டாஸ்மாக் ஊழியர்களின்
அவல நிலை!
டாஸ்மாக் ஊழியர்களின் பணியிட பரிதாபநிலையும்,வாழ்வின் அவலநிலையும்தான் தற்போது அவர்களை போராட வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது.
ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் வெறும் நாலாயிரம் ரூபாய் ஊதியத்தில் பணிக்கு முதன் முதலில் வேலைக்கு சேர்ந்தவர்கள்தான் டாஸ்மாக் ஊழியர்கள் அதுவரை தனியாரிடம் இருந்த மதுக்கடைகளை தமிழ்நாடு அரசே நடத்த ஆரம்பித்ததால் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டனர். கடைக்கு நான்குபேர்,கண்காணிப்பாள் ஒருவர் என எடுக்கப்பட்டனர்.ஜெயலலிதா ஆட்சியில் மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
பின் சில இடங்களில் மக்கள் பலத்த எதிர்ப்பால் கடைகள் மூடப்பட்டன.
ஆனால் கடைப்பணியாளர்கள் வேலை இழப்பை தவிர்க்க மற்ற கடைகளில் அதிகமாக பிரித்து பணிக்கமர்த்தப்பட்டனர்.
இப்போது ஒன்பது,பத்துபேர் உள்ள கடைகள் அதிகமாக உள்ளது.
இதனால் இருவர் ,இருவராக மாற்றிப் பணிபுரிவது அவர்களாக முறைவைத்து வேலைப்பார்க்கஆரம்பித்தனர்.
மற்றவர்கள்தங்கள் சொந்த வேலைகளைப் பார்ப்பதுடன் ஊர்சுற்ற ஆரம்பித்தனர்.பலர் சுயமாக தொழில்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
டாஸ்மாக் கடை நடப்பதில் பிரச்னை இல்லாமலிருப்பதால் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
எப்படி மற்றவர்கள் அதைக் கண்டு கொள்வதில்லை என கேள்வி எழலாம்.
கடைக்கு வந்தால் கிடைக்கின்ற ஒரு பாட்டிலுக்கு அதிகப்படியான பத்துரூபாய்,(அது இவர்களுக்குத்தான்.செந்தில் பாலாஜிக்கெல்லாம் கிடையாது)இதர அதிகப்படி வருவாய்களில் பங்கு கிடையாது என்பது மட்டும் இழப்பு.மற்றபடி வராத நாட்களுக்கு மொத்தமாக கையெழுத்து போடலாம்.விடுப்பு கணக்கில் வராது.
அதை மற்றவர் கண்டுகொள்வதில்லை.
இன்று சொந்தமாக பெரிய பைக்.இருசக்கரவாகனம் இல்லாத டாஸ்மாக் ஊழியர் கிடையாது.
தற்போதைய சம்பளம் குறைவு என்றாலும் டாஸ்மாக் வருமானம் மூலம். சொந்தமாக புதிதாக வீடு கட்டாத டாஸ்மாக் ஊழியரைப் பார்ப்பதரிது.சிலர் இரண்டு வீடு கூட கட்டியுள்ளனர்.
இது தவிர மதுபான உற்பத்தி நிறுவனங்கள்தங்கள் தயாரிப்புகளை முன்னுரிமை கொடுத்து வாங்குபவர்களுக்கு வாங்கிய சரக்குகளுக்கு ஏற்பகையூட்டுப் பணம் மாதா,மாதம் கொடுக்கிறது.இது கடைக்க ஐம்பதாயிரம் வரை கிடைக்கிறது.ஆக பெரும்பாலான ஊழியர்கள் தற்போது பிட் காயின்,பங்கு சந்தைகளில் இயங்குகிறார்கள்.சிலர் வட்டிக்கு கொடுப்பது என பணத்தை முதலீடு செய்கிறார்கள்.
குழந்தைகள படிக்க வைப்பது அரசு ஊழியர்கள் கூட சேர்க்கத் தயங்கும் பணக்காரப் பள்ளிகளில்தான்.ஒரு டாஸ்மாக் ஊழியர் தன்மகன் படிக்கும் பள்ளிக்கு ஆண்டுக்கு இரண்டு லட்சம் கட்டுவதாகவும் படிப்பு ஏறவில்லை வேறு நல்லபள்ளியில் மகனை சேர்க்க வேண்டும் என்றும் வருந்தினார்.இதே நிலைதானபிற டாஸ்மாக் ஊழியரின் பரிதாப நிலை.
குறைந்தது நாலு ஊழியர்கள் ஒரு கண்காணிப்பாளர் என ஐந்து பேர் உள்ள கடைகளில் ஒருவரை காலி பாட்டில் பராமரிக்க ஒதுக்கலாமே.வேலை பார்க்காமலே வளர்ந்து விட்டவர்களை திடீர் என வேலைபார்க்கச் சொன்னால் எப்படி?
அப்படி திட்டம் வந்தால் பணியாளர்களை அப்படியே தங்கள் கடை ஊழியர்களாக மாற்றிக்கொள்ளவேண்டும் என வற்புறுத்தி பணியிடம் உறுதி செய்து வருவதாகவும்.யாருக்கும் வாழ்வாதாரம் பாதிப்பு வராது எனவும் தெரிகிறது.
எப்படியோ அவர்கள் கோரிக்கை அதன்மூலம் நிறைவேறிவிடும் எனத் தெரிகிறது.


