"கொரியன் காதல்" ஆபத்து..!

 "புளு வேல் "க்கு

அடுத்த அபாய விளையாட்டு.

கற்பனை உலகில் மூழ்கிவிளையாடிய

3 சகோதரிகள் உயிரை மாய்த்து கொண்ட நேர்ந்த சோகம்


உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 சகோதரிகள் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில், மூவரும் "Korean Love Game" விளையாட்டிற்கு அடிமையாகி இருந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணயில் தெரியவந்துள்ளது.

"Korean Love Game" விளையாட்டில் அந்தச் சிறுமிகள் தங்களை 'கொரிய இளவரசிகள்' என்று கருதும் அளவுக்குக் கொரிய கலாச்சாரம், கே-பாப் மற்றும் கொரிய நாடகங்கள் மீது அதீத ஈடுபாடு கொண்டிருந்தனர்.


இந்த "Korean Love Game" சாதாரண விளையாட்டு அல்ல,, மாறாக குழந்தைகளைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு அபாயகரமான ஆன்லைன் உளவியல் சுரண்டல். காஸியாபாத் சகோதரிகளின் தற்கொலைக்குப் பிறகு இந்த விளையாட்டு குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஒரு குறிப்பிட்ட செயலியாக இல்லாமல், சமூக வலைதளங்களான Instagram, Discord, WhatsApp மூலமாக பரப்பப்படுகிறது.  கொரிய கலாச்சாரம் மீது ஈடுபாடு கொண்ட சிறுமிகளை அடையாளம் கண்டு, மர்ம நபர்கள் 'நண்பர்கள்' போலப் பழகுவார்கள். விளையாடுபவர்களுக்கு கொரிய பெயர்கள் சூட்டப்படும். நிஷிகா, பிராச்சி, பாக்கி என்ற பெயர்கள் , மரியா, அலிசா, சிண்டி என மாற்றப்பட்டுள்ளன..


இந்தியர்கள் என்பதை மறந்து, ஒரு கற்பனை உலகில் 'கொரிய இளவரசிகள்' போல வாழத் தூண்டப்படுவார்கள்.


இந்த விளையாட்டு 2017-ல் பரவிய 'புளு வேல்' சவாலைப் போன்றே வமைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் மிகவும் எளிமையான மற்றும் சுவாரசியமான டாஸ்க்குகள் கொடுக்கப்படும்.


உதாரணத்திற்கு, கொரிய பாடல்களைக் கேட்பது, நள்ளிரவில் கொரிய படம் பார்ப்பது, கொரிய மொழியில் பேசுவது போன்ற செயல்களில் ஈடுப்படுத்தப்படுவார்கள். பின்னர் விளையாடுபவர்கள் படிப்படியாக தனிமைப்படுத்தப்படுவார்...


அதாவது பெற்றோரிடம் பேசக்கூடாது, இரவில் தூங்கக்கூடாது, ரகசியமாகச் செயல்பட வேண்டும் போன்ற கட்டளைகள் வரும்..

 

இறுதியாக சுய-காயங்களை ஏற்படுத்திக் கொள்ள தூண்டுப்படுவார்கள் . 50-வது நாளில் தற்கொலை செய்துகொள்வதே இறுதி டாஸ்க் என கூறப்படுகிறது. இந்த விளையாட்டில் "Virtual Partner"என்ற ஒரு கதாபாத்திரம் இருக்கும்.


அது அச்சிறுமிகளிடம் மிகவும் அன்பாகப் பேசுவது போலவும், அவர்களின் கவலைகளைப் பகிர்ந்துகொள்வது போலவும் நடித்து, அவர்களை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.


'தற்கொலை செய்துகொண்டால் வேறு உலகிற்குச் சென்று தன் காதலனுடன் வாழலாம்' என்ற அபத்தமான எண்ணத்தைச் சிறுமிகளின் மனதில் விதைப்பதே இதன் நோக்கம்.


இந்த விளையாட்டில் இருந்து வெளியேற முயன்றால், அந்த நபர்கள் சிறுமிகளின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டுவதாகக் கூறப்படுகிறது. குழந்தைகள் திடீரெனத் தங்களுக்குப் பிடித்தமான விஷயங்களைச் செய்யாமல் முடங்கிப்போனால் பெற்றோர் கூர்ந்து கவனிக்க வேண்டும்.


கைகளில் அல்லது உடலில் விசித்திரமான அடையாளங்கள், கிறுக்கல்கள் இருந்தால் குழந்தைகளிடம் அது குறித்து கேட்க வேண்டும். மொபைல் போன் பயன்பாட்டைத் தடுக்கும்போது அவர்கள் காட்டும் அதீத கோபம் அல்லது விரக்தி ஒரு எச்சரிக்கை மணி.


இது போன்ற ஆன்லைன் ஆபத்துகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க 'Parental Control' ஆப்ஸை பயன்படுத்துவது அவசியம் என கூறுகின்றனர் நிபுணர்கள்.


தற்போது "கொரியன் லவ் கேம்" இளம் வயதினரிடையே பரவிவருகிறது இச்செயலியை தயவு செய்து தரவிறக்கி விடாதீர்கள்.பிறரையும்தரவிறக்கவிடாதீர்கள்


Google Family Link என்பது ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு இது மிகச்சிறந்த இலவச செயலி.


இதன் மூலம் பெற்றொரின் மொபைலில் இருந்தே குழந்தையின் போனில் எந்தெந்த செயிலகள் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம்.


குழந்தைகள் புதிய செயலியை பதிவிறக்கம் செய்ய முயற்சித்தால், பெற்றோர் அனுமதி இருந்தால் மட்டுமே அது இன்ஸ்டால் ஆகும்.


ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் தான் போன் பயன்படுத்த வேண்டும் என நேரம் ஒதுக்கலாம். நேரம் முடிந்ததும் போன் தானாகவே 'லாக்' ஆகிவிடும்.


"Korean Love Game" போன்ற விளையாட்டுக்கள் இன்ஸ்டாகிராம் மூலமே அதிகம் பரவுகின்றன. இதனால் குழந்தைகளின் கணக்கை எப்போதும் 'Private' ஆக வைத்திருப்பது அவசியம். 


மேலும், வீட்டு வைஃபை ரௌட்டரிலேயே 'Parental Control' வசதி இருக்கும்.


இதன் மூலம் ஆபத்தான இணையதளங்களை வீட்டின் நெட்வொர்க்கிலேயே முடக்க முடியும்.


குழந்தையின் போனில் சந்தேகத்திற்கிடமான மெசேஜ்கள் அல்லது 'Tasks' இருப்பதைப் பார்த்தால்,


உடனடியாக 1930 என்ற உதவி எண்ணிற்கு அழைக்கலாம்.


அல்லது cybercrime.gov.in என்ற தளத்தில் புகார் அளிக்கலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை