1989 மூன்று முதலமைச்சர்கள் வென்ற தேர்தல்!

3முதலமைச்சர்களை எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்கு அனுப்பிய 1989ம் ஆண்டு தேர்தல்.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை நடந்த ஒவ்வொரு தேர்தலும் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகவே இருந்துள்ளது. அதில் மிக மிக முக்கியமான தேர்தல் 1989ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல்.


ஏனென்றால், தமிழ்நாட்டின் ஆட்சி கட்டிலை அலங்கரித்த 3 முதலமைச்சர்களை சட்டசபைக்கு முதன்முறையாக அனுப்பியது இந்த தேர்தலே ஆகும்.


அவர்கள்தான் மு.க.ஸ்டாலின். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி .

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் மகனும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முதன்முதலில் போட்டியிட்ட தேர்தல் 1984.


ஆனால், அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்த நிலையில், அடுத்து 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுியில் போட்டியிட்டார்.


அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 30 ஆயிரத்து 184 வாக்குகள் பெற, திமுக-விற்காக களமிறங்கிய மு.க.ஸ்டாலின் 50 ஆயிரத்து 818 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.


அதன்பின்னர், மு.க.ஸ்டாலின் எந்த தேர்தலில் தோல்வியே காணவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக வெற்றி பெற்று ஆட்சியையும் கைப்பற்றியது.



எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு நடந்த முதல் தேர்தலான இந்த தேர்தலில் அதிமுக ஜெயலலிதா தலைமையிலும், ஜானகி அம்மாள் தலைமையிலும் தேர்தலைப் பிரிந்து சந்தித்தது.


அதிமுக ஜெ அணி என்ற பெயரில் ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியாக களம் கண்டது.


இந்த அணிக்கு தலைமை தாங்கிய ஜெயலலிதா போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கினார். 


ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் முத்து மனோகரன் 28 ஆயிரத்து 872 வாக்குகள் பெற்றார். ஆனால், ஜெயலலிதா 57 ஆயிரத்து 603 வாக்குகள் பெற்று முதன்முறையாக எம்எல்ஏ ஆனார்.


இதே தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக ஜானகி அணியைச் சேர்ந்த சாந்தி என்ற நிர்மலா 6 ஆயிரத்து 354 வாக்குகள் பெற்று 4வது இடம் பிடித்தார்.


1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயலலிதா அணிக்காக களமிறங்கியவர் எடப்பாடி பழனிசாமி. அவர் அந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பழனிசாமியை எதிர்த்து 30 ஆயிரத்து 765 வாக்குகள் பெற்று முதன்முறையாக வெற்றி பெற்றார்.

திமுக வேட்பாளரான பழனிசாமி 29 ஆயிரத்து 401 வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியைச் சேர்ந்த கணேசன் 15 ஆயிரத்து 181 வாக்குகள் பெற்றார்.


ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடந்த பல்வேறு சவால்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சியைப் பிடித்தார்.

பின்னர், தற்போது அதிமுக-வையும் கைப்பற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.


இவர்கள் 3 பேருக்கும் இந்த தேர்தலே முதன்முறையாக சட்டமன்றத்திற்குள் செல்வதற்கான தேர்தலாக அமைந்தது. இந்த வெற்றிக்கு பிறகு இவர்களது அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்திலே அமைந்தது.


மேலும், எம்ஜிஆர் அதிமுக-வை உருவாக்கி தான் உயிருடன் இருந்த வரை ஆட்சியை தன்வசமே வைத்திருந்த நிலையில், அவரிடம் இருந்து மீண்டும் திமுக ஆட்சியைக் கைப்பற்றிய தேர்தலும் 1989ம் ஆண்டு தேர்தல் ஆகும். 






கீழடி பேசட்டும்... வரலாறு மேலெழட்டும்’

8 அகழாய்வுகளுக்கு அனுமதி தராதது ஏன்? 


கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் 8 முக்கிய இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய பா.ஜ.க அரசு 8 மாதங்களாக அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதாகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.


