வெற்றி விடுக்கும் எச்சரிக்கை

பெண்களின் வங்கிக் கணக்குகளில் அதிகாலையில் வரவு வைக்கப்பட்ட ரூ.5,000. 3 மாத மகளிர் உரிமைத் தொகையுடன், கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ.2,000 வழங்கல்.1.31 கோடி பேரின் வங்கிக் கணக்குகளில், செலுத்தப்பட்ட ரூ.6,550 கோடி. சுதந்திர இந்தியாவில், ஒரே நாளில் செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய மக்கள் நலத் திட்டம் என பொருளாதார வல்லுநர்கள் பாராட்டுஅண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை அதிமுகவினர் மறந்துவிட்டதாக சேலம் கூட்டத்தில் விஜய் பேச்சு. கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு, கொள்ளையடிக்கும் அனுபவம் தனக்கு இல்லை என்றும் காட்டம்.கேள்விகளுக்கு பதில் சொல்வது தான் தலைவரின் கடமை என விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி. பிரச்னையை சந்திக்கும் திறன்கூட விஜய்க்கு இல்லை என்றும் விமர்சனம்.

 5ஆண்டு ஆட்சியில் எவ்வளவு பேருக்கு எந்தெந்த துறைகளில் அரசு வேலை? பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்.
திராவிட மாடல் 2.0 அரசு அமைவதையும் மக்களுக்கு கிடைக்க உள்ள நன்மைகளையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது: அமைச்சர் எஸ். ரகுபதி.
















வெற்றி விடுக்கும் எச்சரிக்கை!

நாடு தழுவிய அளவில் பிப். 12 அன்று நடை பெற்ற அகில இந்திய பொதுவேலைநிறுத்தம், ஒரு சாதாரணப் போராட்டமாக இல்லாமல், உழைக்கும் மக்களின் நலன்களைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய அரசுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகும்.

 சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், யுடியுசி, தொமுச உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயி கள் சங்கங்கள் இணைந்து முன்னெடுத்த இந்த மாபெரும் போராட்டம், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்குப் பணியாத தொழிலா ளர் வர்க்கத்தின் வலிமையை உலகிற்கு பறை சாற்றியுள்ளது.  

முன்னெப்போதும் இல்லாத வகையில் 30 கோடி தொழிலாளர்கள், விவசாயி கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஓரணி யில் திரண்டு, மக்கள் விரோதக் கொள்கைகளு க்கு எதிராக முழங்கிய முழக்கம் தேசத்தையே அதிரச் செய்துள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தின் மூலம் நாட்டின் மிக முக்கியமான துறைகள் அனைத்தும் ஸ்தம்பித்தன. குறிப்பாக, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறையில் கோல் இந்தியா மற்றும் அதன் துணை  நிறுவனங்களில் 83 விழுக்காட்டிற்கும் அதிக மான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். 

தெலுங்கானாவின் சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கங்களில் 90விழுக்காடு தொழி லாளர்கள் பங்கேற்றது, அரசின் தனியார்மய மாக்கல் கொள்கைக்கு எதிராகத் தொழிலா ளர்கள் எவ்வளவு ஆவேசமாக உள்ளனர் என்ப தைக் காட்டுகிறது.

 கேரளா, ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், மே. வங்கம் ஆகிய மாநிலங்களில் நிலக்கரி உற்பத்தியும் போக்குவரத்தும் முற்றி லும் முடங்கியது.

ஒன்றிய அரசின் பல்வேறு அச்சுறுத்தல்கள், நீதிமன்றத் தடைகள், சில இடங்களில் நடத்தப் பட்ட தாக்குதல்கள் ஆகியவற்றைத் தகர்த்தெ றிந்து, பல கோடி மக்கள் வீதியில் இறங்கினர். 

கேரளா, ஒடிசா மற்றும் திரிபுராவில் பொதுமக்க ளின் ஆதரவோடு முழு அடைப்பு போன்ற சூழல் நிலவியது. 

இது வெறும் பொருளாதாரக் கோ ரிக்கைகளுக்கான போராட்டம் மட்டுமல்ல; தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திணிக் கும் அரசின் பிடிவாதமும், கார்ப்பரேட் சார்பு கொள்கைகளும், பொதுத்துறை நிறுவ னங்களை விற்பனை செய்யும் போக்கும் இனியும் எடுபடாது என்பதை இப்போராட்டம் உணர்த்தி யுள்ளது.  

புத்தொழில்கள்  உள்ளிட்ட நவீன வேலை வாய்ப்புகள் உருவானாலும், உழைப்பாளிகளின் அடிப்படை  உரிமைகளைப் பறிப்பது தேசத்தின் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லாது.

 தொழிலாளர்க ளின் கோரிக்கைகளை அரசு இனியும் அலட்சி யப்படுத்தினால், வரும் காலங்களில் இது போன்ற இன்னும் பல வீரியமான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என்பதே இந்த வெற்றி அர சுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகும். 

உழைக்கும் மக்களின் ஒற்றுமையே இந்தத் தேசத்தின் உண்மையான பலம் என்பதை இந்த  பொது வேலைநிறுத்தம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை