வரலாற்று நிகழ்வு!

 சென்னை கன்னிமாரா நூலகத்தில் ரூ.85 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கார்ல் மார்க்ஸ் சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்தது உறுதியானது. பரவலை தடுக்க புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

வி.எஸ் அச்சுதானந்தனுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை வாங்க மாட்டோம்: மகன் அருண்குமார் முகநூலில் தகவல்

 வருமானத்தை மறைத்த வழக்கு 1.10 அபராதம்.வருமான வரித்துறை நோட்டீஸுக்கு எதிராக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு. இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

சேலத்தில் வரும் 13-ஆம் தேதி நடிகர்விஜய் நிகழ்ச்சிக்கு சிக்கல். நீதிமன்ற உத்தரவுப்படி உரிய ஆவணங்களுடன் இன்றைக்குள் விண்ணப்பிக்க போலீசார் கெடு.

தேமுதிக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு விநியோகம். 234 தொகுதிகளுக்கும் விருப்பமனு அளிக்கலாம் என பிரேமலதா அறிவிப்பு.

ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை செலுத்தாவிட்டால் சொத்துக்கள் ஏலம் விடப்படும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபா, தீபக் தொடர்ந்த வழக்கில், வருமான வரித்துறை தகவல்.
எதிர்க்கட்சிகள் மீது சவக்குழி குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் முன்வைக்கும் பிரதமர் மோடி. உத்தரப் பிரதேசம், கர்நாடக தேர்தல் பிரச்சாரங்களில் பேசியதையே மாநிலங்களவையிலும் பேச்சு.
கேள்விகளைக் கண்டு பிரதமர் மோடி அஞ்சுவது ஏன் என ராகுல் காந்தி கேள்வி. உண்மைகளை கண்டு அஞ்சி, பொய்களிடம் பிரதமர் தஞ்சமடைந்து விட்டதாகவும் விமர்சனம்.
பெண் எம்.பி.க்கள் மீதான சபாநாயகரின் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம். சபாநாயகரின் பின்னால் பிரதமர் மோடி ஒளிந்து கொண்டிருப்பதாக பிரியங்கா காந்தி காட்டம்.
மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து. 18 தொழிலாளர்கள் உயிரிழப்பு, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தீவிரம்.
ஸ்பெயினில் 78 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் பாதிப்பு. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் தவிப்பு.
மணிப்பூரில் புதிதாக பதவியேற்ற பாஜக அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்.
சென்னையில் பல்வேறு இடங்களில் திடீரென உயிரிழந்த காகங்கள்.. சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு 
"ராயபுரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன்" - ஜெயக்குமார் உறுதி
கல்விநிதி, ஜல் ஜீவன் திட்டத்திற்கான நிதி, பேரிடர் நிவாரணத் தொகை, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதி ரத்து, மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க முயற்சிப்பது என மனசாட்சியே இல்லாமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பிரதமர் மோடியும், பாஜகவுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த பத்து தோல்வி பழனிசாமியும் தமிழ்நாட்டு மக்களிடம் உள்ள கேள்விகளுக்கு பதில் அளிப்பார்களா? அதற்கு தெம்பு, திராணி இருக்கிறதா?-தி.மு.க.அறிக்கை.

மக்களவைக்கு வராமல் ஒளிந்து கொண்ட மோடி பதிலுரை இல்லாமலேயே நிறைவேறிய நன்றி தெரிவிக்கும் தீர்மானம்!

பிரதமர் மோடி அவைக்கு வராத தால், அவரது பதிலுரை இல்லாம லேயே, மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அவலம் அரங்கேறியது.

 குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி புதன்கிழமை மாலை 5 மணிக்கு பதிலளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக் காததுடன், சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் நடத்திய போராட்டம் காரணமாக, பிரதமர் மோடி மக்களவையிலிருந்து வெளியேறினார். எனினும் அவர் வியாழக்கிழமை யன்று பதிலளிப்பார் என எதிர்பார்க் கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி மக்களவைக்கு வரவில்லை. இது பற்றி கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “பதில் சொல்வதற்குப் பயந்து தான், பிரதமர் மோடி அவைக்கு வருவதைத் தவிர்த்து விட்டார்!” என குற்றம் சாட்டினார். அதற்குப் பதிலளித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “பிரதமர் மோடியை அவைக்கு வர வேண்டாம் என்று நான்தான் கூறினேன்” என்று தெரிவித்தார். 

மேலும், ‘”பிரதமர் பதில் சொல்லும்போது அவரது இருக்கை அருகில் விரும்பத்தகாத செயலில் ஈடுபட காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்ட மிட்டிருந்தனர். 

எதிர்க்கட்சிகளின் செயலை தவிர்க்கவே, நான் பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொண்டேன். எஸ். ஜோதி மணி, ஆர். சுதா உள்ளிட்ட 6 காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் பிரதமரை முற்றுகையிட திட்டமிட்டிருந்தனர்” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

 சபாநாயகரின் பேச்சுக்கு ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், சீன விவகாரம் குறித்து நரவனே-யின் புத்தக வாக்குமூலம் ஆகியவற்றை திசைத்திருப்பவே சபாநாயகர் இவ்வாறு சர்ச்சையைக் கிளப்புவதாக குற்றம் சாட்டினர். 

“பிரதமரைத் தாக்க முயற்சித்ததாக சபாநாயகர் கூறுவது அப்பட்டமான பொய். சபாநாயகர் ஓம் பிர்லாவை பொய் பேச வைக்கிறது பாஜக அரசு!” என்றும் தெரிவித்தனர். 

இதனிடையே, மக்களவையைப் புறக்கணித்த பிரதமர் மோடி, மாலையில் மாநிலங்களவைக்குச் சென்றார். 

ஆனால், அங்கும் எதிர்க் கட்சிகள் தங்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பிய நிலையில், அவற்றைக் கண்டும் காணாதது போல, “தேச நலன், அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கான அறிவிப்புகள் குடியரசுத் தலைவர் உரையில் உள்ளன. உலக நாடுகளின் பிரச்சனைகளையே தீர்க்கும் அளவிற்கு வலிமைமிக்க நாடாக இந்தியா விளங்குகிறது; 

உலக பொரு ளாதாரத்தில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். 9 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள் ளோம்” என்று குடியரசுத் தலைவர் உரை தொடர்பான விவாதம் மீது ஒப்புக்கு பதிலுரை ஆற்றினார். 

முன்னதாக மக்களவை 2 முறை  ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங் களவையிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் வெளிநடப்பு செய்தனர்.


"மாமேதை மார்க்ஸி"ன் சிலை  வரலாற்று நிகழ்வு!

மாமேதை காரல் மார்க்சின் 9 அடி உயரச் சிலையை, சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பதை, இது  ஒரு வரலாற்று நிகழ்வு என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள் ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு  செய்திக்கட்டுரை ஒன்றையும் வெளி யிட்டுள்ளது. அது வருமாறு:  சென்னையின் எழும்பூர் அருங் காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள கன்னிமாரா பொது நூலகத்தில், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாமேதை காரல் மார்க்ஸின் திருவுருவச் சிலையினைத் திறந்து வைத்துச் சிறப்பிக்கும் வரலாற்று நிகழ்வு 2026 பிப்ரவரி 6 அன்று காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.  

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூபாய் 85 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள இந்தச் சிலை, உலகத் தொழிலாளர்களின் சிந்த னைக்கு வழிகாட்டிய மாபெரும் சிந்தனையாளரின் நினைவை என்றென்றும் போற்றிடும் அடை யாளமாக விளங்கும். 

ஒரு மேதையின்  பிறப்பும் வளர்ச்சியும் ஜெர்மனி நாட்டின் பருசியாவில் அமைந்துள்ள ட்ரையர் நகரில் 1818 மே 5 அன்று காரல் மார்க்ஸ் அவர்கள் பிறந்தார். ஜெர்மானிய தத்துவஞானி, புரட்சிகர, பொருளாதார நிபுணர் மற்றும் வரலாற்றாசிரியர் என பன்முக ஆளுமை கொண்டவராக விளங்கிய அவர், பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் மெய்யியல் ஆகிய துறைகளில் கற்றறிந்தார்.  

