எப்ஸ்டீன் பைல்ஸ் !

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம். இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முக்கிய ஆலோசனைஎதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்டதால், மூன்றாவது நாளாக முடங்கியது மக்களவை. பிரதமர் இருக்கைக்கே சென்று பதாகையுடன் பெண் எம்.பி-க்கள் ஆவேசப் போராட்டம்எதிர்க்கட்சி எம்.பி.க்களின் போராட்டத்தால் மக்களவையில் பிரதமர் மோடியின் நேற்றைய உரை ஒத்திவைப்பு. அவைக்கு வரவே பிரதமர் மோடி அஞ்சுவதாக ராகுல், பிரியங்கா விமர்சனம்.தமிழ்நாட்டில் 515 கோடி ரூபாய் முதலீடு செய்யும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம். ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி தொழிற்சாலையை வரும் 9-ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்2028-ல் சந்திரயான்-3 திட்டம் நிறைவேற்றப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி. 2035-ம் ஆண்டிற்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றும் நம்பிக்கைகரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் 12ம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்.சென்னையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிலம்ப ஆசிரியர் திருநாவுக்கரசு போக்சோவில் கைது.மோடி ஒப்புக்கொண்டு விட்டார் அமெரிக்க விவசாய பொருட்களுக்கு இந்தியாவில் இனி வரி இல்லை: அமெரிக்க வர்த்தக அதிகாரி அறிவிப்பு.கரூர் பொதுக்கூட்டத்தில் 41 பேர் பலியானதும் 72 நாள் ஓடி ஒளிந்து கொண்டவர்தான் விஜய்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு."இந்தியா அமெரிக்க அடிமை நாடல்ல.எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு சுதந்திரம் உள்ளது".இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம் குறுத்து ரஷ்யா அறிக்கை


எப்ஸ்டீன் பைல்ஸ்!

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனும் முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டனும் காங்கிரஸ் முன் சாட்சியமளிக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனும் முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டனும் காங்கிரஸ் முன் சாட்சியமளிக்க ஒப்புக்கொண்டதாக காங்கிரஸ் ஊழியர் தெரிவித்தார். 


இந்த நடவடிக்கை, குடியரசுக் கட்சி தலைமையிலான பிரதிநிதிகள் சபை, கிளிண்டன் தம்பதி, காங்கிரஸை அவமதித்ததாக அறிவிக்க வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டிருந்ததை தடுக்கக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


அத்தகைய வாக்கெடுப்பு நடந்திருந்தால், அது குற்றவியல் பரிந்துரைகள் செய்யப்படும் நிலைக்கு வழிவகுத்திருக்கும். 


கடந்த மாதம் அமெரிக்க நீதித்துறை பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் தொடர்பான மில்லியன் கணக்கான ஆவணங்களை வெளியிட்டது.


அதில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் அனைத்து விவரங்களும் அடங்கி இருந்தது. இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தான் கிளிண்டன் தம்பதி இந்த முடிவை எடுத்துள்ளனர்.

கிளிண்டனின் இந்த முடிவு அவமதிப்பு வாக்கெடுப்பை இடை நிறுத்துமா என்று தெரியவில்லை. வழக்கறிஞர்கள் விவரங்களை ஆராய்ந்து வருகின்றனர் என அவைத் தலைவர் மைக் ஜான்சன் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார். 


மேலும், எப்ஸ்டீனுடன் உள்ள தங்களின் தொடர்புகள் குறித்த கேள்விகளுக்கு நேரில் ஆஜராகி பதிலளிக்க மறுத்ததற்காக, கிளிண்டன் தம்பதி மீது காங்கிரஸ் அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர வேண்டும் என்று கடந்த வாரம் ஹவுஸ் ஓவர்சைட் கமிட்டி பரிந்துரை செய்திருந்தது.


இதற்கு பதிலளித்த கிளிண்டன் தம்பதிகள், தாங்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தாலும், இந்த விசாரணை கட்சி சார்பானது என்றும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பாதுகாப்பதற்காக நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. 


அவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை உங்களிடம் சத்தியப்பிரமாணம் செய்து சொன்னார்கள், ஆனால் நீங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை," என்று கிளிண்டன் தம்பதியினரின் துணைத் தலைமை அதிகாரி ஏஞ்சல் உரேனா சமூக ஊடகத்தில்  பதிவு ஒன்றை வெளியிட்டார்.


தொடர்ந்து, பில் கிளிண்டன் பதவியில் இருந்து விலகிய பின் எப்ஸ்டீனின் தனியார் ஜெட் விமானத்தில் பல முறை பயணம் செய்தார் என்றும் அவரது  குற்றவியல் நடத்தை தனக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


ஹவுஸ் மேற்பார்வைக் குழுவின் தலைவரான குடியரசுக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் கோமர் ”கிளிண்டன் குடும்பத்தினர் தங்கள் சாட்சியத்திற்கான தேதிகளை இன்னும் வழங்கவில்லை” என்று கூறினார்.

மேலும், கிளின்டன் தம்பதியினரின் வழக்கறிஞர்கள் விதிமுறைகளுக்கு உடன்படுவதாகக் கூறியுள்ளனர் என்றும் நான்  விதிமுறைகளை தெளிவுபடுத்துவேன், பின்னர் குழு உறுப்பினர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பேன் என்றும் கூறினார்.


அமெரிக்காவில் பெரிய அளவில் பேசும் பொருளாக ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு உள்ளது. ஜெஃப்ரின் எப்ஸ்டீன் என்பவர் வங்கிகளில் இருந்து பல்வேறு அரசியல்வாதிகள், அவர்களின் நிறுவனங்களுக்கு பணம் வாங்கி கொடுக்கும் பணியை மேற்கொண்டார்.


இதனால் அவருக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுடன் நல்ல உறவு இருந்தது. இந்நிலையில் ஜெஃப்ரின் எப்ஸ்டீன் மீது பாலியல் புகார்கள் எழுந்தன. அவர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து பல பிரபலங்களுக்கு தாரை வார்த்ததாக கூறப்படுகிறது.


மேலும் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் பில் கிளின்டன் உள்ளிட்டோருடன் ஜெஃப்ரின் எப்ஸ்டீனுக்கு நல்ல நட்பு இருந்தது.


டிரம்ப், ஜெஃப்ரீன் எப்ஸ்டீன் மற்றும் இளம்பெண்களுடன் சேர்ந்து இருக்கும் போட்டோக்கள் வெளியாகியது. அதுமட்டுமின்றி பாலியல் குற்றச்சாட்டடில் ஜெஃப்ரீன் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு  நியூயார்க்கில் உள்ள சிறையில் எப்ஸ்டீன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.


அவரது மரணம் தற்கொலை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், இது குறித்து பல சந்தேகங்கள் எழுந்தன.இந்த கோப்புகளை,எப்ஸ்டீன் நாட்குறிப்பை காணாமலாக்கும் முயற்சியில் மாட்டிக்கொண்ட தலைகள் முயற்சி செய்து வருகின்றனர்.

விலையில்லா எரிவாயு உருளை?

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமையகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு இந்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.


குடும்பப் பெண்களின் சுமையைக் குறைக்கும் வகையில், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன் வசதி செய்து தரப்படும் .

மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், வங்கிகளில் பெறப்பட்ட மாணவர்களின் கல்விக் கடனை தமிழக அரசே ஏற்று தள்ளுபடி செய்யும் என்ற அதிரடி வாக்குறுதியை அவர் அளித்துள்ளார்.


மேலும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையை கணிசமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


அதன்படி முதியோர்கள், விதவைப் பெண்கள், ஆதரவற்ற மகளிர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என அனைவருக்கும் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.


போட்டிகளின் போது உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைவோருக்கு 2 லட்சம் ரூபாய் மருத்துவ உதவியும் வழங்கப்படும்.


மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான தற்போதைய ஆன்லைன் நடைமுறை ரத்து செய்யப்பட்டு பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், போட்டிகளை நடத்த அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


இந்த வாக்குறுதிகளைத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.


ஏற்கெனவே முதல் கட்டமாக ஐந்து வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக இந்த ஐந்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை