தற்காலிக நீக்கம்?
தமிழ்நாடு எம்.பி-க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்பட 8 பேர் சஸ்பெண்ட். சபாநாயகர் இருக்கை நோக்கி காகிதத்தை கிழித்து வீசியதாக நடவடிக்கை
சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி போராட்டம். சபாநாயகரின் செயல் அப்பட்டமான ஜனநாயக படுகொலை என எம்.பி-க்கள் கண்டனம்
மக்களவையில் பேச விடாமல் திட்டமிட்டு தடை விதிப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு. ஜனநாயக உரிமை நிராகரிக்கப்படுவதாக சபாநாயருக்கு கடிதம்
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயம் மற்றும் பால் பொருட்களுக்கு பாதிப்பு இருக்காது. எதிர்க்கட்சியினர் திட்டமிட்டே அவதூறு பரப்புவதாக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் மறுப்ப
பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை திடீர் அறிவிப்பு. ஒட்டுமொத்த பொறுப்பாளர்களையும் மாற்ற கட்சித் தலைமை முடிவு என தகவல்.
மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்களின் இறக்கைகள் மோதி விபத்து. இறக்கைகள் சேதமடைந்த நிலையில், பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்
S.I.R-க்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று ஆஜராகி வாதாடுகிறார் மம்தா பானர்ஜி. மாநிலத்தின் முதலமைச்சரே வழக்கறிஞராக ஆஜராக உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு.
பெண்ணை பார்த்து கண் அடிப்பதும், பறக்கும் முத்தம் கொடுப்பதும் பாலியல் தொல்லைதான். 61 வயது முதியவரை குற்றவாளி என தீர்ப்பு அளித்தது சண்டிகர் நீதிமன்றம்.
மக்கள் குரலைக் கூறினால்
தற்காலிக நீக்கம்?
மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதற்கு அனுமதி மறுப்பதை எதிர்த்துப் போராடியதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்களை, இடைநீக்கம் செய்து, ஒன்றிய பாஜக அரசு அராஜகத்தை அரங்கேற்றியுள்ளது.
மோடி அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், நாடா ளுமன்ற வளாகத்திலேயே எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவா தத்தில் திங்கட்கிழமையன்று கலந்து கொண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது, இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள் ளதாக முன்னாள் ராணுவத்தளபதி எம்.எம். நரவனே, புத்தகம் ஒன்றில் எழுதி யிருப்பது பற்றி கேள்வி எழுப்பினார். ஆனால், இந்த விவகாரத்தைப் பேசுவ தற்கு ராகுல் காந்திக்கு, அவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதி மறுத்துவிட்டார்.இந்நிலையில், செவ்வாயன்று மக்களவை கூடிய நிலையில், ராகுல் காந்தி மீண்டும் பேசமுயன்ற போது, அப்போதும் அவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதிக்க வில்லை. இதனால், ஆவேசமடைந்த இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், அவைத் தலைவர் இருக்கை முன்பாக முழக்கங் களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, அவைத்தலைவர் முன்பு காகிதங்களை கிழித்து வீசி மக்களவையில் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறி, 374-ஆவது பிரிவின் கீழ் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் சு. வெங்கடேசன், காங்கிரஸ் உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், குர்ஜித் சிங் அவுஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோல் மற்றும் டீன் குரியகோஸ் உள்ளிட் டோரை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மா னத்தை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறை வேற்றி, 8 எம்.பி.க்களையும் மோடி அரசு சஸ் பெண்ட் செய்துள்ளது.
இதனைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்திலேயே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து, சு. வெங்கடேசன் எம்.பி., தமது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், ஜனநாயகத்தின் உயிர்நாடியான விவாத மரபை முற்றிலும் சீர்குலைத்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் பாஜக அரசை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக
தாம் உள்பட 8 உறுப்பினர்கள் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், “மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை” எனவும், அந்த வகையில், “தேசப் பாதுகாப்பிற்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குமான எங்களின் குரல் பாஜக-வின் அதிகாரத்திற்கு அடிபணியாது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சு.வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள், மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது, ஜனநாயகப் படுகொலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்கள வையில் துவங்கியுள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கட் கிழமையன்று அவையில் பேச முற்பட்டபோது, ஆளும் கட்சியினர் அவரைப் பேச விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இரண்டாவது நாளாக, செவ்வாயன்றும் எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து பேச முற்பட்ட போது, அவரைப் பேசவிடாமல் ஆளும் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினரைப் பேசுமாறு, சபாநாயகர் அழைத்துள்ளார்.
இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையினை கண்டித்து சபாநாயகர் முன்பு முற்றுகையிட்டு நியாயம் கேட்ட காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்பட 8 எம்.பி.க்கள் இந்தக் கூட்டத் தொடர் முழு வதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளு மன்றத்திற்கு உள்ளேயே எதிர்க்கட்சித் தலைவர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பேசவிடாமல் அவர்களின் குரல்வளையை நெறித்து உரிமைகளை பறித்துள்ளதானது.
ஜனநாயகப் படுகொலையாகும். ஒன்றிய பாஜக அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் இந்த ஜனநாயக விரோத அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக எண்ணம் கொண்ட சக்திகள் வலுவாக கண்டன குரலெழுப்பிட வேண்டுமென்றும்,
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், நாடாளுமன்ற அவையை ஜனநாயகப் பூர்வமாக நடத்திட ஒன்றிய பாஜக முன்வர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மத்திய ஜெர்மனியில் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் மிகப் பழமையான நியோலிதிக் நிலத்தடி சுரங்கப்பாதையை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பழமையான நிலப்பரப்புகள் எவ்வாறு மீண்டும் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து விளக்குகிறது.
சாக்சோனி அன்ஹால்ட் மாநிலத்தின் ரைன்ஸ்டெட் (Reinstedt) கிராமத்திற்கு அருகே நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளில், ஆராய்ச்சியாளர்கள் நடுக்காலத்தின் இறுதிக்காலத்தைச் சேர்ந்த ’எர்ட்ஸ்டால்’ (Erdstall) எனப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட சுரங்கப்பாதை அமைப்பை கண்டு பிடித்துள்ளனர்.இந்த சுரங்கம் கி.மு 4-வது ஆயிரமாண்டைச் சேர்ந்த நியோலிதிக் காலத்தின் சதுரவட்ட வடிவ அகழிக்குழிகள் ஆகும்.
ரைன்ஸ்டெட்டின் கிழக்கே உள்ள டோர்ன்பெர்க் (Dornberg) எனப்படும் சிறிய மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அகழ்வாய்வு தளம், ஏற்கனவே தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக நிரூபிக்கப்பட்டிருந்தது.
இங்கு பால்பெர்க் (Baalberg) பண்பாட்டைச் சேர்ந்த நியோலிதிக் கால சதுரவட்ட அகழிக்குழி, இறுதி நியோலிதிக் காலத்தைச் சேர்ந்த முறையாக பாதுகாக்கப்படாத புதைக்குழி எச்சங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
இவை எல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இறுதிச் சடங்கு தொடர்பான பயன்பாட்டிற்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டதை வெளிப்படித்துகிறது.
எர்ட்ஸ்டாலே எனப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட நிலத்தடி சுரங்கப்பாதை அமைப்புகள் பொதுவாக நடுக்காலத்தின் இறுதிக்காலத்தைச் சேர்ந்தவை.
அவற்றின் உண்மையான பயன்பாடு குறித்து இன்னும் தெளிவான விளக்கம் எதுவும் கண்டறியப்படவில்லை. இது தொல்லியாளர்களிடையே தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
சில ஆய்வாளர்கள், போர் அல்லது கலவர காலங்களில் மக்கள் மறைவிடமாக பயன்படுத்துவதற்காக இவை உருவாக்கப்பட்டதாகக் கருதுகின்றனர். மற்றொரு தரப்பு ஆய்வாளர்கள், சடங்கு சார்ந்த அல்லது குறியீட்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த சுரங்கப்பாதையை முதலில் ஆய்வாளர்கள் புதைக்குழி என தவறாக கருதினர்கள். அதன்பின்னர் அதில் கிடைத்த பொருட்கள் அது நிலத்தடி சுரங்கப்பாதை என்பதை உறுதி செய்தது. இந்த கண்டுபிடிப்பு, ஒரே நிலப்பரப்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எவ்வாறு பல்வேறு அர்த்தங்களையும் பயன்பாடுகளையும் தாங்கிக் கொண்டிருக்க முடியும் என்பதை தெளிவாக காட்டுகிறது.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எண்ணற்ற ரயில் திட்டங்களை, பட்ஜெட்டில் அறிவித்துள்ள ஒன்றிய பாஜக அரசு, தமிழகத்தை மட்டும் முழு முற்றாக புறக்கணித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றம் சாட்டி யுள்ளார்.
இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் சு. வெங்கடேசன் எம்.பி. கூறியிருப்பதாவது: புதிய பாதை, இரட்டைப் பாதை திட்டங்களில் ஒன்றுகூட இல்லை! நிதியமைச்சரின் நிதிநிலை அறிக்கையில் 2.78 லட்சம் கோடி ரயில்வே முதலீட்டுக்கு ஒதுக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக் கையில் இல்லாத வகையில் ரூ. 12000 கோடி திரட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ. 36 ஆயிரத்து 721 கோடி, புதிய ரயில் பாதை திட்டங்களுக்கும், ரூ. 37 ஆயிரத்து 750 கோடி, இரட்டைப் பாதை திட்டங்களுக்கும், ரயில் வண்டிகளை வாங்குவதற்கு ரூ. 65 ஆயிரம் கோடி யும் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 700 கிலோமீட்டர் புதிய ரயில் பாதை திட்டங்களும், 2600 கிலோமீட்டர் இரட்டைப் பாதை திட்டங்களும் முடிக்கப்பட்டதாகவும், வரும் நிதியாண்டில் 500 கிலோமீட்டர் புதிய பாதைத் திட்டங்களும் 2400 கிலோமீட்டர் இரட்டைப் பாதை திட்டங்களும் முடிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
ஆனால், ஒரு திட்டம் கூட தமிழகத் திற்கு இல்லை. மோடி - சந்திரபாபு நாயுடுவை இணைக்கும் ரயில் திட்டங்கள் 7 உயர் வேக ரயில் மண்டலம் அமைக்கப்ப டும் என்று நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அவை அனைத் தும் ஹைதராபாத் - தில்லி - வாரணாசியை சுற்றியே வரக்கூடியதாக உள்ளன. அதாவது சந்திரபாபு நாயுடுவையும் பிரதமர் தொகுதியை யும் குறி வைத்து இவை அனுமதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெங்களூருவுக்கும் சென்னைக்கும் ஹைதராபாத்திற்கும் சென்னைக்கும் என்று இரு காரிடார்கள் ஹைதராபாத்தையும் பெங்களூரு வையும் குறிவைத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல தனி சரக்குப் பாதை ஒன்று கிழக்கே தான் குனியையும் மேற்கே சூரத்தையும் இணைத்து அமைக்கப்படுமாம்.
இந்த இரண்டு திட்டங்களும் சுற்றுச்சூழல் அடிப்படையில் தாக்குப் பிடிக்கும் சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்கு வரத்து திட்டங்கள் ஆகும். இதைத் தவிர நிதிநிலை அறிக்கையில் ரயில்வே குறித்து வேறு எதுவும் கிடையாது.
பிரதம மந்திரி கதிசக்தியிலும் தமிழகத்திற்கு எதுவும் இல்லை ஆனால், பொருளாதார ஆய்வு அறிக்கையில் சில அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பிரதம மந்திரி கதிசக்தி பொருளாதார ரயில் மண்டலங்கள் என்ற பெயரில் மூன்று மண்டலங்கள் உருவாக்கப்ப டும் என்று கூறப்பட்டுள்ளது.