1841 ஆம் ஆண்டில் யெனா  பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக் கான முனைவர் பட்டம் பெற்ற மார்க்ஸ்,  சில காலம் இதழியல் துறையில் பணி புரிந்தார். அவரது தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக ஜெர்மனியை விட்டு வெளியேறி பாரிசு நகரம் சென்றார். சிந்தனைச் செல்வத்தின் தொடக்கம் 1847-ஆம் ஆண்டில் மார்க்ஸ், ‘தத்துவத்தின் வறுமை’ என்னும் தனது முதல் நூலை வெளியிட்டார். 

இது அவரது அறிவுசார் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.  பின்னர், 1848-ஆம் ஆண்டு பிரெடரிக் ஏங்கல்சுடன் இணைந்து “பொதுவுடைமை அறிக்கை” என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க நூலை வெளி யிட்டார். ஒரு தொழிலாளி ஏன் தொழி லாளியாக, மேலும் மேலும் ஏழையா கிறார், ஒரு முதலாளி மேலும் மேலும் பணம் சேர்த்து ஏன் பணக்காரராகிறார் என்பதை அறிவியல் பூர்வமாக இந்நூலில் விளக்கி எடுத்துரைத்தார். 

உலகத் தொழிலாளர்கள் அனைவரது மனத்திலும் மார்க்ஸுக்கென்று ஓர் நிரந்தர இடத்தை இந்நூல் அவருக்கு உருவாக்கிப் பெருமை சேர்த்தது. மூலதனம் - பொருளாதார  சிந்தனையின் உச்சம் 1867-ஆம் ஆண்டு காரல் மார்க்ஸ் அவர்கள் தாஸ் கேபிடல் அல்லது மூலதனம் என்னும் நூலின் முதல் தொகுதியை வெளியிட்டார். 

இன்றைய பொருளாதார அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதை இந்நூலில் விரிவாக விவரித்துள்ளார். பின்னர் அவரது மறைவுக்குப் பின், அவரது மனைவி அவர்களால் மூலதன நூலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுதிகள் வெளியிடப்பட்டன. இந்நூல் பொருளாதார சிந்தனையின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக விளங்குகிறது. 

உயிரோட்டமுள்ள சித்தாந்தங்கள் மாமேதை காரல் மார்க்ஸின், மார்க்ஸிய கோட்பாடுகள் இந்த  மண்ணுலகில் மனிதர்கள் மனிதர் களால் வாழ்வதற்கு வழிகாட்ட முனை யும் ஒரு தத்துவக் கோட்பாடு ஆகும். ‘என்றும் நினைவில் கொள், ஒரு மனித னாகப் பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது’ என்று கூறிய மாமேதை காரல்  மார்க்ஸின் சித்தாந்தங்கள், இன்று வரை உயிர்ப்புடன் இருக்கின்றன. 

உல களவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த மாமேதை 1883 மார்ச் 14 அன்று மறைந்தார். 

ஓராண்டிற்குள் உயிர்பெற்ற  காரல் மார்க்ஸ் சிலையமைப்பு காரல் மார்க்ஸ் பொருளாதாரச் சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகை யிலும்  தமிழ்நாடு முதலமைச்சரால் 2025 ஏப்ரல் 3 அன்று சட்டப்பேரவை யில் விதி 110-இன் கீழ் சென்னையில் அவருக்குப் புதிதாகத் திருவுருவச் சிலை நிறுவப்படும் என அறிவிக்கப் பட்டது. 

அந்த அறிவிப்பின் பயனாகவே இன்று இந்த வரலாற்று நிகழ்வு நடைபெறுகிறது. சிலைத் திறப்பு விழாவுடன், அங்கு சிறப்புப் புகைப்படக் கண்காட்சி  அமைக்கப்பட்டு காரல் மார்க்ஸ் குறித்து காணொலிக் காட்சி திரையிடப்படு கிறது. தலைமுறை தலைமுறைக்கும் சிந்தனைகளை நினைவூட்டும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெரு மக்கள், மேயர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். 

கன்னிமாரா பொது நூலகம் போன்ற அறிவுச் செல்வம் நிரம்பிய இடத்தில் காரல் மார்க்ஸின் திரு வுருவச் சிலை நிறுவப்படுவது மிகவும் பொருத்தமானதாகும். 

அறிவுக்கும் சிந்தனைக்கும் வழிகாட்டிய இந்த மாமேதையின் நினைவை என்றென்றும் போற்றிடும் இந்தச் சிலை, தலைமுறை தலைமுறையாக மக்களுக்கு அவரது சிந்தனைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை