காந்தி வேலை?

 தி.மு.க கூட்டணியை உடைத்து நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கும் முயற்சியில் சில காங்கிரசார் தீவிரமாக இறங்கிடக் காரணம்,மூலம்,விதை போட்டு வளர்க்கும் நபர் வேறு யாரும் இல்லை .பப்பு ராகுல்தான்.

பீகாரில் தேஜஸ்வியை முதல்வராகவிடாமல் தடுத்து கடைசிவரை கூட்டணியை உருவாக்கவிடாமல் சீரழித்து நிதீசை மீண்டும் முதல்வராக்கிய புண்ணியவானும் ராகுல்தான்.

தேஜஸ்வ்வி கட்சி வெல்லக்கூடிய தொகுதிகள் அறுபதை விடாப்பிடியாக சண்டையிட்டு வாங்கி ஐந்தில் மட்டும் வென்று அவரை நடுத்தெருவில் புலம்புவைத்தவரும் ராகுலேதான்.

இந்தியா கூட்டணி உருவானதும் அதில் சேர்ந்தவர்க்களை ஒவ்வொருவரக ஓடவைத்தவரும்,வைத்துக் கொண்டு இருப்பவரும் ராகுலே தான்.

தற்போது தனது சகுனித் தனத்தை மு.க.ஸ்டாலினிடம் தி.மு.க விடம் காட்டுகிறார்.


மாணிக் தாகூர்,ஜோதிமணி,பிரவின் சக்கரவர்த்தி மீண்டும்,மீண்டும் 'ஆட்சியில் பங்கு 'பேச்சுகள் மூலம் ஊகித்துக் கொண்ட ஸ்டாலின். ஊகம் சரியா என சரிபார்க்கவே கனிமொழியை ராகுலை சந்திக்கவைத்தார்.

அதில் ராகுலின் உண்மை உருவத்தை. அல்லது மறுபக்கத்தைக் கண்டு கொண்டார்.

தன்கட்சி இருமாநிலத்தில் மட்டும் ஆட்சியில் இருப்பதால் போதிய வருமானம் இல்லை.கட்சி நடத்த,தேர்தல் செலவுகளைக் கவணிக்க முடியவில்லை.

ஆட்சியில் இருக்கும் தி.மு.க உதவுவதில்லை என கூறியிருக்கிறார்.

சென்ற காங்' கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்களிடம் கேட்டும் பயனில்லை.தயாநிதி உ.பி,தேர்தல்போது சிறிதுதான் உதவினார்.

டி.ஆர்.பாலு,ஆ.ராசா கண்டுகொள்ளவில்லை.ஆட்சியில் பங்குதந்தால் ஏதாவது சம்பாதிக்கலாம்.எனக் கூறி கனிமொழியை அசரவைத்திருக்கிறார்.

அதைக் கேட்ட பின்தான் ஆட்சியில் பங்கு ஒத்துவராது என அடித்துக் கூறியிருக்கிறார்.


இந்தியா கூட்டணியைப் பலப்படுத்தி ராகுல் காந்தியை பிரதமர் என்றவர் மு.க.ஸ்டாலின்.


ஆனால் ராகுல்காந்தியோ காந்தி'விடுதலை பெற்றப்பின் காங்கிரசை  கலைத்துவிடுங்கள் என்பதை செயல்படுத்தும நோக்கில் செயல்படுகிறார்.


ஆனால் தற்போது நிலை வேறாகிவிட்டது.

காங்கிரசை தலை எழுத்து என வெற்றி பெற உழைத்த தி.மு.க. தொண்டர்கள் சில காங்கிரசார் பேச்சால் வெறுப்படைந்து போய் உள்ளனர்.

இனி கூட்டணி என்றாலும் உள்ளார்ந்த நிலையில் வேலை செய்ய வாய்ப்பில்லை.

பீகார்,ஒரிசா போல காங்' தோல்வி நிச்சயம்.அதனால் தி.மு.க. கூட்டணி எதிர்பார்த்த பெரு வெற்றி உறுதியில்லை.

காங்' நடிகர் விஜய் கட்சியுடனே கூட்டணி வைப்பதே நல்லது.

தி.மு.க, விற்குத்தான்.

தேவையற்ற பாவ மூட்டையை ஏன் சுமக்க வேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை