குழப்மும் ,கூட்டணியும்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை முடுக்கிவிட நடவடிக்கை. இன்று சென்னை வரும் துணை தேர்தல் ஆணையர், அடுத்த 2 நாட்களுக்கு விரிவான ஆலோசனை
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் ஆயத்த பணிகள் தீவிரம். 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு.
திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 400+ நிறைவேற்றம்” - கனிமொழி எம்.பி தகவல்.
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்திய ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி தலைவிக்கு பாஜ மாவட்ட தலைவர் டார்ச்சர்: தற்கொலைக்கு முயற்சி.
சிறுபான்மையினரின் எஞ்சியுள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி நடத்திய பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி
39 ஆண்டுகளுக்குப் பின் மக்களவை சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம். வாக்கெடுப்பு முடியும் வரை சபாநாயகர் இருக்கையில் ஓம் பிர்லா அமர மாட்டார் எனத் தகவல்.
கால் வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி
கூட்டணிக் கட்சிகளுடன் வரும் 22-ம் தேதி முதல் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை. பேச்சு வார்த்தைக் குழுவை ஸ்டாலின் விரைவில் அமைப்பார் என அறிவிப்பு
சென்னை வேளச்சேரி மசாஜ் சென்டருக்குள் புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி அங்கு பணிபுரியும் பெண்களிடமிருந்து செல்போன்கள், ஒன்றே கால் சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவத்தில், ராக்கப்பன், ஆனந்தகுமார், வீரமருது ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைதுசெய்துள்ளனர்.போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற போது கீழே விழுந்த 3 பேருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக காவல்துறை தெரிவிப்பு.
அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் .அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறைகளில் பெண்கள் அதிகம் பணியாற்றுவதை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்.11ஆம் தேதி அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது.
அதிமுக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தேமுதிகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை. தேமுதிக ஒன்றிய அமைச்சர் பதவியை எதிர்பார்ப்பதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி.
அமெரிக்காவில் பெண்ணிடம் சாதி கேட்ட பட்டிமன்ற பேச்சாளர் ராஜா மீது பாயும் கண்டனகங்கள்.
குழப்மும் ,கூட்டணியும்!.
தமிழக அரசியலில் ஒரு பக்கம் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டு தேர்தல் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த பக்கம் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி இழுபறியாகவே இருக்கிறது.
இதற்கு காங்கிரசார் சிலர் தி.மு.க. ஆட்சியில் பங்பு தரவேண்டும் என்றும் நடிகர் விஜய் கட்சியில் கூட்டணி சேர வேண்டும் என வெளிப்படையாக பிரவின்,மாணிக்கம் தாபூர்,ஜோதிமணி,ராஜேஷ்,கோடங்கர் போன்றோர் கூறிவருவதும்.அதை ராகுல்காந்தி,கார்கே போன்றோர் கண்டிக்காத்தும்தான் காரணம்.
மேலும் ராகுல் காந்திதான் இதற்கு காரணம் எனவும் அவர் கரூர் மரணங்கள் போதும்,ஜனநாகன் படம் பிரச்டை போதும் நடிகர்விஜய்க்கு தொலைபேசியில் ஆதரவு தெரித்ததை கூறுகிறார்கள்.ஒருவர் எந்த தேர்தலிலும் பங்குபெறாத நிலையில் அவருடன் கூட்டு சேர்ந்து பலமான கூட்டணியை உடைப்பது சரியல்ல.
ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ்இப்படித்தான் தவறுகளை தொடர்ந்து செய்து தோல்வியடைகிறது.ஆனால் தி.மு.க போன்ற உறுதியான தோழமையை சீண்டுவதும்,மாற்ற நினைப்பதும் தவறான முடிவு.அதை செய்ய ராகுலுக்கு சிலர் தவறான வழிகாட்டுகின்றனர் என திமுக வினர் எண்ணுகின்றனர்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தி.மு.க. உடனடியாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. அ.தி.மு.க. பா.ஜ.க, அமமுக, த.மா.க, பா.ம.க. என என்.டி.ஏ கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதே சமயம், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இணையுமா என்பது குறித்து இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இதனிடையே டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, தேர்தலில் கடினமாக உழைக்க வேண்டும்.
வெற்றியை பெற வேண்டும். குறிப்பாக காங்கிரஸ் பேரியக்கம், எல்லா தளங்களிலும், எல்லா கிராமங்களிலும் தேர்தல் பணிகளை முடுக்கி விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கூட்டணி குறித்த குழப்பம் காங்கிரஸிடம் இல்லை.
நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தி.மு.க. இன்னும் பேச்சுவார்த்தை குழு அமைக்கவில்லை என்பது தான் எங்கள் வருத்தம்.
ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் தேர்தல் வளர்ச்சி என்பது மாறிக்கொண்டே இருக்கும். இப்போது அனைவரும் களத்திற்கு செல்கிறார்கள். கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு என இருக்காமல் இப்போதே பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்.
பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடைசி நேர பணிகள் காரணமாக எதுவும் செய்யமுடியாமல் போனது.
(அதற்கு காரணம் காங்கிரஸதான்)
அதனால் இந்த தேர்தலில் முன்னதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தொகுதிகள் குறித்து முடிவு செய்ய வேண்டும்.
திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.
கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது, பத்திரிக்கைகளில் இழுபறி, என்றெல்லாம் எழுத வாய்ப்பு உள்ளது.
இது குறித்து நாளை முதல்வரை சந்தித்து எங்கள் தலைவர்கள் என்ன சொன்னார்களே அதை அவர்களிடம் சொல்வேன். ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோர் தமிழகத்திற்கு வருவதற்கான ப்ளான் ரெடி என்று கூறியுள்ளார்.
அதேபோல் தி.மு.க. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை குழு அமைக்காதது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தி.மு.க. மீது விமர்சனங்கள் வைக்கவில்லை.
மாறாக எங்களுக்கு உள்ள வருத்தங்களை பதிவு செய்கிறோம். பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க.வுக்கு தயக்கம் உள்ளதாக என்று தெரியாது.
ஆனால் தி.மு.க. விரைந்து தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை குழுவை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளர்.
த
காங்கிரசில் உள்ள கூட்டணி தொடர்பான குழப்ப மனநிலைதான் தி.மு.க வின் தயக்கத்திற்கு காரணம்.
கனிமொழி டெல்லியில் ராகுலை சந்தித்து பேசும் பொழுது அவரிடம் கண்ட தடுமாற்ற மனநிலைதான் தி.மு.கவையும் யோசிக்க வைத்துள்ளது.





