நான்கு தேர்தல்கள்-
காங்கிரசே உருவாக்கும் '4' பிரச்னைகள்?
தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு நீடிப்பதாக கூறப்பட்டாலும், காங்கிரஸ் கருத்து வேறுபாட்டில் ஈடுபட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய நான்கு மாநிலங்களில் வரும் ஏப்ரல்/மே மாத காலகட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இது 2026ம் ஆண்டை வெற்றியுடன் தொடங்க காங்கிரசுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற முழுமையான சட்டமன்ற தேர்தல்களான டெல்லி மற்றும் பீகார் ஆகிய இரண்டு இடங்களிலும் காங்கிரசுக்கு தோல்வியே மிஞ்சியது.எனவே தேசிய அரசியலில் தனக்கான இருப்பிடத்தை உறுதி செய்ய, 4 மாநில தேர்தலில் ஒரு இடத்திலாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது.
கடந்த 2025ம் ஆண்டின் இறுதியில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெற்ற அமோக வெற்றியை தொடர்ந்து, மீண்டும் ஆட்சி அமைக்கும் நம்பிக்கையில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அளவிலான தேர்தலில், அக்கட்சி தலைமையிலான கூட்டணி 38 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆளுங்கட்சியான திமுக உடன் காங்கிரஸ் வலுவான கூட்டணி அமைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியை வசப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் காங்கிரசுக்கும் கணிசமான தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, மாநிலத்தில் கால் பதிக்க முயலும் பாஜகவின் முயற்சிக்கு மீண்டும் முட்டுக்கட்டை போடப்படும் எனவும் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
மேற்குவங்கத்தில் மீண்டும் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. ஆனால், ஆளுங்கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை சமாளிப்பது என்பது காங்கிரசுக்கு மிகப்பெரிய சவாலாக கருதப்படுகிறது.
கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட 91 தொகுதிகளிலும் தோல்வியுற்றதோடு, கட்சி வாக்குகளில் 9.32 சதவிகிதம் சரிவையும் கண்டது.
அசாமில் தற்போதைய சூழலில் காங்கிரசுக்கு வெற்றிக்கான வாய்ப்பு இல்லை எனவும், ஆனால் கடந்த தேர்தலில் அதன் கூட்டணி வென்ற 29 இடங்களை தக்கவைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
அந்த தொகுதிகளை வென்று வலுவான அடித்தளத்தை கட்டமைத்தால் மட்டுமே, 2031 தேர்தலிலாவது பாஜகவை வீழ்த்த காங்கிரசுக்கு வாய்ப்புள்ளதாம்.
உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி தந்த உத்வேகத்துடன், 4 முறை எம்.பி., 5 முறை எம்.எல்.ஏவான சென்னிதலா காங்கிரசின் தேர்தல் பரப்புரை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக இவர் பாஜகவிற்கு ஆதரவான கருத்துகளை கூறி கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் வேட்பாளர் என யாரும் இன்றி தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் அறிவித்து இருந்தாலும், மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு தலைவர்களிடையே அதிகார மோதல் நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரும் காங்கிரஸின் நடவடிக்கையால், திமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோரின் பேச்சு அறிவாலயத்தை எரிச்சலூட்ட செய்துள்ளதாம்.
அவர்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இருகட்சி இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டு தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுமுனையில் திமுகவின் கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மாநிலத்தில் பாஜகவை காட்டிலும் வலுவாகவே உள்ளது.
மத அரசியல் போன்ற பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டில் வலுவாக காலூன்ற முடியாமல் பாஜக தடுமாறி வருகிறது.
அசாமில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் புபேன் போரா மற்றும் அவரது இடத்திற்கு புதியதாக வந்துள்ள கவுரவ் கோகாய் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
ராகுல் காந்தி உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாஜகவிற்கு செல்லும் முடிவை போரா கைவிட்டு இருந்தாலும், அது நிலையான முடிவாக இருக்குமா என நம்பமுடியவில்லை. ஒருவேளை தேர்தலுக்கு முன்னதாக அவர் கட்சியில் இருந்து விலகினால், அது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சி அமைக்க முயன்று வரும் திரிணாமுல் காங்கிரசுக்கும், கடந்த தேர்தல் மூலம் மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவிற்கும் இடையே தான், இந்த தேர்தலில் நேரடி போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
அதோடு காங்கிரஸ் போட்டியிலேயே இல்லை எனவும் உள்ளூர் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2024ம் ஆண்டு ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த கட்சியின் குமாரி செல்ஜா மற்றும் பூபேந்திர சிங் ஹுடா இடையே நிலவிய மோதல் வெற்றியை பாஜகவிற்கு பரிசளித்தது.
சத்தீஸ்கரிலும் பூபேஷ் பாகல் மற்றும் டிஎஸ் சிங் தியோ இடையேயான மோதலால் காங்கிரஸ் தோல்வியை கண்டது.
ராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் இடையேயான மோதலும், காங்கிரசின் உட்கட்சி மோதலுக்கு மற்றொரு சாட்சியாகும்.
எனவே, 2026ம் ஆண்டின் முதல் பாதியில் நடைபெற உள்ல தேர்தலில் காங்கிரஸ் குறைந்தபட்சம் இரண்டு மாநிலங்களிலாவது வலுவான வெற்றியை பதிவு செய்ய, உட்கட்சி மோதலை தணித்து, கூட்டணி கட்சிகளுடன் சுமூகமான உறவை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அரசமைப்பு சட்ட அவமதிப்பு: நீளும் ஆளுநர்கள் பட்டியல்
பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்க ளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் தயாரித்துக் கொடுக்கும் ஆளுநர் உரையை சட்டமன்றங்களில் வாசிக்க மறுக்கும் ஆளுநர்களின் அடாவடிப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
ஏற்கெனவே இந்த ஆண்டின் துவக்கத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநில ஆளுநர்கள் அத்தகைய அரசமைப்புச் சட்ட விரோத காரியங்களில் ஈடு பட்டனர்.
தற்போது அந்த வரிசையில் இமாச்ச லப் பிரதேச ஆளுநர் சிவபிரதாப் சுக்லாவும் இணைந்து தனது அரசமைப்புச் சட்டக் கடமையை மீறியுள்ளார்.
மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடுவதும், நீதிமன்றம் தலையிட்ட பின் திருப்பி அனுப்பு வதும் மறுபடியும் நிறைவேற்றி அனுப்பினால் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பதுமாக போட்டி அரசாங்கத்தையே நடத்தி வருகின்றனர்.
உச்சநீதிமன்றம் ஆளு நர்கள் மாநில அமைச்சரவையில் பரிந்துரைப் படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே அரச மைப்புச் சட்டக் கடமை என்றும் அவருக்கு தனிப்பட்ட அதிகாரம் ஏதுமில்லை என்று கூறியும் முன்போலவே நடந்து கொள்கின்றனர். ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும் மரபு தற்போது ஆளு நர்களால் மீறப்படுகிறது. எதிர்க்கட்சியினர் வெளிநடப்புச் செய்வது போல் ஆளுநர்கள் வெளிநடப்புச் செய்கிறார்கள்.
ஆளுநர் உரையை திருத்தி வாசிக்கிறார்கள் அல்லது படிக்க மறுக்கிறார்கள். அவைக்கு வந்த வேகத்திலேயே திரும்பிச் செல்கிறார்கள்.
உரைக்கு மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிடுகிறார்கள். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தாண்டில் தொடங்கி வைக்க கேரள ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தொடர, கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பின்தொடர்ந்தார்.
இவர்கள் ஒன்றிய அரசை விமர்சிக்கும் பகுதிகளை வாசிக்க மறுத்தனர்.
இவை ஜனவரி மாதத்தில் நடந்தவை என்றால் தற்போது இமாச்சல் மாநில காங்கிரஸ் அமைச்சரவை தயாரித்துக் கொடுத்த உரையை 2 நிமிடங்கள் மட்டுமே வாசித்துவிட்டு உரையின் 3 முதல் 16 வரையுள்ள பத்திகளை வாசிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இமாச்சலப் பிரதேச மாநில வரலாற்றில் ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் தவிர்த்தது இதுவே முதல் முறை. இப்படித்தான் அரசமைப்புச் சட்டத்தையும் உச்சநீதிமன்றத்தையும் அவ மதிப்பதில் பாஜக அரசு நியமித்த ஆளுநர்கள் புதிய புதிய வரலாறு படைக்கின்றனர்.
ஒருவர் 3 நிமிடம் என்றால் மற்றவர் 2 நிமிடம் என்று ஒருவரது சாதனையை ஒருவர் முறிய டிக்கின்றனர். ஆனால் இவர்களுக்கும் இவர்க ளது எஜமானர்களுக்கும் நாட்டு மக்கள் நல்ல பாடம் கற்பிப்பது உறுதி.









