"என் பெயர் முகமது தீபக்.."

 உத்தராகண்ட் மாநிலம் கோத்வாரை சேர்ந்த 46 வயதான ஜிம் உரிமையாளர் தீபக் குமார். இவர் கடந்த வாரம் தனது நண்பர் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அருகே இருந்த 70 வயதான கடைக்காரர் ஒருவரிடம் பஜ்ரங் தள் அமைப்பினர் சிலர் பிரச்சனை செய்துள்ளனர். அதாவது அந்த முதியவர் பாபா ஸ்கூல் டிரஸ் என்ற பெயரில் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.


பாபா என்ற பெயரை இந்துக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் இதனால் கடையின் பெயரை மாற்ற வேண்டும் எனச் சொல்லி அச்சுறுத்தியுள்ளனர். இதைக் கண்ட தீபக், அவர்களிடம் நியாயம் கேட்டுள்ளார்.


அந்த முஸ்லீம் கடைக்காரருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இந்தக் கடை 30 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.. திடீரென வந்து பெயரை மாற்றச் சொல்வதை ஏற்க முடியாது என சொல்லியுள்ளார். அப்போது அங்கிருந்த பஜ்ரங் தள் உரிமையாளர்கள் தீபக்கையும் அச்சுறுத்தியுள்ளனர்.


மேலும், பெயரைச் சொல்லும்படியும் கட்டாயப்படுத்தியுள்ளனர். அப்போதும் அஞ்சாமல் அவர், "எனது பெயர் முகமது தீபக்" என்று கூறியுள்ளார்.


தனது இந்து பெயரில்முஸ்லீம் பெயரையும் இணைத்து, இந்தியாவின் ஒற்றுமை குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தும் நோக்கில் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

இதைக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் மேலும் ஆத்திரமடைந்துள்ளனர்.


"எனது பெயர் முகமது தீபக்" என இவர் சொன்னதும் இணையத்தில் டிரெண்டானது. பலரும் தீபக்கிற்கு ஆதரவாகச் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அதேநேரம் சில வலதுசாரி கும்பல்கள் தீபக் மீது வன்மத்தைக் கக்கியும் வருகிறார்கள்.


அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மிக மோசமான கருத்துகளையும் சொல்லி வருகிறார்கள். மேலும், சனிக்கிழமை இரவு கோத்வாரில் உள்ள தீபக் குமார் வீட்டையும் வலதுசாரி கும்பல் முற்றுகையிட்டுள்ளது.


போலீசார் தலையிடும் அளவுக்கு நிலைமை போய் இருக்கிறது. இதனால் அங்குப் பதற்றமான சூழலே இருக்கிறது.


இந்தச் சூழலில் தீபக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், "நான் இந்துவல்ல, முஸ்லீம் அல்ல, சீக்கியர் அல்ல, கிறிஸ்தவரும் அல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக, நான் ஒரு மனிதன்.


நான் இறந்த பிறகு, எந்த மதத்திடமும் நான் பதில் சொல்லத் தேவையில்லை.. கடவுளிடமும் மனித குலத்திடமும்தான் நான் பதிலளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.


மேலும் என்ன நடந்தாலும் பின் வாங்கப் போவதில்லை எனச் சொன்ன அவர், இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றும் குறிப்பிட்டார். தீபக் குமார் மற்றொரு வீடியோவில், "நான் உங்கள் அனைவருக்கும் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.. நமது நாட்டிற்குத் தேவையானது அன்பும் பாசமுமே தவிர, வெறுப்பு அல்ல.


நீங்கள் எவ்வளவு வெறுப்பை வேண்டுமானாலும் பரப்பலாம்.. அதை நிறுத்த முடியாது. ஆனால் அன்பைப் பரப்புவது மிகப் பெரிய விஷயம்," என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் இரண்டு எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்துள்ளனர். பஜ்ரங் தள உறுப்பினர்கள் சிலர் தன்னை மிரட்டியதாக உள்ளூர் கடைக்காரரான வகீல் அஹ்மத் புகார் அளித்துள்ளார்.


அதில் 30 ஆண்டுகளாக 'பாபா ஸ்கூல் ட்ரெஸ்' என்ற பெயரில் கடை நடத்தி வரும் நிலையில், ஜனவரி 2026ல் 4 பேர் தன்னை வந்து மிரட்டி அச்சுறுத்தியதாகக் கூறியுள்ளார். அவர்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.


இது தவிரத் தீபக் குமார் வீட்டில் முற்றுகையிட்டது தொடர்பாகவும் மத நல்லிணக்கத்தைப் பாதிப்பது, தேசிய நெடுஞ்சாலையை முடக்குவது, காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் 34 வலதுசாரி உறுப்பினர்கள் மீது போலீசார் எஃப்.ஐஆர் பிதிவு செய்துள்ளனர்.

என்ன இப்படி சொல்லிட்டாரு .நம் விசுவகுரு வெறும் டம்மி பீசா?

'நான் நினைத்தால் மோடி அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஆனா மோடி அமெரிக்காவுடன் trade பண்ண ஒப்புக்கொண்டதால பதவிய பாதுகாத்துக்கிட்டாரு.' - டிரம்ப்

தள்ளாடும் ஜப்பான்.தாய்லாந்து. 

 சீராகுமா?

 ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளின் அரசியல் எதிர்காலத்தை அடுத்த 4 ஆண்டுகளுக்குத் தீர்மானிக்கும் நோக்கில், இன்று இரு நாடுகளிலும் பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன.


ஜப்பானில் தற்போது அரசியல் தலைமை நிலையற்றதாக மாறியிருக்கிறது. இந்த தேர்தல் மூலம் நிலைமை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஜப்பானில், பிரதமர் சனே டக்காயிச்சி சில வாரங்களுக்கு முன்பு அறிவித்த பொதுத் தேர்தல், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும். தற்போதைய அரசாங்கம் தனது நாடாளுமன்றப் பெரும்பான்மையை உறுதிப்படுத்தவும், அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்தவும் இத்தேர்தலில் தன்னை நிரூபிக்க வேண்டும்.

ஜப்பானை பொறுத்தவரை, கடந்த 1966க்கு பின்னர் அரசியல் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதாவது, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கான செல்வாக்கு அதிகரிக்கும்போது நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவார்கள்.


அதாவது அவர்களது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள்தான் இருக்கும். ஆனால் மக்கள் மத்தியில் அவர்களுக்கு செல்வாக்கு அதிகரித்திருப்பது தெரிந்தால், உடனே நாடாளுமன்றத்தை கலைத்து இப்படி செய்வதன் மூலம் அவர்களுடைய ஆட்சி காலம் மேலும் 4 ஆண்டுகளுக்கு நீடிக்கும். 

இப்படி செய்வது உண்மையான தேர்தலை எதிர்கொள்ள பயப்படுவதற்கு சமம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.


இருப்பினும் ஆட்சியாளர்கள் இதெல்லாம் கண்டுக்கொள்வது கிடையாது. அதே பாணியில்தான் தற்போது சனே டக்காயிச்சியும் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவித்திருக்கிறார்.

இவர் கடந்த ஆண்டு அக்டோபரில்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய திட்டங்களை அறிவித்து பிரச்சனைகளை தீர்ப்பார் என்று பார்த்தால், நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை கொண்டு வந்திருக்கிறார்.


எனவே இந்த தேர்தல் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.

ஜப்பானின் முதல் பெண் பிரதமரும், நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பிரதமர் டக்காயிச்சி, இந்தத் தேர்தல் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

தாய்லாந்தின் அரசியல்

இன்று தாய்லாந்திலும் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.


தாய்லாந்தில் 500 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவது குறித்தும் இன்று ஒரே நாளில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

தாய்லாந்தின் அரசியல் களம் பல ஆண்டுகளாக சில குடும்பங்களாலும், அவற்றைச் சேர்ந்த தனிநபர்களாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த குடும்பங்களும் அவற்றின் வலைப்பின்னல்களும் நாட்டின் நவீன வரலாற்றில் ஆழமாகப் பதிந்துள்ளன. இதுவே பெரும்பாலான வாக்காளர்களைத் தீர்மானிக்கக் கூடிய முக்கியப் பிரச்சினையாக இருக்கும்.


தற்போதைய காபந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல், எல்லைப் பகுதிகளில் கம்போடியாவுடன் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து தேசியவாத உணர்வைத் தூண்டி இவர் பிரசாரம் செய்துள்ளார். அதேபோல சீர்திருத்த கட்சி இளைய தலைமுறையினரின் ஆதரவுடன் இந்தத் தேர்தலில் இக்கட்சி முன்னிலை வகிக்கலாம் எனக் கருதப்படுகிறது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை