கூட்டணி தர்மம்
விருதுநகர் மாவட்டம் - அருப்புக்கோட்டை அருகே திமுக இளைஞரணியின் தென்மண்டல மாநாடு. இன்று மாலை நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.
வருமான வரித்துறை விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும். விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
காவலர் தேர்வில் அந்தயூரில் அண்ணன் தேர்ச்சி தோல்வியால் விரக்தி தம்பி தற்கொலை.
தாம்பரம் புறநகர் பகுதியில் கடுமையான பனி மூட்டம்; முகப்பு விளக்குளை பயன்படுத்தி செல்லும் வாகனங்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு லட்டு தயாரிக்க வழங்கிய நெய்யில் கழிவறை சுத்தம் செய்யும் ரசாயனம்: ஆந்திரமுதல்வர்சந்திரபாபுகுற்றச்சாட்டு
சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதன் எதிரொலி.நாமக்கல் கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.கோழி விலை வீழ்ச்சி.



பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் 69 பேர் உயிரிழப்பு, 150-ற்கும் மேற்பட்டோர் படுகாயம்.
நான் முதல்வராக வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள்: கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவகுமார்.
பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை முழுமையாகத் தடுத்து நிறுத்தப் போவதாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் வி.சோமண்ணா பேச்சு.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் பேரணி கூட்ட நெரிசலில் 2 பேர் பலி.
என் பெயர் மோடி.. என் பணி சரணடைந்து கிடப்பதே.. காங்கிரஸ் நையாண்டி.
இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில், “என் பெயர் மோடி, என் பணி சரணடைந்து கிடப்பதே” என காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி விட்டதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்தாலும், அதுபற்றி ஒன்றிய அரசு எதையும் சொல்லாமல் மவுனம் காக்கிறது.
இருப்பினும், ரஷ்ய எண்ணெய் வாங்கியதை நிறுத்திய இந்தியா மீது விதித்த 25 சதவீத அபராத வரியை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. அதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையையும் வௌ்ளை மாளிகை நேற்று வௌியிட்டது. இந்நிலையில் அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த கூட்டறிக்கை வௌியானதன் மூலம் ஒன்று தௌிவாகி உள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறதா, இல்லையா என்பதை இப்போது அமெரிக்கா கண்காணிக்கும். இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து தனியாக எண்ணெய் இறக்குமதி செய்யாது.
இந்தியா நேரடியாகவோ, மறைமுகமாகவோ ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா அறிந்தால், உடனே 25 சதவீத அபராத வரியை விதித்து விடும். இதனை மோடி அரசும் ஏற்று கொண்டுள்ளது. என் பெயர் நரேந்திர மோடி. என் பணி சரணடைந்து கிடப்பதே” என காட்டமாக விமர்சித்துள்ளார்.
31 ஆண்டு பழைய வழக்கில் பீகார் சுயேட்சை எம்பி பப்பு யாதவ் கைது
காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் கனிமொழி சந்திப்பு நடத்தி 10 நாட்களாகிவிட்ட சூழலில், இன்னும் கூட்டணி இறுதி செய்யப்படாமல் உள்ளது.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் தொடர்பான சர்வே ரிப்போர்ட் ஒன்றையும் திமுக தயார் செய்திருக்கிறது. இதனால் திமுக தலைமை தொகுதி பங்கீட்டில் தெளிவாக காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிட்ட சூழலில், திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான இழுபறி நீடித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் கூட்டணி இறுதி செய்யப்படாத சூழலில், இரு தரப்பிலும் ஒவ்வொரு நாளும் வார்த்தை மோதல் அதிகரித்து வருகிறது. இதனிடையே திமுக தரப்பில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவே அமைக்கப்படவில்லை.
"விஜய்யை பார்த்து ரேம்ப் வாக் அமைத்தோமா.. கொஞ்சம் 2021 திருச்சி மாநாட்டை பாருங்க.. தவெகவுக்கு பதிலடி!
அதேபோல் சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியை உறுதி செய்வதற்காக மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து திமுக எம்பி கனிமொழி சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த சந்திப்பின் போது திமுக தலைமையின் கருத்துக்களை ராகுல் காந்தியிடம் பரிமாறி இருக்கிறார்.
ராகுல் காந்தி தரப்பில் சில கணக்குகள் சொல்லப்பட்டுள்ளன. இதனை திமுக தலைமையிடமும் கனிமொழி கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு நடந்து 10 நாட்களாகிவிட்ட சூழலில், கூட்டணியை இறுதி செய்யாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் செயல்பாடுகள் தொடர்பாக திமுக தரப்பில் தனியாக ஒரு சர்வே எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
அந்த சர்வேயின் முடிவில் 12 பேரின் செயல்பாடுகள் பெரியளவில் இல்லை.. அவர்களுக்கு மீண்டும் சீட் கொடுத்தால், நிச்சயம் அங்கு அதிமுக கூட்டணியே வெல்லும் என்று தெரிய வந்துள்ளது.
இதனால் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீட்டில் திமுக தலைமை கறாராக இருக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டால் 2 தொகுதிகள் கூடுதலாக ஒதுக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஒரு எம்பிக்கு 3 தொகுதிகள் வீதம் காங்கிரஸ் கட்சிக்கு 27 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆட்சியில் பங்கு என்ற பேச்சிற்கு இடமில்லை என்று திமுக தெளிவாக கூறிவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தொடர்பான சர்வே ரிப்போர்ட்டை காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவிடம் காட்டவும் திமுக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
