வேகமாக முன்னேறும்
தமிழ்நாட்டுபொருளாதாரஆய்வறிக்கை
ஜெயரஞ்சன்வெளியிட்டார்!
தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் வேளாண் செய்பவர்கள் 25% பேர் மட்டுமே உள்ளனர், வளர்ந்த நாடுகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வேளாண் செய்பவர்கள் இருக்கிறார்கள் என்று ஜெயரஞ்சன் தெரிவித்து உள்ளனர்.மேலும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது;
தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது.
மின்னணு சாதன பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு பிரமாண்ட வளர்ச்சியை அடைந்துள்ளது; உலகம் முழுவதும் தோல் அல்லாத காலணிக்கு ஒரு தேவை உள்ளது, தமிழ்நாட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது, என்று கூறி உள்ளார்.
இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் சுமார் 26% பங்களிப்புடன், தமிழ்நாடு நாட்டின் மின்னணு வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது.
இம்மாநிலத்தின் மின்னணு ஏற்றுமதி மதிப்பு $14.65 பில்லியன் ஆகும்.
2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 41.23% பங்களிப்புடன், தமிழ்நாடு நாட்டின் முதன்மையான மின்னணு ஏற்றுமதி மாநிலமாகத் திகழ்கிறது.
உலகளாவிய அளவில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன.
நீண்டகாலமாகவே மின்னணு உற்பத்தி மையமாகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு, தற்போது தனது விரிவான செமிகண்டக்டர் திட்டம் 2030 மூலம் செமிகண்டக்டர் துறையிலும் தலைமையாக உயரத் தயாராகி வருகிறது.
இதன் மூலம் மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் மீண்டும் தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்தது உள்ளது. கர்நாடகா 4.95 பில்லியன் டாலர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா முறையே 3.78 பில்லியன் டாலர் மற்றும் 2.72 பில்லியன் டாலர்களைப் பதிவு செய்துள்ளது.
2024 டிசம்பரில், தமிழ்நாட்டின் ஏற்றுமதி நவம்பரில் $1.534 பில்லியனில் இருந்து 1.524 பில்லியன் டாலராக சிறிது சரிவைக் கண்டது, ஆனாலும் மாநிலம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
ஏற்கனவே கடந்த 2023-24 நிதியாண்டில் 32.84% மொத்த பங்குடன் 9.56 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 1.86 பில்லியனாக இருந்தது.
இது தமிழ்நாடு ஏற்றுமதியின் எண்ணிக்கை இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 39% ஆகும்.
அதே காலகட்டத்தில் இந்தியாவில் மொத்தமாக செய்யப்பட்ட மின்னணு ஏற்றுமதியை $16.48 பில்லியன் ஆகும்.
கடந்த வருடம் ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில் மட்டும் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 90% சதவிகித மின்னணு ஏற்றுமதியை தமிழ்நாடு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இருந்து தமிழ்நாடு அதன் சாதனையை இந்த வருடம் முறியடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா போல அல்லாமல் தமிழ்நாடு இந்த துறையில் அடித்து ஆட தொடங்கி உள்ளது.
ஏற்கனவே பல ஆப்பிள் சுற்றுச்சூழல் உதிரி பாகங்கள் சப்ளையர்களைக் கொண்டுள்ள தமிழ்நாடு, மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டத்தை ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம், ரூ.30,000 கோடி முதலீடுகளை ஈர்த்து, சுமார் 60,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நம்பிகையிழந்துபோன
ஓம் பிர்லா?
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு வரும் மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 12ஆம் தேதி நிறைவடைந்தது.
இதில் ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதிய புத்தகக் குறிப்புகள், அமெரிக்க வர்த்தகப் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பிரதமரின் பதிலுரை இன்றி நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடியைத் தாக்க காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சதி செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து, ஓம் பிர்லாவுக்கு எதிராக 118 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு தொடங்கும் மார்ச் 9ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்காவிட்டால் அவர்களுக்குத்தான் நஷ்டம் எனக் கூறிய கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என்றார்.
சாஹேப் பால்கே
🎬 இந்தியத் திரையுலகின் தந்தை, தாதாசாஹேப் பால்கே 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பிறந்தார்.
இவரின் இயற்பெயர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே.
🎬 பன்முகத்திறன் கொண்ட இவர், திரைப்படம் எடுப்பதை தன் லட்சியமாக வகுத்துக்கொண்டார்.
சினிமா பற்றி தெரிந்தவர், இவர் ஒருவர்தான் என்பதால் எழுத்து, இயக்கம், கேமரா என எல்லாவற்றையும் இவரே மேற்கொண்டார்.
🎬 1913ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிச்சந்திராவை வெளியிட்டார்.
இதன்மூலம் இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்திய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனியை தொடங்கினார்.
🎬 தனது சினிமா வாழ்க்கையில் மோஹினி பஸ்மாசுர், சத்யவான் சாவித்ரி, லங்கா தஹன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மற்றும் சில குறும்படங்களை தயாரித்துள்ளார்.
🎬 வாழ்நாள் முழுவதையும் திரைப்படத்துறைக்காகவே அர்ப்பணித்த இவர் 73வது வயதில் 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி மறைந்தார்.
இவரது நினைவைப் போற்றும் வகையில், திரைத்துறையில் தாதாசாஹேப் பால்கே விருதினை இந்திய அரசு, 1969ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.