எரிசக்தி தாது பொருள் சிமெண்ட் ஆகியவற்றுக்கான ஒரு மண்ட லம்; துறைமுக இணைப்பு இன்னொரு மண்டலம்; அதிக பயணிகள் போக்குவரத்து உள்ள ரயில் பாதைகள் என்ற மூன்று ரயில் மண்டலங்கள் உருவாக்கப்படுமாம். ரூ. 11.17 லட்சம் கோடியில் 434 திட்டங்கள் பிரதமர் கதிசக்தி திட்டத்தில் உள்ளன என்றும் அவற்றில் 122 திட்டங்கள் 1450 கிலோ மீட்டருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் 198 திட்டங்கள் 1977 கிலோ மீட்டருக்கு அனுமதிப்பது என்பது பல்வேறு கட்டங்களில் உள்ளன என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
இவற்றுள் ஏதாவது தென்னிந்தியாவுக்கும் தமி ழகம் கேரளத்திற்கும் உள்ளதா என்றால் ஒன்றும் கிடையாது. அது மட்டுமல்ல. தனியார் பங்களிப் புடன் 16 ஆயிரத்து 631 கோடி ரூபாயில் 18 திட்டங்கள் முடிவடைந்து விட்டனவாம். 7 திட்டங்கள் 16 ஆயிரத்து 334 கோடியில் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றன என்றும் பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுகிறது.
இந்த பிரதம மந்திரி கதிசக்தி திட்டத்திலும் ஒன்று கூட தமிழகத்திற்கோ கேரளத்திற்கோ கிடை யாது. இதைப்பற்றி எந்தப் பேச்சும் கிடையாது. அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்களுக்கே! தமிழகத்துக்கு கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரயிலைப் புறக்கணித்தது மட்டுமல்ல, பிரதம மந்திரி கதி சக்தி திட்டம் வட இந்தியா முழு வதும் அமல்படுத்தப்படும் போது தமிழகத்திற்கு எந்த திட்டமும் இல்லை என்பது மிகவும் கண்டிக்கத் தக்கது.
பிரதம மந்திரி கதிசக்தி திட்டத்தில் 894 கிலோ மீட்டர் தூரத்துக்கு 24 ஆயிரத்து 634 கோடி ரூபாய் செலவில் 2030-31இல் முடியும் வகையில் வர்தா- புசவால் மூன்றாவது நான்காவது பாதைகள்; குந்தியா- தங்கர்க்கர் நாலாவது பாதை; இட்டார் சி - போபால்- பினா நாலாவது பாதை இவற்றுக்கு பாஜக ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா மத்தியப்பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் மாநிலங் களின் 3633 கிராமங்களைத் தாண்டி செல்லும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல பக்தியார் பூர்- ராஜ்கீர்- திலையா இரட்டை பாதை திட்டம் 1434 கிராமங்களை கடந்து செல்லும் பீகாருக்கான திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல 3,169 கோடி ரூபாயில் பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகியவற்றை உள் ளடக்கிய பகல்பூர்- தம் கா- ராம்பூர் ஹட் இரட்டைப் பாதை திட்டம் ஆகிய அனைத்தும் நிதிநிலை அறிக்கைக்கு முன்பே அனுமதிக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு வெறும் 10 ரூபாய் ஒதுக்கி வஞ்சகம் இதே மோடி அரசு தான், தமிழகத்தின் 10 புதிய பாதை திட்டங்களுக்கும், 3 இட்டைப் பாதை திட்டங்களுக்கும் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கி யுள்ளது. பிரதம மந்திரி கதி சக்தி தேசிய திட்டத்திலும் ஒரு திட்டத்தை கூட சேர்க்கவில்லை. இது வன்மை யாகக் கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே 2021- 51 காலகட்டத்தில் 38.5 லட்சம் கோடி செலவு செய்து தேசிய ரயில் திட்டம் அமல்படுத்தப் போவதாக அறிவித்தார்கள். அதனை மூடிவிட்டு இப்போது பிரதம மந்திரி கதிசக்தி திட்டத்தை அமல்படுத்துகிறார்கள். இந்த திட்டங்களை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி அமல்படுத்துகிறார்கள்.
இவர்கள் செய்யும் அநியாயங்களை அறிந்து கொள்ள முடியாத வகையில், ‘பிங்க்’ புத்தகத்தை ஒழித்து விட்டார்கள். தனித்தனியே திட்டங்களை நிதிநிலை அறிக் கைக்கு வெளியே வெளியிட்டு தகவலை மறைத்து பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள்.
இதனை நாம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.






