எது நாட்டுக்கு அவமானம்?
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு .
தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக இறுதி வாக்காளர் பட்டியலில் தகவல்.
🔴இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கீழ்கண்ட இணையதள முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.
https://www.erolls.tn.gov.in/rollpdf/SIR_FINALROLL_23022026.aspx
டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா AI மாநாட்டில் நேற்று மதியம் 12 30 மணியளவில் இந்திய இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் பத்துக்கும் மேற்பட்டோர் தங்களது சட்டைகளை கழற்றி “இந்திய பிரதமர் மோடி சோரம் போய்விட்டார்” என்று முழங்கியுள்ளனர்.
தங்களது டீசர்ட் களிலும் அதனையே முழக்கமாக அச்சிட்டு கொண்டு வந்துள்ளனர் அதை பத்திரிகையாளர் மத்தியிலும் பார்வையாளர்கள் மத்தியிலும் தெரியும் வண்ணம் வைத்து முழக்கமிட்டனர்.
எதிர்பாராத இந்த போராட்டத்தைக் கண்டு பதறிய போலீசு அவர்களில் நான்கு பேரை கைது செய்துள்ளது மற்றவர்களை தேடி வருகிறது.இந்த போராட்டம் பற்றி இந்திய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கூறுகையில் “பிரதமர் சமரசம் செய்து கொண்டார்” என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, மில்லியன் கணக்கான வேலையற்ற இளைஞர்களின் கோபத்தின் குரலாகும். அமெரிக்காவுடனான பிரதமர் மோடியின் வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களின் நலன்களுக்கு எதிரானதாகத் தெரிகிறது, இதனால் அமெரிக்கா அதிக நன்மைகளைப் பெறுகிறது” என்று போராட்டத்திற்கான நியாயத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் இந்திய இளைஞர்கள் இனியும் அமைதியாக வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்றும் கூறினார்.
இந்த போராட்டத்தைக் கண்டு வெறியறிய சங்கிகள் இது நாட்டுக்கு காங்கிரஸ் இழைத்த துரோகம். நாட்டுக்கே அவமானம் என்றும் சமூக ஊடகங்களில் கதறி வருகின்றனர்.
இது பற்றி பேசிய ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “நாட்டின் பிம்பத்தை கெடுக்கும்” போராட்டம் என்று கூறினார். இதையே அகிலேஷ் 'சும் தேசத்தை அவதானத்துக்கு உள்ளாக்கிவிட்டப் போராட்டம் என்றார்.
இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை “துரோகி” என்று பாஜக குற்றம் சாட்டி வருகிறது.
உலகெங்கிலும் தனது நாட்டு அரசுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு அங்கமாக நாட்டில் நடக்கும் மிக முக்கிய நிகழ்வுகளில் அல்லது ஊடகங்களில் கவனம் பெறும் நிகழ்வு நடக்கும் இடங்களில் தங்கள் போராட்டத்தை நடத்துவது மிக சாதாரணமான ஒன்று.
எடுத்துக்காட்டாக, அமெரிக்க பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் மாணவர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முழங்கியதை பார்த்துள்ளோம் அதை யாரும் அந்த பல்கலைக்கழகத்திற்கு அவமானம் என்று சித்தரித்ததில்லை.
அதேபோல, போராட்டக்காரர்கள் விளையாட்டு மைதானங்களில் ஆடையின்றி நுழைந்து தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தி உள்ளதையும் பார்த்து இருக்கிறோம்.
இதையும் யாரும் அந்த நாட்டுக்கு அவமானம் என்று எடுத்துக் கொண்டதில்லை. மாறாக அந்தப் போராட்டத்தின் நியாயத்தைப் பற்றியே விவாதித்துள்ளனர்.
இவை ஒருபுறம் இருக்க இந்த போராட்டத்தை நாட்டுக்கு அவமானம் காங்கிரஸ் செய்த துரோகம் என்று குதிக்கும் சங்கிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே AI மாநாட்டில் நடந்த மிக கேவலமான ஏமாற்று வேலை பற்றி கொந்தளிக்கவில்லை .
அப்போது அவர்களுக்கு நாட்டின் மாண்பு பற்றி அக்கறை ஏற்படவில்லை.
சீனாவில் தயாரிக்கப்பட்டு சந்தைகளில் விற்கப்படும் ஒரு ரோபோவை கொண்டு வந்து அதை தங்களது கண்டுபிடிப்பாக வெளிப்படுத்திக் கொண்ட கல்கோத்தியா பல்கலைக்கழகம் மீது சங்கிகளுக்கு ஆத்திரம் பொங்கவில்லை.
அந்தப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரவில்லை. திருடனுக்கு தேள் கொட்டியது போல் கமுக்கமாகவே சென்றனர்.
உண்மையில் நாட்டிற்கு வெட்கக்கேடானது இந்த போலி ரோபோ விவகாரமே தவிர, இந்திய இளைஞர் காங்கிரஸ் நடத்திய சட்டையில்லா போராட்டம் அல்ல.
ஏன் உலகெங்கிலும் இதுபோன்ற ‘அத்துமீறல்’ போராட்டங்கள் நடைபெறுகின்றன எனில் அந்த நாட்டு அரசுகள் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் மக்களின் குரலை உதாசீனப்படுத்தவும் நசுக்கவும் செய்யும்போதும் .
இனிமேலும் பொறுக்க முடியாது என்ற நிலையிலேயே இத்தகைய போராட்டங்கள் வெடிக்கின்றன.
- -திருமுருகன்
சீகன் பால்க்
தமிழ் அச்சு முன்னோடி
தரங்கம்பாடியில் இந்தியாவின் முதல் அச்சு இயந்திரத்தை நிறுவி, தமிழ் மொழியை உலகத்தரம் வாய்ந்த புத்தக வடிவில் கொண்டு வந்த மாபெரும் தமிழ்ப் பணிக்குச் சொந்தக்காரர் சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg).
அவர் மறைந்த தினம் இன்று.(பிப்ரவரி-23)
ஜெர்மனி தேசத்தில் பிறந்தவராக இருந்தாலும், தமிழ் மீது கொண்ட பற்றால் தன்னை ஒரு தமிழனாகவே மாற்றிக் கொண்டவர் இவர்.
1712-இல் தரங்கம்பாடியில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தை நிறுவி, தமிழ் எழுத்துக்களை அச்சுக்குக் கொண்டு வந்தார்.
விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டதோடு மட்டுமல்லாமல், தமிழ் இலக்கண நூல்களையும் லத்தீன் மொழியில் வெளியிட்டார்.
சாதி, மதம் கடந்து அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகப் பள்ளிகளைத் தொடங்கிய முன்னோடி இவராவார்.
அன்றைய காலகட்டத்தில் ஓலைச்சுவடிகளில் இருந்த பல தமிழ் இலக்கியங்களைச் சேகரித்துப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றினார்.
1719-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் தேதி, தனது 36-வது வயதிலேயே அவர் மறைந்தாலும், அவர் விதைத்த அச்சுப் புரட்சி இன்றும் தமிழ் இலக்கிய உலகை உயிர்ப்புடன் வைத்துள்ளது.
தமிழ் எழுத்துக்கள் இன்று கணினி மற்றும் அலைபேசிகளில் உலவுகிறது சாதனைபடைத்து வருகிறதுஎன்றால், அதற்கு ஆரம்ப விதை சீகன் பால்க் தான்.
கடன் வாங்கி கார் வாங்கி?







