உணர்ந்தும்,உணராமல்!

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

 அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்க வேண்டிய மக்களவைத் தலைவர், பா.ஜ.க.வைச் சேர்ந்தவராகவே நடந்து கொள்வது நாடாளுமன்ற மாண்புக்கு மாபெரும் இழுக்கு.அதை உணர்ந்தும், உணராதவர்போலேயே அவர் செயல்பட்டு வருகிறார். 

அவரை அப்படித்தான் செயல்பட வேண்டும் என்று ஒன்றிய ஆட்சி மேலிடம் கட்டளை பிறப்பித்துள்ளது.

1. மக்களவை அலுவல்களை நடத்துவதில்அவைத்தலைவர் ஓம் பிர்லா முற்றிலும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்.

2. பல்வேறு நேரங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச ஓம் பிர்லா அனுமதிப்பது இல்லை.

3. நாடாளுமன்ற அடிப்படை ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

4. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கான முழு அனுமதியை பிப்ரவரி 2 ஆம் தேதி ஓம் பிர்லா வழங்கவில்லை. பொதுவாகவே ராகுல் காந்தியைப் பேச அனுமதிப்பது இல்லை.

5. எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களை தன்னிச்சையாக பிப்ரவரி 3 ஆம் தேதியன்று இடைநீக்கம் செய்துள்ளார். ஜனநாயக முறைப்படி நடந்து கொண்ட அவர்களுக்கு தண்டனை தரப்பட்டுள்ளது.

6. பா.ஜ.க. எம்.பி.யான நிஷிகாந்த் துபே, தொடர்ச்சியாக முன்னாள் பிரதமர்களை அவமதிக்கும் வகையில் அவையில் பேசி வருகிறார். அவரைப் பேச அனுமதிக்கிறார். அவரைக் கண்டிக்கச் சொன்னாலும் கண்டிக்க மறுக்கிறார். அவர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்.

7. பிப்ரவரி 7 ஆம் தேதியன்று அவைக்கு வந்து உரையாற்ற வேண்டிய பிரதமர் வரவில்லை. அதற்காகச் சொல்லப்பட்ட காரணம் மிகமிக அபத்தமானது. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பெண் எம்.பி.க்கள் பிரதமரைத் தாக்க திட்டமிட்டதாக அவைத் தலைவர் சொல்வது அபாண்டமான பழியாகும். இது அப்பட்டமான பொய்யாகும்.

8. நாடாளுமன்ற மரபுகள் மற்றும் விதிமுறைகளின் பாதுகாவலராக இருக்க வேண்டிய அவைத்தலைவர், அவதூறான கருத்துகளைத் தெரிவிப்பதன் மூலமாக தனது அரசமைப்புச் சட்டப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார்.

- இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அவைத்தலைவர் ஓம் பிர்லா மீது வைக்கப்பட்டுள்ளது. அவைத் தலைவரை நீக்கும் தீர்மானம், மக்கள வைத் தலைமைச் செயலர் உத்பல் குமார் சிங்கிடம் தரப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 94(சி) பிரிவின் கீழ் இது தரப்பட்டுள்ளது. தி.மு.க., காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையெழுத்துப் போட்டுள்ளார்கள்.

“விஸ்வகுருவுக்கா இந்த நிலைமை? ; உலக நாடுகள் சிரித்திருக்க மாட்டார்களா?” : முரசொலி தலையங்கம்!

மக்களவைத் தலைவருக்கு எதிராகத் தீர்மானம் தரப்பட்டால் அவர், அவை நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. அந்த அடிப்படையில் அவைக்கு அவைத்தலைவர் ஓம் பிர்லா வரவில்லை. அவராகவே விலகி இருக்க முடிவெடுத்து விட்டார்.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் அவைத்தலைவரை நீக்கும் தீர்மானம் இதுவரை மூன்று முறை (1954,1966,1987) வந்துள்ளது. இப்போது கொடுக்கப்படும் தீர்மானம் நான்காவது முறை ஆகும். தீர்மானம் வெற்றி பெறுகிறதா, தோற்கிறதா என்பது முக்கியமல்ல. நாடாளுமன்ற வரலாற்றில் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு உள்ளானவர்கள் வரிசையில் ஓம் பிர்லா வரப்போகிறார்.

அவர் மீதான தீர்மானத்தை விட, அவர் பேசிய முறைதான் அவருக்கு அதிக களங்கம் ஏற்படுத்துகிறது.

“மக்களவையில் சில எம்.பி. க்கள் முறையற்ற முறையில் நடந்து கொண் டனர். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரை நிகழ்த்த பிரதமர் மோடி மக்களவைக்கு வருவதாக இருந்தார். அவர் வருவதற்கு முன்பாக, காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் பிரதமர் இருக்கையைச் சுற்றி வளைத்திருந்தனர்.

பிரதமரின் உரையின்போது, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்பாராத செயலில் ஈடுபட முயற்சித்துள்ளார்கள் என்று எனக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தது. அப்படி ஒரு சம்பவம் நடந்திருந் தால் அது தேசத்தின் கண்ணியத்துக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தி இருக் கும். அதனால்தான், நாடாளுமன்றத்துக்கு வர வேண்டாம் என பிரதமரை நான் கேட்டுக்கொண்டேன்” என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

பிரதமரைத் தாக்க காங்கிரஸ் பெண் எம்.பி.கள் முயற்சித்ததாகச் சொல்லலாமா? நாடாளுமன்ற மக்களவைக்குள் ஒரு நாட்டின் பிரதமர் வர முடியாத அளவுக்கு இந்திய நாட்டில் உள்நாட்டுக் குழப்பங்கள் நடக்கிறதா? ஆளும் பா.ஜ.க. பலவீனமானதாக இருக்கிறதா? பிரதமர் அவ்வளவு பயப்படுகிறாரா?

அவைக்குள் அனைத்துக்கும் முழு அதிகாரம் படைத்தவர் அவைத்தலைவர். அனைவரையும் பாதுகாக்க வேண்டியவர் அவர்தான். இந்த நாட்டின் பிரதமரைக் கூட பாதுகாக்க முடியாத அளவுக்கு பலவீனமானவரா ஓம் பிர்லா?

அவைக்குள் வந்து பேச முடியாமைக்கு பிரதமர் மோடிக்கு பல காரணங்கள். அவை அவரது தரப்பு அரசியல் நியாயங்கள். ஆனால், அவையில் பிரதமருக்குப் பாதுகாப்பு இல்லை என்று அவைத்தலைவர் சொல்வது இந்திய நாடாளுமன்றத்துக்கே இழுக்கு அல்லவா?

பிரதமர் வரவில்லை, பேசவில்லை என்பது ஒரு நாள் செய்தி. ஆனால் இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு இல்லை என்பது வரலாறு முழுக்க பேசப்படப் போகும் செய்தி ஆகும். உலக நாடுகளின் தலைவர்கள் இதைப் படித்தால் தலையில் அடித்துச் சிரித்திருக்க மாட்டார்களா? 'விஸ்வகுருவுக்கா இந்த நிலைமை?' என்று அதிர்ச்சி அடைய மாட்டார்களா?

சீன ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள முடியாதது, அமெரிக்க வர்த்தகக் கொள்கைக்கு அடிபணிந்தது... இப்படி பிரதமர் பதில் சொல்ல முடியாத பல இருக்கிறது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் உண்மையாக, முழுமையாக விவாதம் நடந்தால் பிரதமரால் பதில் சொல்லவும் முடியாது. அவைக்குள் நிம்மதியாக அமரவும் முடியாது. என்ன செய்வார் ஓம் பிர்லா? பிரதமரைக் காப்பாற்றப் போய் அவர் சிக்கிக் கொண்டார்

காவல்துறை மாற்றம்..

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த சிலம்பரசன், சென்னை சட்டம் - ஒழுங்கு துணை ஐ.ஜி. மற்றும் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேபோல திருநெல்வேலி மேற்கு, காவல் துணை ஆணையராக இருந்த மதன், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட தலைமையக காவல் துணை ஆணையராக இருந்த விஜயகுமார், திருநெல்வேலி மேற்கு - துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி காவல் ஆணையர், அந்த மாவட்ட தலைமையக காவல் துணை ஆணையர் பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் நடிகர் விஜய் கூட்டத்தில் உயிரிழந்த சூரஜின் குடும்பத்தினரிடம் பேட்டி எதுவும் எடுக்கக்கூடாது எனக் கூறி பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்.
உச்சி வெயிலில் 3 மணி நேரம்.. நாற்காலி இல்லை.. மேற்கூரை இல்லை.நடிகர்விஜயின் கூட்டத்தில் மயங்கி விழுந்து சூரஜ் என்பவர் உயிரிழந்தது குறித்து செய்தியாளர் தந்த களநிலவரம்.






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை