நீதித்துறையில் நிலவும் ஊழல்”
என்சிஇஆர்டி புத்தகத்தில் “நீதித்துறையில் நிலவும் ஊழல்” குறித்த பாடம்
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) திங்கள் கிழமை வெளியிட்டுள்ள புதிய 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் “நீதித்துறை யில் நிலவும் ஊழல்” மற்றும் வழக்கு களின் பெரும் தேக்கம் உள்ளிட்ட வைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
“நமது சமூகத்தில் நீதித்துறை யின் பங்கு” (The role of the judiciary in our society) என்ற தலைப்பிலான அத்தியாயத்தில், நீதித்துறையின் பல்வேறு நிலைக ளில் நிலவும் ஊழல்; போதிய எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லாமை; சிக்கலான சட்ட நடை முறைகள்; போதிய உள்கட்ட மைப்பு வசதிகள் இல்லாமை ; தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்டவைகளின் தொகுப்புகள் பாடமாக கொடுக்கப் பட்டுள்ளன.
வழக்குகள் தேக்கம் குறிப்பாக, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தோராயமான எண்ணிக்கையை இந்தப் பாடப்புத்தகம் வழங்கி யுள்ளது.
அதில், உச்சநீதிமன்றம் சுமார் 81,000 வழக்குகள் ; உயர்நீதி மன்றங்கள் 62,40,000 வழக்கு கள்; மாவட்ட மற்றும் கீழமை நீதி மன்றங்கள் 4,70,00,000 வழக்கு களை நிலுவையில் வைத்துள்ளன என நீதிமன்றங்களின் செயல்பாடு கள் மந்தமாக உள்ளன என்பது போன்ற கருத்துகளுடன் பாடப் புத்தகத்தில் கொடுக்கப் பட்டுள்ளன.
மேலும், முன்னாள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,”ஊழல் மற்றும் தவறான நடத்தை தொடர்பான நிகழ்வுகள் பொதுமக்களின் நம்பிக்கையை எதிர்மறையாகப் பாதிக்கின்றன.
மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வெளிப்படைத் தன்மையும் பொறுப்புக்கூறலும் இன்றியமையாதவை” என 2025 ஜூலை மாதம் அவர் தெரிவித்த கருத்தை இந்தப் புத்தகம் மேற்கோள் காட்டியுள்ளது.
அதே போல, நீதிபதிகள் அனை வரும் ஒரு குறிப்பிட்ட நடத்தை விதி களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பது புத்தகத்தில் விளக்கப் பட்டுள்ளது. நீதிபதியை எப்படி நீக்குவது? முக்கியமாக, நீதிபதியை எப்படி நீக்குவது என்பது தொடர்பா கவும் பாடப் புத்தகத்தில் விவரிக்கப் பட்டுள்ளது.
மத்திய பொதுக் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் (CPGRAMS) மூலம் 2017 முதல் 2021 வரை 1,600க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள் ளன. கடுமையான புகார்கள் எழுந்தால், முறையான விசார ணைக்கு பிறகு நாடாளுமன்றத்தின் மூலம் ‘பதவி நீக்கத் தீர்மானம்’ கொண்டு வந்து நீதிபதியை நீக்க முடியும் என்று பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, தேர்தல் பத்தி ரங்கள் (அநாமதேய அரசியல் நிதி) தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் ஆன்லைன் பேச்சுரி மை மீதான கட்டுப்பாடுகள் அரசிய லமைப்புக்கு விரோதமானது என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகியவை பாடப் புத்த கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இறுதி யாக வகுப்புவாதத்தை எடுத்துக் காட்டும் வகையில், முகலாய பேரரசர்கள் அக்பர் மற்றும் திப்பு சுல்தான் பெயர்களுக்கு முன்னால் இருந்த ‘மாபெரும்’ என்ற அடைமொழி நீக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னிருந்த 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், நீதித் துறையின் அமைப்பு மற்றும் செயல் பாடுகள் பற்றி மட்டுமே விவ ரிக்கப்பட்டிருந்தது.
“தாமதிக்கப் பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்” என்ற வாசகம் இடம் பெற்றி ருந்ததே தவிர, ‘ஊழல்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இந்திய ஆப்பிள்
சாகுபடிக்கு சாவுமணி!
இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத் தால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்பட மாட் டார்கள் என்றும் விவசாயிகளின் நலன் பாது காக்கப்படும் என்றும் ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடர்ந்து கூறிக் கொண்டேயிருக்கிறார்.
ஆனால் அது உண்மையல்ல என்பது இந்திய விவசாயிகளின் கதறல்கள் மூலம் அம்பலப் பட்டுக் கொண்டேயிருக்கிறது.
இந்திய ஆப்பிள் உற்பத்தியில் ஜம்மு-காஷ்மீர் சுமார் நான்கில் மூன்று பங்கு (70%) என முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து இமாச்சலப் பிரதேசம் கணிசமாக வும் உத்தர்கண்ட், நாகாலாந்து, சிக்கிம், அரு ணாச்சல், தமிழ்நாடு (நீலகிரி) ஆகியவை உள்ளன.
காஷ்மீரில் 7 லட்சம் குடும்பங்கள், 35 லட்சம் பேர் எனவும் இமாச்சலில் 3 லட்சம் பேரும் நேரடி யாகவும் மறைமுகமாகவும் ஆப்பிள் சாகுபடி யில் பங்கேற்கிறார்கள்.
இங்கு அதிக அடர்த்தி சாகுபடி அதிகளவில் இல்லை. வெளி நாடுக ளிலோ அவை அதிகம். இங்கு ஹெக்டேருக்கு 7-8 டன் தான் உற்பத்தி. அங்கு 40-70 டன் வரை மகசூல் கிடைக்கிறது.
குறிப்பாக அமெரிக்கா, நியூசிலாந்து போன்றவற்றில். இங்கு சிறு விவ சாயிகள். அங்கு பண்ணை விவசாயம் அதாவது 50 ஹெக்டேர் அளவுக்கு தோட்டங்கள்.
அமெரிக்கா, அந்நாட்டு விவசாயிகளுக்கு மானியம் அளித்து உற்பத்திச் செலவை ஈடு கட்டுகிறது. ஆனால் இங்கு ஒன்றிய மோடி அரசு, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை யும் நிறைவேற்றவில்லை. கட்டுபடியான விலைக்காக சட்டப்பூர்வ விலை நிர்ணயமும் செய்யவில்லை.
இந்த நிலையில் தற்போது போடப்பட்டிருக்கும் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தப்படி, ஆப்பிள் இறக்குமதி க்கு முந்தைய 50% வரி 25% ஆகக் குறைக்கப் பட்டுவிட்டது. ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத் தில் 20 % ஆக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஆப்பிள்கள் விலை மலிவாக கிடைக்கும் போது நமது ஆப்பிள்களின் கதி என்னவாகும்?
அது மட்டுமின்றி இங்கு சேமிப்புக் கிடங்குகள் அமைப் பது மிக அதிகச் செலவு பிடித்ததாக உள்ளது. காஷ்மீரில் உள்ள 92 கிடங்குகளில் 397.08 லட்சம் டன் தான் சேமிக்க முடியும். எனவே வெளிநாட்டு ஆப்பிள் முற்றுகையை சமாளிக்க நமது விவசா யிகளுக்கு தொழில்நுட்ப உதவி மட்டுமல்லாது வட்டியில்லா கடன் வழங்குவதும் சேமிப்புக் கிடங்கு வசதியை அதிகப்படுத்த முதலீடு செய்வ தும் அவசியம்.
இல்லையெனில் இந்திய ஆப்பிள் விவசாயிகள் கடன் வலையில் சிக்கி தற்கொலை க்குத் தள்ளப்படுவார்கள்.
இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஆப்பிள்கள் விலை மலிவாக கிடைக்கும் போது நமது ஆப்பிள்களின் கதி என்னவாகும்?
அது மட்டுமின்றி இங்கு சேமிப்புக் கிடங்குகள் அமைப் பது மிக அதிகச் செலவு பிடித்ததாக உள்ளது.
காஷ்மீரில் உள்ள 92 கிடங்குகளில் 397.08 லட்சம் டன் தான் சேமிக்க முடியும். எனவே வெளிநாட்டு ஆப்பிள் முற்றுகையை சமாளிக்க நமது விவசா யிகளுக்கு தொழில்நுட்ப உதவி மட்டுமல்லாது வட்டியில்லா கடன் வழங்குவதும் சேமிப்புக் கிடங்கு வசதியை அதிகப்படுத்த முதலீடு செய்வ தும் அவசியம்.
இல்லையெனில் இந்திய ஆப்பிள் விவசாயிகள் கடன் வலையில் சிக்கி தற்கொலை க்குத் தள்ளப்படுவார்கள்.