“தமிழ் நாகரிகத்தின் தொன்மை இந்தியாவிற்குப் பெருமை சேர்க்குமே தவிர, ஊறு விளைவிக்காது; எதைக் கண்டு பா.ஜ.க அரசு அஞ்சுகிறது?” என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே போல, “அரசியல் சிறுமைத்தனங்களை வரலாறு தவிடுபொடியாக்கும்” என்றும் மதுரை எம்.பி சு. வெங்கடேசன் எச்சரித்துள்ளார்.


“தமிழ் நாகரிகத்தின் தொன்மை என்பது இந்தியாவுக்கு ஊறு விளைவிப்பதல்ல; இந்தியாவின் நாகரிகப் பண்பாட்டுக்குப் பெருமை சேர்ப்பது. எதைக் கண்டு பா.ஜ.க அரசு அஞ்சுகிறது? அகழ்வாராய்ச்சிக்கு ஒப்புதல் வழங்குங்கள். கீழடி பேசட்டும், வரலாறு மேலெழட்டும்” என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “கீழடி பேசட்டும். வரலாறு எழட்டும்” என்று பதிவிட்டிருப்பதாவது:  “கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளுக்கு ஒன்றிய பாஜக அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கோரியுள்ளது. 


இதற்கான முன்மொழிவுகள் 2025 ஜூலை மாதமே சமர்ப்பிக்கப்பட்டு, நவம்பர் மாதம் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் (ஏ.எஸ்.ஐ) தலைமை இயக்குநர் தலைமையிலான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இருப்பினும், கடந்த 8 மாதங்களாக இதற்கான அனுமதி நிலுவையிலேயே உள்ளது.


மீண்டும் மீண்டும் இந்த கோரிக்கையை நாங்கள் எழுப்பியும், அது தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி காலம் என்பது ஜனவரி முதல் ஜூலை வரை மட்டுமே.


இந்த கால அவகாசத்தைத் தவறவிட்டால், பருவமழைக் காலம் களப்பணிகளை முடக்கிவிடும்; இது முக்கியமான ஆய்வுகளைத் தாமதப்படுத்துவதோடு, 2025-2026 ஆம் ஆண்டிற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியையும் வீணடிக்கும்.

நான் கேட்க விரும்புவது ஒன்றுதான், இந்த தயக்கம் ஏன்?

தமிழ் நாகரிகத்தின் தொன்மை இந்தியாவைக் குறைத்து மதிப்பிடாது. அது இந்தியாவின் நாகரிகப் பெருமையையேக் கூட்டுகிறது. பா.ஜ.க அரசு எதைக் கண்டு அஞ்சுகிறது?


அகழ்வாராய்ச்சிகளுக்கு அனுமதி அளியுங்கள், வரலாறு பேசட்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


அதே போல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன், “கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 8 அகழாய்வுகளுக்கு 8 மாதங்களாக அனுமதி தராதது ஏன்?” என்று மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.


இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 8 அகழாய்வுகளுக்கு 8 மாதங்களாக அனுமதி தராதது ஏன்? 


பருவமழை தொடங்கினால் நிதி வீணாகும் , ஆராய்ச்சி முடங்கும் எனத் தெரிந்தும் மௌனம் காப்பது ஏன்?


தமிழரின் தொன்மையைத் தடுக்க இடைவிடாது இயங்கும் மோடி அரசு ஒன்றை மறந்துவிட்டது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உங்களால் கைவிடப்பட்ட கீழடி அகழாய்வுக் குழிகளில் இருந்து தான் தொன்மை நோக்கிய எங்களின் பயணம் பாய்ச்சல் வேகங்கொண்டது.


எகிப்திய பிரமீடுகளிலும் சிகை கொற்றன் சிலிர்த்து நிற்கிறான்.

இப்பொழுது மீண்டும் தடுக்கிறீர்கள். 


உங்களின் அரசியல் சிறுமைத்தனங்களை எங்கள் வரலாற்றுப் பேரியக்கம் தவிடு பொடியாக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை