தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் இடைக்கால பட்ஜெட் தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில்,  கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், நிதி ஒதுக்கீடு தொடர்பாக தகவல்கள் இடம்பெற்றது.குறிப்பாக மகளிர் உரிமை தொகை, மெட்ரோ ரயில் திட்டம், ஒவ்வொரு துறைகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதிகளை பட்டியலிட்டார். 


இதில் முக்கியமாக திமுக அரசு பதவியேற்றதில் இருந்து நகைக்கடன், பயிர் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி தொடர்பாக முக்கிய தகவலை கூறினார்.


அந்த வகையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் உறுதியளித்தபடி. கூட்டுறவுத் துறையின் மூலம் 12,359 கோடி ரூபாய் பயிர்க்கடனும், 4,889 கோடி ரூபாய் நகைக்கடனும் மற்றும் சுயஉதவிக் குழுக்களின் கடன் 2,118 கோடி ரூபாயும் தள்ளுபடி செய்யப்பட்டன.


கடந்த ஐந்தாண்டு காலத்தில், 69.087 கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் உச்சவரம்பு 30 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, கடந்த ஐந்தாண்டுகளில், 252,246 சுயஉதவிக் குழுக்களுக்கு 16.648 கோடி ரூபாய் கடன் கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.


குறைந்த விலையில் மருந்துகள்

பொதுமக்களுக்குத் தரமான மருந்துகளை குறைந்த விலையில் வழங்கும் நோக்கில், 'முதல்வர் மருந்தகம் திட்டம் தொடங்கப்பட்டு. இதுவரை 26 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.


இதன் மூலம், 45 இலட்சம் பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.


இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உணவு மானியத்திற்காக 14,000 கோடி ரூபாய் உட்பட, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 17,068 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை