இஸ்ரேல், அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி...


இஸ்ரேல், அமெரிக்காவுக்கு

ஈரான் பதிலடி...

வான் பரப்பை இழுத்து மூடிய நாடுகள்;

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், துபாய் விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. துபாய் விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக இயங்காது என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

அணுசக்தி திட்டத்தை மேம்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நடைபெற்றது. அதனை ஓமன் நாடு மத்தியஸ்தம் செய்து வந்தது. இந்த பேச்சுவார்த்தை எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடிவடைந்த ஒரு நாளுக்குப் பிறகு, அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்று சனிக்கிழமை ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கின. 

இதனிடையே, அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம். மேலும், இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.


இந்த சூழலில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானை சுற்றிவளைத்து கடல் வழியாகவும், வான் வழியாகவும் என 30-க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.


தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. நகரில் பல பகுதிகளில் வெடிச்சத்தம் கேட்டுவருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தை இலக்காகக் கொண்டும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் அங்கு இருந்தாரா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை. ஈரானில் இணைய சேவை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.

இதற்கிடையில், பதிலடி தாக்குதலாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, இஸ்ரேல் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி உள்ளது.


இதனால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் ஈரான் எல்லைகளைத் தாண்டி மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. அங்குள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.


ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் தலைநகர் அபுதாபி, குவைத் மற்றும் கத்தாரின் தோஹாவிலும் ஏவுகணைகள் தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. 


பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5வது படைப்பிரிவுத் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ மையத்திலும், கத்தாரிலும் பெரிய அளவிலான வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாதுகாப்பு காரணங்களுக்காக ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தங்களது வான்வெளியை மூடியுள்ளன. ஜோர்டானில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.


ஈரானின் பதிலடி தாக்குதலை தொடர்ந்து ஏர் இந்தியா உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்கள் மேற்கு ஆசியாவிற்கான தங்களது விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகள் தங்களது விமான நிலையங்களை மூடுவதாக தெரிவித்துள்ளன.


குறிப்பாக, உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. துபாய் விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக இயங்காது என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.


இதனால், துபாய் விமான நிலையம் பயணிகளால் ஸ்தம்பித்துள்ளது. அங்கு ஏராளமான பயணிகள் காத்திருக்கும் வீடியோ சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

இதனிடையே, ஈரான், இஸ்ரேல் மற்றும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகங்கள் அங்குள்ள இந்தியர்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளன.


இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போராக உருவெடுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.


 ஈரானின் உச்ச தலைவர் காமேனி உரை

பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என கூறி அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பிப்.28 காலை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.


தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது.


கத்தார் முதல் துபாய் வரை அதிரும் வெடிப்புகள்; ஈரானின் உச்ச தலைவர் காமேனி உரை

ஈரானின் தலைமை மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) என்ற பெயரில் ராணுவத் தாக்குதலை தொடங்கியுள்ளன.


அமெரிக்க அதிபர் டிரம்ப், போர் நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் ஈரான் அணு ஆயுத வல்லமை பெறுவதைத் தடுக்கும் நோக்கோடும் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


ஈரான் தலைநகர் தெஹ்ரான், இஸ்பாகான், குவாம், கர்மன்ஷா, கராஜ் ஆகிய 5 நகரங்களை குறிவைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த தாக்குதல் நடத்தியுள்ளது.


ஈரான் அணு சக்தி மையங்கள், ராணுவ தளங்கள், உளவுத்துறை, பாதுகாப்பு கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


ஈரானின் உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மற்றும் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோரின் அலுவலகங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.


இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது ஏவுகணைகளை இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நிலைகளை நோக்கி ஏவி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு (Kharg Island) அருகே பெரும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.


ஈரானிய புரட்சிகர காவல்படையின் உயர்மட்ட அதிகாரிகளே முதல் கட்டத் தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது.


அபுதாபி மற்றும் துபாயிலும் வெடிப்புச் சத்தங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஐந்தாவது கடற்படை சேவை மையத்தின் அருகே ஏவுகணைத் தாக்குதல் நடந்துள்ளது.


கத்தார் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயல்படுத்தி, அச்சுறுத்தல்களை முறியடித்ததாகக் கூறியுள்ளது. ஆயதுல்லா கமேனியின் இருப்பிடத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டாலும், குண்டுவீச்சுக்கு முன்னரே அவர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானுக்குள் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன; மேலும் அங்கு இணையச் சேவை முழுமையாக முடக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.


கடந்த 12 நாட்களாக மறைமுகமாக நடந்து வந்த ‘நிழல் யுத்தம்’ இப்போது நேரடி போராக மாறியுள்ளது. இதன் மூலம் அணுசக்தி பேச்சு வார்த்தைகள் முழுமையாக முறிந்துள்ளன.


ரமலான் மாதத்தில், அரசின் தலைமை இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதன் மூலம், ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணியின் தெளிவான நோக்கமாகத் தெரிகிறது.


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று கூடுகிறது

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கி மத்திய கிழக்கை ஒரு புதிய மோதலில் ஆழ்த்தியதைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சனிக்கிழமை கூடியதுது.


15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பு நியூயார்க்கில் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு (2100 GMT) கூடும் என்று ஐ.நா. தூதர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்திற்கு மாதாந்திர கவுன்சில் தலைமை தாங்கும் பிரிட்டன் தலைமை தாங்கும்.


"ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தூண்டுதலற்ற ஆயுதமேந்திய ஆக்கிரமிப்புச் செயல் தொடர்பாக" ரஷ்யாவும் சீனாவும் அவசரக் கூட்டத்தைக் கோரியதாக ரஷ்யாவின் ஐ.நா. பணி தெரிவித்துள்ளது.


பிரான்ஸ், பஹ்ரைன் மற்றும் கொலம்பியாவும் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலை தொடர்ந்து பஹ்ரைன், கத்தார் மீது தாக்குதல் நடத்திய ஈரான் துபாய், அபுதாபியை விட்டு மக்கள் வெளியேறுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது உலக நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. துபாய், கத்தார், அபுதாபி, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்களது வான்வழி பரப்புகளை மூடியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை