164 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 60-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள், 18 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு.

 வேட்பாளர் பட்டியலில் 125 பட்டதாரிகளுக்கு இடமளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 15 மருத்துவர்கள், 29 வழக்கறிஞர்கள், 17 பொறியாளர்கள் வேட்பாளர்களாக கறமிறக்கம்.

 121 தொகுதிகளில் அதிமுக-வுடன் நேரடியாக மோதும் திமுக. பாஜகவுடன் 18 தொகுதிகளிலும், பாமக மற்றும் அமமுக-வுடன் 8 தொகுதிகளில் போட்டி.

மகா மகா கூட்டணி அமைத்திருப்பதாகவும், தொகுதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏதும் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம். இன்று மாலை திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று தகவல்.

சென்னை திருவொற்றியூர், ஆ,ர்.கே.நகரில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம். மக்களோடு பயணிப்பவர்களை அதிமுக வேட்பாளர்களாக்கி இருப்பதாக பேச்சு.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம். ஏப்ரல் 6 வரை மட்டுமே அவகாசம் இருப்பதால் தொடக்கம் முதலே விறுவிறுப்படையும் என எதிர்பார்ப்பு.

தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு. விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர், சேலம் மேற்கில் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டி.

8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வி.சி.க. இன்று வெளியிடும் என எதிர்பார்ப்பு. கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர் பெயர்களும் விரைவில் வெளியாகின்றன.

ம.ம.க. சார்பில் நாகையில் ஜவாஹிருல்லா, மணப்பாறையில் அப்துல் சமது போட்டி. வாணியம்பாடியில் சையத் ஃபாரூக், பாபநாசத்தில் ஷாஜகான் முஸ்லீம் லீக்  வேட்பாளர்கள் நிறுத்தம்.

34 அமைச்சர்களில் 31 பேருக்கு மீண்டும் அவரவர் தொகுதிகளிலேயே போட்டியிட வாய்ப்பு. ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்திக்குப் பதில் அவரது மகன் வினோத் காந்தி போட்டி.

புதுக்கோட்டை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது போலீஸ் வழக்குப்பதிவு. சிறுவர்களை பிரச்சாரத்திற்கு ஈடுபடுத்தியதாகக் குற்றச்சாட்டு.

பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் காட்டுத் தீ.200-க்கும் மேற்பட்ட ஏக்கர் வனப்பகுதி எரிந்து சேதம். 

திருச்சி சமயபுரம் கோயில் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து. பெண் பக்தர் உயிரிழப்பு... படுகாயமடைந்த 2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.

மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி. டெல்லியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் முடிவு.





💥 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக 164 வேட்பாளர்களில்   

🎓 125 - பட்டம் பெற்றவர்கள்

👩 18 - பெண்கள்

🏅 7 - முனைவர் பட்டம் பெற்றவர்கள்

🩺 15 - மருத்துவர்கள்

⚙️ 17 - பொறியாளர்கள்

⚖️ 29 - சட்டம் படித்தவர்கள்

🌟 60+ புதுமுகம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை