தப் பெண் இறந்தார் என பா.ஜ.க. தலைவர்கள் விஷத்தைப் பரப்பி தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்கப் பார்த்தார்கள். சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
முழுமையாக நடந்த விசாரணைக்குப் பிறகு, மாணவியின் மரணத்தில் மதமாற்ற நெருக்கடி எதுவுமில்லை என்று அண்மையில் சி.பி.ஐ. தனது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
மதவாத அரசியலுக்காகப் பரப்பப்படும் பொய்கள்தான், புராணங்களை ஆதாரமாக முன்னிறுத்தும் வேலையையும் செய்கிறது.
அத்துடன், குஜராத் முதல்வராக இருந்த மோடி அந்த மாநிலத்தை எப்படியெல்லாம் வளர்த்திருக்கிறார் பாருங்கள் என்று வாட்ஸ்ஆப்பிலும் சமூக வலைத்தளத்திலும் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள கட்டடங்களையும் பாலங்களையும் சாலைகைளையும் பரப்பி, பொய்யான பிம்பத்தை உருவாக்கி 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தனர்.
பின்னர்தான், அவையெல்லாம் எந்தெந்த நாடுகளில் உள்ளன என்கிற உண்மை வெளிவந்தது. பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் உள்பட எதிலுமே பா.ஜ.க. தரப்பிலிருந்து உண்மையே வெளிவந்தது கிடையாது.
எல்லாமே பொய்களும் வதந்திகளும்தான்.
இந்த நிலையில், டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மாநாடு பா.ஜ.க. அரசு எந்தளவுக்கு மோசடி செய்யும் என்பதை உலக அளவில் அம்பலப்படுத்தி இந்தியாவைத் தலைகுனிய வைத்துள்ளது.
உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் நடந்து கொண்ட ஏ.ஐ. மாநாட்டை பிரதமர் மோடியின் இமேஜ் டெவலப்மென்ட்டுக்காகப் பயன்படுத்துவதற்கான நிகழ்வாகவே பா.ஜ.க. அரசு செயல்பட்டது.
பல நிறுவனங்களின் உரிமையாளர்களும், ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் வல்லுநர்களும் தங்களுக்குப் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், உள்ளே நுழைவதற்கான அனுமதிகூட கிடைக்கவில்லை என்றும் வெளிப்படையாகவே விமர்சிக்கும் நிலை உருவானது.
மோ(ச)டி அரசின் சிகரமாக, அந்த ஏ.ஐ. மாநாட்டில் பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரபிரதேச மாநிலத்தின் கல்கோத்தியா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய ரோபோ நாய் என அறிமுகப்படுத்தப்பட்டபோது, அங்கிருந்தவர்கள் கலாய்த்து சிரித்தனர்.
காரணம், அது சீனா உருவாக்கிய ரோபோவாகும். புராண-பொய்ச்சுருட்டு கதைகளை அறிவியல் என்று சொன்னது போல, அடுத்த நாட்டுத் தயாரிப்பை தன்னுடைய பல்கலைக்கழக மாணவர்களின் தயாரிப்பாகக் காட்ட நினைத்தது உத்தரபிரதேச பல்கலைக்கழகம்.
அது உலக அளவில் அம்பலமாகி, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவை மட்டுமின்றி, சொந்த அறிவையே உலகாளவிய விஞ்ஞானிகள் சந்தேகப்படவும், கேலி செய்யவுமான அசிங்கமான நிலையை உருவாக்கிவிட்டது பா.ஜ.க.வின் போலிப் பெருமை முயற்சி.
இந்தியாவை வல்லரசு நாடுகளுக்கு இணையாக அறிவியல் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வித்திட்டவர் முதல் பிரதமர் நேரு.
செயற்கை நுண்ணறிவுக்கு முன்னோடியான கணினித் தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவர் அவரது பேரனான முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி.
நேரு மீது பழி போடுவதும், காங்கிரஸ் ஆட்சியை வாரிசு என்றும் வசைபாடும் பா.ஜ.க. அரசு இந்தியாவின் இத்தனை ஆண்டுகால பெருமையை சிதைத்து சீரழித்து, உலக நாடுகள் மத்தியில் நம்மை தலைகுனிய வைத்துள்ளது.


