மன்னிக்க வேண்டுகிறேன்!
எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்ற பீட்டர் மண்டேல்சனை அமெரிக்க தூதராக நியமித்ததற்கு பாதிக்கப்பட்டவர்களிடம் பிரிட்டனின் பிரதமர் கியெர் ஸ்டார்மர் மன்னிப்பு கோரியுள்ளார்.
அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக, கைதான பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதையடுத்து, கடந்த ஜன.30 அன்று 35 லட்சப் பக்கங்களைக் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது. அந்தக் கோப்புகளில் உள்ளவை அனைத்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.
அமெரிக்காவுக்கான பிரிட்டனின் முன்னாள் தூதர் பீட்டர் மண்டேல்சனின் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றதும், அவர் எப்ஸ்டீனுடன் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனால், கடந்த 2025 செப்டம்பரில் பீட்டர் மண்டேல்சனை தூதர் பதவியிலிருந்து நீக்கி பிரதமர் ஸ்டார்மர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், பீட்டர் மண்டேல்சனின் பொய்களை நம்பி அவருக்கு பதவி வழங்கியதாகக் கூறிய பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர்; அதற்காக எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களிடம் இன்று (பிப். 5) மன்னிப்பு கோரியுள்ளார். புதியதாக எப்ஸ்டீனின் கோப்புகள் வெளியானதைத் தொடர்ந்து ஸ்டார்மரின் அரசு கடும் அழுத்ததில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர்கள் பில் கேட்ஸ், எலான் மஸ்க், அனில் அம்பானி, பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோரின் பெயர்கள் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின்
பெரிய தங்கக் கட்டி
1869 - உலகில் இதுவரை கிடைத்தவற்றிலேயே மிகப்பெரியதான, வெல்கம் ஸ்ட்ரேஞ்சர் என்று பெயரிடப்பட்ட, தங்கக்கட்டி ஆஸ்திரேலியாவில், மொலியாகுல் என்ற இடத்தில் கிடைத்த நாள்...
சுமார் இரண்டடி நீளமும், ஓரடி அகலமும் கொண்ட, இந்த 97.14 கிலோ தங்கக்கட்டி, வண்டல்மண்ணுக்கடியில் வெறும் ஓரங்குல ஆழத்திலேயே கிடைத்தது.
அக்காலத்தில் இவ்வளவு பெரிய தங்கக்கட்டியை எடைபோட கருவிகள் இல்லாததால், இதனை மூன்று துண்டுகளாக உடைத்து எடைபோட்டார்களாம்.
ஆஸ்திரேலிய மத்திய வங்கி இதற்கு 9 ஆயிரம் பவுண்டுகள் தரத்தயாராக இருந்தாலும், உருக்கி லண்டனுக்குக்குக் கொண்டுவந்த இதைக் கண்டெடுத்தவர்களுக்கு, அங்கு 9,381 பவுண்டுகள் (தற்போதைய மதிப்பில் ரூ.10.40 கோடி) கிடைத்தன. தங்கத்தின் மதிப்பில் கணக்கிட்டால் இதன் தற்போதைய மதிப்பு ரூ.28 கோடிக்கும் அதிகம்.
இந்தத் தங்கக்கட்டி கிடைத்த இடத்திற்கருகில், 1897இல் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டதுடன், கிடைத்தபோதிருந்த அதன் வடிவத்;தின் மாதிரி ஒன்றும் உருவாக்கப்பட்டு, மெல்போர்ன் நகர அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கும் அவசியமின்றி, நேரடியாகத் தங்கமாகவே கிடைப்பவை நக்கெட் என்றழைக்கப்படுகின்றன.
நீரில் அடித்துவரப்படும்போது, தங்கத்துகள்கள் 'கோல்டு(குளிர்) வெல்டிங்' என்ற முறையில் ஒன்றிணைந்து கட்டியாக உருவாவதால், பொதுவாக இவை வண்டல்மண் பகுதிகளில்தான் காணப்படுவதுடன், உராய்வினால் பளபளப்பாகவும் காணப்படுகின்றன.
அரிதாக, உலோகத்தாது வண்டல்களிலும், பாறையிடுக்குகளிலும் தங்கம் தனியாகக் கிடைப்பதுமுண்டு. இயற்கையாகக் கிடைக்கும் தங்கக்கட்டிகள் பொதுவாக 20.5-22 காரட் தூய்மையுடன் கிடைத்தாலும், ஆஸ்திரேலியாவில் கிடைப்பவை பொதுவாக 23 காரட் தூய்மையுடன் கிடைக்கின்றன.
இயற்கையாகக் கிடைத்த வடிவத்திலேயே இன்றும் பாதுகாக்கப்படுகிறவற்றில் மிகப்பெரியது, பிரேசிலில் 1983இல் கிடைத்த கனா நக்கெட் என்னும் 60.8 கிலோ எடையுள்ள தங்கக்கட்டியாகும்.
இதனுடன் மொத்தம் 165 கிலோ தங்கக்கட்டிகள் கிடைத்தன. எடுப்பதற்காகத் தோண்டும்போதுதான் உடைந்ததால், இதுதான் உலகின் மிகப்பெரிய தங்கக்கட்டி என்று கோரப்படுவதும் உண்டு.
1980இல் ஆஸ்திரேலியாவில் கிடைத்த 27.2 கிலோ தங்கக்கட்டியே மெட்டல் டிட்டெக்டர்மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய தங்கக்கட்டியாகும்.







