கொலை முயற்சி புலம்பல்
மோடிக்கு புதிதல்ல!
பிரதமர் மோடியை பெண் எம்.பிக்கள் தாக்க முற்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அன்று மக்களவையில் என்ன நடந்தது என்ன? என்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவையில் கடந்த 28ம் தேதியில் இருந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 4ம் தேதி அன்று பிரதமர் மோடி அவைக்கு வருவதற்கு முன்பாக எதிர்க்கட்சி பெண் எம்.பிக்கள் பிரதமர் இருக்கைக்கு அருகில் சென்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய புத்தகத்தில் இருக்கும் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து பேச மக்களவை எதிர்க்கட்சிதலைவர் ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இந்த எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நேரத்தில் இந்த அமளியினால் மோடி வரவில்லை.
உடனே, ’’பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்துள்ளன. அதனால் எதுவும் தவறாக நடந்து விடக்கூடாது என்பதாலேயே பிரதமர் மோடியை இன்று அவைக்கு வர வேண்டாம் என்று சொன்னேன். அவர் வந்து அசம்பாவிதம் நடந்திருந்தால் மக்களவைக்கு களங்கம் ஏற்பட்டிருக்கும் ’’ என்றார் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா.

’’பயங்கரவாதிகள் பெண்கள், குழந்தைகளை பயன்படுத்துவது போன்று பெண் எம்.பிக்களை முன்னேவிட்டு பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சியினர் அனுப்பி இருக்கிறார்கள். ’’ என்று பாஜகவினரும் குற்றம் சாட்டி இருந்தனர்.
இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதால் எதிர்க்கட்சிகள் எனக்கு சவக்குழி தோண்டப் பார்க்கின்றன என்று பிரதமர் மோடியும் குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற வரலாற்றில் இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்திருப்பது இதுவே முதல்முறை என்பதால் பெரும் விவாதப் பொருள் ஆனது இந்த விவகாரம்.
இந்நிலையில் அன்று மக்களவையில் நடந்தது என்ன? என்பது குறித்து வீடியோவை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ.
அந்த வீடியோவில், பிரதமர் இருக்கைக்கு அருகே சென்று காங்கிரஸ் பெண் எம்பிக்கள் ஜோதிமணி, சுதா உள்ளிட்டோர் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
இதனால் அப்போது பாஜக எம்பிக்களுடன் வாக்குவாதம் ஏற்படுகிறது.
இந்த வீடியோவை வெளியிட்ட கிரண் ரிஜிஜூ, அன்றைக்கு பெண் எம்பிக்களை பாஜக எம்பிக்கள் தடுக்காமல் இருந்திருந்தால் ஒரு மோசமான சம்பவம் அரங்கேறி இருக்கும் என்கிறார்.
ஆனால் அந்த காணொலியில் எந்த தாக்குதலுக்கான முயற்சியும் தென்படவில்லை.
சபாநாயகர் பிர்லா பொய்யை வேண்டுதெனவே கூறுவது தெளிவாகத் தெரிகிறது.
மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் போது பாஜக.உறுப்பினர்கள் ஒரு மசோதாவை எதிர்த்து அதைக் கிழித்து பிரதமர் தலைமேலேயே போட்டுள்ளனர்.
ஆனால் மோடியை எதிர்த்து பதாகைகளைத்தான் காண்பித்து குரல் எழுப்பியுள்ளனர்.
இதற்கு தன்னை கொலை செய்ய,புதைகுழி தோண்ட முயற்சி என மோடி புலம்புகிறார்.
தன்னைக் கொல்ல முயற்சி எனப் புலம்புவது மோடிக்கு புதிதல்ல.இப்போது அதில் சபாநாயகரும் ஒத்துவது மட்டுமே புதிது.
காக்கைகள் சாவும்,சென்னையில் காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகமும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், வழிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
1300க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கும், பண்ணைகளுக்கு வந்து செல்லும் முட்டை வண்டிகள், தீவன வாகனங்களுக்கும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.
அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1300க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கும், பண்ணைகளுக்கு வந்து செல்லும் முட்டை வண்டிகள், தீவன வாகனங்களுக்கும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.
மேலும் பண்ணைக்கு வரும் தொழிலாளர்களும் கிருமி நாசினி மருந்து மூலம் கை, கால்களை சுத்தம் செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் அளித்த பேட்டியில், “கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவின் அடிப்படையில் அனைத்தும் கடைப்பிடித்து வருகின்றோம்.
கோழிப்பண்ணைகளுக்கு வரும் வாகனங்கள் அனைத்திற்கும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.
வேலைக்கு வரும் நபர்கள் கிருமி நாசினி மருந்து கொண்டு கை, கால்களை சுத்தம் செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். கோழிப் பண்ணைகளில் கோழிகளுக்கும், பண்ணைகளுக்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்திலிருந்து முட்டைகள் வழக்கமாக அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் இதுவரை எந்தவிதமான முட்டை தேக்கம் இல்லை” எனத் தெரிவித்தனர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியம் முட்டைகளை நன்கு வேகவைத்து சாப்பிடுங்கள்.அரைவேக்காடு,கால்வேக்காடு பச்சை முட்டை குடிப்பதை தவிருங்கள்.பறவை காய்ச்சல் அதன்மூலம் பரவுவதை தவிர்க்கலாம்.
கோழி இறைச்சியை மஞ்சள் தடவி நன்கு வேகவைத்தப்பின் உண்வது நல்லதுதான்.எனினும் நபறவை காய்ஞ்சல் பயம் இருப்பதால் கோழியை முன்எச்சரிக்கையாக தவிர்ப்பது மிக நன்று என அறிவுறுத்தி உள்ளார்.
சர்வே எடுக்கதான் போனோங்க!
ஆனா சர்ஙே எடுகப் போகலைங்க.!!


